உள்ளடக்கத்துக்குச் செல்

ஏளனம் செய்தல்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஏளனம் செய்தல் என்பது பரிகாசம் செய்தல், கிண்டல் செய்தல், எகத்தாளம் செய்தல் என்பதாகும்

  • ஏானம் செய்தல் மூடர்களின் முதல் கருவியாகவும் கடைசிக் கருவியாகவும் உள்ளது. -ஸி. ஸிம்மன்ஸ்[1]
  • வலிமையுள்ள உங்களுக்கு எதிராக ஏளனம் பலமற்ற ஆயுதமாகும். ஆனால், சாதாரண மனிதர்கள் கோழைகளாயிருப்பதால், வெறும் சிரிப்பைக் கண்டே அஞ்சுகின்றனர். - டப்பெர்[1]
  • ஸ்பெயின் தேசத்தின் போலி வீரத்தை செர்வான்டிஸ் பரிகசித்துச் சிரித்தே வீழ்த்திவிட்டார். - பைரன்
    • (முற்காலத்தில் ஸ்பெயின் நாட்டில் பிறருக்கு உதவி செய்ய . முக்கியமாகப் பெண்களைக் காக்க - வீரர்கள் பலர் தோன்றியிருந்தனர். நாளடைவில் அவர்கள் கத்தரித் தோட்டத்துப் பொம்மைகள் போலாகி விட்டனர். அவர்களுள் ஒருவரைப்பற்றி "டான் குவிஷாட்" என்ற அற்புதக் கற்பனை நவீனம் ஒன்றை எழுதி உலகப் புகழ் பெற்ற ஆசிரியர் செர்வான்டிஸ் )[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 139-140. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஏளனம்_செய்தல்&oldid=20648" இலிருந்து மீள்விக்கப்பட்டது