ஜார்ஜ் கோர்டன் பைரன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜார்ஜ் கோர்டன் பைரனின் 1813 ஆண்டைய ஓவியம்

லார்டு பைரன் (Lord Byron) 22 சனவரி 1788 முதல் 19 ஏப்ரல் 1824 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் ஆவார். சியார்ச்சு கார்டன் பைரன், ஆறாம் பாரன் பைரன் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். பிரிட்டனின் உயர்ப்படி பெருமகனார் என்ற சிறப்புக்குரிய இவர் ஓர் அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். கலை, இலக்கிய, அறிவுசார் புனைவிய இயக்கத்தின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். பிரிட்டனின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவராக பைரன் மதிக்கப்படுகிறார் [1].

மேற்கோள்கள்[தொகு]

அபாயம்[தொகு]

 • அபாயம் மனிதனையும் விலங்கையும் ஒரே நிலைக்குக் கொண்டுவருகின்றது. அவசியம் வரும்பொழுது எல்லோரும் ஒன்றுதான்.[2]

இரக்கம்[தொகு]

 • இரக்கத்தின் பனித்துளி கண்ணீர்.[3]

இன்னல்[தொகு]

 • துன்பமே உண்மைக்கு முதல் வழி.[4]

கடமையில் வழுவுதல்[தொகு]

 • ஒருமுறை மானிடக் கடமைகளிலிருந்து வழுவினால் அது எவ்வளவு தூரம் விலகிச் செல்லச் செய்துவிடுகின்றது?[5]

காதல்[தொகு]

 • மனிதனின் வாழ்க்கையில் காதல் ஒரு பகுதிதான். ஆனால், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அதுவே முழுமையுமாகும்.[6]

தனிமை[தொகு]

 • நாம் சமூகத்திலிருந்து வாழ்வதைக் கற்றுக்கொண்டால் எப்படி மரிக்கவேண்டும் என்பதை ஏகாந்தம் நமக்குக் கற்பிக்கவேண்டும். [7]

நூல்கள்[தொகு]

 • தன் பெயரை அச்சில் காண்பது சகலர்க்கும் சந்தோஷமே! புஸ்தகத்தில் விஷயம் ஒன்றுமில்லாவிடினும் புஸ்தகத்தைப் புஸ்தகமில்லை என்று யார் கூறுவர்![8]

பழி[தொகு]

 • எந்த ஆழ்ந்த புண்ணேனும், வடுவின்றி ஆறியதுண்டோ? [9]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 1. "The Nation's Favourite Poet Result - TS Eliot is your winner!", BBC.
 2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 32-33. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 105. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 115. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 145. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 159-160. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 137-138. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 8. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
 9. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழி. நூல் 95- 96. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜார்ஜ்_கோர்டன்_பைரன்&oldid=20953" இருந்து மீள்விக்கப்பட்டது