தன்னம்பிக்கை
Appearance
தன்னம்பிக்கை (Self confidence) என்பது தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது. பயம், தோல்வி, முயற்சியின்மை, மன அழுத்தம், துயரம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து மீண்டு வாழ்வில் வெற்றி பெற அவருக்கு நம்பிக்கையை ஊட்டுவது தன்னம்பிக்கையளிப்பது (Motivation) ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- எனது துணிவுடைய இளைஞர்களே நீங்கள் அனைவரும் பெரும் பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். வானத்தில் முழங்கும் இடிக்கும் அஞ்சவேண்டாம். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள். -சுவாமி விவேகானந்தர்
- செய்து முடிக்கப்படும் மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப் பட்டவைதாம். -கார்லைல்
- உறுதி கொண்டவர்கள் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை உயர்ந்து விளங்கினார்கள் என்பதற்கு மட்டுமே சான்று உண்டு. -தமிழ்வாணன்
- வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். - கீட்ஸ்
- "நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அதுதான் வாழ்வின் ரகசியம். நான் அனாதை விடுதியில் இருந்த போதும், உணவுக்காக தெருக்களில் சுற்றித் திரிந்த போதும், என்னை நான் உலகின் மிகச் சிறந்த நடிகனாகவே எண்ணிக் கொள்வேன்" - சார்லி சாப்ளின்
- நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது. -புத்த பகவான்
- தனக்குத்தானே உதவிக்கொள்ளாமல் எவனாலும் அடுத்தவனுக்கு உதவ முடியாது என்பது உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று.- எமர்சன்
- தாங்கள் வெல்லலாம் என்று நம்புகிறவர்களே வெற்றி அடைய முடியும். - வர்கில்[1]
- நானே செய்துகொள்ளக்கூடிய காரியம் எதையும் நான் மற்ற எவரையும் செய்யச் சொல்லக்கூடாது என்று நான் எப்பொழுதும் நம்பி வருகிறேன். - மாண்டெஸ்கியு[1]
- எவரை வேண்டுமானாலும் ஐயுறலாம். ஆனால், உன்னை நீயே ஐயுறக்கூடாது. - போவீ[1]
- தன்னுடைய இன்பத்திற்குத் தேவையான ஒவ்வொன்றையும். மற்றவர்கள் சார்பில்லாமல் தானே அமைத்துக்கொள்ளும் மனிதன், இன்பமாக வாழ்வதற்குத் தலைசிறந்த வழியைக் கடைப் பிடிக்கிறான்.இவனே நிதானமான தேவையுள்ளவன் ஆண்மையும் அறிவும் உள்ளவன். - பிளேட்டோ[1]
- நான் மெதுவாக நடப்பவன். ஆனால் ஒருபோதும் பின் வாங்குவதில்லை.-ஆபிரகாம் லிங்கன்.
- நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை, முழு படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படி ஏறு. - மார்டின் லூதர் கிங்
== பழமொழிகள்
கவிதைகள்
[தொகு]- ‘காயப்படாத மூங்கில்
புல்லாங்குழல் ஆகாது...
வலிபடாத வாழ்வில்
வசந்தங்கள் நுழையாது!’ -
‘துடியாய்த் துடி
சாதிக்க!
படியாய்ப் படி
வாதிக்க!
மரம் குடைய கோடாலி
கொண்டுபோவதில்லை
மரங்கொத்தி...
அவனவன் கையில்
ஆயிரம் ஆயுதம்’ - கவிஞர் பா.விஜய்
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 207. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
வெளியிணைப்புக்கள்
[தொகு]http://www.ponmozhigal.com/search/label/தன்னம்பிக்கை%20Thannambikkai
https://www.vikatan.com/news/coverstory/57549-vivekananda-life-history.html