உள்ளடக்கத்துக்குச் செல்

சமத்துவம்

விக்கிமேற்கோள் இலிருந்து

சமத்துவம் என்பது சமூக அல்லது கலாச்சார வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் மக்களை சமமாக நடத்துவது ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • இறைவனின் சட்டப்படி அவன் மனித சமூகத்திற்கு அளித்துள்ள அந்தச் சட்டத்தின்படி எல்லா மனிதர்களும் சுதந்தரமானவர்கள், சகோதரர்கள், சமத்துவமானவர்கள். -மாஜினி[1]
  • பூமியில் தோன்றியதும், ஒவ்வொருவருக்கும் சமத்துவம் உண்டு. பூமிக்கடியில் போகும் பொழுதும் சமத்துவம் உண்டு. -என்கிளாஸ்[1]
  • சமூகம் நாம் கருதுவதைவிட அதிகச் சமநிலை உள்ளது. மகா அறிவாளிகளும். ஒன்றும் தெரியாத மூடர்களும் அபூர்வம்: பெரிய அசுரர்களோ, குள்ளர்களோ அபூர்வமாகவே இருப்பர். - ஹாஸ்லிட்[1]
  • இயற்கையில் எல்லா மனிதர்களும் சமத்துவமாக உள்ளவர்கள். எல்லோரும் ஒரே மண்ணால், ஒரே கடவுளால் படைக்கப் பெற்றவர்கள். நாம் நம்மை எவ்வளவுதான் ஏமாற்றிக் கொண்டாலும், கடவுளுக்கு வல்லமையுள்ள அரசன் எவ்வளவு வேண்டியவனோ அவ்வளவு வேண்டியவன் ஏழைக் குடியானவனும். -பிளேட்டோ[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 174-175. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சமத்துவம்&oldid=21215" இலிருந்து மீள்விக்கப்பட்டது