உள்ளடக்கத்துக்குச் செல்

சுறுசுறுப்பு

விக்கிமேற்கோள் இலிருந்து

சுறுசுறுப்பு குறித்த மேற்கோள்கள்

  • சோம்பலால் துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத தேய்வது மேல். - கம்பர்லந்து[1]
  • சோம்பல் எல்லா விஷயங்களையும் கஷ்டமாக்கும் சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிதாக்கும். - ஃபிராங்க்லின்[1]
  • சுறுசுறுப்பு. கடன்களை அடைக்கும். சோம்பலும் கருத்தின்மையும் கடன்களைப் பெருக்கும். - ஃபிராங்க்லின்[1]
  • குழந்தைகளுக்குச் சுறுசுறுப்பான பழக்கங்களை அளிப்பவன் சொத்து அளிப்பதைவிட மேலாகும். - வேட்லி[1]
  • எவ்வளவு அதிகமாக நாம் வேலை செய்கின்றோமோ அவ்வளவுக்குக் கூடுதலாக வேலைசெய்ய முடியும் எவ்வளவு சுறுசுறுப்பாயிருக்கின்றோமோ, அவ்வளவு அதிகமான ஓய்விருக்கும். - ஹாஸ்லிட்[1]
  • அறிவைப் பெருக்கிக்கொள்வதற்கு கருத்துடைமை என்ற விலையைச் செலுத்த வேண்டும். அறுவடை செய்ய வேண்டுமானால், முன்னால் விதைகளை விதைத்திருக்க வேண்டும். -பெய்லி[1]
  • மனிதன் தானாக உழைத்துப் பழகிக் காய்த்துப் போயிருக்க வேண்டும். இன்ப நுகர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்திருக்கக் கூடாது. அவை உடலுக்கும் நன்மை செய்வதில்லை. மனத்தின் அறிவுக்கும் உதவுவதில்லை. - சாக்ரடீஸ்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 188-189. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சுறுசுறுப்பு&oldid=21445" இலிருந்து மீள்விக்கப்பட்டது