ஆலிவர் கோல்ட்ஸ்மித்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
அதிர்ஷ்டம் தராததை யெல்லாம் திருப்தியிடமிருந்து பெறுவோமாக.

ஆலிவர் கோல்ட்ஸ்மித் (10 நவம்பர் 1728 - 4 ஏப்ரல் 1774) ஒரு ஐரிஷ் புதின எழுத்தாளர், நாடக ஆசிரியர், கவிஞர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

 • நன்றியைக்காட்டிலும் கடமையைச் செய்ய அச்சமே தூண்டுகின்றது. ஒழுக்கத்தை விரும்பியோ, எல்லாப் பொருள்களையும் அளித்துள்ள இறைவனுக்கு நன்றி செலுத்தவோ நேர்மையாக நடப்பவன் ஒருவன் என்றால், தண்டனைக்கு அஞ்சி நேர்மையாக நடப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.[1]
 • ஒரு பையன் தனியாக ஐந்து ஆண்டுகள் படிப்பதைவிட பொதுப் பள்ளியில் ஓர் ஆண்டிலேயே அதிகமாக அறிவைப் பெற்றுவிடுவான். இளைஞர். உலகியல் அறிவை ஆசிரியர்களிடமிருந்து பெறுவதைக்காட்டிலும் தமக்குச் சமமாயுள்ள இளைஞர்களிடமிருந்து அதிகமாய்க் கற்கின்றனர்.[3]
 • சில தோஷங்கள் குணங்களுடன் உறவுகொண்டவை; அதனால் மறத்தைக் களையும் பொழுது அறத்தையும் அழிக்க நேரிட்டு விடலாம்.[4]
 • மண்ணுலகில் மனிதருக்கு வேண்டுவது வெகு சொற்பம். அதுவும் சின்னாட்களுக்கே.[6]

குறிப்புகள்[தொகு]

 1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 11-12. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 75-77. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 153. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு. நூல் 96- 98. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 7. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆலிவர்_கோல்ட்ஸ்மித்&oldid=20849" இருந்து மீள்விக்கப்பட்டது