உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ணர்

விக்கிமேற்கோள் இலிருந்து

கிருஷ்ணர் (Krishna) என்பவர் ஒரு இந்து கடவுள், திருமாலின் எட்டாவது அவதாரம் என்று இந்துக்கள் கருதுகின்றனர். இவரது கருத்தை பகவத் கீதை என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார், இந்துக்கள் புனித நூல் என்று நம்புகின்றனர்.

மேற்கோள்கள்[1]

[தொகு]
  • "துயர்ப்படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய்! ஞான வுரைகளு முரைக்கின்றாய்! இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர் கொளார் அறிஞர்." - பகவத் கீதை 2:11
  • குந்தியின் மகனே, குளிரையும், வெப்பத்தையும், இன்பத்தையும், துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன, என்றுமிருப்பனவல்ல. பாரதா! அவற்றைப் பொறுத்துக்கொள் - பகவத் கீதை 2:14
  • நைந்த துணிகளைக் கழற்றியெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறது - பகவத் கீதை 2:22
  • இவனை ஆயுதங்கள் வெட்டமாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது.
  • பிளத்தற்கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன். எங்கும் நிறைந்தவன்; உறுதிய்டையான்; அசையாதான்; என்றுமிருப்பான்.
  • "தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப! ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்துநீ துயர்ப் படாதிருக்கக் கடவாய்." - பகவத் கீதை 2:23; 24; 25
  • இந்த ஆன்மாவை, "வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும் இதனை அறிவான் எவனுமிலன்." - பகவத் கீதை 2:29
  • கொல்லப்படினோ வானுலகெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில். - பகவத் கீதை 2:37
  • தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே. - பகவத் கீதை 2:47
  • உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப்போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது. உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில் அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய். அர்ஜுனன் சொல்லுகிறான்: - பகவத் கீதை 2:52; 53
  • மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவுத் தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான். - பகவத் கீதை 2:62; 63

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikiquote.org/w/index.php?title=கிருஷ்ணர்&oldid=37655" இலிருந்து மீள்விக்கப்பட்டது