உள்ளடக்கத்துக்குச் செல்

ஆபிரகாம் லிங்கன்

விக்கிமேற்கோள் இலிருந்து
(ஏபிரகாம் லிங்கன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாள் ஏமாற்றலாம்... கொஞ்சம் பேரை எப்போதும் ஏமாற்றலாம்...... ஆனால் எல்லோரையும்,எப்போதும் ஏமாற்ற முடியாது.

ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln, பெப்ரவரி 12, 1809—ஏப்ரல் 15, 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார்.

கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை. என்னுடைய அக்கறையில் பெரும்பகுதி கடவுளின் பக்கமே உள்ளது. கடவுள் எப்பொழுதுமே சரியானவர்.

ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16 ஆம் குடியரசுத் தலைவர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!
  • நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாள் ஏமாற்றலாம்... கொஞ்சம் பேரை எப்போதும் ஏமாற்றலாம்...... ஆனால் எல்லோரையும்,எப்போதும் ஏமாற்ற முடியாது.
  • கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை. என்னுடைய அக்கறையில் பெரும்பகுதி கடவுளின் பக்கமே உள்ளது. கடவுள் எப்பொழுதுமே சரியானவர்.
  • நிம்மதியை நீங்கள் வேண்டினால், புகழை வேண்டாதீர்கள்.
  • அறமே ஆற்றல்! அதை நாம் நம்புவோம்! அந்த நம்பிக்கையால் நாம் அறிந்த கடமைகளைச் செய்யத் துணிக![1]
  • எனக்குத் தெரிந்தவற்றில் சிறந்ததையும் என்னால் செய்யக் கூடியதில் தலைசிறந்ததையுமே செய்கின்றேன். இறுதிவரை அப்படியே செய்துகொண்டிருப்பேன். இறுதியில் நான் செய்தது நியாயமாகுமானால் இப்பொழுது எனக்கு விரோதமாகச் சொல்வதெல்லாம் எள்ளளவும் நிற்காது போகும். இறுதியில் நான் செய்தது தவறாய் முடியுமானால் இவர் செய்தாலும் தவறு சரி ஆய்விடாது.[2]
  • என் மனம் உருக்குத் துண்டைப் போன்றது. அதில் எழுதுவது கடினம். ஆனால் எழுதி விட்டால், என்றுமே அழிக்க முடியாது.[3]
  • இறைவனுக்குக் கீழ்ப்படிந்துள்ள இந்தத் தேசிய சமூகம் சுதந்தரத்துடன் புதுப் பிறவியை அடைய வேண்டும். அதனால், மக்களுடைய, மக்களால் நடத்தப்பெறும், மக்களுக்கான அரசாங்கம் பூமியிலிருந்து மறைந்துவிடாமல் இருக்க வேண்டும்.[4]
  • கண்ணியமான இராஜதந்திரம் என்பது, தனிப்பட்டவர்களுடைய தாழ்ந்த மனப்பான்மையைப் பொது நன்மைக்காக: சாதுரியமாகப் பயன்படுத்தலாகும்.[5]
  • நான் இப்பொழுதுள்ள நிலைமைக்கும். இனி அடைய நம்பிக் கொண்டிருப்பதற்கும், நான் என் தெய்விகத் தாய்க்கே கடமைப்பட்டிருக்கிறேன்.[6]
  • தவ்றான சட்டம் ஒன்றை நீக்குவதற்குச் சிறந்த முறை அதைக் கண்டிப்பாக அமல் நடத்துவது.[7]

குறிப்புகள்

[தொகு]
  1. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சான்றோர். நூல் 67 - 69. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 121-128. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 48-49. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 81-82. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆபிரகாம்_லிங்கன்&oldid=21178" இலிருந்து மீள்விக்கப்பட்டது