சுப. வீரபாண்டியன்
Appearance
சுப வீரபாண்டியன் தமிழ்ப் பேராசிரியர்; சொற்பொழிவாளர்; இதழாளர்; திராவிடத் தமிழ்தேசியர்; இறைமறுப்பாளர்; பெரியாரியலாளர்; அம்பேத்கர் பற்றாளர்; தமிழீழ ஆதாரவாளர். சுபவீ என சுருக்கமாக அழைக்கப்படும் இவர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவராகத் தற்பொழுது பொறுப்பு வகிக்கின்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- கருப்பும் சிவப்பும் நீலமும் வெறும் வண்ணங்கள் அல்ல. அவைதான் தமிழ்த் தேசிய மேம்பாட்டிற்கான உயர் எண்ணங்கள்.[1]
- நிலவுடைமைச் சமூகத்திலிருந்து மேலை நாடுகள் முதலாளியச் சமூகத்திற்கு மாறத் தொடங்கிய காலமே, தேசிய இனம் குறித்த கருத்துருவாக்கம் தொடங்கிய காலம்.[2]
- நாம் ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்.[1]
- திராவிட இயக்கம் எதற்காவது தடையாக இருந்தது என்றால், இந்தியத் தேசியத்திற்குத்தான் அது தடையாக இருந்தது. மிகப்பெரும் தடையாக இருந்தது.[3]
- 'ஏடறிந்த வரலாறு அனைத்தும், வர்க்கப் போராட்டங்களது வரலாறே' என்று பொதுவுடைமைக் கட்சி அறிக்கை கூறுவது போல, 'இன்றைய போராட்டமே சாதியைக் காப்பாற்றுவது என்பதும், சாதியை ஒழிப்பது என்பதும்தான்' என்று பெரியார் திட்டவட்டமாகக் கூறுகிறார்.[4]
- ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம். இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான்.
சான்றுகள்
[தொகு]