ஐவன் ஈலிச்
Jump to navigation
Jump to search

ஐவன் ஈலிச் அல்லது இவான் இல்லிச் (Ivan Illich, செப்டம்பர் 4, 1926 - டிசம்பர் 2, 2002) என்பவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மெய்யியலாளரும், ரோமன் கத்தோலிக்க மதகுருவும் ஆவார்.
மேற்கோள்கள்[தொகு]
- சமமான தரமுள்ள பள்ளிகளில் படித்தாலும் ஓர் ஏழைக் குழந்தை பணக்காரக் குழந்தையை எட்டிப்பிடிக்க இயலாது. சமமான நிலையிலுள்ள பள்ளிகளில் படித்தாலும், ஒரே வயதில் கல்வியைத் தொடங்கினாலும், ஏழைக் குழந்தைக்களுக்கு மத்திய தரக் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைக்காது. மத்தய தரக் குழந்தைகளுக்கு என்ன வசதிகள் கிடைக்கும்? வீட்டில் உரையாடல், வீட்டிலுள்ள நூல்கள், விடுமுறைக் காலப் பயணம் முதலியன ஏழைக் குழந்தைகளுக்குக் கிடைக்காது. பள்ளியிலும் வெளியிலும் தன்னைப் பற்றிய மதிப்பீடும் வேறுபாடும். எனவே, ஏழைக் குழந்தை தனது முன்னேற்றத்துக்கும் கற்றலுக்கும் பள்ளியையே நம்பியிருந்தால் பின்தங்கியே இருக்க வேண்டியதிருக்கும்.[1]