ஐசக் நியூட்டன்
Appearance
ஐசக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 - மார்ச் 20, 1727), ஒரு கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன்.
மேற்கோள்கள்
[தொகு]- இந்த உலகிற்கு நான் எவ்வாறு தோன்றுகின்றேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் விரிந்து பரந்துள்ள உண்மையெனும் மிகப்பெருங்கடலை எல்லாம் கண்டுணராமல் அவ்வப்போது வழுவழுப்பான கூழாங்கல்லையோ மற்றவற்றைக் காட்டிலும் அழகான சிப்பியையோ தேடிக்கொண்டு கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருக்கும் ஒரு சிறுவன் என்றே என்னைக் கருதுகின்றேன்.
- Memoirs of the Life, Writings, and Discoveries of Sir Isaac Newton (1855) by Sir David Brewster (Volume II. Ch. 27).
- ஒப்புக: "கரையில் கூழாங்கற்கள் பொறுக்கும் குழந்தைகள் போல", ஜான் மில்டன், சொர்க்க மீட்பு, நூல் iv. வரி 330
- ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு.
- இயக்க விதிகள், III
- நான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே, என்னால் நெடுந்தொலைவுகளைக் காண இயன்றது.
- ராபர்ட் ஹூக்கிற்கு எழுதிய மடலில் (15 பெப்ரவரி 1676) யூலியன் நாட்காட்டிப்படி 5 பெப்ரவரி 1675 நாளிட்டது கிரெகொரியின் நாட்காட்டிப்படி 15 பெப்ரவரி 1676 ஆனது]. மடலின் பிரதி இணையத்தில் உள்ளது The digital Library.
- பிளாட்டோவும் என் நண்பர்தான், அரிஸ்டாட்டிலும் என் நண்பர்தான். ஆனால் உண்மைதான் என்னுடைய மிகச்சிறந்த நண்பன்.
- Amicus Plato — amicus Aristoteles — magis amica Veritas
- நியூட்டன் Quaestiones Quaedam Philosophicae [சில மெய்யியல் கேள்விகள்] (c. 1664) என்ற தலைப்பில் இலத்தீனில் தனக்குத் தானே எழுதிக்கொண்ட குறிப்பு
- ரோஜர் பேகன் அரிஸ்டாடில் கூறியதாக உரைத்த கூற்றின் திரிபு:
- Amicus Plato, sed magis amica veritas. Bacon was perhaps paraphrasing a statement in the Nicomachean Ethics: Where both are friends, it is right to prefer truth.
- உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும், குழப்பத்தில் இருந்து அல்ல.
- Cited in Rules for methodizing the Apocalypse, Rule 9, from a manuscript published in The Religion of Isaac Newton (1974) by Frank E. Manuel, Oxford University Press, p. 120, as quoted in Socinianism And Arminianism : Antitrinitarians, Calvinists, And Cultural Exchange in Seventeenth-Century Europe (2005) by Martin Mulsow, Jan Rohls, p. 273.
- As quoted in God in the Equation : How Einstein Transformed Religion (2002) by Corey S. Powell, p. 29
- கடவுள் அனைத்தையும் எண், எடை, அளவுகளைக் கொண்டே உருவாக்கினார்.
- As quoted in Symmetry in Plants (1998) by Roger V. Jean and Denis Barabé, p. xxxvii, a translation of a Latin phrase he wrote in a student's notebook, elsewhere given as Numero pondere et mensura Deus omnia condidit.
- This is similar to Latin statements by Thomas Aquinas, and even more ancient statements of the Greek philosopher Pythagoras.
- காண்க சாலமனின் மதிநுட்பம் 11:20 ஆங்கிலத்தில்
- இன்று உன்னால் கூடியமட்டும் நன்றாய்ச் செய், நாளை அதனினும் நன்றாய்ச் செய்யும் ஆற்றல் நீ பெறக் கூடும்.[1]
- நான் மதிப்புயர்ந்த விஷயங்கள் எவைகளையாவது கண்டுபிடித்துள்ளேன் என்றால், அது என்னுடைய பொறுமையுள்ள கவனத்தினால்தான். வேறு பிரமாதமான சக்தியால் அன்று.[2]
பிற இணைப்புகள்
[தொகு]- The Newton Project
- Brief biography at the University of St Andrews
- "All Was Light : Isaac Newton's Revolutions" exhibit at Huntington Library
- Stanford Encyclopedia of Philosophy entry on Newton's views on space, time, and motion
- Newton and Astrology
- Works by Isaac Newton at Project Gutenberg
- Observations upon the Prophecies of Daniel, and the Apocalypse of St. John (1733)
- Newton's Reports as Master of the Royal Mint
- "Newton Reconsidered"
- "Sir Isaac Newton", a brief biography
- "Newton's line in a circumscribed quadrilateral"
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 151. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.