கோயில்
Appearance
கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- என் நண்பரிற் பலர் - செல்வமும் அறிவுடைமையும், பேச்சு வன்மையும் பெற்றாேர். ‘ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளுகின்றார்கள்; ஆதலின் கோயிலுக்குச் செல்வதில் கருத்து வரவில்லை என்று கூறுகின்றார்கள். அவர்களே சில இந்திரிய அனுபவத்திற்காகப் பல இடிபட்டுத் தம் மனைவி மக்களுடன் துன்புற்றுக் கொட்டகையினுள் நுழைகிறார்கள். ஆண்டவன் சந்நிதியில் ஆகாத ஒன்று அங்கு ஆகும் போலும்! ஆண்டவன் சந்நிதியில் இடிபடுதலால் குறைவு ஒன்று மில்லை ஆண்டவன் சந்நிதியில் நடுவில் மூன்றடி விடுதல் வேண்டும். புறத்தில் நின்றே வணங்கல் வேண்டும். எதிரே நிற்றலாகாது. எதிரிலிருப்பவனே எதிரி என்று கூறுதல் வழக்கமல்லவா? பக்கங்களில் நின்று வணங்கல் வேண்டும். —ஞானியாரடிகள் (கந்தர்சட்டிச் சொற்பொழிவில்)[1]
- கோயில்களுக்கு அவசியமில்லை, சிக்கலான தத்துவம் தேவையில்லை; நமது சொந்த அறிவு மற்றும் இதயமே நமது கோயில், கருணையே தத்துவம். இதுவே எனது எளிய மதம்.டென்சின் கியாட்சோ[2]
கோயில் குறித்த பழமொழிகள்
[தொகு]- படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
- படிப்பது பாகவதம், இடிப்பது பெருமாள் கோயில்.
- கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ தி இந்து 2016 சூன் 27