உள்ளடக்கத்துக்குச் செல்

கோழைத்தனம்

விக்கிமேற்கோள் இலிருந்து

கோழைத்தனம் என்பது ஒரு பண்பாகும், இது தைரியத்திற்கு எதிரானது. கோழைத்தனம் கொண்டவர் அடிபணிந்தவர் கோழை என்று அழைக்கப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • கோழை தனக்கு மேலுள்ளவர்களிடம் கொஞ்சிக் குலவுவான். அந்தக் கோழையே, தான் விரும்பிய நேரத்தில் முரட்டுத் தனமாகவும் நடப்பான். -ஜூனியஸ்[1]
  • கோழைகள் தடுமாறுவார்கள். மேலான முறையில் துணிந்து வருபவர்கள் மூலமாகவே பெரும்பாலும் அபாயத்தை அடக்கி வெற்றி கொள்ளப் பெறுகின்றது. - எலிஸபெத் மகாராணி[1]
  • சாந்தியும் செழிப்பும் கோழைகளை அபிவிருத்தி செய்யும். கடுமையான நிலையே தைரியத்திற்குத் தாய் -ஷேக்ஸ்பியர்[1]
  • கோழைகள் தம்முடைய மரணத்திற்கு முன்பே பலமுறை இறந்து போகின்றனர். வீரர்கள் மரணத்தின் உருசியை ஒருமுறையே அறிகின்றனர். - ஷேக்ஸ்பியர்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 169-170. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கோழைத்தனம்&oldid=21120" இலிருந்து மீள்விக்கப்பட்டது