சூழ்நிலை
Appearance
சூழ்நிலைகள் என்பது ஒரு நிகழ்வை ஒருவிதத்தில் பாதிக்கும் விஷயங்கள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ஒருவன் சூழ்நிலைகளைத் தொடர்ந்து. தன்னைச் சுற்றியுள்ள சக்திகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே வார்த்தையில் சொன்னால், செய்யத்தக்கதைச் செய்யவேண்டும். - அனடோல்ஃபிரான்ஸ்[1]
- பெரும்பாலான ஆடவரும் பெண்டிரும் வாழ்க்கையில் தங்களுக்குக் கிடைக்கும் வழியிலேயே செல்கின்றனர்.அவர்கள் தங்கள் அனுபவங்களை ஆராய்ந்து தெரிந்துகொள்ள ஆசையோ ஓய்வோ பெற்றிருக்கவில்லை. சிலர் மட்டுமே மிக சிறந்த அனுபவ இலாபங்களை அடையத்தக்க பாதைகளை அமைத்துக்கொள்கின்றனர். - ஸர் ஆர்தர்கீத் [1]
- சூழ்நிலைகள் பலவீனமானவர்களுக்கு எஜமானர்கள்: அறிவாளர்களுக்கு அவை கைக்கருவிகள். - சாமுவேல் லோவர்[1]
- சூழநிலைகள்! - நானே சூழ்நிலைகளை அமைத்துக் கொள்கிறேன். - நெப்போலியன்[1]
- காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நடக்கிறவர்கள் தாம் செயல்களில் வெற்றி காண்பார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 190. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.