கா. அப்பாத்துரை
Appearance
கா. அப்பாத்துரை (ஜூன் 24, 1907 - மே 26, 1989) தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவர். பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவர். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ஒருவனது மொழியை அவனது தாய்மொழி என்று அழைப்பது வெறும் அழகுக்காக அல்ல. அது பல்லாற்றானும் தாயினும் சிறந்தது என்பதால்தான்![1]
- தமிழ், தமிழ்மொழியாய், தமிழ்த் தாயாய், தமிழ்நாடாய், நாட்டு மக்களாய், மக்களின் வாழ்வாய் வாழ்வின் மலர்ச்சியாய் வளர்ந்து பொங்கிப் பெருகி வழிந்தோட வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்.[1]