குடிப்பழக்கம்
Appearance
குடிப்பழக்கம் என்பது மது குடிக்கும் பழக்கமாகும். இது குறித மேற்கோள்கள்
- குடிகாரனாயிருப்பவன் எல்லாத் தீய நடைகளுக்கும் தகுதியானவன். - குவார்லெல்[1]
- வயது முதிர்ந்து நடக்க வேண்டியதைச் செய்து முடிக்கும்படி. நமது உலகத்தில், மரணம் மது வெறியை அனுப்பியிருக்கின்றது - யங்[1]
- எதுவும் மிதமிஞ்சினால் தீது, ஆனால், குடிவெறி எல்லாவற்றிலும் தீது - பென்[1]
- குடிவெறியைப் போல், எல்லாப் படைகளும் சேர்ந்து மனித சங்கத்தினருள் அத்தனை பேர்களை அழித்ததில்லை; அத்தனை சொத்துகளைப் பாழாக்கியதில்லை. - பேக்கன் [1]
- திராட்சை ரசம் கையை நடுங்கச்செய்யும். கண்ணில் நீர் வரச் செய்யும், இரவில் அமைதிக்குறைவை உண்டாக்கும். கெட்ட கனவுகளைத் தோற்றுவிக்கும், காலையில் மூச்சுக் காற்றை நாறச் செய்யும். எல்லா விஷயங்களையும் அறவே மறக்கவும் செய்யும் -பளினி[1]
- கடலில் மூழ்கியவர்களைக்காட்டிலும் மதுவில் மூழ்கியவர்கள அதிகம். - பப்ளியஸ் ஸைரஸ்[1]