ஹென்றி பீல்டிங்
Appearance
ஹென்றி பீல்டிங் (Henry Fielding, 22 ஏப்ரல் 1707 - 8 அக்டோபர் 1754) ஒரு ஆங்கில புதின ஆசிரியரும், நடக ஆசிரிரயரும் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- அதிக வறுமைப்பட்டவரும், அதிகச் செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்.[1]
- பணக்காரனாயிருந்து தர்மம் செய்யாதவன் அயோக்கியன், அவன் மூடன் என்பதையும் எளிதில் நிரூபித்துவிடலாம்.[2]
- தத்துவத்திற்காக நடக்கும் பரீட்சையே இன்னல், அது இல்லாவிட்டால், ஒரு மனிதன் தான் நேர்மையாளனா அல்லனா என்பதைத் தெரிந்து கொள்ள இயலாமற்போகும். [3]
- ஈகையில்லாத செல்வன் ஒரு போக்கிரி. அவன் மூடன் என்பதையும் நிரூபிப்பது எளிதாயிருக்கும்.[4]
- மதுவும் இளமையும் நெருப்பின் மேல் நெருப்பாகும்.[5]
- நடுநிசிக்கு முன்பு ஒரு மணி நேர உறக்கம். பின்னால் இரண்டு மணி நேரம் உறங்குவதற்கு ஈடாகும்.[6]
- இந்த உலகின் எதிர்பாராத நிகழ்ச்சிகளைக் கருதி, மனிதர்கள் எந்த நிலையிலும் நம்பிக்கையை முழுதும் இழக்க வேண்டியதில்லை என்று நாம் கற்பிக்கப்பெற வேண்டும்.[7]
- அதிக வறுமையும், அதிகச் செல்வமும் ஆராய்ச்சி அறிவுக்குச் செவி கொடுக்கமாட்டா.[8]
- 'பிளேக்' நோய் ஒட்டுவாரொட்டியாகப் பக்கத்தில் வருபவர்களையும் எப்படிப் பாதிக்கின்றதோ, அதே போல், கெட்ட பழக்கங்கள் முன்மாதிரிகளாயிருந்த மற்றவர்களையும் பற்றிக் கொள்கின்றன.[9]
- நவீனங்களும், புதுமைக் கதைகளும் எழுதுவதற்குக் காகிதம் பேனா, மை ஆகியவற்றுடன், அவைகளை உபயோகிக்கும் உடல் வலிமையும் தவிர, வேறு எதுவும் தேவையில்லை.[10]
- முட்டாளை அறிஞன் என்றும், பொய்யனை யோக்கியன் என்றும் துதித்து விட்டால் அப்புறம் அவன் உன் அடிமையே ஆகிவிடுவான்.[11]
குறிப்புகள்
[தொகு]
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 38-39. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 62-65. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 115. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 116. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 317. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 229. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 248-249. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 260-262. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 230-231. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.