ஜோனதன் ஸ்விப்ட்

விக்கிமேற்கோள் இலிருந்து
Swift (1718)

ஜோனத்தன் ஸ்விப்ட் (Jonathan Swift, 30 நவம்பர், 1667 – 19 அக்டோபர், 1745) ஓர் ஆங்கில அயர்லாந்து எழுத்தாளரும், கவிஞரும், விகடகவியும், கட்டுரையாளரும், அரசியல்வாதியுமாவார்.[1] சிறிது காலம் டப்லினில் செயிண்ட் பாட்ரிக் தேவாலயத்தின் பாதிரியாராகப் பணியாற்றி பின் அதன் அதிகாரியுமானார். இவர் "கலிவரின் பயணங்கள்" என்ற உலகப் புகழ்பெற்ற புனைகதை மூலம் அறியப்படுகிறவர் ஆவார். புத்தகங்களின் யுத்தம், டிராப்பியரின் கடிதங்கள் போன்றவை இவரது புகழ்பெற்ற பிற படைப்புகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

அறிவு[தொகு]

  • குறுகிய புத்தியுள்ள மனிதர் குறுகிய கழுத்துள்ள பாட்டில்களை ஒப்பர். அகத்தில் அற்பமாயிருந்தால் புறத்தில் ஊற்றும்பொழுது அதிகச் சப்தம் செய்யும்.[2]

முகத்துதி[தொகு]

  • முகஸ்துதியை முட்டாள்களின் உணவு என்று கூறுவர். ஆனால், அறிஞரும் சில சமயங்களில் அதில் சிறிது உண்பதுண்டு.[3]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. Encyclopaedia Britannica, "Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language" .
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜோனதன்_ஸ்விப்ட்&oldid=37268" இலிருந்து மீள்விக்கப்பட்டது