உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு

விக்கிமேற்கோள் இலிருந்து

தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்திய ஒன்றியத்தின், 28 மாநிலங்களில் ஒன்றாகும். இது தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  • வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்.
    • (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3)
  • இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க
    • (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5)
  • தமிழ்நாடு தமிழருக்கே
    • இராசாசி அரசால் தமிழகத்தில் (சென்னைமாகாணம்) கட்டாயம் இந்தி படிக்கவேண்டும் என்று திட்டம் கொண்டுவந்தபோது, 1.8.1938 அன்று சென்னை பொதுக்கூட்டத்தில் பெரியாரால் எழுப்பபட்ட முழக்கம்.
  • நமது சமுதாய இழிவு நீங்கவே (தமிழ்) நாடு பிரியவேண்டும்: விடுதலை அடையவேண்டும் என்பதாக நாங்கள் சொல்லுகிறோம். என்றால் அது ஏதோ அரசியல் காரணத்துக்காகச் சோல்லுகிறோம் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. பணத்தை அவன் கொள்ளையடித்துக் கொண்டு போய்விடுகிறானே என்பதுகூட முக்கியமல்ல, பின்னே எதற்காக என்றால் சமுதாய நோக்கத்துக்காகத்தான் நாடு பிரியவேண்டும் என்று கேட்கிறோம். 3000 ஆண்டுகளாக இருந்துவருகிற பிறவி இழிவு அவமானம் நம்மைவிட்டு ஒழியவேண்டும் என்றால் நமக்கு இதைத் தவிர வேறு வழியே கிடையாது.
    • சுதந்திரத் தமிழ்நாடு ஏன்? பெரியார் ஈவேரா. பக்.32
  • நம் நாட்டை நாம்தான் ஆளவேண்டும். என்று கேடபதற்கு நாதி இல்லையே? நம் நாடு ஆதிக்கம் நமக்கு வரவேண்டும் என்று கேட்கிறோம் என்றால், ஆட்சி நம் கையில் வரவேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. நம் நாடு பிரிந்து அதிகாரம் பார்பான் கையிலிருந்தால் கூட பரவாயில்லை. டெல்லி ஆதிக்கம் போச்சு என்று தெரிந்தால் அப்புரம் பார்பனர்கள் எல்லாம் நாம் சொன்னபடி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்! சோத்துக்கில்லாதபார்ப்பான் சொன்னபடியெல்லாம் கேட்பான். பிறகு இஷ்ப்பபடி நாம் பார்பானிடம் வேலைவாங்கமுடியும்.
    • சுதந்திரத் தமிழ்நாடு ஏன்? பெரியார் ஈவேரா. பக்.17
  • பல வழிகளில், இங்கிலாந்துக்கு அயர்லாந்து இருப்பது போல வட இந்தியாவுக்கும் தென்னிந்தியா உள்ளது. வட இந்தியாவானது தென்னிந்தியாவை பல நூற்றாண்டுகளாக அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக தமிழர்கள், தென்னிந்திய இனக்குழுக்களில் அதிக மக்கள் தொகை (அவர்கள் பேசும் மொழியால் வரையறுக்கப்படுகிறது) தங்களின் அடையாளத்தில் பெருமை கொள்கிறார்கள். இந்த நூற்றாண்டில் ஒரு முறைக்கு மேல் தனித் தமிழ் தேசத்தை நிறுவ முயற்சித்திருக்கிறார்கள். ஐரிஷைப் போலவே, தமிழர்களும் உணர்வை வலுவாக நம்புகிறார்கள்: ஆத்திரம், துக்கம், இரக்கம், பாசம், ஆசை, சிரிப்பு, பரவசம் ஆகிய உணர்வுகள் தமிழ்நாட்டின் தெருக்களிலும் திறந்த வெளிகளிலும் வெளிப்படையாகவும் அடிக்கடி காணலாம். ஐரிஷைப் போலவே, தமிழர்களும் பேச்சாற்றலை மதிக்கிறார்கள்: அற்புதமான உரையாடல் வள்ளுநர்கள், கதைசொல்லிகள், பாடகர்கள், கவிஞர்கள் போன்றோர் அவர்களில் ஏராளமானோர் உள்ளனர்.

பழமொழிகள்

[தொகு]
  • வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=தமிழ்நாடு&oldid=19286" இலிருந்து மீள்விக்கப்பட்டது