கருணை
Jump to navigation
Jump to search
கருணை (Kindness) என்பது நன்நெறி, இனிய மனநிலை மற்றும் மற்றவர்களுக்காக கவலை கொள்ளும் மன நிலையைக் குறிக்கும் ஒரு நடத்தை ஆகும். இது ஒரு நல்லொழுக்கம் எனவும் அறியப்படுகிறது, பல மதங்களில் மதிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- கருணையானது பிழியப்படுவதன்று. மழைபோல் பொழிவதாகும். அது அளிப்போனையும் பெறுவோனையும் ஆசிர்வதிக்கும். அதுவே ஆற்றல்களில் தலைசிறந்த ஆற்றல். அதுவே கடவுளின் இலட்சணம். நீதியின் கடுமையைத் தணிக்கும் கருணையுடன் கூடிய மனித சக்தியே கடவுள் சக்தியை ஒக்கும். -ஷேக்ஸ்பியர்[2]
- இனிய கருணையே பெருந்தன்மையின் அடையாளமாகும்.-ஷேக்ஸ்பியர்[2]
- கருணை காட்டுபவன் எப்போதும் வெற்றி காண்பான். - ஷெரிடன்[2]
- தீயோர் கருணையையும், பேராசைக்காரர் வண்மையையும், கர்விகள் பணிவையும் விரும்புவர் - பிறரிடத்தில். -கோல்டன்[2]
- கடவுளின் பிரதம லட்சணம் கருணையே. -பிளச்சர்[2]
- கோழைகள் குரூரமாய் நடப்பர் வீரர்கள் கருணை உடையவர். -ஜான்கே[2]
குறிப்புகள்[தொகு]
- ↑ Khazan, Olga. It Pays to Be Nice.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கருணை. நூல் 69 - 70. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.