உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழிசை

விக்கிமேற்கோள் இலிருந்து

தமிழ்ச் சூழலில் வளர்ச்சி பெற்ற இசை தமிழிசை ஆகும். குறிப்பாக தமிழர்களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
 • நான் தெலுங்கு நாட்டு சங்கீதத்தையும், கன்னட தேசத்து சங்கீதத்தையும் ஆராய்ந்திருக்கிறேன். அவை எல்லாம் தமிழ் இசையுடன் கொஞ்சங்கட சம்பந்தப்பட வில்லை. அவை மராட்டி, ஹிந்துஸ்தானி இசையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். தாம்பிர பரணி நதி ஜலத்தைக் குடித்து, தமிழ்க் காற்றையே சுவாசித்து வந்த தியாகராஜ சுவாமிகள் தம் தாய் பாஷையில் சாகித்திய மேற்பட வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்தும், தமிழிலுள்ள சாகித்யங்களின் மேன்மையை உணர்ந்தும், தம் சாகித்தியங்களைத் தாய் மொழியிலேயே செய்தார்.
 • நான் முதன் முதலில் சென்னைக்குச் சென்ற பொழுது அங்குள்ளவர்கள் இசை உணர்ச்சி இல்லாதவர்கள் என்று தெளிவாகி விட்டது. தமிழ் நாட்டில்தான் மேளம், இசை அல்லது பரதநாட்டியம் இருக்கின்றன. பிற பாஷைகளில் கிடையாதெனச் சிலர் நினைக்கலாம். தமிழ் நாகரிகம் உலகம் முழுமையும் பரவி இருந்ததற்கும் போதிய சான்றுகள் பலவுள. பண்பாடு என்பது தமிழில்தான் உண்டு. அதன் கவிதை உயர் நோக்கங்கள் இவைகள் தெலுங்கு பாஷையில் கிடையாது.
 • தமிழ் இசையைப் பற்றிய சிறப்புகளைப் பொதுவாக நம் தமிழ்ப் படங்களில் காணுவதற்கே இடமில்லை. தமிழ் இசைக் கலையை வளர்க்காது போவோமேயானால் தமிழ் இசைக்கே பெரும் தீது செய்தவர்களாவோம். தமிழ்ப் படங்களிலே இந்திப் பாட்டுக்களையோ, சமஸ்கிருத பாட்டுக்களையோ புகுத்த வேண்டிய அவசியமே இல்லை. வேண்டிய இடங்களில் எல்லாம் தமிழ்ப் பாட்டுக்களே அமைத்துக் கொள்வதுதான் பொருத்தமாகும். **குமாரராஜா எம் ஏ. முத்தையா செட்டியார் (25.5-1941) (சென்னை பிரபாத் தியேட்டரில் நடைபெற்ற சகுந்தலை என்ற படத்தின் 100-வது நாள் விழாவில்)[1]
 • தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் என்ற முறையில் தமிழிசை வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களில் நானும் ஒருவன். ஆனால், தமிழ்ப் பாட்டுக்கும், தெலுங்குப் பாட்டுக்கும் சம அந்தஸ்து அளிக்க வேண்டுமென்பது என்னுடைய கருத்து. தமிழ்ப்பாட்டுக்களைத் தவிர தெலுங்குப் பாட்டுக்களை பாடக் கூடாதென்று ஒருவர் என்னைச் சொன்னால், நான் அந்தக் கச்சேரிக்குப் போகச் சம்மதிக்க மாட்டேன்.
 • தமிழ் நாட்டில் தமிழ் சங்கீதம் வளர்ச்சியடைய வேண்டுமென்ற பேரவா கொண்டவர்களில் நானும் ஒருவன். சமீப காலமாகத் தமிழ்ப் பாடல்கள் பாடுவதைப் பற்றி ஓர் விவாதம் நடந்து வருகிறது. சங்கீதத்திற்குப் பாஷை அவசியம் இல்லையென்று கூறப்படுகிறது. அப்படியானல் இப்பொழுது போற்றப்பட்டு வரும் மகான் தியாகராஜாவின் கீர்த்தனங்களுக்கு அவசியமேயில்லையே!
  • இராஜாஜி (30.12.1942) (காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழாவில்.)[4]
 • சங்கீதத்தை நாம் நன்றாக ரசித்து, அநுபவித்து அதனால் உள்ளம் நெகிழுவதற்குப் பாஷை அவசியம். பாஷை தான் நாம் அதை அதிகம் அதுபவிக்கும்படிச் செய்கிறது. எனவே, கேட்பவரின் ஹிருதயத்தைத் தொடுவதற்கு அவருக்குப் புரியும் பாஷையிலேதான் பாட்டுகள் பாடப்பட வேண்டியது நியாயம்.
  • இராஜாஜி(30-1-1942, காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழாவில்.)[2]
 • தமிழர்களால் தமிழ் நாட்டில் ஏற்பாடு செய்யப்படும் கச்சேரிகளில் பாட்டுகள் எல்லாமே தமிழில் இருக்க வேண்டுமென்று என் சொந்த ஹோதாவில் யோசனை சொல்கிறேன். அபிப்ராய பேதங்களை மறந்து ஒற்றுமையாக விருந்தால் எல்லாருக்கும் க்ஷேமம். அப்படிச் செய்வதன் மூலம் தேசிய வாழ்வு நலம்பெறச் சேவை செய்ததாக ஏற்படும். —

குறிப்புகள்

[தொகு]
 1. 1.0 1.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 2. 2.0 2.1 2.2 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 3. 3.0 3.1 3.2 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 4. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=தமிழிசை&oldid=18577" இலிருந்து மீள்விக்கப்பட்டது