ஞானியாரடிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஞானியாரடிகள் எனப்படும் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் ( 17- மே -1873 - 2 ஆகத்து 1942 ) என்பவர் தமிழ்நாட்டின் திருக்கோவலூர் ஆதீனம் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தில் ஐந்தாவது மடாதிபதி ஆவார். இவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் புலமை கொண்டவராக ஒரு சொற்பொழிவாளராக விளங்கினார்.

இவரது கருத்துகள்[தொகு]

  • என் நண்பரிற் பலர் - செல்வமும் அறிவுடைமையும், பேச்சு வன்மையும் பெற்றாேர். ‘ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளுகின்றார்கள்; ஆதலின் கோயிலுக்குச் செல்வதில் கருத்து வரவில்லை என்று கூறுகின்றார்கள். அவர்களே சில இந்திரிய அனுபவத்திற்காகப் பல இடிபட்டுத் தம் மனைவி மக்களுடன் துன்புற்றுக் கொட்டகையினுள் நுழைகிறார்கள். ஆண்டவன் சந்நிதியில் ஆகாத ஒன்று அங்கு ஆகும் போலும்! ஆண்டவன் சந்நிதியில் இடிபடுதலால் குறைவு ஒன்று மில்லை ஆண்டவன் சந்நிதியில் நடுவில் மூன்றடி விடுதல் வேண்டும். புறத்தில் நின்றே வணங்கல் வேண்டும். எதிரே நிற்றலாகாது. எதிரிலிருப்பவனே எதிரி என்று கூறுதல் வழக்கமல்லவா? பக்கங்களில் நின்று வணங்கல் வேண்டும். —(கந்தர்சட்டிச் சொற்பொழிவில்)[1]
  • ஒரு இந்திரியமாகிய மூக்குக்குச் சுறுசுறுப்புத் தருதற்காக மரத்தினலோ, வெள்ளியினாலோ, பொன்னினாலோ தத்தம் தகுதிக்கேற்பச் செய்யப்பட்ட ஒரு சிறு பெட்டியில் பொடியினை அடைத்து உடம்பிலேயே வைத்து கொண்டிருக்கின்றனர். இப் பொடிக்கு இவ்வளவு பெருமை என்றால், உயிருக்கே பேரின்பத்தை நல்க வல்ல வேற்பெருமானை உடம்பில் ஏன் கொள்ளக்கூடாது? என்று கேட்கிறேன். ‘அவ்வாறு கூறும் நீங்கள் உடன் வைத்திருக்கின்றீர்களா? என்று வினாவலாம். 40 ஆண்டுகளுக்கு முன்னர்க் குப்புசாமிப் பத்தர் என்ற ஓர் அன்பர் தங்கப் பட்டைகளுடன் கூடிய இந்த வேலினை எமக்குச் செய்து தந்தனர். இதனை யாம் எப்போதும் எம்முடன் வைத்துக் கொண்டிருக்கின்றோம். —ஞானியாரடிகள் (கந்தர் சட்டிச் சொற்பொழிவில்)[2]
  • மெய்யன்பர்களே! சரித்திரத்தோடு தத்துவங்களையும் உற்றுணர்தல் வேண்டும். தோன்றிய பொறிகள் ஆகாயம் எங்கணும் பரந்தன. ’சுடும்’ எனத் தேவர் அஞ்சிச் சிவனை அடைந்து அரற்றினர். ’நன்று’ என்று சிவபிரான் கூறி, அச்சித் (அறிவு மயமான) பரஞ்சோதியை ’வா’ என்றார். வந்து அடக்கமாக நின்றது. அடக்கமுள்ள பிள்ளைகளைத் தந்தைமார் அழைத்தால் உடனே அவரைச் சார்ந்து, ’ஏன் அழைத்தீர்கள்’ என்று கேட்பது உயர்ந்தது என்று சிலர் கருதுகின்றனர். என் கருத்து சென்று நிற்றல் வேண்டும் என்பதே.[3]
  • அறிவு துணை செய்யும் காலம் இது. தமிழர் தமிழிலேயே கொள்ள வேண்டுமென்ற பற்றுடன் விளங்குகின்றனர். பற்றுடையார் போன்று நடிக்கும் சிலர் போலி நடிப்பை நான் அறவே வெறுக்கின்றேன். தமிழ் புத்தகங்களை நன்றாகப் படிக்க வேண்டும், அவற்றில் பழகல் வேண்டும். அவ்வறிவைப் பெறுதல் வேண்டும். இல்லையேல் தமிழரென்று வெளிக்குக் கூறிக் கொள்வோருக்கு வெட்கமில்லை யென்றே நான் கூறுவேன். — (கந்தர் சஷ்டிச் சொற்பொழிவில்)[4]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • ஞானியார் சுவாமிகளை யான் கால் நூற்றாண்டாக அறிவேன். சுவாமிகள் அடியின் கீழ் நின்று பேசும் பேறும் அவருடன் நெருங்கி உரையாடும் பேறும் எனக்குப் பலமுறை வாய்த்ததுண்டு. அடிகளின் ஆசி பெற்றவருள் சிறியேனும் ஒருவன்.

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  5. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஞானியாரடிகள்&oldid=37097" இலிருந்து மீள்விக்கப்பட்டது