உள்ளடக்கத்துக்குச் செல்

சிவயோக சுவாமி

விக்கிமேற்கோள் இலிருந்து

ஈழத்தில் தோன்றிய ஞானிகளில் ஒருவர் யோகசுவாமிகள் ஆகும். இவரது காலம் 1872-1964 வரையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 • வடதிசை காட்டும் கருவியைப்போல் இருக்க வேண்டும்.
 • நீயே உனக்கு நண்பனும் பகைவனும்.
 • வேலையைச் செய்தும் செய்யாதவன் போல் இருக்க வேண்டும்.
 • பிராணனை அடக்கி ஆளுதல் வேண்டும்.
 • சுகமுந் துக்கமும் இரட்டைப் பிள்ளைகள்.
 • இன்பதுன்பமெல்லாம் முகிலைப்போல் வந்து போகட்டும்.
 • தன்னை அடக்கியாளுதல் வேண்டும்.
 • சமத்துவம் வேண்டும் (Balance)
 • காஞ்சிரங் கொட்டையும் தேவைக்கு உதவுகின்றது. அதுபோல எல்லோரும் நல்லவர்கள் தான்.
 • நாய் வாலை நீட்டமுடியாது. உலகத்தைத் திருத்துவதிலும் நம்மைத் திருத்துவோமாக.
 • செருப்பைப்போல் தேகத்தைப் பாவிக்க வேண்டும்.
 • தன்னைத் திருத்தாது யாத்திரைக்குப் போவதனாலாவதென்ன?
 • கடவுளால் ஒன்று செய்யமுடியாது. ஆன்மாவை விட்டுப் பிரிந்திருக்க முடியாது.
 • உள்ளதோடு திருப்தியடையாது அதிக ஆசைப்பட்டுக் கிடந்தலைகிறோம்.
 • மனிதன் நெடுக வேலை செய்துகொண்டிருக்கலாம்; வேலை செய்து முடிந்தால் அதைப்பற்றிப் பிறகு நினைத்துத் தொந்தரவு படக்கூடாது.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிவயோக_சுவாமி&oldid=12499" இலிருந்து மீள்விக்கப்பட்டது