கோட்டை
Appearance
கோட்டை என்பது பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்டப்படும் கட்டிடத் தொகுதியாகும். இக்காலத்தில் இவ்வாறான தேவைகளுக்காகக் கட்டப்படும் கட்டிடங்களைக் கோட்டை என்று சொல்வதில்லை. கோட்டைகள் அரண் செய்யப்பட்ட கட்டிடங்கள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- அன்னியரைக் காட்டிலும் தன் மக்களுக்கு அதிகமாகப் பயப்படுகிற அரசனுக்குத்தான் கோட்டைகள் தேவைப்படும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- ஆட்சியாளன் புத்தியுள்ள வனாயிருந்தால் சமாதான காலத்தில் சோம்பேறியாய் இருக்கக் கூடாது. ஆபத்துக் காலத்தில் தற்காத்துக் கொள்ளவும், தாக்குதல்களைச் சமாளிப்பதற்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- பலம் பொருந்திய நகரத்தையும், தன்னை வெறுக்காத மக்களையும் உடைய அரசன் தாக்குதலுக்கு ஆளாக மாட்டான் . அப்படியே தாக்கப்பட்டாலும், தாக்கியவனே வெட்கமடைந்து புறமுதுகு காட்டி ஓடும்படி நேரிடும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- குடிமக்கள் அன்பின் மீது எழுப்பப்படுகிற கோட்டை தான் உண்மையில் சிறந்த கோட்டை!-நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- ஆளப்படும் மக்களால் வெறுக்கப்படும் ஆட்சியாளன் எத்தனை கோட்டைகளை யுடையவன் ஆனாலும் அவன் பத்திரமாக இருக்க முடியாது.நிக்கோலோ மாக்கியவெல்லி[1]