சகிப்பின்மை

விக்கிமேற்கோள் இலிருந்து

சகிப்பின்மை என்பது மாறுபட்ட கருத்துகள் அல்லது நம்பிக்கைகளை பொறுத்துக்கொள்ளாதது. கருத்து அல்லது கருத்து வேறுபாட்டை அடக்கி ஆள்வதற்கான விருப்பம்.

மேற்கோள்கள்[தொகு]

  • ஒவ்வொரு சகாப்தத்திலும். ஒவ்வோர் இராஜ்யத்திலும் சகிப்பின்மை சாபக்கேடாக இருந்துவந்திருக்கிறது. -பீச்சர்[1]
  • ஒரு மதத்தில் வெறி கொண்டிருப்பதைக்காட்டிலும், எம்மதமும் இல்லாதிருத்தல் மேலாகும். - பென்[1]
  • சீர்திருத்தவாதிகளின் சகிப்பின்மையையே சைத்தான் மிகவும் விரும்புகிறான். அவர்களுடைய சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் கண்டே அவன் மிகவும் அஞ்சுகிறான் ஜே. ஆர். ஸோவல்[1]
  • நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்தால், வன்முறை அதிகரித்து வளர்ச்சி பாதிக்கப்படும். ரகுராம் ராஜன்[2]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 170. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ரகுராம் ராஜன் பேட்டி சகிப்புத்தன்மை குறித்த என் கருத்து சரியானதே. தினகரன் (05 நவம்பர் 2015). Retrieved on 19 சூன் 2016.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சகிப்பின்மை&oldid=21160" இலிருந்து மீள்விக்கப்பட்டது