உள்ளடக்கத்துக்குச் செல்

ஓய்வு

விக்கிமேற்கோள் இலிருந்து

ஓய்வு என்பது,தொடர்ச்சியான செயலில் இருந்து சிறிது நேரம் அல்லது சிலகாலம் விடுபடுவது. மாற்றுச் செயலில் ஈடுபடுவதும் ஓய்வுதான்.

மேற்கோள்கள்

[தொகு]
 • தொழிலில்லாமலிருத்தல் ஓய்வன்று; காலியாயுள்ள மனம் துயர்ப்படுவதாகும். கௌப்பர்[1]
 • சிலர், உணவைத் தேடுகின்றனர். சிலர், செல்வத்தையும் சுகத்தையும் தேடுகின்றனர். சிலர். புகழைத் தேடுகின்றனர் ஆனால், எல்லோரும் ஓய்வை நாடுகின்றனர். -வாங்பிரிட்ஜ்[1]
 • வேலைக்கு மாறுபாடாயிருந்தால்தான் ஓய்வு பயனுள்ளது அதையே நோக்கமாகக் கொண்டால், அது மிகவும் இரங்கத்தக்க நிலையாகும். - டி ஸ்விங்[1]
 • அளவுக்கு அதிகமான ஓய்வு வேதனையாகும். -ஹோமர்[1]
 • ஓய்வு ஊக்கமுள்ள வேலையிலிருந்து ஓடுவதன்று அதற்குத தயார் செய்துகொள்வதாகும்.- ஜெ. டுவைட்[1]
 • உழைப்பின் சாரம் ஓய்வு. - புளூடார்க்[1]
 • ஓய்வும் உழைப்பும் மாறி மாறி இருந்தால், நீண்ட நாள் அவை நிலைத்திருக்கும். - ஓவிட்[1]
 • ஓய்வு ஓர் அழகான உடை. ஆனால், அது இடைவிடாமல் அணியத் தக்கதன்று. - பழைய வாக்கியம[1]
 • ஓய்வு போய்விட்டது. இராட்டினங்கள் போன இடத்திற்கு பொதிக்குதிரைகளும், கட்டை வண்டிகளும் போன இடத்திற்கு வீட்டு வாயிலில் கதிரொளி நிறைந்த மாலை நேரங்களில் சாமான்கள் கொண்டுவந்து கொடுத்த வியாபாரிகள் போன இடத்திற்கு, அதுவும் போய்விட்டது. - ஜியார்ஜ் எலியட்[1]
 • மனிதன் வாழ்வாகிய இந்த மேடையில் கடவுளும் தேவர்களுமே (வேலையில்லாமல்) பார்வையாளர்களாக இருக்க உரிமையுள்ளவர்கள். -பிதாகோரஸ்[1]

குறிப்புகள்

[தொகு]
 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 142-143. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஓய்வு&oldid=20692" இலிருந்து மீள்விக்கப்பட்டது