தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்
Appearance
- அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ
- க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ
- ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ
- ஞ | ஞா
- ட | டா | டி | டீ
- த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை| தொ | தோ| தௌ
- ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை |நொ | நோ | நௌ
- ப | பா | பி | பீ | பு |பூ | பெ | பே | பை | பொ | போ
- ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ |மோ |மௌ
- ய | யா | யோ |
- வ | வா | வி | வீ | வெ | வே | வை
அ
[தொகு]- அஃகமும் காசும் சிக்கெனத் தேடு [அஃகம் = தானியம்]
- அஃகம் சுருக்கேல்
- அக்கக்கா என்றால் ரங்க ரங்கா என்கிறது
- அக்கச்சி உடைமை அரிசி; தங்கச்சி உடைமை தவிடா?
- அக்கப் போரும் சக்கிலியர் கூத்தும்
- அக்கரைக்காரனுக்குப் புத்தி மட்டம்
- அக்கரைக்கு இக்கரை பச்சை
- அக்கரைப் பாகலுக்கு இக்கரைக் கொழுகொம்பு [பாகல் = பாகற்காய்க் கொடி]
- அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை
- அக்கரையானுக்கு ஆனது இக்கரையானுக்கும் ஆகட்டும்
- அக்கரையில் இருக்கிற தாசப்பனைக் கூப்பிட்டு இக்கரையில் இருப்பவன் நாமத்தைப் பார் என்றானாம்
- அக்கரை வந்து முக்காரம் போடுது [முக்காரம் = பிடிவாதம்]
- அக்கறை தீர்ந்தால் அக்காள் புருஷன் என்ன கொக்கா?
- அக்கறை தீர்ந்தால் அக்காள் மொகுடு குக்க
- அக்கன்னா அரியன்னா, உனக்கு வந்த கேடு என்ன?
- அக்காக்காயாகச் சுற்றுகிறான்
- அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்கிறான் பிள்ளை; அதற்கு அப்பன், கைகால் பட்டுக் கிழியப் போகிறது, மடித்துப் பெட்டியிலே வை என்கிறான் [துப்பட்டி = போர்வை]
- அக்காடு வெட்டிக் பருத்தி விதைத்தால், அப்பா முழுச் சிற்றாடை என்கிறாளாம் பெண்
- அக்காரம் கண்டு பருத்தி விளைந்தால் அம்மா எனக்கு ஒருதுப்பட்டி [அக்காரம் = ஆடை; துப்பட்டி = போர்வை]
- அக்காரம் சேர்ந்த மணல் தின்னலாமா? [அக்காரம் = சருக்கரை]
- அக்காள் அரிசி கொடுத்தால்தானே தங்கை தவிடு கொடுப்பாள்?
- அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்
- அக்காள் இருக்கிற வரையில் மச்சான் உறவு
- அக்காள் மணப்பந்தலில் இல்லாவிட்டால் தங்கை கழுத்தில் தாலி ஏறும்.
- அக்காள் உண்டானால் மச்சான் உறவு உண்டு
- அக்காள் உறவும் மச்சான் பகையுமா?
- அக்காள் செத்தாள், மச்சான் உறவு அற்றுப் போச்சு
- அக்காள்தான் கூடப் பிறந்தாள்: மச்சானும் கூடப் பிறந்தானா?
- அக்காள் போவதும் தங்கை வருவதும் அழகுதான். {அக்காள் [மூதேவி வீட்டை விட்டுப்] போவதும், தங்கை [சீதேவி வீட்டுக்குள்] வருவதும் அழகுதான்.
- அக்காள் மகள் ஆனாலும் சும்மா வரக் கூடாது
- அக்காள் வந்தாள்; தங்கை போனாள்
- அக்காள் வீட்டுக்குப் போனாலும் அரிசியும் பருப்பும் கொண்டு போக வேணும்
- அக்காள் வீட்டுக் கோழியை அடித்து மச்சானுக்கு விருந்து வைத்தாளாம்
- அக்காளைக் கொண்டவன் தங்கச்சிக்கு முறை கேட்பானா?
- அக்காளைக் கொண்டால் தங்கையை முறை கேட்பானேன்?
- அக்காளைப் பழித்துத் தங்கை மோசம் போனாள்
- அக்காளோடு போயிற்று, அத்தான் உறவு
- அக்கியானம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும் [அக்கியானம் = அஞ்ஞானம், அறிவின்மை; அவிழ்தம் = அமிழ்தம்]
- அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர் [அக்கிரகாரம் = பார்ப்பனச் சேரி, பார்ப்பனர் குடியிருப்பு]
- அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?
- அக்கிரகாரத்து நாய் அபிமானத்துக்குச் செத்தது
- அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா? [அகவிலை = தானிய விலை]
- அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல
- அக்கிரமக்காரன் முகத்தில் விழியாதே
- அக்கினிக்கும் சாகாத தங்கத்தைப் போல
- அக்கினி சாட்சி, அருந்ததி சாட்சி
- அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான்
- அக்கினிப் பந்தலிலே வெண்ணெய்ப் பதுமை ஆடுமா?
- அக்கினி மலையிலே கற்பூர பாணம் விட்டது போல்
- அக்கினியால் சுட்ட புண் ஆறிப் போகும்
- அக்கினியால் சுட்ட புண் விஷம் கக்குமா?
- அக்கினியைக் குளிப்பாட்டி ஆனை மேல் வைத்தாற் போல
- அக்கினியைக் குளிப்பாட்டினாற் போல
- அக்கினியைத் தின்று சீரணிக்கிற பிள்ளை, அல்லித் தண்டைத் தின்றது அதிசயமா?
- அக்குணிப் பிள்ளைக்குத் துக்குணிப் பிச்சை [அக்குணி = சிறிதளவு; துக்குணி = சிறிதளவு: சின்ன பிள்ளைக்குச் சின்ன பிச்சை]
- அக்குத்தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன வந்தது? [அக்குத்தொக்கு = ஒட்டுப் பற்று, உறவுப்பற்று]
- அக்குத்தொக்கு இல்லாதவன் ஆண்மையும், [அக்குத்தொக்கு = ஒட்டுப் பற்று, உறவுப்பற்று]
வெட்கஞ்சிக்கு இல்லாதவன் ரோஷமும் [சிக்கு = வெட்கம்] மிக்குத் துக்கப்படாதவன் வாழ்வும் நாய் கக்கி நக்கித் தின்றது ஒக்கும்
- அக்குவேறு ஆணிவேறாகப் பிரிக்கிறான்
- அகங்காரத்தால் அழிந்தான் துரியோதனன்
- அகங்கை புறங்கை ஆனாற் போல
- அகங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா?
- அகடவிகடமாய்ப் பேசுகிறான்
- அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே
- அகத்திக் கீரைக்கு மஞ்சள் போட்டு ஆவது என்ன?
- அகத்தியன் நற்றமிழுக்கும் குற்றம் கூறுவார்
- அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்
- அகத்திலே ஆயிரம் காய்த்தாலும் புறத்திலே பேசலாமா?
- அகத்திலே இருப்பவன் அடிமுண்டை என்றானாம்; பிச்சைக்க வந்தவன் பீமுண்டை என்றானாம்
- அகத்திலே உண்டானால் அம்பி சமத்து
- அகத்துக்காரர் அத்து முண்டை என்றால், பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்றானாம்
- அகத்துக்காரர் இருந்த போது தலைநிறைய மயிர் வைத்துக் கொண்டிருந்தேன் என்றாளாம்
- அகத்துக்கு அழகு அகமுடையாள்
- அகத்துக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல்
- அகத்துக்கு மூத்தது அசடு
- அகத்துப் பிராம்மணன் அவிசாரி என்றால் பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்கிறான்
- அகத்துப் பிள்ளை ஊட்டுப் பிள்ளை; அடிக்கப் பிள்ளை அசல் வீட்டிலே
- அகதிக்கு ஆகாசமே துணை
- அகதிக்கு ஆண்டவன் துணை
- அகதி சொல் அம்பலம் ஏறாது
- அகதி தலையில் பொழுது விடிந்தது
- அகதி பெறுவது பெண் பிள்ளை; அதுவும் வெள்ளி பூாாடம்
- அகதியை அடித்துக் கொல்லுகிறதா?
- அகதியைப் பகுதி கேட்கிறதா?
- அகப்பட்டதைச் சுருட்டடா ஆண்டியப்பா
- அகப்பட்ட நாயை அடிக்கும் போது, அதைக் கண்ட நாய் காதவழி ஓடும்
- அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்டமத்துச் சனி. ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு
- அகப்பட்டுக் கொண்டாரே விட்டல பட்டர்
- அகப்பட்டுக் கொண்டான் தண்டம்பட்டுக் கணவாயில்
- அகப்பட்டுக் கொள்வேன் என்றோ கள்வன் களவு எடுக்கிறது?
- அகப்பை அறுசுவை அறியுமா?
- அகப்பைக்கு உருவம் கொடுத்தது ஆசாரி; சோறு அள்ளிப் போட்டுக் குழம்பு ஊற்றியது பூசாரி
- அகப்பைக்குக் கணை வாய்த்தது போல
- அகப்பைக்குத் தெரியுமா அடிசிற் சுவை?
- அகப்பைக்குத் தெரியுமா சோற்று ருசி?
- அகப்பைக்கு வால் முளைத்தது ஆராலே? ஆசாரியாலே
- அகப்பைக் கூழுக்குத் தோப்புக்கரணம் போடுகிறான்
- அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்
- அகப்பை பிடித்தவன் தன்னவன் ஆனால், அடிப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன?
- அகம் ஏறச் சுகம் ஏறும்
- அகம் குளிர முகம் மலரும்
- அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்
- அகம் மலிந்தால் அஞ்சும் மலியும்
- அகமுடையாள் நூற்றது அரைஞாண் கயிற்றுக்கும் போதாது
- அகமுடையாளுக்குச் செய்தால் அபிமானம்
- அகமுடையான் அடித்த அடியும் அரிவாள் அறுத்த அறுப்பும் வீண் போகா
- அகமுடையான் அடித்ததற்கு அழவில்லை; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன்
- அகமுடையான் அடித்ததற்குக் கொழுநனைக் கோபித்துக் கொண்டாளாம்
- அகமுடையான் அடைவானால் மாமியார் மயிர் மாத்திரம்
- அகமுடையான் இல்லாத புக்ககமும் அம்மா இல்லாத பிறந்தகமும்
- அகமுடையான் இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கா?
- அகமுடையான் அடித்தது உறைக்கவில்லை; அடுத்தகத்துக்காரன் சிரித்ததுதான் உறைக்கிறது
- அகமுடையான் அடித்தது பாரம் இல்லை; கொழுந்தன் சிரித்தது பாரம் ஆச்சு
- அகமுடையான் அடித்தது பெரிது அல்ல; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன்
- அகமுடையான் அடித்தாலும் அடித்தான்; கண் புளிச்சை விட்டது
- அகமுடையான் கோப்பு இல்லாக் கூத்தும் குரு இல்லா ஞானமும் போல் இருக்கிறான்
- அகமுடையான் சாதம் ஆனைபோல் இருக்கும்; பிள்ளை சாதம் பூனை போல் இருக்கும்
- அகமுடையான் செத்த போதே அல்லலுற்ற கஞ்சி
- அகமுடையான் செத்தவளுக்கு மருத்துவச்சி தயவு ஏன்?
- அகமுடையான் செத்து அவதிப்படுகிறபோது அண்டை வீட்டுக்காரன் அக்குளைக் குத்தினானாம்
- அகமுடையான் திட்டியதைப் பற்றி அடுத்த வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம்
- அகமுடையான் திடம்கொண்டு குப்பை ஏறிச் சண்டை கொடுக்க வேணும்
- அகமுடையான் பலமானால் குப்பை ஏறிச் சண்டை போடலாம்
- அகமுடையான் பெண்டாட்டியானாலும் அடுப்புக்கட்டி மூணு
- அகமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும்
- அகமுடையான் வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது; அடிப்பானோ என்ற பயமும் இருக்கிறது
- அகமுடையான் வைததைப்பற்றி அசல் வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம்
- அகமுடையானுக்கு அழுத குறை அந்தகன் வந்து வாய்த்தான்
- அகமுடையானுக்கு இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கு என்ன?
- அகமுடையானுக்குத் தக்க இறுமாப்பு
- அகமுடையானுக்குப் பெண்டாட்டிமேல் ஆசை, பெண்டாட்டிக்குப் புடைவைமேல் ஆசை
- அகமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லி முடியுமா?
- அகமுடையானைக் கண்டபோது தாலியைத் தடவுவாளாம்
- அகமுடையானைக் கொன்ற அற நீலி
- அகமுடையானைக் கொன்ற பிறகு அறுதாலிக்குப் புத்திவந்தது
- அகமுடையானை நம்பி அவிசாரி ஆகலாமா?
- அகமுடையானை வைத்துக் கொண்டல்லவோ அவிசாரி ஆட வேண்டும்?
- அகர நாக்காய்ப் பேசுகிறான்
- அகராதி படித்தவன்
- அகல் வட்டம் பகல் மழை
- அகல இருந்தால் நிகள உறவு; கிட்ட இருந்தால் முட்டப் பகை
- அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை
- அகல இருந்தால் புகல உறவு
- அகல இருந்து செடியைக் காக்கிறது
- அகல உழுகிறதை விட ஆழ உழு
- அகல உழுவதை ஆழ உழு
- அகலக் கால் வைக்காதே
- அகல விதை; ஆழ உழு
- அகவிலை அறியாதவன் துக்கம் அறியாளன்
- அகவிலையையும் ஆயுசையும் ஆர் கண்டார்?
- அகன்ற வட்டம் அன்றே மழை; குறுவட்டம் பின்னால் மழை
- அகன்ற வில் அடுத்து மழை; குறுகிய வில் தள்ளி மழை
- அகன்று இருந்தால் நீண்ட உறவு; கிட்ட இருந்தால் முட்டப்பகை
- அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்
- அகாரியத்தில் பகீரதப் பிரயத்தனம் பண்ணுகிறது
- அகிருத்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா?
- அகிலும் திகிலுமாக
- அகோர தபசி வபரீத சோரன்
- அங்கடி இங்கடி தெங்கடி புளியடி என்று அலைகிறான்
- அங்கத்திலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி
- அங்கத்தை ஆற்றில் அலைசொணாதா?
- அங்கத்தைக் கட்டித் தங்கத்தைச் சேர்ப்பார்
- அங்கத்தைக் கொண்டு போய் ஆற்றில் அலைசினாலும் தோஷம் இல்லை
- அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்க ஒண்ணாது
- அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிரும்
- அங்கம் நோவ உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது
- அங்கரங்க வைபவமாய் இருக்கிறான்; அரைக்காசுக்கு முதல் இல்லை
- அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால், வெங்காயம், கறி வேப்பிலை என்பாள்
- அங்காடிக் கூடையை அதிர்ந்தடித்துப் பேசாதே
- அங்காடிக் கூடையை அநியாய விலை கூறாதே
- அங்காடி நாய் போல அலைந்து திரியாதே
- அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு
- அங்காடியில் தோற்றதற்காக அம்மாவை அறைந்தானாம்
- அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூடு வழியாய் வரும்
- அங்கிடு தொடுப்பி எங்கடி போனாய்? சின்னண்ணன் செத்த இழவுக்குப் போனேன்
- அங்கிடு தொடுப்பிக்கு இங்கு இரண்டுகுட்டு; அங்கு இரண்டுசொட்டு
- அங்கு அங்குக் குறுணி அளந்து கொட்டியிருக்கிறது
- அங்கு ஏண்டி மகளே, கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வந்தால் காற்றாய்ப் பறக்கலாம்
- அங்குசம் இல்லாத ஆனையும் கடிவாளம் இல்லாத குதிரையும் அடங்கா
- அங்கும் இருப்பான்; இங்கும் இருப்பாள்; ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்
- அங்கும் குறுணி அளந்து போட்டிருக்கிறான்
- அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக் கொண்டான் தும்மட்டிப்பட்டன்
- அங்கும் சோதி; அடியேனும் சோதி
- அங்குஸ்தி இங்குஸ்தி
- அங்கே ஏன் பிள்ளே கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வாடி காற்றாய்ப் பறக்கலாம்
- அங்கே பார்த்தால் ஆடம்பரம்; இங்கே பார்த்தால் கஞ்சிக்குச் சாவு
- அங்கே போனால் அப்படி; இங்கே வந்தால் இப்படி; ஆகிறது எப்படி?
- அங்கே போனேனோ செத்தேனோ?
- அங்கை நெல்லிக்கனி
- அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான்
- அச்சம் ஆண்மையைக் குறைக்கும்
- அச்சாணி அன்னதோர் சொல்
- அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
- அச்சி என்றால் உச்சி குளிருமா? அழுவணம் என்றால் கை சிவக்குமா?
- அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசுதான்
- அச்சியிலும் உண்டு பிச்சைக்காரன்
- அச்சில் அடித்தால் போல, அகமுடையானுக்கு ஒத்தாற்போல
- அச்சி வீடு தீப்பிடித்தால் பட்டர் முண்டு தோளில்
- அச்சு இல்லாத தேர் ஓடவும் அகமுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா?
- அச்சு இல்லாமல் தேர் ஓட்டி அகமுடையான் இல்லாமல் பிள்ளை பிறக்குமா?
- அச்சு இல்லாமல் தேர் ஓடாது
- அச்சு ஒன்றா வேறா?
- அசடு வழிகிறது
- அசத்துக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம் வருஷம் வாழ்வதைவிடச் சமர்த்தனுக்கு. வாழ்க்கைப்பட்டுச் சட்டென்று சாவதே மேல்
- அசந்தால் வசந்தா
- அசந்து நடப்பவன் அடிமடியில் அக்காள்; கடுகி நடப்பவன் காலிலே தேவி
- அசல் அகத்து நெய்யே, என் பெண்டாட்டி கையே
- அசல் அகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி, அல்லித் தண்டைப் போல் குளிர்ந்திருக்கும்
- அசல் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான்
- அசல் வாழ ஆறு மாசம் பட்டினி
- அசல் வீட்டு அகமுடையான் ஆபத்துக்கு உதவுவானா?
- அசல் வீட்டுக்காரன் அழைத்த கதை
- அசல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா?
- அசல் வீட்டுக்காரனுக்குப் பரிந்துகொண்டு அகமுடையானை அடித்தாளா?
- அசல் வீட்டுக்குப் போகிற பாம்பைக் கையாலே பிடிக்கிறான்
- அசல் வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி
- அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு
- அசைப்புக்கு ஆயிரம் பொன் வாங்குகிறது
- அசை போட்டுத் தின்னுவது மாடு; அசையாமல் விழுங்குவது வீடு
- அசை போட ஏதாவது இருந்தால் அவனா நகருவான்?
- அஞ்சலி பந்தனம் யாருக்கும் நன்மை
- அஞ்சனக்காரன் முதுகிலே வஞ்சனைக்காரன் ஏறினான்
- அஞ்சனம் குருட்டு விழிக்கு என்ன செய்யும்?
- அஞ்சாத ஆனைக்குப் பஞ்சாங்கம் கோடரி
- அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்?
- அஞ்சாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி ஆவான்
- அஞ்சாவது பெண்ணைக் கெஞ்சினாலும் தரமாட்டார்கள்
- அஞ்சி அஞ்சிச் சாகிறான்
- அஞ்சி ஆண்மை செய்ய வேணும்
- அஞ்சி நடக்கிறவனுக்குக் காலம் இல்லை
- அஞ்சி மணியம் பண்ணாதே; மிஞ்சிப் பிச்சை கேட்காதே
- அஞ்சி மணியம் பர்ர்த்தது கிடையாது; கெஞ்சிக் கடன் கேட்டது கிடையாது
- அஞ்சிய அரசன் தஞ்சம் ஆகான்
- அஞ்சில் ஒரு மழை; பிஞ்சில் ஒரு மழை
- அஞ்சிலே அறியாதவன் அம்பதிலே அறிவானா?
- அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல் அறுபதுக்குமேல் கொஞ்சினான்
- அஞ்சிலே வளையாதது அம்பதிலே வளையாது
- அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
- அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசம் எல்லாம் பேய்
- அஞ்சினவனுக்கு ஆனை; அஞ்சாதவனுக்குப் பூனை
- அஞ்சினவனைக் குஞ்சும் மிரட்டும்
- அஞ்சினவனைப் பேய் அடிக்கும்
- அஞ்சினாரைக் கெஞ்ச அடியாதே
- அஞ்சினாரைக் கெஞ்ச வைக்கும்; அடித்தாரை வாழ்விக்கும்
- அஞ்சு அடி அடித்த பாவனையும் அப்பனேதான்
- அஞ்சு அடி அடித்துப் போரிலே போட்டாச்சு
- அஞ்சு அடித்தால் சோரும்; ஆறு அடித்தால் பாயும்
- அஞ்சு பணம் கொடுத்தாலும் அத்தனை ஆத்திரம் ஆகாது
- அஞ்சு பணம் கொடுத்து அடிக்கச் சொன்னானாம்; பத்துப் பணம் கொடுத்து நிறுத்தச் சொன்னானாம்
- அஞ்சு பணம் கொடுத்துக் கஞ்சித் தண்ணீர் குடிப்பானேன்?
- அஞ்சு பிள்ளைக்குமேல் அரசனும் ஆண்டி
- அஞ்சு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் சொன்னாளாம்
- அஞ்சு பெண்டாட்டி கட்டியும் அறுக்கப் பெண்டாட்டி இல்லை; பத்துப் பெண்டாட்டி கட்டியும் படுக்கப் பெண்டாட்டி இல்லை
- அஞ்சு பெண் பெற்றால் அரசனும் ஆண்டி
- அஞ்சு பேரல்லோ பத்தினிமார்? அஞ்சிலே இரண்டு பழுதில்லை
- அஞ்சு பொன்னும் வாங்கார், அரைப்பணமே போது மென்பார்
- அஞ்சும் இரண்டும் அடைவானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும்
- அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறிசமைப்பாள்
- அஞ்சும் இருக்கிறது நெஞ்சுக்குள்ளே; அதுவும் இருக்கிறது. புந்திக்குள்ளே
- அஞ்சும் பிஞ்சுமாக நிற்கிறது
- அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறிசமைக்கும்
- அஞ்சும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு
- அஞ்சு மாசம் வரைக்கும் தாய்க்கும் மறைக்கலாம், சூல்
- அஞ்சுரு ஆணி இல்லாத் தேர் அசைவது அரிது
- அஞ்சுருவுத் தாலி நெஞ்சுருகக் கட்டிக்கொண்டு வந்தாற்போல வலக்காரமாய்ப் பேசுகிறான்
- அஞ்சு வந்தாலும் அவசரம் ஆகாது; பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது
- அஞ்சு வயசில் அண்ணன் தம்பி; பத்து வயசில் பங்காளி
- அஞ்சு வயசில் அரசிலை செய்யப் போனவன் திரட்சியின்போது திரும்பி வந்தானாம்
- அஞ்சு வயசில் ஆதியை ஓது
- அஞ்சு வயசு ஆண் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் அடக்கம்
- அஞ்சு வயசுப் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் காலமுக்க வேணும்
- அஞ்சு விரலும் அஞ்சு கன்னக் கோல்
- அஞ்சு விரலும் சமமாக இருக்குமா?
- அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்
- அஞ்சூர்ச் சண்டை சிம்மாளம்; ஐங்கல அரிசி ஒரு கவளம்
- அஞ்சூரான் பஞ்சு போல
- அஞ்ஞானம் தீர்ந்தால் ஒளடதம் பலிக்கும்
- அட்சதைக்கு விதி இல்லை; லட்சம் பிராமணச் சாப்பாடாம்
- அட்டதரித்திரம் புக்ககத்திலே, அமராவதி போல வாழ்கிறேன்; நித்திய தரித்திரம் தகப்பனாரை நின்ற நிலையில் வரச்சொன்னாள்
- அட்ட நாயும் பொட்டைக் குஞ்சுமாய்ச் சம்சாரம்
- அட்டமத்துச் சனி கிட்ட வந்தது போல
- அட்டமத்துச் சனி நட்டம் வரச்செய்யும்
- அட்டமத்துச் சனி பிடித்துப் பிட்டத்துத் துணியும் உரிந்து கொண்டது
- அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல
- அட்டாதுட்டிக் கொள்ளித் தேள்
- அட்டாரைத் தொடாக் காலம் இல்லை
- அட்டாலும் பால் சுவையில் குன்றாது
- அட்டில் ஒருவருக்கு, ஆதில் இருவருக்கு, திரி இட்டால் மூவருக்கு
- அட்டைக் கடியும் அரிய வழி நடையும் கட்டை இடறுதலும் காணலாம் கண்டியிலே
- அட்டைக்குத் தெரியுமா கட்டில் சுகம்?
- அட்டைக்கும் திருப்தி இல்லை; அக்கினிக்கும் திருப்தி இல்லை
- அட்டை மாதிரி உறிஞ்சுகிறான்
- அட்டை மாதிரி ஒட்டிக் கொள்கிறான்
- அட்டையை எடுத்துத் தொட்டிலில் கிடத்தினாலும் அது கிடக்கும் குட்டையிலே
- அட்டையை எடுத்துத் தொட்டிலில் விட்டாற்போல
- அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையைச் செத்தையை நக்கும்
- அட்டையைக் கட்டிச் சட்டியிலே போட்டாலும் அது கிடக்குமாம் சாக்கடையில்
- அட்டையைக் கழுவிக் கட்டையில் கிடத்தினாலும் அது கிடக்குமாம் சகதியிலே
- அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்தது போல
- அடக்கத்துப் பெண்ணுக்கு அழகு ஏன்?
- அடக்கம் ஆயிரம் பொன் பெறும்
- அடக்கம் உடையார் அறிஞர்; அடங்காதார் கல்லார்
- அடக்கம் உள்ளவன் பொருளுக்கு ஆபத்து இல்லை
- அடக்கமே பெண்ணுக்கு அழகு
- அடக்குவார் அற்ற கழுக்காணியும் கொட்டுவார் அற்ற மேளமும் போலத் திரிகிறான்
- அடங்காத பாம்புக்கு ராஜா மூங்கில் தடி
- அடங்காத பிடாரியைப் பெண்டு கொண்டது போல
- அடங்காத பிள்ளைக்கு ஒரு வணங்காத பெண்
- அடங்காத பெண்சாதியால் அத்தைக்கும் பொல்லாப்பு: நமக்கும் பொல்லாப்பு
- அடங்காப் பெண்டிரைக் கொண்டானும் கெட்டான்; அறுகங்காட்டை உழுதவனும் கெட்டான்
- அடங்காத மனைவியும் ஆங்காரப் புருஷனும்
- அடங்காத மாட்டுக்கு அரசன் மூங்கில் தடி
- அடங்கின பிடிபிடிக்க வேணுமே அல்லாமல் அடங்காத பிடி பிடிக்கலாகாது
- அடடா கருக்கே அரிவாள் மணை சுருக்கே!
- அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு
- அடம் பண்ணுகிற தேவடியாளுக்கு முத்தம் வேறே வேணுமா?
- அடர்த்தியை அப்போதே பார்; புணக்கத்தைப் பின்னாலே பார்
- அடர உழு; அகல விதை
- அடர விதைத்து ஆழ உழு
- அட ராவணா என்றானாம்
- அடா என்பவன் வெளியே புறப்பட்டான்
- அடாது செய்தவர் படாது படுவர்
- அடாது செய்தவன் படாது படுவான்
- அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்
- அடி அதிசயமே, சீமைச் சரக்கே!
- அடி அதிரசம்; குத்துக் கொழுக்கட்டை
- அடி அற்ற பனைபோல் விழுந்தான்
- அடி அற்ற மரம்போல அலறி விழுகிறது
- அடி அற்றால் நுனி விழாமல் இருக்குமா?
- அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார்
- அடி என்கிற ராஜாவும் இல்லை; பிடி என்கிற மந்திரியும் இல்லை
- அடி என்பதற்கு அவளைக் காணோம்; பிள்ளை பிறந்தால் ராம கிருஷ்ணன் என்று பெயர் வைக்கவேண்டுமென்று ஆசைப் பட்டானாம்
- அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; அஷ்ட புத்திரர்கள் எட்டுப்பேராம்
- அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை பெயர் அருணாசலமாம்
- அடி என்று அழைக்கப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை எத்தனை, பெண் எத்தனை என்றானாம்
- அடி என்று சொல்ல அகமுடையாளைக் காணோம்; பிள்ளைக்குப் பேர் என்ன வைக்கிறது என்றானாம்
- அடி ஒட்டி அல்லவா மேற்கரணம் போட வேண்டும்?
- அடி ஓட்டையாய் இருந்தாலும் கொழுக்கட்டை வேக வேண்டியது தானே?
- அடிக்க அடிக்க அம்மியும் நகரும்
- அடிக்க அடிக்கப் படுகிறவனும் முட்டாள்; படப்பட அடிக்கிறவனும் முட்டாள்
- அடிக்க அடிக்கப் பந்து விசை கொள்ளும்
- அடிக்க அடிக்கப் பிள்ளை வளரும்; முறுக்க முறுக்க மீசை வளரும்
- அடிக்கடி அரசன் பிரவேசித்த கிராமம் அதிரூபத்தை அடையும்
- அடிக்கிற காற்றுக்கும் காய்கிற வெயிலுக்கும் பயப்படு
- அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயப்படுமா?
- அடிக்கிற கைதான் அணைக்கும்
- அடிக்கு ஆயிரம் பொன் கொடுக்க வேண்டும்
- அடிக்குப் பயந்து அடுப்பில் விழுந்தாளாம்
- அடிக்கும் ஒரு கை; அணைக்கும் ஒரு கை
- அடிக்கும் காற்றிலே எடுத்துத் துரற்ற வேண்டும்
- அடிக்கும் சரி, பிடிக்கும் சரி
- அடிக்கும் பிடிக்கும் சரியாய்ப் போச்சு
- அடிக்குழம்பு ஆனைக்குட்டி போல
- அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா?
- அடிச்சட்டியில் கரணம் போட்டுக் குண்டு சட்டியில் குதிரைச் சவாரி பண்ணினானாம்
- அடி சக்கை பொடி மட்டை
- அடி சக்கை, லொட லொட்டை
- அடி செய்கிறது அண்ணன் தம்பி செய்யார்
- அடி செருப்பாலே, ஆற்றுக்கு அப்பாலே
- அடித்த இடம் கண்டுபிடித்து அழ ஆறு மாசம் ஆகும்
- அடித்த எருக்கும் குடித்த கூழுக்கும் சரி
- அடித்தது ஆட்டம், பிடித்தது பெண்டு
- அடித்தது ஆலங்காடு
- அடித்த நாய் உழன்றாற் போல
- அடித்த மாடு சண்டி
- அடித்தவன் பின்னால் போனாலும் போகலாம்; பிடித்தவன் பின்னால் போகக்கூடாது
- அறுபதுக்குமேல் கொஞ்சினாலும் அஞ்சிலே வளையாதது அம்பதிலே வளையாது
- அடித்தா பால் புகட்டுகிறது?
- அடித்தால் அடி மறக்காது; அம்பு போட்டால் அம்பு பாயாது; சொன்னால் சொல் பிறக்காது
- அடித்தால் கூட அழத் தெரியாது
- அடித்தால் முதுகில் அடி, வயிற்றில் அடிக்காதே
- அடித்தாலும் புடைத்தாலும் என் அகமுடையான்; அடுப்புக் கொழுக்கட்டையைத் தொடாதே
- அடித்தாலும் புருஷன். உதைத்தாலும் புருஷன். அணைத்தாலும் புருஷன். புடைத்தாலும் புருஷன்.
- அடித்தாற் போல அடிக்கிறேன்; நீ அழுகிறது போல அழு
- அடித்தான் ஐயா பிரைஸ், காது அறுந்த ஊசி
- அடித்தான் பிடித்தான் வியாபாரம்
- அடித்து அழ விட்டால் அது ஒரு விளையாட்டா?
- அடித்துப் பழுத்தது பழமா?
- அடித்துப் பால் புகட்டுகிறதா?
- அடித்துப் போட்ட நாய் மாதிரி கிடக்கிறான்
- அடித்து வளர்க்காத பிள்ளையும் இல்லை; முறித்து வளர்க்காத முருங்கையும் இல்லை
- அடித்து வளர்க்காத பிள்ளையும் ஊட்டி வளர்க்காத கன்றும்
- அடித்து வளர்க்காத பிள்ளையும் முறித்து வளர்க்காத முருங்கையும்
- அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்
- அடித்து விட்டவன் பின்னே போனாலும் பிடித்து விட்டவன் பின்னே போகலாகாது
- அடி தெற்றினால் ஆனையும் சறுக்கும்
- அடி நாக்கில் நஞ்சு; நுனி நாக்கில் அமிழ்தம்
- அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்
- அடி நொச்சி; நுனி ஆமணக்கா?
- அடிப்பதும் ஒரு கை; அணைப்பதும் ஒரு கை
- அடிப்பானேன்? பிடிப்பானேன்? அடக்குகிற வழியிலே அடக்குவோம்
- அடிபட்ட நாய் போல
- அடிபட்ட நாயைப் போல் காலைத் தூக்கி நடவாதே
- அடிபட்டவன் அழுவான்
- அடிபட்டாலும் ஆர்க்காட்டுச் சடாவால் அடிபட வேண்டும்
- அடி பெண்ணே சோறு ஆச்சா? நொடிக்குள்ளே சோறு ஆச்சு
- அடிபோன சட்டி ஆயா வீட்டில் இருந்தால் என்ன? மாமியார் வீட்டில் இருந்தால் என்ன?
- அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
- அடிமை படைத்தால் ஆள்வது கடன்
- அடியடா செருப்பாலே அறுநூறு; இந்தாடா நாயே திருநீறு
- அடியாத பிள்ளை படியாது
- அடியாத மாடு படியாது
- அடியில் உள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு
- அடியுண்ட வேங்கை போல
- அடியும் நுனியும் தறித்த கட்டை போல
- அடியும் பிடியும் சரி
- அடியே என்பதற்கு அகமுடையான் இல்லை; பிள்ளை பேர் சந்தான கோபால கிருஷ்ணன்
- அடியைக் காத்து முடியை அடித்துக் கொண்டு போச்சு
- அடியைப் பிடியடா பாரத பட்டா!
- அடியை விட ஆவலாதி பெரியது
- அடியோடு அடிக் கரணம்
- அடிவண்டிக் கிடாப் போலே
- அடிவயிற்றில் இடி விழுந்தாற் போல
- அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல
- அடிவயிற்றில் புளியைக் கரைக்கிறது
- அடுக்கல் குத்தினால், நடுக்கல் குத்துவாள்
- அடுக்களை உறவு இல்லாமல் அம்பலத்து உறவா?
- அடுக்களைக் கிணற்றிலே அமுதம் எழுந்தாற் போல்
- அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஓர் ஆணும்
- அடுக்களைக் குற்றம் சோறு குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது
- அடுக்களைப் பூனைபோல் இடுக்கிலே ஒளிக்கிறது
- அடுக்களைப் பெண்ணுக்கு அழகு வேண்டுமா?
- அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?
- அடுத்தகத்துக்காரிக்குப் பிள்ளை பிறந்ததென்று உலக்கையை எடுத்து இடித்துக்கொண்டாளாம்
- அடுத்தகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி; அல்லித் தண்டுபோல் குளிர்ந்திருக்கும்
- அடுத்த கூரை வேகிறபோது தன் கூரைக்கும் மோசம்
- அடுத்ததன் தன்மை ஆன்மா ஆகும்
- அடுத்தவரை அகல விடலாகாது
- அடுத்தவரைக் கெடுக்கலாகாது
- அடுத்தவளுக்கு அகமுடையான் வந்தது போல
- அடுத்தவன் தலையில் நரை என்பானேன்? அவன் அதைச் சிரை என்பானேன்?
- அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான்
- அடுத்தவனை ஒரு போதும் கெடுக்கலாகாது
- அடுத்தவனைக் கெடுக்கலாமா?
- அடுத்த வீட்டில் மொச்சை வேகிறதென்று அடிவயிறு பிய்த்துக் கொண்டு போகிறது
- அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்கு இரைச்சல் லாபம்
- அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம் வந்தால் அண்டை வீடு குதிரைலாயம்
- அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்
- அடுத்த வீட்டுக்காரனுக்கு மணியம் போகிறது; ஒன்றாகக் காது அறுத்துக் கொள்ளுங்கள்
- அடுத்த வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அம்மிக்குழவி எடுத்துக் குத்திக் கொண்டாளாம்
- அடுத்தாரைக் கெடுக்கிறதா?
- அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடுகிறான்
- அடுத்தாரைக் கோபித்தால் கெடுத்தாலும் கெடுப்பார்
- அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்
- அடுத்து அடுத்துப் போனால் அடுத்த வீடும் பகை
- அடுத்துக் கெடுப்பவர்
- அடுத்துக் கெடுப்பான் கபடன்; கொடுத்துக் கெடுப்பான் மார்வாடி; தொடுத்துக் கெடுப்பாள் மடந்தை
- அடுத்துச் சொன்னால் எடுத்த காரியம் முடியும்
- அடுத்து முயன்றாலும் ஆகும் நாள்தான் ஆகும்
- அடுத்து வந்தவனுக்கு ஆதரவு சொல்கிறவன் குரு
- அடுப்பங் கரையே கைலாசம், அகமுடையானே சொர்க்க லோகம்
- அடுப்பங் கரையே சொர்க்கம்; அகமுடையானே தெய்வம்
- அடுப்பங் கரையே திருப்பதி; அகமுடையானே கைலாசம்
- அடுப்பு அடியில் பூனை தூங்க
- அடுப்பு அடியில் வெண்ணெய் வைத்த கதை
- அடுப்பு ஊதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு?
- அடுப்பு எரிந்தால்தானே பொரி பொரியும்?
- அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்; தாயார் செத்தால் வயிறு எரியும்
- அடுப்பு எரியாத கோபத்தை அகமுடையான்மேல் காட்டினாளாம்
- அடுப்புக் கட்டிக்கு அழகு வேணுமா?
- அடுப்புக் கரகரப்பும் அகமுடையான் முணுமுணுப்பும்
- அடுப்புக்கு ஒரு துடுப்பா?
- அடுப்புக்குத் தகுந்த உலை, அகமுடையானுக்குத் தகுந்த இறுமாப்பு
- அடுப்புக் குற்றம் சாதம் குழைந்தது: அகமுடையான் குற்றம் பெண் பிறந்தது
- அடுப்பு நெருப்பும் போய் வாய்த் தவிடும் போச்சு
- அடுப்பும் நெருப்பும் பயப்படுமா?
- அடுப்பே திருப்பதி; அகமுடையானே குலதெய்வம்
- அடே அத்தான் அத்தான். அம்மான் பண்ணினாற் போல் இருக்க வில்லையடா
- அடைக்கலாங் குருவிக்கு ஆயிரத் தெட்டுக் கண்டம்
- அடைத்தவன் காட்டைப் பார்; மேய்த்தவன் மாட்டைப் பார்
- அடை தட்டின வீடு தொடை தட்டும்
- அடைதட்டின வீடும் தொடை தட்டின வீடும் உருப்படா
- அடைந்தோரை ஆதரி
- அடைப்பான் குற்றம். துடைப்பான் குற்றம், அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்ததாம்
- அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும்
- அடைபட்டுக் கிடக்கிறான் செட்டி; அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி
- அடை மழைக் காலத்தில் ஆற்றங் கரையில் தண்ணீர்ப் பந்தல் வைத்தானாம்
- அடை மழையில் ஆட்டுக்குட்டி செத்தது போல
- அடை மழையும் உழவு எருதும்
- அடை மழை விட்டும் செடி மழை விடவில்லை
- அடையலரை அடுத்து வெல்
- அடையா, அப்பமா, விண்டு காட்ட?
- அடைவு அறிந்து காரியம் செய்தால் விரல் மடக்க நேரம் இராது
- அண்டங் காக்காய் குழறுகிறது போல
- அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் உண்டா?
- அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே
- அண்டத்துக்கு ஒத்தது பிண்டத்துக்கு
- அண்டத்தைக் கையில் வைத்து ஆட்டும் பிடாரிக்குச் சுண்டைக்காய் எடுப்பது பாரமா?
- அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா?
- அண்ட நிழல் இல்லாமல் போனாலும் பேர் விருட்சம்
- அண்டமும் பிண்டமும் அந்தரங்கமும் வெளியரங்கமும்
- அண்டர் எப்படியோ, தொண்டரும் அப்படியே
- அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்?
- அண்டை அயலைப் பார்த்துப் பேசு
- அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கை விடாதே
- அண்டை மேலுள்ள கோபத்தை ஆட்டுக்கிடாயின் மேல் காட்டியதைப் போல
- அண்டையில் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்
- அண்டையில் வா என்றால் சண்டைக்கு வருகிறாயே!
- அண்டை வீட்டு ஆட்டைப் பார்த்து நாய் குரைத்தது போல
- அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகா
- அண்டை வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுகிறாய் கோவணமே?
- அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று அயல் வீட்டுக்காரி அடி வயிற்றில் இடித்துக் கொண்டது போல
- அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று உலக்கை எடுத்து அடித்துக் கொண்டாளாம்
- அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி
- அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குமா கவலை?\
- அண்டை வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே
- அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் திரிவான்
- அண்ணற ஆயிரம் பொன்னிலும் நிண்ணற ஒரு காசு பெரிது
- அண்ணன் உண்ணாதது எல்லாம் மதனிக்கு லாபம்
- அண்ணன் எப்போது ஒழிவானோ? திண்ணை எப்போது காலி ஆகுமோ?
- அண்ணன் கொம்பு பம்பள பளாச்சு
- அண்ணன் சம்பாதிக்கிறது தம்பி அரைஞாணுக்குக் கூடப் போதாது
- அண்ணன் தங்கை அப்ஸர ஸ்திரீ
- அண்ணன் தம்பிதான் சென்மப் பகையாளி
- அண்ணன் தம்பி பின்பாட்டு; அக்கா தங்கைகள் அடிகிரவணம்
- அண்ணன் தம்பி வேண்டும், இன்னம் தம்பிரானே
- அண்ணன்தான் கூடப்பிறந்தான்; அண்ணியும் கூடப் பிறந்தாளோ?
- அண்ணன்தான் சொந்தம்; அண்ணியுமா சொந்தம்?
- அண்ணன் பிள்ளையை நம்புகிறதற்குத் தென்னம் பிள்ளையை நம்பலாம்
- அண்ணன் பிறந்து அடிமட்டம் ஆச்சு; தம்பி பிறந்து தரைமட்டம் ஆச்சு
- அண்ணன் பெண்டாட்டி அரைப் பெண்டாட்டி; தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி
- அண்ணன் பெரியவன்; அப்பா அடுப்பூது
- அண்ணன் பெரியவன்; அப்பா நெருப்பெடு என்கிற கதை
- அண்ணன் பெரியவன்; சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா
- அண்ணன் பேச்சைத் தட்டவும் மாட்டேன்; மேலைப் பங்கை விடவும் மாட்டேன்
- அண்ணன் பேரில் இருந்த கோபத்தை நாய்பேரில் ஆற்றினான்
- அண்ணன் வரும் வரையில் அமாவாசை நிற்குமா?
- அண்ணனார் சேனையிலே அள்ளிப் போகிறான்
- அண்ணனிடத்தில் ஆறு மாசம் வாழ்ந்தாலும் அண்ணியிடத்தில் அரை நிமிஷம் வாழலாமா?
- அண்ணனுக்குத் தங்கை அபஸரஸ் ஸ்திரீ
- அண்ணனுக்குத் தம்பி அல்ல என்று போகுமா?
- அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல் நாட்டாள்
- அண்ணனை அகம் காக்க வைத்துவிட்டு மன்னி மல்லுக்குப் போனாளாம்
- அண்ணனைக் கண்டாயோ என்று போய்விட்டான்
- அண்ணனைக் கொன்ற பழியைச் சந்தையிலே தீர்த்துக் கொள்கிறது போல
- அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது போல
- அண்ணா சம்பாதிப்பது அம்பி அரைஞாண் கயிற்றுக்கும் பற்றாது
- அண்ணா செத்த பிறகு மன்னியிடம் உறவா?
- அண்ணாண்டி வாரும்; சண்டையை ஒப்புக் கொள்ளும்
- அண்ணா நங்கை அப்ஸ்ர ஸ்திரீ
- அண்ணாதூர் பாடை, ஆலம்பாக்கத்து ஓடை, சதண்டி வைக்கோற் போர்
- அண்ணாமலைக்கு அரோ ஹரா!
- அண்ணாமலைச் சாமி மின்னினாற் போலே பயணம்
- அண்ணாமலையார் அருள் இருந்தால் மன்னார் சாமி மயிர் பிடுங்குமா?
- அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூசை; ஆண்டிகளுக்கு எழுபத்து நாலு பூசை
- அண்ணா மனசு வைத்தால் மதனிக்குப் பிள்ளை பிறக்கும்
- அண்ணா வரும் வரையில் அமாவாசை காத்திருக்காது
- அண்ணா வாரும்; சண்டையை ஒப்புக்கொள்ளும்
- அண்ணாவி கால் இடறினால் அதுவும் ஒரு நடைமுறை
- அண்ணாவி தவறு செய்தால் அதுவும் நடைமுறை
- அண்ணாவி நின்று கொண்டே மோண்டால் பையன் ஓடிக் கொண்டே மோள்வான்
- அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா? அம்பட்டன் பிள்ளைக்கு, மயிர் பஞ்சமா?
- அண்ணாவுக்கும் மன்னிக்கும் அனவரதமும் பிணக்கு
- அண்ணி ஆண்டாளு, ஆறுமுகம் கூத்தியாரு
- அணி இலாக் கவிதை பணி இலா வனிதை
- அணி எல்லாம் ஆடையின்பின்
- அணி பூண்ட நாய் போல
- அணியத்திலே கிழிந்தாலும் கிழிந்தது; அமரத்திலே கிழிந்தாலும் கிழிந்தது
- அணில் ஏற விட்ட நாய் போல
- அணில் ஏறித் தென்னை அசையுமா?
- அணில் ஓட்டமும் ஆமை நடையும்
- அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்
- அணில் கொம்பிலே; ஆமை கிணற்றிலே
- அணில் நொட்டிப் பனை முறியுமா?
- அணில் நொட்டியா தென்னை சாயும்?
- அணில் நொட்டினதும் தென்னமரம் வீழ்ந்ததும்
- அணில் பிள்ளையின் தலை மீது அம்மிக் கல்லை வைத்தது போல
- அணில் வாயாற் கெட்டாற் போல
- அணிலைக் கொன்றால் ஆழாக்குப் பாவம்; ஓணானைக் கொன்றால் உழக்குப் புண்ணியம்
- அணிற் பிள்ளைக்கு நுங்கு அரிதோ? ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ?
- அணு அளவு பிசகாது
- அணு மகா மேரு ஆகுமா?
- அணு மலை ஆச்சு; மலை அணு ஆச்சு
- அணுவுக்கு அணு, மகத்துக்கு மகத்து
- அணுவும் மகமேரு ஆகும்
- அணுவும் மலை ஆச்சு; மலையும் அணு ஆச்சு
- அணை கடந்த வெள்ளத்தைத் தடுப்பவர் யார்?
- அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா?
- அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது
- அத்தச் செவ்வானம் அடை மழைக்கு அடையாளம்
- அத்தத்தின் மிகுதியல்லவா, அம்பட்டன் பெண் கேட்க வந்தது?
- அத்தனைக்கு இத்தனை உயரம், ஐராவதம் போல் எங்கள் பசு
- அத்தனையும் சேர்த்தும் உப்பிட மறந்தது போல
- அத்தனையும்தான் செய்தாள், உப்பிட மறந்தாள்
- அத்தான் அரை அகமுடையான்
- அத்தான் செத்தால் மயிர் ஆச்சு; கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு
- அத்தான் முட்டி, அம்மாஞ்சி உபாதானம், மேலகத்துப் பிராம்மணன் யாசகமென்று கேட்டானாம்
- அத்திக்காய் தெரியுமா? வட்டைக்காய் தெரியுமா?
- அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை
- அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு
- அத்திப் பூவை ஆர் அறிவார்?
- அத்திப் பூவைக் கண்டவர் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர் உண்டா?
- அத்தி பூத்தது ஆரும் அறியார்?
- அத்தி பூத்தாற் போல்
- அத்தி மரத்தில் தொத்திய கிளி போல
- அத்தி முதல் எறும்பு வரை
- அத்தியும் பூத்தது; ஆனை குட்டியும் போட்டது
- அத்திரி மாக்கு, ஆறு தாண்டுகிறேனா. இல்லையா, பார்
- அத்து மீறிப் போனான், பித்துக்குளியானான்
- அத்து மீறினால் பித்து
- அத்தை இல்லாப் பெண்ணுக்கு அருமை இல்லை; சொத்தை இல்லாப் பவழத்துக்கு மகிமை இல்லை
- அத்தை இல்லாப் பெண்டாட்டி வித்தாரி, மாமியில்லாப் பெண்டாட்டி வயிறுதாரி
- அத்தை இல்லாப் பெண் வித்தாரி; மாமி இல்லாப் பெண் மாசமர்த்தி
- அத்தை இல்லா வீடு சொத்தை
- அத்தை இறப்பாளா, மெத்தை காலி ஆகுமா என்று காத்திருப்பது போல
- அத்தைக்கு ஒழியப் பித்தைக்கு இல்லை; ஒளவையார் இட்ட சாபத்தீடு
- அத்தைக்குத் தாடி முளைத்தால் சிற்றப்பா என்னலாமா?
- அத்தைக்குப் பித்தம்; அவருக்குக் கிறுகிறுப்பு
- அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா
- அத்தை கடன்காரி; அடி நாளைய சத்துரு
- அத்தைச் சொல்லடா சீமானே
- அத்தைத்தான் சொல்வானேன்? வாயைத்தான் வலிப்பானேன்?
- அத்தை பகையும் இல்லை; அம்மாமி உறவும் இல்லை
- அத்தை மகன், அம்மான் மகள் சொந்தம் போல
- அத்தைமகள் ஆனாலும் சும்மா வருவாளா?
- அத்தை மகளைச் கொள்ள முறை கேட்க வேண்டுமா?
- அத்தையடி அத்தை, அங்காடி விற்குதடி, கண்மணியாளே நெல்லுமணி தருகிறேன்
- அத்தையடி மாமி, கொத்துதடி கோழி
- அத்தையைக் கண்ட சகுனம் அத்தோடு போயிற்று
- அத்தை வீட்டு ரேழியில் கொண்டுவிட்டால்தான் கிழக்கு மேற்குத் தெரியும்
- அத்தோடு நின்றது அலைச்சல்; கொட்டோடே நின்றது குலைச்சல்
- அதமனுக்கு ஆயிரம் ஆயுசு
- அதர்மம் அழிந்திடும்
- அதற்கும் இருப்பாள், இதற்கும் இருப்பாள், ஆக்கின சோற்றுக்குப் பங்கிற்கும் இருப்பாள்
- அதற்கு வந்த அபராதம் இதற்கும் வரட்டும்
- அதற்கெல்லாம் குறைவில்லை, ஆட்டடா பூசாரி
- அதன் கையை எடுத்து அதன் கண்ணிலே குத்துகிறது
- அதிக்கிரமமான ஊரிலே கொதிக்கிற மீன் சிரிக்கிறதாம்
- அதிக ஆசை அதிக நஷ்டம்
- அதிக ஆசை மிகு தரித்திரம்
- அதிகக் கரிசனம் ஆனாலும் அகமுடையானை அப்பா என்று அழைக்கிறதா?
- அதிகச் சிநேகிதம் ஆபத்துக்கு இடம்
- அதிகம் விளைந்தால் எண்ணெய் காணாது
- அதிகமாகக் குலைக்கும் நாய்க்கு ஆள் கட்டை
- அதிகமான பழக்கம் அவமரியாதையைத் தரும்
- அதிகாரம் இல்லாத சேவகமும் சம்பளம் இல்லாத உத்தியோகமும் எதற்கு?
- அதிகாரம் இல்லாவிட்டாலும் பரிவாரம் வேண்டும்
- அதிகாரிக்கு அடுப்புப் பயப்படுமா?
- அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகக்கூடாது
- அதிகாரி குசு விட்டால் அமிர்த வஸ்து; தலையாரி குசு விட்டால் தலையை வெட்டு
- அதிகாரியுடனே எதிர்வாதம் பண்ணலாமா?
- அதிகாரியும் தலையாரியும் கூடி விடியுமட்டும் திருடலாம்
- அதிகாரி வந்தால் அடித்துக் காட்டு; கூத்தாடி வந்தால் கொட்டிக் காட்டு
- அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்தது போல
- அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மிக் கல்லை உடைக்கும்
- அதிசயம் அடி அம்மங்காரே, அம்மி புரண்டு ஓடுகிறது
- அதிசயம் அடி ஆவடை, கொதிக்கிற கூழ் சிரிக்கிறது
- அதிசயம் அதிசயம் அத்தங்காரே கொதிக்கிற குழம்பு சிரிக்கிறது
- அதிசயமாய் ஒருத்திக்குப் பிள்ளை பிறந்ததாம், கடப்பாரையை எடுத்துக் காலில் குத்திக் கொண்டாளாம்
- அதிசயமான ஊரிலே ஒரு பிள்ளை பிறந்ததாம்; அது தொப்புள் கொடி அறுப்பதற்குள் கப்பல் ஏறிப் போயிற்றாம்
- அதிசயமான ரம்பை, அரிசி கொட்டுகிற தொம்பை
- அதிர்ந்து அடிக்கிறவனுக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை
- அதிர்ந்து வராத புருஷனும் மிதந்து வராத அரிசியும் பிரயோசனம் இல்லை
- அதிர்ந்து வரும் புருஷனும் முதிர்ந்து வரும் சோறும்
- அதிர் வெடி கேட்ட குரங்கு
- அதிர்ஷ்டக்காரன் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்
- அதிர்ஷ்டம் ஆறாய்ப் பெருகுகிறது
- அதிர்ஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் இருந்தாலும் அதையும் பூனை குடிக்கும்
- அதிர்ஷ்டம் கெட்ட கழுக்காணி
- அதிர்ஷ்டம் கெட்டதுக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்
- அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்
- அதிர்ஷ்டமும் ஐசுவரியமும் ஒருவர் பங்கல்ல
- அதிர்ஷ்டவாள் மண்ணைத் தொட்டாலும் பொன் ஆகும்
- அதிர அடித்தாருக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை
- அதிர அடித்தால் உதிர விளையும்
- அதில் எல்லாம் குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி
- அதிலே இது புதுமை, அவள் செத்து வைத்த அருமை
- அதிலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி; மாவிலே வெல்லம் இல்லை; மாட்டிக்கொள்ளடா பூசாரி
- அதி விநயம் தூர்த்த லட்சணம்
- அதி விருஷ்டி, அல்லது அநாவிருஷ்டி
- அது அதற்கு ஒரு கவலை; ஐயாவுக்கு எட்டுக் கவலை
- அது ஏண்டி மாமியாரே, அம்மி புரண்டு ஓடுகிறது?
- அதுக்கும் இருப்பான், இதுக்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்
- அது கெட்டது போ, எனக்கா கல்யாணம் என்றானாம்
- அதுதான் ராயர் கட்டளையாய் இருக்கிறதே!
- அதுவும் போதாதென்று அழலாமா இனி?
- அதைக் கை கழுவ வேண்டியதுதான்
- அதைத்தான் சொல்வானேன்? வாய்தான் நோவானேன்?
- அதை நான் செய்யாவிட்டால் என் பேரை மாற்றிக் கூப்பிடு
- அதை நான் செய்யாவிட்டால் என் மீசையைச் சிரைத்து விடுகிறேன்
- அதைரியம் உள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல
- அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை
- அந்த ஊர் மண்ணை மிதிக்கவே தன்னை மறந்துவிட்டான்
- அந்தக் காலம் மலை ஏறிப் போச்சு
- அந்தகனுக்கு அரசனும் ஒன்று; ஆண்டியும் ஒன்று
- அந்தணர்க்குத் துணை வேதம்!
- அந்தணர் மனையில் சந்தனம் மணக்கும்
- அந்தப் பருப்பு இங்கே வேகாது
- அந்தம் உள்ளவன் ஆட வேணும்; சந்தம் உள்ளவன் பாட வேணும்
- அந்தம் சிந்தி அழகு ஒழுகுகிறது
- அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகனைப் போல
- அந்தரத்திலே விட்டு விட்டான்
- அந்தர வீச்சு வீசி நாயைப் போல் வாலைச் சுருட்டி விட்டான்
- அந்தலை கெட்டுச் சிந்தலை மாறிக் கிடக்கிறது
- அந்த வெட்கக்கேட்டை ஆரோடு சொல்கிறது?
- அந்தி ஈசல் அடை மழைக்கு அறிகுறி
- அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்
- அந்திக் கண்ணிக்கு அழுதாலும் வரானாம் அகமுடையான்
- அந்திச் செவ்வானம் அப்போதே மழை
- அந்திச் செவ்வானம் அழுதாலும் மழை இல்லை; விடியச் செவ்வானம் வேண மழை
- அந்திச் செவ்வானம் அறிந்து உண்ணடி மருமகளே; விடியச் செவ்வானம் வேண்டி உண்ணடி மகளே
- அந்திச் செவ்வானம் கிழக்கு; அதிகாலைச் செவ்வானம் மேற்கு
- அந்திச் சோறு உந்திக்கு ஒட்டாது
- அந்தி பிடித்த மழையும் அம்மையாரைப் பிடித்த வியாதியும் விடா
- அந்தி மழை அழுதாலும் விடாது
- அந்தி மழையும் அந்தி விருந்தாளியும் விடமாட்டார்கள்
- அந்தி மழையும் ஒளவையாரைப் பிடித்த பிணியும் விடா
- அந்தியில் அசுவத்தாமன் பட்டம் கட்டிக் கொண்டாற் போல
- அந்து ஊதும் நெல் ஆனேன்
- அந்துக் கண்ணிக்கு அழுதாலும் வரான் அகமுடையான்
- அந்நிய மாதர் அவதிக்கு உதவார்
- அநாதைக்குத் தெய்வமே துணை
- அநாதைப் பெண்ணுக்குக் கல்யாணம்; ஆளுக்குக் கொஞ்சம் உதவுங்கள்
- அநுபோகம் மிகும்போது ஔஷதம் பலிக்கும்
- அநுமான் சீதையை இலங்கையில் தேடினது போல
- அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது போல
- அப்பச்சி கோவணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறது; பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது
- அப்படிச் சொல்லுங்கள் வழக்கை; அவன் கையில் கொடுங்கள் உழக்கை
- அப்பத்துக்கு மேல் நெய் மிஞ்சிப் போச்சு
- அப்பத்துக்கு மேலே நெய் மிதந்தால் அப்பம் தெப்பம் போடும்
- அப்பத்தை எப்படித்தான் சுட்டாளோ அதற்குள் தித்திப்பை எப்படித்தான் நுழைத்தாளோ?
- அப்பத்தைத் திருடிய பூனைகளுக்கு நியாயம் வழங்கிற்றாம் குரங்கு
- அப்பம் என்றால் பிட்டுக் காட்ட வேண்டும்
- அப்பம் சுட்டது சட்டியில்; அவல் இடித்தது திட்டையில்
- அப்பம் சுட்டுக் கூழ் ஆச்சு; தொன்னை தைத்துக் கொள் பிராம்மணா
- அப்பம் தின்னச் சொன்னால் குழி எண்ணுவதா?
- அப்பமும் தந்து பிட்டும் காட்டுவது போல
- அப்பர் அடைந்த ஆளும் நாள் கப்பரை எடுப்பார் சுவாமி
- அப்பன் அருமை மாண்டால் தெரியும்
- அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும்; உப்பின் அருமை உப்பு இல்லா விட்டால் தெரியும்
- அப்பன் ஆனைச் சவாரி செய்தால் மகனுக்குத் தழும்பா?
- அப்பன் இல்லாமல் பிள்ளை பிறக்குமா? அச்சு இல்லாமல் தேர் ஓடுமா?
- அப்பன் சம்பாத்தியம் பிள்ளை அரைஞாணுக்கும் போதாது
- அப்பன் செத்தபின் தம்பிக்கு அழுகிறதா?
- அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்
- அப்பன் தர்மசாலி என்று பண்ணி விட்டான்
- அப்பன் பவிசு அறியாமல் அநேக நாள் தவிசேற மகன் கனாக் காண்கிறான்
- அப்பன் பிண்டத்துக்கு அழுகிறான்; பிள்ளை பரமான்னத்துக்கு அழுகிறது
- அப்பன் பிறந்தது வெள்ளிமலை; ஆய் பிறந்தது பொன்மலை
- அப்பன் பெரியவன்; சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா
- அப்பன் மகன்தான் ஆண் பிள்ளைச் சிங்கம்
- அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான்
- அப்பனுக்கு மூத்த சுப்பன்
- அப்பா அடித்தால் அம்மா அணைப்பது போல
- அப்பா அப்பா என்றால், ரங்கா ரங்கா என்கிறான்
- அப்பா என்றால் உச்சி குளிருமா?
- அப்பாச்சிக்கு அப்புறம் மரப்பாச்சி
- அப்பா சாமிக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு
- அப்பா சாஸ்திரிக்குப் பெண்ணாய்ப் பிறந்து, குப்பா சாஸ்திரிக்கு வாழ்க்கைப்பட்டு, லவணம் என்றால் எருமைச் சாணி என்று தெரியாதா?
- அப்பா வலக்கை; அம்மா இடக்கை
- அப்பாவி உப்பு இல்லை
- அப்பாவுக்கு இட்ட கப்பரை ஆரைச் சுவரில் கவிழ்த்திருக்கிறது
- அப்பாவுடன் சொல்லட்டுமா? அரக்குப் பேலாவைக் காட்டட்டுமா?
- அப்பாவும் இல்லை; வெட்டுக் கத்தியும் இல்லை
- அப்பியாசம் குல விருது
- அப்பியாசம் கூசா வித்தை
- அப்பியாச வித்தைக்கு அழிவில்லை
- அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை
- அப்பைக் கொண்டு உப்பைக் கட்டு, உப்பைக் கொண்டு ஒக்கக் கட்டு
- அப்போது விஜயநகரம்; இப்போது ஆனைக்குந்தி
- அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
- அபத்தப் பஞ்சாங்கத்தில் அறுபது நாழிகையும் தியாஜ்யம்
- அபரஞ்சிக் கொடி மாதிரி அகமுடையாள் இருக்கும் போது ஆதண்டங்காய்க் கொடியைக் கட்டிக் கொண்டானாம்
- அபாயத்திற்கு உபாயம்
- அபிடேகம் இட்ட கைக்குச் சுழிக் குற்றம் உண்டா?
- அம்பட்டக்குடிக் குப்பையைக் கிளறக் கிளற மயிர்தான்
- அம்பட்டக் குடியில் சிரைத்த மயிருக்குப் பஞ்சமா?
- அம்பட்டக் குசும்பும் வண்ணார ஒயிலும் போகா
- அம்பட்ட வேலை அரை வேலை
- அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராக வரும்
- அம்பட்டன் கைக் கண்ணாடி போல
- அம்பட்டன் செய்தியை அறிந்து குடுமியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேணும்
- அம்பட்டன் பல்லக்கு ஏறினது போல
- அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருமையா?
- அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல
- அம்பட்டன் வீட்டில் மயிருக்குப் பஞ்சமா?
- அம்பட்டன் வெட்டு வெட்டு அல்ல; அரைப்படிப்பும் படிப்பு அல்ல
- அம்பட்டன் வேலை செய்ய வந்தால் சரியாய்ச் செய்ய வேணும்
- அம்பட்டனுக்கு மயிர்ப் பஞ்சமா?
- அம்பட்டனை மந்திரித்தனத்துக்கு வைத்துக் கொண்டது போல
- அம்பத்துர் வேளாண்மை ஆறு கொண்டது பாதி; துாறு கொண்டது பாதி
- அம்பலக் கழுதை அம்பரிலே கிடந்தால் என்ன? அடுத்த திருமாகாளத்திலே கிடந்தால் என்ன?
- அம்பலக் கழுதை அம்பலத்தில் கிடந்தால் என்ன? அடுத்த திருமாளிகையில் கிடந்தால் என்ன?
- அம்பலத்தில் அவல்பொரி போலே
- அம்பலத்தில் ஏறும் பேச்சை அடக்கம் பண்ணப் பார்க்கிறான்
- அம்பலத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற்போல
- அம்பலத்தில் பொதி அவிழ்க்கலாகாது
- அம்பலம் தீப்பட்டது என்றால், அதைத்தான் சொல்வானேன், வாய்தான் நோவானேன் என்றானாம்
- அம்பலம் வேகிறது
- அம்பாணி தைத்தது போலப் பேசுகிறான்
- அம்பா பாக்கியம் சம்பா விளைந்தது; பாவி பாக்கியம் பதராய் விளைந்தது
- அம்பி கொண்டு ஆறு கடப்போர் நம்பிக்கொண்டு வால் கொள்வார்களா?
- அம்பிட்டுக் கொண்டாரே. தும்பட்டிப்பட்டர்
- அம்பு பட்ட புண் கையில் இழை கட்டினால் ஆறாது
- அம்பு விற்று அரிவாள்மனை விற்றுத் தும்பு விற்றுத் துருவுபலகை விற்றுப் போட்டால் சொல்வாயா சொல்வாயா என்றானாம்
- அம்மண தேசத்திலே கோவணம் கட்டினவன் பைத்தியக்காரன்
- அம்மணமும் இன்னலும் ஆயுசு பரியந்தமா?
- அம்மன் காசு கூடப் பெறாது
- அம்மன் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டாமா?
- அம்மனுக்குப் பூஜை ஆகித்தான் சாமிக்குப் பூஜை ஆகவேணும்
- அம்மா அடித்தால் வலிக்காது; அப்பா அடித்தால் வலிக்கும்
- அம்மா ஆரோ வந்திருக்கிறார். ஆனைமேலா, குதிரைமேலா?
- அம்மா குதிர் போல; அய்யா கதிர் போல
- அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
- அம்மா கோதண்டராமன்
- அம்மா திரண்டு வருவதற்குள் ஐயா உருண்டுபோய் விடுவா
- அம்மாப் பெண் சமைக்க அஸ்தமனம்; கிருஷ்ணையர் பூஜை பண்ணக் கிழக்கு வெளுக்கும்
- அம்மாப் பெண்ணுக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே, வெற்றிலை பாக்குக் கடையிலே
- அம்மா பாடு அம்மணமாம்; கும்பகோணத்தில் கோதானமாம்
- அம்மாமி வாயைக் கிண்டினால் அத்தனையும் பழமொழியாம்
- அம்மாயி நூற்ற நூலுக்கும் நொண்டி அரைநாண் கயிற்றுக்கும் சரயாய்ப் போச்சு
- அம்மாவுக்குப் பின் அகமுடையான்
- அம்மாள் கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
- அம்மாள் மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?
- அம்மாளு அம்மாள் சமைக்க அஸ்தமனம் ஆகும்; கிருஷ்ண வாத்தி யார் பூஜை செய்யக் கிழக்கு வெளுக்கும்
- அம்மாளுக்குத் தமிழ் தெரியாது; ஐயாவுக்குத் தெலுங்கு தெரியாது
- அம்மான் சொத்துக்கு மருமான் கருத்தாளி
- அம்மான் மகளானாலும் சும்மா வருவாளோ?
- அம்மான் மகளுக்கு முறையா?
- அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேணுமா?
- அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை
- அம்மி இருந்து அரணை அழிப்பான்
- அம்மிக்குழவி ஆலாய்ப் பறக்கும்போது எச்சில் இலையைக் கேட்பானேன்?
- அம்மி மிடுக்கோ, அரைப்பவர் மிடுக்கோ?
- அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவள்போல் பேசுகிறாள்
- அம்மியும் உரலும் ஆலாய்ப் பறக்கச்சே எச்சில் இலை என்கதி என்ன என்று கேட்டதாம்
- அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கும்போது எச்சில் இலை எனக்கு என்ன கதி என்றாற் போல்
- அம்மியே ஆகாயத்தில் பறக்கும்போது எச்சில் இலைக்கு வந்தது என்ன?
- அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
- அம்மை இல்லாப் பிறந்தகமும் அகமுடையான் இல்லாப் புக்ககமும்
- அம்மைக்கு அமர்க்களம் ஆக்கிப் படை எனக்கு அமர்க்களம். பொங்கிப் படை
- அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள்
- அம்மை குத்தினாலும் பொம்மை குத்தினாலும் வேண்டியது அரிசி
- அம்மையார் இருக்கும் இடத்தில சேமக் கலம் கொட்டாதே
- அம்மையார் எப்போது சாவார்? கம்பளி எப்போது நமக்கு மிச்சம் ஆகும்?
- அம்மையார் நூற்கிற நூலுக்கும் பேரன் அரைஞாண் கயிற்றுக்கும் சரி
- அம்மையார் பெறுவது அரைக்காசு, தலை சிரைப்பது முக்காற் காசு
- அம்மையார் வருகிற வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா?
- அம்மையாருக்கு என்ன துக்கம்? கந்தைத் துக்கம்
- அம்மையாரே வாரும்; கிழவனைக் கைக்கொள்ளும்
- அம்மை வீட்டுத் தெய்வம் நம்மை விட்டுப் போமா?
- அமர்க்களப்படுகிறது
- அமர்த்தனுக்கும் காணி வேண்டாம்; சமர்த்தனுக்கும் காணி வேண்டாம்
- அமரபட்சம் பூர்வபட்சம்; கிருஷ்ணபட்சம் சுக்கிலபட்சம்
- அமரிக்கை ஆயிரம் பொன் பெறும்
- அமாவாசை இருட்டிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி
- அமாவாசை இருட்டு; சோற்றுப் பானையை உருட்டு
- அமாவசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்
- அமாவாசைச் சோறு என்றைக்கும் அகப்படுமா?
- அமாவாசைப் பணியாரம் அன்றாடம் கிடைக்குமா?
- அமாவாசைப் பருப்புச் சோறு சும்மா சும்மா கிடைக்குமா?
- அமாவாசைப் பானை என்று நாய்க்குத் தெரியுமா?
- அமிஞ்சி உண்டோ கும்பு நாயக்கரே
- அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா?
- அமிஞ்சி வெட்டிக்கு ஆள் இருக்கிறது
- அமிஞ்சி வேலை
- அமுக்கினால் போல் இருந்து அரணை அழிப்பான்
- அமுத்தல் பேர் வழி
- அமுதம் உண்கிற வாயால் விஷம் உண்பார்களோ?
- அமுதுபடி பூஜ்யம்; ஆடம்பரம் சிலாக்யம்
- அமைச்சன் இல்லாத அரசும் அகமுடையான் இல்லாத ஆயிழையும்
- அமைதி ஆயிரம் பெறும்
- அமைதி கெட்ட நெஞ்சம் ஆடி ஆடிக் கொஞ்சும்
- அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்
- அயல் ஊர் லாபமும் உள்ளூர் நஷ்டமும் ஒன்று
- அயல் வீட்டு ஆண்மகன் அவஸ்தைக்கு உதவான்
- அயல் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே
- அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா?
- அயல் வீட்டுப் பையா பாம்பைப் பிடி; அல்லித் தண்டு போல் குளிர்ந்திருக்கும்
- அயல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறது
- அயலார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்
- அயலார் உடைமையில் அந்தகன் போல் இரு
- அயலார்க்குத் துரோகம் ஐந்தாறு நாள் பொறுக்கும்; ஆத்மத் துரோகம் அப்போதே கேட்கும்
- அயலார் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான்
- அயலார் வாழ்ந்தால் அடி வயிற்றில் நெருப்பு
- அயலான் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுமா?
- அயலூர் நாணயக்காரனைவிட உள்ளூர் அயோக்கியன் மேல்
- அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்
- அயன் அமைப்பை யாராலும் தள்ளக்கூடாது
- அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது
- அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது
- அயிரையும் சற்றே அருக்குமாம் வீட்டுக்குள் போட்டுப் பிசகாமல்
- அயிலாலே போழ்ப அயில்
- அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு
- அர்ச்சுனன்போல் அகமுடையான் இருக்க, அச்சான்யம்போல் திருமங்கல்யம் எதற்கு?
- அர்ச்சுனன்போல் அகமுடையான் இருக்கையில் அஞ்ஞானம்போல் தாலி என்னத்துக்கு?
- அர்ச்சுனன்போல் அகமுடையானும் அபிமன்யுபோல் பிள்ளையும்
- அர்ச்சுனனுக்குக் கண் அரக்கு மாளிகையில்
- அர்ச்சுனனுக்குப் பகை அரக்கு மாளிகை
- அர்ப்பணித்து வாழ்ந்தால் அர்த்தராத்திரியிலும் கொடை கொடுப்பான்
- அரக்கன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன?
- அரக்குக் கூடு கட்டினால் வீட்டுப் பெண் தாய் ஆவாள்
- அரக்கு முத்தி தண்ணீர்க்குப் போனாள்; புண் பிடித்தவன் பின்னாலே போனான்
- அரகர சிவசிவ மகாதேவா, ஆறேழு சுண்டலுக்கு லவாலவா
- அரகரன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன?
- அரகரா என்கிறது பெரிதோ? ஆண்டி கிடக்கிறது பெரிதோ?
- அரகரா என்கிறவனுக்குத் தெரியுமா? அமுது படைக்கிறவனுக்குத் தெரியுமா?
- அரகரா என்பது பாரமா? அமுது படைப்பது பாரமா?
- அரங்கன் சொத்து அக்கரை ஏறாது
- அரங்கன் சொத்து அழகன் அங்கவடிக்குக் காணாது
- அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடுவேனோ?
- அரங்கு இன்றி வட்டாடலும் அறிவின்றிப் பேசுதலும் ஒன்று
- அரங்கூடு குரங்கே, மரத்தை விட்டு இறங்கே
- அரசங்கட்டையும் ஆபத்துக்கு உதவும்
- அரசமரத்துப் பிள்ளையார் போல அகமுடையான் இருக்க அச்சான்யம் போலத் தாலி எதற்கு?
- அரச மரத்தைப் பிடித்த சனியன் ஆலமரத்தைப் பிடித்ததாம்
- அரச மரத்தைப் பிடித்த பிசாசு அடியில் இருந்த பிள்ளையாரையும் பிடித்ததாம்
- அரசன் அதிகாரம் அவன் நாட்டோடே
- அரசன் அருள் அற்றால் அனைவரும் அற்றார்
- அரசன் அளவிற்கு ஏறிற்று
- அரசன் அன்று அறுப்பான்; தெய்வம் நின்று அறுக்கும்
- அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்
- அரசன் ஆட்சிக்கு ஆகாச வாணியே சாட்சி
- அரசன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன?
- அரசன் ஆனைமேல் வருகிறான் என்று வீட்டுக் கூரைமேல் ஏறினானாம்
- அரசன் இருக்கப் பட்டணம் அழியுமா?
- அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்
- அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு
- அரசன் இல்லாப் படை அம்பலம்
- அரசன் இல்லாப் படை வெட்டுமா?
- அரசன் இல்லாப் படை வெல்வது அரிது
- அரசன் உடைமைக்கு ஆகாச வாணி சாட்சி
- அரசன் எப்படியோ அப்படியே குடிகள்
- அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி
- அரசன் ஒன்றை இகழ்ந்தால் ஒக்க இகழ வேண்டும். ஒன்றைப் புகழ்ந்தால் ஒக்கப் புகழ வேண்டும்
- அரசன் கல்லின்மேல் வழுதுணை காய்க்கும் என்றால் கொத்தில் ஆயிரம் குலையில் ஆயிரம் என்பார்கள்
- அரசன் குடுமியையும் பிடிக்கலாமென்று அம்பட்டன் வேலையை விரும்பினது போல
- அரசன் நினைத்த அன்றே அழிவு
- அரசன் மகளானாலும் புருஷனுக்கு பொண்டாட்டிதான்.
- அரசன் மெச்சியவள் ரம்பை
- அரசன் வரை எட்டியது
- அரசன் வழிப்பட்டதே அவனி
- அரசன் வழிப்படாதவன் இல்லை
- அரசன் வீட்டுக் கோழி முட்டை ஆண்டி வீட்டு அம்மியை உடைத்தது
- அரசனுக்கு அஞ்சி வலியார் எளியாருக்கு அநுகூலம் ஆகிறது
- அரசனுக்கு ஒரு சொல், அடிமைக்குத் தலைச் சுமை
- அரசனுக்கு ஓர் ஆனை இருந்தால் ஆண்டிக்கு ஒரு பானையாவது இராதா?
- அரசனுக்குச் செங்கோல்; சம்சாரிக்கு உழவு கோல்
- அரசனுக்குத் துணை வயவாள்
- அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியாருக்கு அநுகூலம்
- அரசனும் சரி, அரவும் சரி
- அரசனும் சரி அழலும் சரி
- அரசனும் ஆண்டி ஆவான்; ஆண்டியும் அரசன் ஆவான்
- அரசனும் நெருப்பும் பாம்பும் சரி
- அரசனே முட்டி எடுக்கிறான்; அவன் ஆனை கரும்புக்கு அழுகிறதாம்
- அரசனைக் கண்ட கண்ணுக்குப் புருஷனைக் கண்டால் கொசுப் போல இருக்கிறது
- அரசனைக் காட்டிக் கொடுப்பது அமைச்சனுக்குத் தர்மம் அல்ல
- அரசனை நம்பிப் புருஷனைக் கை விட்டது போல
- அரசனோடு எதிர்த்த குடிகள் கெட்டுப்போகும்
- அரசாங்கத்துக் கோழிமுட்டை அம்மிக் கல்லையும் உடைக்கும்
- அரசிலையும் மண்ணாங் கட்டியும் உறவு கொண்டாடினவாம்
- அரசு அறிய வீற்றிருந்த வாழ்வு விழும்
- அரசு இல்லா நாடு அலைக்கழிந்தாற் போல
- அரசு இல்லாப் படை வெல்வது அரிது
- அரசு உடையானை ஆகாசம் காக்கும்
- அரசுக்கு இல்லை சிறுமையும் பெருமையும்
- அரண்மனை ஆனைக்கு அம்பாரி வைத்தாலும் ஆலய ஆனைக்குக் கொட்டு மேளம் போதுமே
- அரண்மனை உறவைக் காட்டிலும் அடுக்களை உறவுதான் மேல்
- அரண்மனைக் காரியம் அறிந்தாலும் சொல்லாதே
- அரண்மனை காத்தவனுக்கும் அடுக்குள் காத்தவனுக்கும் குறைவு இல்லை
- அரண்மனை காத்தவனும் ஆலயம் காத்தவனும் வீணாகப் போக மாட்டார்கள்
- அரண்மனை ரகசியம் அங்காடிப் பரசியம்
- அரண்மனை லங்கா தகனம்; அரசனுக்கோ சங்கீத கவனம்
- அரண்மனை வாசல் காத்தவனும் பறிமடை வாசல் காத்தவனும் பறிபோகிறது இல்லை
- அரணை அலகு திறக்காது
- அரணை கடித்தால் உடனே மரணம்
- அரத்தை அரம் கொண்டும் வயிரத்தை வயிரம் கொண்டும் அறுக்க வேண்டும்
- அரபிக் குதிரையானாலும் ஆள் ஏறி நடத்த வேண்டும்
- அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி மேல்
- அரமும் அரமும் கூடினால் கின்னரம்
- அரவணைச் சோறு வேண்டுமானால் அறைக்கீரைக்குப் பின்தான் கிடைக்கும்
- அரவத்தைக் கண்டால் கீரி விடுமா?
- அரவத்தோடு ஆடாதே; ஆற்றில் இறங்காதே
- அரவின் வாய்த் தேரைபோல
- அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும்
- அரன் அருள் அல்லாது அணுவும் அசையாது
- அரன் அருள் அற்றால் அனைவரும் அற்றார்
- அரன் அருள் உற்றால் அனைவரும் உற்றார்
- அராமி கோபால் தெய்வத்துக்குப் பாடுகோ பாதிரி
- அரி அரி என்றால் ராமா ராமா என்கிறான்
- அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா?
- அரி என்றால் ஆண்டிக்குக் கோபம்; அரன் என்றால் தாதனுக்குக் கோபம்
- அரிக்கிற அரிசியை விட்டுச் சிரிக்கிற சின்னப் பையனைப் பார்த்தாளாம்
- அரிகரப் பிரம்மாதிகளாலும் முடியாத காரியம்
- அரிச்சந்திரன் அவன் வீட்டுக் கொல்லை வழியாகப் போனானாம்
- அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு
- அரிசி அள்ளின காக்கைபோல
- அரிசி ஆழாக்கு ஆனாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்
- அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்
- அரிசி இருந்தால் பிட்டு ஆகுமா?
- அரிசி இல்லாவிட்டால் பருப்பும் அரிசியுமாய்ப் பொங்கு
- அரிசி இறைத்தால் ஆயிரம் காக்கை
- அரிசி உழக்கு ஆனாலும் திருவந்திக் காப்புக்குக் குறைவு இல்லை
- அரிசி உண்டானால் வரிசை உண்டு. அக்காள் உண்டானால் மச்சான் உண்டு
- அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாரும் இல்லை
- அரிசிக்குத் தக்க உலையும் அகமுடையானுக்குத் தக்க வீறாப்பும்
- அரிசிக்குத் தக்க கனவுலை
- அரிசிக் குற்றம் சாதம் குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது
- அரிசி கொடுத்து அக்காள் உறவு என்ன?
- அரிசி கொடுத்து அக்காள் வீட்டில் சாப்பாடா?
- அரிசி கொண்டு அக்காள் வீட்டுக்குப் போவானேன்?
- அரிசி சிந்தினால் அள்ளி விடலாம்; வார்த்தை சிந்தினால் வார முடியுமா?
- அரிசிப் பகையும் அகமுடையாள் பகையும் கிடையாது
- அரிசிப் பல்காரி அவிசாரி, மாட்டுப் பல்காரி மகராஜி
- அரிசிப் பானையும் குறையக் கூடாது; ஆண்மகன் முகமும் வாடக் கூடாது
- அரிசிப் பிச்சை எடுத்து அறுகங் காட்டில் கொட்டினாற் போல
- அரிசிப் பிச்சை வாங்கி அரிக்கம் சட்டியில் கொட்டினேனே!
- அரிசிப் புழு சாப்பிடாதவர் இல்லை; அகமுடையானிடம் அடிபடாத வளும் இல்லை
- அரிசிப் பொதியுடன் திருவாரூர்
- அரிசி பருப்பு இருந்தால் ஐப்பசி மாசம் கல்யாணம்; காய்கறி இருந்தால் கார்த்திகை மாசம் கல்யாணம்
- அரிசி மறந்த கூழுக்கு உப்பு ஒன்று குறைவா?
- அரிசியும் கறியும் உண்டானால் அக்காள் வீடு வேண்டும்
- அரிசியும் உமியும் போல
- அரிசியும் காய்கறியும் வாங்கிக் கொண்டு அக்காள் வீட்டுக்குச் சாப்பிடப் போன மாதிரி
- அரித்தவன் சொறிந்து கொள்வான்
- அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டோ?
- அரிதாரம் கொண்டு போகிற நாய்க்கு அங்கு இரண்டு அடி: இங்கு இரண்டு அடி
- அரிது அரிது, அஞ்செழுத்து உணர்த்தல்
- அரிது அரிது, மானிடர் ஆதல் அரிது
- அரிப்புக்காரச் சின்னிக்கு அடுப்பங்கரைச் சோறு; எரிப்புக்கார எசக்கி எத்திலே தின்பாள் சோறு
- அரியக்குடி நகரம் அத்தனையும் அத்தனையே
- அரிய சரீரம் அந்தரத்தில் எறிந்த கல்
- அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து நிற்கிறான்
- அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு
- அரிவாள் ஆடுமட்டும் குடுவையும் ஆடும்
- அரிவாள் சுருக்கே, அரிவாள் மணை சுருக்கே
- அரிவாள் சூட்டைப் போலக் காயச்சல் மாற்றவோ?
- அரிவாள் பிடி பிடித்தால் கொடுவாள் பிடியில் நிற்கட்டுமே
- அரிவாள் வெட்டுகிற மரம் ஆனைக்குப் பல்லுக் குச்சி
- அரிவாளுக்கு வெட்டினால் கத்திப் பிடிக்காவது உதவும்
- அரிவாளும் அசைய வேண்டும்; ஆண்டை குடியும் கெடவேண்டும்
- அரிவை மொழி கேட்டால் அறிஞனும் அவத்தன் ஆவான்
- அருக்காணி நாச்சியார் குரங்குப் பிள்ளையைப் பெற்றாளாம்
- அருக்காணி முத்து கரிக்கோலம் ஆனாள்
- அருக்காணி முருக்கப்பூப்போலச் சரக்குப் பிரியப் பண்ணுகிறது
- அருக்காமணி முருக்கம் பூ
- அருக்கித் தேடிப் பெருக்கி அழிப்பதா?
- அருகாகப் பழுத்தாலும் விளாமரத்தில் வெளவால் சேராது
- அருங்கொம்பில் தேன் இருக்கப் புறங்கையை நக்கினால் வருமா?
- அருங்கோடை தும்பு அற்றுப் போகிறது
- அருஞ்சுனை நீர் உண்டால் அப்பொழுதே ஜூரம்
- அருட்செல்வம் ஆருக்கும் உண்டு; பொருட் செல்வம் ஆருக்கும் இல்லை
- அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
- அருணாம்பரமே கருணாம்பரம்
- அருணோதயத்துக்கு அரிசி களைந்து வைத்தால் அஸ்தமிக்க வடிக்க மாட்டேனா?
- அருத்தியைப் பிடுங்கித் துருத்தியிலே போட்டுத் துருத்தியைப் பிடுங்கி அருத்தியிலே போடுகிறது
- அரும்பு ஏறினால் குறும்பு ஏறும்
- அரும்பு கோணினால் அதன் மணம் குன்றுமா?
- அருமந்த பெண்ணுக்கு அடியெல்லாம் ஓட்டை
- அருமை அற்ற வீட்டில் எருமையும் குடி இராது
- அருமை அறியாதவன் அற்றென்ன? உற்றென்ன?
- அருமை அறியாதவன் ஆண்டு என்ன? மாண்டு என்ன?
- அருமை அறியாதவனிடத்தில் போனால் பெருமை எல்லாம் குறைந்து போம்
- அருமை பெருமை அறிந்தவன் அறிவான்
- அருமை மருமகன் தலைபோனால் போகட்டும்; ஆதிகாலத்து உரல் போகலாகாது
- அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது
- அருவருத்த சாப்பாட்டை விட மொரமொரத்த பட்டினி மேலானது
- அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது
- அருவருப்புச் சோறும் அசங்கியக் கறியும்
- அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை
- அருள் வேணும்; பொருள் வேணும்; அடக்கம் வேணும்
- அருள் வேணும்; பொருள்வேணும்; ஆகாய வாணி துணையும் வேணும்
- அரே அரே என்பார் எல்லாம் அமுது படைப்பார்களா?
- அரை அடி ஏறினால் ஓரடி சறுக்குகிறது
- அரைக் கல்வி முழு மொட்டை
- அரைக்கவும் மாயம்; இரைக்கவும் மாயம்
- அரைக்காசு என்றாலும் அரண்மனைச் சேவகம் நல்லது
- அரைக் காசுக் கல்யாணத்துக்கு ஆனை விளையாட்டு வேறா?
- அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் மரக்கால் பொன் கொடுத்தாலும் வருமா?
- அரைக் காசுக்குக் கல்யாணம்; அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை
- அரைக் காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும்; ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்
- அரைக் காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது
- அரைக் காசுக்கு மலம் தின்பவன்
- அரைக் காசுக்கு வந்த வெட்கம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் போகாது
- அரைக் காசு கொடுத்து அழச்சொல்லி அஞ்சு காசு கொடுத்து நிறுத்தச் சொன்னாற் போல
- அரைக் காசு கொடுத்து ஆடச் சொல்லி, ஒரு காசு கொடுத்து ஓயச் சொன்னாளாம்
- அரைக் காசு சேர்த்து முடிப்பணம் ஆக்குவது போல
- அரைக் காசு பெறாத பாட்டியம்மாவுக்கு மூன்று காசு கொடுத்து மொட்டை அடிக்க வேண்டும்
- அரைக் காசும் முதல் இல்லை; அங்கங்கே வைபோகம்
- அரைக் காசு வேலை ஆனாலும் அரசாங்க வேலை
- அரைக் காசை ஆயிரம் பொன் ஆக்குகிறவளும் பெண்சாதி; ஆயிரம் பொன்னை அரைக் காசு ஆக்குகிறவளும் பெண்சாதி
- அரைக்கிற அரிசியை விட்டுவிட்டுச் சிரிக்கிற சிற்றப்பனோடே போனாளாம்
- அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான்; குடிக்கிறவள் ஒன்று நினைத்துக் குடிக்கிறான்
- அரைக்கீரை போட்டால் சிறுகீரை முளைக்கும்
- அரைக்குடம் தளும்பும்; நிறைகுடம் தளும்பாது
- அரைகட்டி நாய்க்கு உரிகட்டித் திருநாளா?
- அரை குழைத்தாலும் குழைத்தாள்; அரிசியாக வைத்தாலும் வைத்தாள்
- அரை குறை வித்தையுடன் அம்பலத்தில் ஏறினால் குறையும் நிறைவாகிவிடும்
- அரை குறை வேலையை ஆசானுக்குக் காட்டாதே
- அரைச் சல்லியை வைத்து எருக்கு இலையைக் கடந்ததுபோல
- அரைச் சீலை கட்டக் கைக்கு உபசாரமா?
- அரைச் செட்டு முழு நஷ்டம்
- அரைச்சொல் கொண்டு அம்பலம் ஏறினால் அரைச்சொல் முழுச்சொல் ஆகுமா?
- அரைச்சொல் வித்தை கொண்டு அம்பலம் ஏறலாமா?
- அரைஞாண் கயிறும் தாய்ச்சீலையும் ஆய்விடுகிறவள் பெண்சாதி
- அரைத்ததும் மீந்தது அம்மி; சிரைத்ததும் மீந்தது குடுமி
- அரைத்ததையே அரைப்பது போல
- அரைத்தவளுக்கு ஆட்டுக்கல்; சுட்டவளுக்குத் தோகைக் கல்
- அரைத்தாலும் சந்தனம் அதன்மணம் மாறாது
- அரைத் துட்டிலே கல்யாணம்; அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை
- அரைத் துட்டுக்குப் பீத் தின்றவன்
- அரைத்துணியை அவிழ்த்து மேல்கட்டுக் கட்டியது போல
- அரைத்து மீந்தது அம்மி; சிரைத்து மீந்தது குடுமி
- அரைப்படி அரிசியில் அன்னதானம்; அதிலே கொஞ்சம் மேளதாளம்
- அரைப்படி அரிசியில் அன்னதானம்; விடியும் மட்டும் மேளதாளம்
- அரைப் படிப்பைக் கொண்டு அம்பலம் ஏறலாமா?
- அரைப்பணச் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா?
- அரைப் பணத்திலே கல்யாணம், அதிலேகொஞ்சம் வாணவேடிக்கை
- அரைப் பணத்துக்கு வாய் அதிகம்; ஐந்தாறு அரிசிக்குக் கொதி அதிகம்
- அரைப் பணத்துக்கு மருத்துவம் பார்க்கப் போய் அஞ்சு பணத்து நெளி உள்ளே போய்விட்டது
- அரைப் பணம கொடுக்கப் பால் மாறி அம்பது பணம் கொடுத்து அரி சேவை செய்த கதை
- அரைப் பணம் கொடுககப் பால்மாறி ஐம்பது பணம் கொடுத்துச் சேவை செய்த கதை
- அரைப் பணம் கொடுத்து அழச்சொல்லி, ஒரு பணம் கொடுத்து ஓயச் சொன்னானாம்
- அரைப் பணம் கொடுத்து ஆடச் சொன்னால், ஒருபணம் கொடுத்து ஓயச் சொல்ல வேணும்
- அரைப் பணம் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா?
- அரை பறக்கத் தலை பறக்கச் சீராட்டல்
- அரை மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்தான் செட்டி
- அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகா
- அரையும் குறையும்
- அரைவித்தை கொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழுவித்தை ஆகுமா?
- அரை வேலையைச் சபையிலே கொண்டு வருகிறதா?
- அரோகரா என்பவனுக்குப் பாரமா? அமுது படைப்பவனுக்குப் பாரமா?
- அல்லக் காட்டு நரி பல்லைக் காட்டுகிறது போல
- அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு
- அல்லல் அற்ற படுக்கையே அமைதியைத் தரும்
- அல்லல் ஒரு காலம்; செல்வம் ஒரு காலம்
- அல்லல் காட்டு நரி பல்லைக் காட்டிச் சிரித்ததாம்
- அல்லல் பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்
- அல்லவை தேய அருள் பெருகும்
- அல்லாத வழியில் பொருள் ஈட்டல், காமம் துய்த்தல் ஆகியவை ஆகா
- அல்லாதவன் வாயில் கள்ளை வார்
- அல்லார் அஞ்சலிக்கு நல்லார் உதை மேல்
- அல்லாவுக்குக் குல்லாப் போட்டவன் முல்லாவுக்குச் சல்லாப் போட்டானாம்
- அல்லாவை நம்பிக், குல்லாவைப் போட்டால் அல்லாவும் குல்லாவும் ஆற்றோடே போச்சு
- அல்லி பேரைக் கேட்டாலும் அழுத பிள்ளை வாய் மூடும்
- அல்லும் பகலும் கசடு அறக் கல்
- அல்லோல கல்லோலப் படுகிறது
- அலுத்துச் சலித்து அக்காள் வீட்டுக்குப் போனாளாம்; அக்காள் இழுத்து மச்சானிடம் விட்டாளாம்
- அலுத்துச் சலித்து அம்பட்டன் வீட்டுக்குப் போனதற்கு இழுத்துப் பிடித்துத் தலையைச் சிரைத்தானாம்
- அலுத்து வியர்த்து அக்காள் வீட்டுக்குப் போனால், அக்காள் இழுத்து மச்சானண்டை போட்டாளாம்
- அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போக வேணும்
- அலுவலகத்தில் ஐயா அதிகாரம்; அகத்தில் அம்மா அதிகாரம்
- அலை அடங்கியபின் ஸ்நானம் செய்ய முடியுமா?
- அலை எப்பொழுது ஓயும்? தலை எப்பொழுது முழுகுகிறது?
- அலை ஓய்ந்த பிறகு ஸ்நானம் செய்வது போல
- அலை ஒய்ந்து கடல் ஆடுவது இல்லை
- அலைகடலுக்கு அணை போடலாமா?
- அலை நிற்கப் போவதும் இல்லை; தம்பி தர்ப்பணம் செய்து வரப் போவதும் இல்லை
- அலை போல நாக்கும் மலைபோல மூக்கும் ஆகாசம் தொட்ட கையும் அரக்கனுக்கு
- அலை மோதும் போதே கடலாட வேண்டும்
- அலையில் அகப்பட்ட துரும்பு போல
- அலையும் நாய் பசியால் இறக்காது
- அலைவாய்த் துரும்பு போல் அலைகிறது
- அவ்வளவு இருந்தால் அடுக்கி வைத்து வாழேனோ?
- அவகடம் உடையவனே அருமை அறியான்
- அவகுணக்காரன் ஆகாசம் ஆவான்
- அவசம் அடைந்த அம்மங்காள் அரைப்புடைவை இல்லா விட்டால் சொல்ல லாகாதா?
- அவசரக்காரனுக்கு ஆக்கிலே பெட்டு; நாக்குச் சேத்திலே பெட்டு
- அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு
- அவசரக் குடுக்கை
- அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம்
- அவசரச் சுருக்கே, அரிவாள் மனணக் கருக்கே
- அவசரத்தில் குண்டுச் சட்டியிலும் கை நுழையாது
- அவசரத்தில் செத்த பிணத்துக்குப் பீச்சூத்தோடு மாரடிக்கிறான்
- அவசரத்திலும் உபசாரமா?
- அவசரத்துக்கு அரிக்கும் சட்டியிலும் கை நுழையாது
- அவசரத்துக்குத் தோஷம் இல்லை
- அவசரப்பட்ட மாமியார் மருமகனைக் கணவனென்று அழைத்தாளாம்
- அவசரப் படேல்
- அவசரம் ஆனால் அரிக்கும் சட்டியிலும் கை நுழையாது
- அவசரம் என்றால் அண்டாவிலும் கை நுழையாது
- அவத்தனுக்கும் காணி வேண்டாம்; சமர்த்தனுக்கும் காணி வேண்டாம்
- அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணிக்கை இல்லை
- அவத்தனைக் கட்டி வாழ்வதை விடச் சமர்த்தனைக் கட்டி அறுத்துப் போடலாம்
- அவதந்திரம் தனக்கு அந்தரம்
- அவதிக் குடிக்குத் தெய்வமே துணை
- அவப் பொழுதிலும் தவப்பொழுது வாசி
- அவமானம் பண்ணி வெகுமானம் பேசுகிறான்
- அவர் அவர் அக்கறைக்கு அவர் அவர் படுவார்
- அவர் அவர் எண்ணத்தை ஆண்டவன் அறிவான்
- அவர் அவர் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான்; அழித்தாலும் அழிப்பான்
- அவர் அவர் மனசே அவர் அவர்க்குச் சாட்சி
- அவர்களுக்கு வாய்ச்சொல்; எங்களுக்குத் தலைச் சுமை
- அவருடைய இறகு முறிந்து போயிற்று
- அவரை எம்மாதம் போட்டாலும் தை மாதம் காய்க்கும்
- அவரை ஒரு கொடியும் வடமன் ஒரு குடியும்
- அவரைக்கு ஒரு செடி; ஆதீனத்துக்கு ஒரு பிள்ளை
- அவரை நட்டால் துவரை முளைக்குமா?
- அவல் பெருத்தது ஆர்க்காடு
- அவலக் குடித்தனத்தை அம்பலப்படுத்தாதே
- அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறது இல்லை
- அவலப் பிணத்துக்கு அத்தையைக் கொண்டது
- அவலமாய் வாழ்பவன் சபலமாய்ச் சாவான்
- அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பது போல
- அவலை முக்கித் தின்னு; எள்ளை நக்கித் தின்னு
- அவள் அவள் என்பதைவிட அரி அரி என்பது நலம்
- அவள் அழகுக்குத் தாய் வீடு ஒரு கேடா?
- அவள் அழகுக்குப் பத்துப் பேர் வருவார்கள்; கண் சிமிட்டினால் ஆயிரம் பேர் மயங்கிப் போவார்கள்
- அவள் ஆத்தாளையும் அவள் அக்காளையும் கூத்தாடிப் பையன் அழைக்கிறான்
- அவள் எமனைப் பலகாரம் பண்ணுவாள்
- அவள் சம்பத்து அறியாமல் கவிழ்ந்தது
- அவள் சமத்து, பானை சந்தியிலே கவிழ்ந்தது
- அவள் சாட்டிலே திரை சாட்டா?
- அவள் சொல் உனக்குக் குரு வாக்கு
- அவள் பாடுவது குயில் கூவுவது போல
- அவள் பேர் கூந்தலழகி; அவள் தலை மொட்டை
- அவள் பேர் தங்கமாம்; அவள் காதில் பிச்சோலையாம்
- அவள் மலத்தை மணிகொண்டு ஒளித்தது
- அவளிடத்தில் எல்லோரும் பிச்சை வாங்க வேண்டும்
- அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்
- அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே சோடு
- அவளுக்கு நிரம்பத் தளுக்குத் தெரியும்
- அவளைக் கண்ட கண்ணாலே இன்னொருத்தியைக் காணுகிறதா?
- அவளைத் தொடுவானேன்? கவலைப் படுவானேன்?
- அவன் அசையாமல் அனுவும் அசையாது
- அவன் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது
- அவன் அருள் அற்றார் அனைவரும் அற்றார்; அவன் அருள் உற்றார் அனைவரும் உற்றார்
- அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான்; அழித்தாலும் அழிப்பான்
- அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கு
- அவன் அவன் மனசே அவன் அவனுக்குச் சாட்சி
- அவன் அவன் தலையெழுத்தின்படி நடக்கும்
- அவன் அவன் நிழல் அவன் அவன் பின்வரும்
- அவன் அன்றி ஓரணுவும் அசையாது
- அவன் ஆகாரத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான்
- அவன் இட்டதே சட்டம்
- அவன் இவன் என்பதைவிட அரி அரி என்பது நலம்
- அவன் உள் எல்லாம் புண்; உடம்பெல்லாம் கொப்புளம்
- அவன் உனக்குக் கிள்ளுக் கீரையா?
- அவன் எங்கே இருந்தான்? நான் எங்கே இருந்தேன்?
- அவன் எரி பொரி என்று விழுகிறான்
- அவன் என் தலைக்கு உலை வைக்கிறான்
- அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான்
- அவன் எனக்கு அட்டமத்துச் சனி
- அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி
- அவன் ஓடிப் பாடி நாடியில் அடங்கினான்
- அவன் கணக்குப் புத்தகத்தில் ஒரு பத்திதான் எழுதியிருக்கிறது
- அவன் கல்வெட்டான ஆள்; அவன் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை
- அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்
- அவன் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வான்
- அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன்
- அவன் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்க முடியாது
- அவன் கிடக்கிறான் குடிகாரன்; எனக்கு ஒரு திரான் போடு
- அவன் கெட்டான் என் கொட்டிலின் பின்னே
- அவன் கெட்டான் குடியன்; எனக்கு இரண்டு திரான் வாரு
- அவன் கேப் மாறி, அவன் தம்பி முடிச்சு மாறி
- அவன் கை மெத்தக் கூர் ஆச்சே
- அவன் கை மெத்த நீளம்
- அவன் கையைக் கொண்டே அவன் கண்ணில் குத்தினான்
- அவன் கொஞ்சப் பள்ளியா?
- அவன் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது
- அவன் சாதி அறிந்த புத்தி, குலம் அறிந்த ஆசாரம்
- அவன் சாதிக்கு எந்தப் புத்தியோ குலத்துக்கு எந்த ஆசாரமோ அதுதான் வரும்
- அவன் சாயம் வெளுத்துப் போய்விட்டது
- அவன் செய்த வினை அவனைச் சாரும்
- அவன் சொன்னதே சட்டம்; இட்டதே பிச்சை
- அவன் சோற்றுக்குத் தாளம் போடுகிறான்
- அவன் சோற்றை மறந்துவிட்டான்
- அவன் தம்பி அங்கதன்
- அவன் தம்பி நான்தான்; எனக்கு ஒன்றும் வராது
- அவன் தலையில் ஓட்டைக் கவிழ்ப்பான்
- அவன் தவிடு தின்று போவான்
- அவன் தன்னாலேதான் கெட்டால், அண்ணாவி என்ன செய்வான்?
- அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்
- அவன் நடைக்குப் பத்துப்பேர் வருவார்கள்; கைவீச்சுக்குப் பத்துப் பேர் வருவார்கள்
- அவன் நா அசைந்தால் நாடு அசையும்
- அவன் நிரம்ப வைதிகமாய்ப் பேசுகிறான்
- அவன் நின்ற இடம் ஒரு சாண் வெந்து இருபது சாண் நீறாகும்
- அவன் பசியாமல் கஞ்சி குடிக்கிறான்
- அவன் பிடித்த முயலுக்கு மூன்றே கால்
- அவன் பின்புறத்தைத் தாங்குகிறான்
- அவன் பூராய மாயம் பேசுகிறான்
- அவன் பேச்சு விளக்கெண்ணெய்ச் சமாசாரம்
- அவன் பேச்சைத் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேணும்
- அவன் பேசுகிறது எல்லாம் தில்லுமுல்லு, திருவாதிரை
- அவன் போட்டதே சட்டம்; இட்டதே பிச்சை
- அவன் மனசே அவனுக்குச் சாட்சி
- அவன் மிதித்த இடத்தில் புல்லும் முளையாது
- அவன் மூத்திரம் விளக்காய் எரிகிறது
- அவன் மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன்
- அவன் ராஜ சமூகத்துக்கு எலுமிச்சம்பழம்
- அவன் வம்புக்கும் இவன் தும்புக்கும் சரி
- அவன் வல்லாள கண்டனை வாரிப் போர் இட்டவன்
- அவன் வலத்தை மண் கொண்டு ஒளித்தது
- அவனண்டை அந்தப் பருப்பு வேகாது
- அவனியில் இல்லை ஈடு; அவளுக்கு அவளே சோடு
- அவனுக்கு ஆகாசம் மூன்று விரற்கடை
- அவனுக்குக் கத்தியும் இல்லை; கபடாவும் இல்லை
- அவனுக்குக் கபடாவும் இல்லை; வெட்டுக்கத்தியும் இல்லை
- அவனுக்குச் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது
- அவனுக்கச் சுக்கிாதசை அடிக்கிறது
- அவனுக்குப் பொய்ச் சத்தியம் பாலும் சோறும்
- அவனுக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம்
- அவனுக்கும் இவனுக்கும் அஜகஜாந்தரம்
- அவனுக்கும் இவனுக்கும் எருமைச் சங்காத்தம்
- அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறதா என் பிழைப்பு எல்லாம்?
- அவனுக்க ஜெயில் தாய் வீடு
- அவனுடைய பேச்சுக் காற் சொல்லும் அரைச் சொல்லும்
- அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல இருக்கிறது
- அவனே இவனே என்பதை விடச் சிவனே சிவனே என்பது நல்லது
- அவனே வெட்டவும் விடவும் கர்த்தன்
- அவனை அவன் பேசிவிட்டுப் பேச்சு வாங்கி ஆமை மல்லாத்தினாற் போல மல்லாத்திப் போட்டான்
- அவனை உரித்து வைத்தாற்போல் பிறந்திருக்கிறான்
- அவனோடு இவனை ஏணிவைத்துப் பார்த்தாலும் காணாது
- அவிக்கிற சட்டியை விட மூடுகிற சட்டி பெரிதாக இருக்கிறது
- அவிசல் கத்தரிக்காய் ஐயருக்கு
- அவிசாரி அகமுடையான் ஆபத்துக்கு உதவுவானா?
- அவிசாரி ஆடினாலும் அதிர்ஷ்டம் வேண்டும்; திருடப் போனாலும் திசை வேண்டும்
- அவிசாரி ஆனாலும் ஆனைமேல் போகலாம்; திருடன் தெருவழியே கூடப் போக முடியாது
- அவிசாரி என்று ஆனைமேல் ஏறலாம்; திருடி என்று தெருவில் வரலாமா?
- அவிசாரி என்று பெயர் இல்லாமல் ஐந்து பிராயம் கழித்தாளாம்
- அவிசாரிக்கு ஆணை இல்லை; திருடிக்குத் தெய்வம் இல்லை
- அவிசாரிக்கும் ஆற்றில் விழுகிறவளுக்கும் காவல் போட முடியுமா?
- அவிசாரிக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குக் கொதி பெரிது
- அவிசாரி கையில் சாப்பிடாதவனும் அரிசிப் புழுத் தின்னாதவனும் இல்லை
- அவிசாரி பிள்ளை கோத்திரத்துக்குப் பிள்ளை
- அவிசாரி பிள்ளை சபைக்கு உறுதி
- அவிசாரி போக ஆசையாய் இருக்குது; அடிப்பானென்று பயமாய் இருக்குது
- அவிசாரி போனாலும் முகராசி வேணும்; அங்காடி போனாலும் கைராசி வேணும்
- அவிசாரியிலே வந்தது பெரு வாரியிலே போகிறது
- அவிசாரி வாயாடுகிறாற் போலே
- அவிட்டத்தில் பிறந்த தங்கச்சியை அந்நியத்தில் கொடுக்கக் கூடாது
- அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையிலும் பொன்
- அவிட்டத்துப் பெண் தொட்டதெல்லாம் பொன்
- அவித்த பயறு முளைக்குமா?
- அவிர்ப் பாகத்தை நாய் மோந்த மாதிரி
- அவிவேகி உறவிலும் விவேகி பகையே நன்று
- அவிழ்த்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம்
- அவிழ்த்து விட்ட காளை போல
- அவிழ்த்து விட்டதாம் கழுதை; எடுத்து விட்டதாம் ஓட்டம்
- அவிழ்த்து விட்டால் பேரளம் போவான்
- அவிழ்தம் என்ன செய்யும்? அஞ்சு குணம் செய்யும்; பொருள் என்ன செய்யும்? பூவை வசம் செய்யும்
- அவுங்க என்றான், இவுங்க என்றான்; அடிமடியிலே கையைப் போட்டான்
- அவையிலும் ஒருவன், சவையிலும் ஒருவன்
- அழ அழச் சொல்வார் தமர்; சிரிக்கச் சிரிக்கச் சொல்வார் பிறர்
- அழகர் கோயில் மாடு தலை ஆட்டினது போல
- அழகன் நடைக்கு அஞ்சான்; செல்வன் சொல்லுக்கு அஞ்சான்
- அழகால் கெட்டாள் சீதை, வாயால் கெட்டாள் திரெளபதி
- அழகிலே அர்ஜூனனாம்; ஆஸ்தியிலே குபேரனாம்
- அழகிலே பவளக் கொடி; அந்தத்திலே மொந்தை மூஞ்சி
- அழகிலே பிறந்த பவளக்கொடி, ஆற்றிலே மிதந்த சாணிக் கூடை
- அழகிற்கு மூக்கை அழிப்பார் உண்டா?
- அழக இருந்து அழும்; அதிர்ஷ்டம் இருந்து உண்ணும்
- அழகு இருந்து உண்ணுமா? அதிருஷ்டம் இருந்து உண்ணுமா?
- அழக இருந்து என்ன? அதிருஷ்டம் இருக்க வேண்டும்
- அழகு இல்லாதவள் மஞ்சள் பூசினாள்: ஆக்கத் தெரியாதவள் புளியைக் கரைத்து ஊற்றினாள்
- அழக ஒழுகுகிறது; நாய் வந்து நக்குகிறது: ஓட்டைப் பானை கொண்டு வா, பிடித்து வைக்க
- அழகு ஒழுகுகிறது, மடியில் கட்டடி கலயத்தை
- அழகுக்கா மூக்கை அறுப்பாள்?
- அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்
- அழகுக்கு அழகு செய்வது போல
- அழகுக்கு இட்டால் ஆபத்துக்கு உதவும்
- அழகுக்குச் செய்தது ஆபத்துக்கு உதவும்
- அழகுக்கு மூக்கை அழித்து விட்டாள்
- அழகு கிடந்து அழும்; அதிர்ஷ்டம் கிடந்து துள்ளும்
- அழகு கிடந்து புலம்புகிறது; அதிர்ஷ்டம் கண்டு அடிக்கிறது
- அழகு சொட்டுகிறது
- அழகு சோறு போடுமா? அதிர்ஷ்டம் சோறு போடுமா?
- அழகுப் பெண்ணே காத்தாயி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி
- அழகு வடியது; கிளி கொஞ்சுது
- அழச் சொல்கிறவன் பிழைக்கச் சொல்லுவான்; சிரிக்கச சொல்கிறவன் கெடச் சொல்லுவான்
- அழப் பார்த்தான் கல்யாணம் போய்ப் பார்த்தால் தெரியும்
- அழலாம் என்று நினைப்பதற்குள் அகமுடையான் அடித்தானாம்
- அழிக்கப் படுவானைக் கடவுள் அறிவினன் ஆக்குவார்
- அழித்தால் ஐந்த ஆள் பண்ணலாமே!
- அழித்துக் கழித்துப் போட்டு வழித்து நக்கி என்று பெயர் இட்டானாம்!
- அழிந்த கொல்லையில் ஆனை மேய்ந்தால் என்ன? குதிரை மேய்ந்தால் என்ன?
- அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
- அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்து என்ன? கழுதை மேய்ந்து என்ன?
- அழிந்தவன் ஆரோடு போனால் என்ன?
- அழிய உழுது அடர விதை
- அழியாச் செல்வம் விளைவே ஆகும்
- அழியாத செல்வத்துக்கு அசுவம் வாங்கிக் கட்டு
- அழி வழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்
- அழிவுக்கு முன்னால் அகந்தை
- அழுக்குக்குள் இருக்கும் மாணிக்கம்
- அழுக்குச் சீலைக்குள் மாணிக்கம்
- அழுக்குத் துணியில் சாயம் தோய்ப்பது போல
- அழுக்கை அழுக்குக் கொல்லும்; இழுக்கை இழுக்குக் கொல்லும்
- அழுக்கைத் துடைத்து மடியிலே வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது
- அழுகலுக்கு ஒரு புழுத்தல்
- அழு கள்ளன், தொழு கள்ளன், ஆசாரக் கள்ளன்
- அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது
- அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு
- அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம்
- அழுகிற பிள்ளையும் வாயை மூடிக் கொள்ளும்
- அழுகிற வீட்டில் இருந்தாலும் ஒழுகுகிற வீட்டில் இருக்கக் கூடாது
- அழுகிற வீட்டுக்குப் போனாலும் திருட்டுக் கை சும்மா இராது
- அழுகிற வேளை பார்த்து அக்குளில் பாய்ச்சுகிறான்
- அழுகின பழம் ஐயருக்கு
- அழுகை ஆங்காரத்தின் மேலும், சிரிப்புக் கெலிப்பின் மேலுந்தான்
- அழுகைத் தூற்றல் அவ்வளவும் பூச்சி
- அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடே
- அழுகையும் சிணுங்கலும் அம்மான் வீட்டில்; சிரிப்பும் களிப்பும் சிற்றப்பன் வீட்டில்
- அழுத்தந் திருத்தமாய் உழுத்தம் பருப்பு என்றான்
- அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான்; இளகின நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
- அழுத கண்ணீரும் கடன்
- அழுத கண்ணும் சிந்திய மூக்கும்
- அழுத பிள்ளை உரம் பெறும்
- அழுத பிள்ளைக்கு வாழைப்பழம்
- அழுத பிள்ளை சிரித்ததாம்; கழுதைப் பாலைக் குடித்ததாம்
- அழுத பிள்ளை பசி ஆறும்
- அழுத பிள்ளை பால் குடிக்கும்
- அழுத பிள்ளையும் வாய் மூடும் அதிகாரம்
- அழுத மூஞ்சி சிரிக்குமாம்; கழுதைப் பாலைக் குடிக்குமாம்
- அழுதவளுக்கு வெட்கம் இல்லை; துணிந்தவளுக்குத் துக்கம் இல்லை
- அழுதவனுக்கு ஆங்காரம் இல்லை
- அழுதால் துக்கம்; சொன்னால் வெட்கம்
- அழுதால் தெரியாதோ? ஆங்காரப் பெண் கொள்ளாதோ?
- அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்
- அழுது கொண்டு இருந்தாலும் உழுது கொண்டிரு
- அழுது முறையிட்டால் அம்பலத்தில் கேட்கும்
- அழுபிள்ளைத் தாய்ச்சிக்குப் பணம் கொடுத்தால் அநுபவிக்க ஒட்டுமா குழந்தை?
- அழுவார் அழுவார் தம் தம் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை
- அழுவார் அழுவார் எல்லாம் தன் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை
- அழுவார் அழுவார் தம் துக்கம்; அசலார்க்கு அல்ல
- அழுவார் அற்ற பிணமும் சுடுவார் அற்ற சுடலையும்
- அழையாத வீட்டில் நாய்போல நுழையாதே
- அழையாத வீட்டில் நுழையாத விருந்து
- அழையாத வீட்டுக்கு விருந்துக்குப் போனால் மரியாதை நடக்காது
- அழையாத வீட்டுக்குள் நுழையாத சம்பந்தி
- அழையா வீட்டுக்குள் நுழையாச் சம்பந்தி
- அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் வேண்டும்
- அள்ளரிசி புள்ளரிசி அவளானால் தருவாள்; அறியாச் சிறுக்கி இவள் என்ன தருவாள்?
- அள்ளாது குறையாது; இல்லாது பிறவாது
- அள்ளிக் குடிக்கத் தண்ணீர் இல்லை; அவள் பேர் கங்காதேவி
- அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன்
- அள்ளிக் கொண்டு போகச்சே கிள்ளிக்கொண்டு வருகிறான்
- அள்ளித் துள்ளி அரிவாள் மணையில் விழுந்தாளாம்
- அள்ளி நடுதல் கிள்ளி நடுதல்
- அள்ளிப்பால் வார்க்கையிலே கொள்ளிப்பால் வார்த்திருக்குது
- அள்ளிய காரும் கிள்ளிய சம்பாவும்
- அள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும் கிள்ளுகிறவன் இடத்தில் இருக்கக் கூடாது
- அள்ளும்போதே கிள்ளுவது
- அள்ளுவது எல்லாம் நாய் தனக்கு என்று எண்ணுமாம்
- அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
- அளகாபுரி கொள்ளை ஆனாலும் அதிர்ஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை
- அளகாபுரியிலும் விறகு தலையன் உண்டு
- அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்
- அளந்த அளந்த நாழி ஒளிஞ்சு ஒளிஞ்சு வரும்
- அளந்த நாழி கொண்டு அளப்பான்
- அளந்தால் ஒரு சாண் இல்லை; அரிந்தால் ஒரு சட்டி காணாது
- அளந்து ஆற்றிலே ஒழிக்க வேணும்
- அளவு அறிந்து அளித்து உண்
- அளவு அறிந்து உண்போன் ஆயுள் நீளும்
- அளவு அறிந்து வேலை செய்தால் விரல் மடக்கப் பொழுது இல்லை
- அளவு இட்டவரைக் களவு இடலாமா?
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்
- அளிஞ்சு பழஞ் சோறாய்ப் போச்சுது
- அளுக்கு வீட்டு நாய் உளுக்கையிலே; ஐயா வீட்டு நாய் சவுக்கையிலே
- அளுங்குப்பிடி பிடித்தாற் போல
- அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்
- அற்பக் கோபத்தினால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் வருமா?
- அற்பச் சகவாசம் பிராண சங்கடம்
- அற்ப சகவாசம் பிராண சங்கடம்
- அற்ப சந்தோஷம்
- அற்ப சுகம், கோடி துக்கம்
- அற்பத்திற்கு அரைக்காசு அகப்பட்டால் திருக்குளத்தில் போட்டுத் தேடி எடுக்குமாம்
- அற்பத்திற்கு அழகு குலைகிறதா?
- அற்பத் துடைப்பம் ஆனாலும் அகத் தூசியை அடக்கும்
- அற்பப் படிப்பு ஆபத்தை விளைவிக்கும்
- அற்பம் அற்பம் அன்று
- அற்பன் கை ஆயிரம் பொன்னிலும் சற்புத்திரன் கைத் தவிடு நன்று
- அற்பன் பணம் படைத்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்
- அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான்
- அற்பன் பவிஷு அரைக்காசு பெறாது
- அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்
- அற்றதுக்கு உற்ற தாய்
- அற்றது கழுதை, எடுத்தது ஓட்டம்
- அறக்கப் பறக்கப் பாடுபட்டாலும் படுக்கப் பாய் இல்லை
- அறிக் கல்வி முழு மொட்டை
- அறக்காத்தான் பெண்டு இழந்தான்; அறுகாத வழி சுமந்து அழுதான்
- அறக் காய்ந்தால் வித்துக்கு ஆகாது
- அறக் கூர்மை முழு மொட்டை
- அறங்கையும் புறங்கையும் நக்குதே
- அறச் செட்டு முழு நட்டம்
- அறச் செட்டு முழு நஷ்டம்
- அறத்துக்கும் பாடி, கூழுக்கும் பாடி
- அற நனைந்தவருக்குக் கூதல் என்ன?
- அறப்படித்த பூனை காடிப் பானையில் தலையை விடும்
- அறப்படித்த மூஞ்சூறு கழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல
- அறப்படித்தவர் கூழ்ப் பானையில் விழுவாராம்
- அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்
- அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான்; வாங்கவும் மாட்டான்
- அறப்பத்தினி அகமுடையானை அப்பா என்று அழைத்தாளாம்
- அறப் பேசி உறவாட வேண்டும்
- அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறு
- அறம் கெட்ட நெஞ்சு திறம்கெட்டு அழியும்
- அறம் செய்ய அல்லவை நீங்கி விடும்
- அறம் பெருக மறம் தகரும்
- அறம் பொருள் இன்பம் எல்லார்க்கும் இல்லை
- அறம் வெல்லும்; பாவம் தோற்கும்
- அறமுறுக்கினால் அற்றும் போகும்
- அற முறுக்கினால் கொடி முறுக்குப் படும்
- அற முறுக்குக் கொடும்புரி கொண்டு அற்று விடும்
- அறவடித்த ...........சோறுகழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல்
- அறவில்............. வாணிகம்
- அறவும் கொடுங்கோலரசன் கீழ்க் குடியிருப்பிலும் குறவன் கிழ்க் குடியிருப்பு மேல்
- அறவைக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குச் கொதி பெரிது
- அறிவுக்கு அழகு அகத்து உணர்ந்து அறிதல்
- அறிந்த ஆண்டை என்று கும்பிடப் போனால் உங்கள் அப்பன் பத்துப்பணம் கொடுக்கவேணும் கொடு என்றான்
- அறிந்த பார்ப்பான் சிநேகிதக்காரன், ஆறு காசுக்கு மூணு தோசை
- அறிந்தவன் அறிய வேண்டும், அரியாலைப் பனாட்டை
- அறிந்தவன் என்று கும்பிட அடிமை வழக்கு இட்டாற் போல
- அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்
- அறிந்து அறிந்து கெட்டவர் உண்டா?
- அறிந்து அறிந்து செய்கிற பாவத்தை அழுது அழுது தொலைக்க வேணும்
- அறிந்து அறிந்து பாவத்தைப் பண்ணி அழுது அழுது அனுபவித்தல்
- அறிந்து கெட்டேன்; அறியாமலும் கெட்டேன்; சொறிந்தும் புண்ணாச்சு
- அறிய அறியக் கெடுவார் உண்டா?
- அறியாக் குளியாம் கருமாறிப் பாய்ச்சல்
- அறியாத ஊருக்குப் புரியாத வழி காட்டினாற் போல்
- அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள்
- அறியாப் பாவம் பறியாய்ப் போச்சு
- அறியாப் பிள்ளை ஆனாலும் ஆடுவான் மூப்பு
- அறியாப் பிள்ளை புத்தியைப் போல
- அறியாமல் தாடி வளர்த்து அம்பட்டன் கையிற் கொடுக்கவா?
- அறியா விட்டால் அசலைப் பார்; தெரியா விட்டால் தெருவைப்பார்
- அறிவார் அறிவார், ஆய்ந்தவர் அறிவார்
- அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்
- அறிவிலே விளையுமா? எருவிலே விளையுமா?
- அறிவினை ஊழே அடும்
- அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்
- அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே
- அறிவு அற்றவனுக்கு ஆண்மை ஏது?
- அறிவு அற்றவனுக்கு ஆர் சொன்னால் என்ன?
- அறிவுடை ஒருவனை அரசனும் விரும்புவான்
- அறிவு இருந்தென்ன? அதிருஷ்டம் வேண்டும்
- அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலும் இல்லை
- அறிவு இல்லாதவன் பெண்களிடத்திலும் தாழ்வு படுவான்
- அறிவு இல்லாதவனுக்கு வேலை ஓயாது
- அறிவு இல்லார் சிநேகம் அதிக உத்தமம்
- அறிவு இல்லார் தமக்கு ஆண்மையும் இல்லை
- அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை
- அறிவு உடையார் ஆவது அறிவார்
- அறிவு உடையாரை அடுத்தால் போதும்
- அறிவு உடையாரை அரசனும் விரும்பும்
- அறிவு உள்ளவனுக்கு அறிவது ஒன்று இல்லை
- அறிவு கெட்ட நாய்க்கு அவலும் சர்க்கரையுமா?
- அறிவு கெட்டவனுக்கு ஆர் சொல்லியும் என்ன?
- அறிவுடன் ஞானம்; அன்புடன் ஒழுக்கம்
- அறிவுடையாரை அரசனும் விரும்புவான்
- அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும்
- அறிவு புறம் போய் ஆடினது போல
- அறிவு பெருத்தோன், அல்லல் பெருத்தோன்
- அறிவு மனத்தை அரிக்கும்
- அறிவு யார் அறிவார்? ஆய்ந்தவர் அறிவா
- அறிவேன், அறிவேன், ஆல் இலை புளியிலை போல் இருக்கும் என்றானாம்
- அறுக்க ஊறும் பூம் பாளை, அணுக ஊறும் சிற்றின்பம்
- அறுக்க ஒரு யந்திரம்; அடிக்க ஒரு யந்திரம்
- அறுக்க மாட்டா கையிலே 56 கறுக்கு அறிவாளாம்
- அறுக்கத் தாலி இல்லை; சிரைக்க மயிரும் இல்லை
- அறுக்கப் பிடித்த ஆடுபோல
- அறுக்க மாட்டாதவன் இடையில் அம்பத்தெட்டு அரிவாள்
- அறுக்கு முன்னே புடுக்கைத்தா: தீக்கு முன்னே தோலைத்தா என்ற கதை
- அறுக்கையிலும் பட்டினி; பொறுக்கையிலும் பட்டினி; பொங்கல் அன்றைக்கு பொழுதன்றைக்கும் பட்டினி
- அறுகங் கட்டைபோல் அடிவேர் தளிர்க்கிறது
- அறுகங் கட்டையும் ஆபத்துக்கு உதவும்
- அறுகங் காட்டை உழுதவனும் கெட்டான்; அடங்காப் பெண்ணைக் கொண்டவனும் கெட்டான்
- அறுகங் காட்டை விட்டானும் கெட்டான்; ஆன மாட்டை விற்றவனும் கெட்டான்
- அறுகு போல் வேர் ஓடி
- அறுகு முளைத்த காடும் அரசை எதிர்த்த குடியும் கெடும்
- அறுத்த கைக்குச் சுண்ணாம்பு தர மாட்டான்
- அறுத்த தாலியை எடுத்துக் கட்டினாற் போல
- அறுத்தவள் ஆண்பிள்ளை பெற்றது போல
- அறுத்தவளுக்கு அகமுடையான் வந்தாற் போல
- அறுத்தவளுக்கு அறுபது நாழிகையும் வேலை
- அறுத்தவளுக்குச் சாவு உண்டா?
- அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தரமாட்டான்
- அறுத்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம்
- அறுத்தும் ஆண்டவள் பொன்னுருவி
- அறுதலி பெண் காலால் மாட்டிக் கிழிக்கும்
- அறுதலி மகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவியா அறுத்தேன்
- அறுந்த மாங்கனி பொருந்திய செங்கம்
- அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கிடையாது
- அறு நான்கில் பெற்ற பிள்ளையும் ஆவணி ஐம்மூன்றில் நடுகையும் அநுகூலம்
- அறு நான்கில் பெற்ற புதல்வன்
- அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி
- அறுப்புக் காலத்தில் எலிக்கு நாலு கூத்தியார்
- அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்
- அறுபத்து நாலு அடிக்கம்பத்தில் ஏறி ஆடினாலும் அடியில இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்
- அறுபத் தெட்டுக்கு ஓர் அம்பலம்
- அறுபதாம் கலக்கம்
- அறுபது அடிக் கம்பம் ஏறினாலும் கீழே வந்துதான் யாசகம் வாங்கவேண்டும்
- அறுபதுக்கு அப்புறம் பொறுபொறுப்பு
- அறுபதுக்கு அறுபது சென்றால் வீட்டுக்கு நாய் வேண்டாம்
- அறுபதுக்கு மேல் அடித்ததாம் யோகம்
- அறுபதுக்கு மேல் அறிவுக் கலக்கம்
- அறுபது நாழிகையும் பாடுபட்டும் அரை வயிற்றுக்கு அன்னம் இல்லை
- அறுபது நாளைக்கு எழுபது கதை
- அறுபது வயது சென்றால் அவன் வீட்டுக்கு நாய் வேண்டாம்
- அறுவடைக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண் சாதி
- அறுவாய்க்கு வாய்பெரிது; அரிசிக்குக் கொதி பெரிது
- அறைக் கீரைப் புழுத் தின்னாதவனும் அவிசாரி கையில் சோறு உண்ணாதவனும் இல்லை
- அறைக்குள் நடந்தது அம்பலத்தில் வந்து விட்டது
- அறை காத்தான் பெண்டு இழந்தான்; அங்கேயும் ஒரு கை தூக்கி விட்டான்
- அறை காத்தான் பெண்டு இழந்தான்; ஆறு காதம் சுமந்தும் செத்தான்
- அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்?
- அறையில் இருந்த பேர்களை அம்பலம் ஏற்றுகிற புரட்டன்
- அறையில் சொன்னது அம்பலத்துக்கு வரும்
- அறையில் நடப்பது அம்பலத்துக்கு வரலாமா?
- அறைவீட்டுச் செய்தி அம்பலத்தில் வரும்
- அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறியலாம்
- அன்பின் பணியே இன்ப வாழ்வு
- அன்பு அற்ற மாமிக்குக் கும்பிடும் குற்றமே
- அன்பு அற்றார் பாதை பற்றிப் போகாதே
- அன்பு இருக்கும் இடம் அரண்மனை
- அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்
- அன்பு இல்லாக் கூழும் இன்பம் இல்லா உடன்பிறப்பும்
- அன்பு இல்லாத தாயும் அறிவு இல்லாத புத்திரனும் இன்பம் இல்லாத உடன்பிறப்பும் எதற்குப் பிரயோசனம்?
- அன்பு இல்லாதவர்க்கு ஆதிக்கம் இல்லை
- அன்பு இலாதார் பின்பு செல்லேல்
- அன்பு இலாள் இட்ட அமுது ஆகாது
- அன்பு உடையானைப் பறிகொடுத்து அலையறச்சே அசல் வீட்டுக் காரன் வந்து அழைத்தானாம்
- அன்பு உள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறான்
- அன்பு உள்ள குணம் அலை இல்லா நதி
- அன்புக்குத் திறக்காத பூட்டே இல்லை
- அன்புடனே ஆண்டவனை வணங்கு
- அன்பே சிவம்
- அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம்
- அன்பே மூவுலகுக்கும் ராஜா
- அன்றாடம் காய்ச்சி
- அன்றாடம் சோற்றுக்கு அல்லாடி நிற்கிறது
- அன்று அடிக்கிற காற்றுக்குப் படல் கட்டிச் சாத்தலாம்
- அன்று அற ஆயிரம் சொன்னாலும் நின்று அற ஒரு காசு பெரிது
- அன்று இல்லை, இன்று இல்லை; அழுகற் பலாக்காய் கல்யாண வாசலிலே கலந்துண்ண வந்தாயே
- அன்று இறுக்கலாம்; நின்று இறுக்கலாகாது
- அன்று எழுதினவன் அழித்து எழுத மாட்டான்
- அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
- அன்று கட்டி அன்று அறுத்தாலும் ஆக்கமுள்ள ஆண் மகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டும்
- அன்று கண்டதை அடுப்பில் போட்டு ஆக்கின பானையைத் தோளில் போட்டுக் கொண்டு திரிகிறது போல
- அன்று கண்ட மேனிக்கு அழிவில்லை
- அன்று கண்டனர் இன்று வந்தனர்
- அன்று கழி, ஆண்டு கழி
- அன்று கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்று கிடைக்கிற அரைக்காசு பெரிது
- அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்
- அன்று கொள், நின்று கொள், என்றும் கொள்ளாதே
- அன்று சாப்பிட்ட சாப்பாடு இன்னும் ஆறு மாசத்துக்குத் தாங்கும்
- அன்று தின்ற ஊண் ஆறு மாசத்துக்குப் பசியை அறுக்கும்
- அன்று தின்ற சோறு ஆறு மாசத்துக்கு ஆகுமா?
- அன்று தின்னும் பலாக்காயினும் இன்று தின்னும் களாக்காய் மேல்
- அன்று நடு; அல்லது கொன்று நடு; தப்பினால் கொன்று நடு
- அன்று பார்த்ததற்கு அழிவில்லை
- அன்றும் இல்லை காற்று; இன்றும் இல்லை குளிர்
- அன்றும் இல்லை தையல்; இன்றும் இல்லை பொத்தல்
- அன்று விட்ட குறை ஆறு மாசம்
- அன்றே போச்சுது நொள்ளைமடையான்; அத்தோடே போச்சுது கற்றாழை நாற்றம்
- அன்றை ஆயிரம் பொன்னிலும் இன்றை ஒரு காசு பெரிது
- அன்றைக்கு அடித்த அடி ஆறு மாசம் தாங்கும்
- அன்றைக்கு அறுத்த கார் ஆறு மாசச் சம்பா
- அன்றைக்கு ஆடை; இன்றைக்குக் கோடை; என்றைக்கு விடியும் இடையில் தரித்திரம்
- அன்றைக்கு இட்டது பிள்ளைக்கு
- அன்றைக்கு எழுதியதை அழித்து எழுதப் போகிறானா?
- அன்றைக்குக் கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்றைக்குக் கிடைக்கிற அரைக்காசு பெரிது
- அன்றைக்குச் சொன்ன சொல் சென்மத்துக்கும் போதும்
- அன்றைக்குத் தின்கிற பலாக்காயை விட இன்றைக்குத் தின்கிற களாக்காய் மேல்
- அன்றைப்பாடு ஆண்டுப் பாடாய் இருக்கிறது
- அன்னக் கொட்டிக் கண்ணை மறைக்குது
- அன்னச் சுரணை அதிகமானால் அட்சர சுரணை குறையும்
- அன்னத் துவேஷமும் பிரம்மத் துவேஷமும் கடைசிக் காலத்துக்கு
- அன்னதானத்துக்கு நிகர் என்ன தானம் இருக்கிறது?
- அன்னதானம் எங்கு உண்டு; அரன் அங்கு உண்டு
- அன்ன நடை நடக்கத் தன் நடையும் போச்சாம்
- அன்ன நடை நடக்கப் போய்க் காகம் தன் நடையும் இழந்தாற் போல
- அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்
- அன்னப்பிடி வெல்லப் பிடி ஆச்சுது
- அன்னம் அதிகம் தின்பானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்
- அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா?
- அன்னம் இறங்குவது அபான வாயுவால்
- அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்
- அன்னம் பித்தம்; கஞ்சி காமாலை
- அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்
- அன்னம் முட்டானால் எல்லாம் முட்டும்
- அன்னம் வில்வாதி லேகியம்
- அன்னமயம் இன்றிப் பின்னை மயம் இல்லை
- அன்னமயம் பிராண மயம்
- அன்னமும் தண்ணீரும் கேட்காமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்கு மேலே பத்துப் பங்காய் வளர்ப்பேன்
- அன்னமோ ராமசந்திரா
- அன்ன வலையில் அரன் வந்து சிக்குவான்
- அன்னிய சம்பத்தே அல்லாமல் அதிக சம்பத்து இல்லை என்றான்
- அன்னிய சம்பந்தமே அல்லாமல் அத்தை சம்பந்தம் இல்லை என்கிறான்
- அன்னிய மாதர் அவதிக்கு உதவார்
- அன்னைக்கு உதவாதான் ஆருக்கும் உதவான்
- அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்
- அன்னைக்குப் பின் பெற்ற அப்பன் சிற்றப்பன்
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
- அனந்தங் காட்டிலே என்ன இருக்கப் போகிறது?
- அனந்தத்துக்கு ஒன்றாக உறையிட்டாலும் அளவிடப் போகாது
- அனல், குளிர், வெதுவெதுப்பு இம்மூன்று காலமும் ஆறு காலத்துக்குள் அடங்கும்
- அனலில் இட்ட மெழுகுபோல
- அனற்றை இல்லா ஊரிலே வண்ணார் இருந்து கெட்டார்கள்
- அனுபோகக்காரனுக்கு ஆளாய்க் காக்கிறான்
- அனுபோகம் தெளிகிற காலத்தில் ஒளஷதம் பலிக்கும்
- அனுமந்தராயரே, அனுமந்தராயரே என்றானாம்; பேர் எப்படித் தெரிந்தது என்றானாம்; உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியாதா என்றானாம்
- அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருநாளாம்
- அனுமார் இலங்கையைத் தாண்டினாராம்; ஆனை எதைத் தாண்டும்?
- அனுமார் தம்பி அங்கதன் போலே
- அனுமார் வால் நீண்டது போல
- அஜகஜாந்தரம்
- அஜாகளஸ்தம் போல்
- அஷ்ட சஹஸ்ரத்துக்குப் பிரஷ்ட தோஷம் இல்லை
- அஷ்ட சஹஸ்ரப் பிலுக்கு
- அஷ்டதரித்திரம்
- அஷ்டதரித்திரம் ஆற்றோடு போ என்றால் நித்திய தரித்திரம் நேரே வருகிறது
- அஷ்ட தரித்திரம் தாய் வீடு; அதிலும் தரித்திரம் மாமியார் வீடு
- அஷ்டதரித்திரம் பிடித்தவன் அமராவதியில் வாழ்கிறான் என்று நித்திய தரித்திரம் பிடித்தவன் நின்ற நிலையிலே நட்டுக் கொண்டு வந்தான்
- அஷ்டதரித்திரம் புக்ககத்திலே ஆறாவது போது வாடுகிறேன்
- அஷ்டதிக்குக் கஜம் மாதிரி குடித்தனத்தைத் தாங்குகிறான்
- அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப் புலவன்
- அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது
- அஷ்டமத்துச் சனி போல
- அஷ்டமத்துச் சனியன் கிட்ட வந்தது போல
- அஷ்டமி இல்லை; நவமி இல்லை; துஷ்ட வயிற்றுக்குச் சுருக்க வேணும்
- அஷ்டமி நவமி ஆகாச பாதாளம்
- அஷ்டமி நவமி ஆசானுக்கு ஆகாது
- அஷ்டமி நவமியிலே தொட்டது துலங்காது
- அஷ்டமியிலே கிருஷ்ணன் பிறந்து வேஷ்டி வேஷ்டி என்று அழுகிறானாம்
- அஸ்தச் செவ்வானம் அடை மழைக்கு லட்சணம்
- அஸ்தி சகாந்தரம் என்றது போல் இருக்கிறது
- அஸ்தியிலே ஜூரம்
- அஸ்மின் கிராமே ஆச்சாள் பிரசித்தா
- அக்ஷர லக்ஷம் பெறும்
ஆ
[தொகு]- ஆ ஆ என்பவருக்கு என்ன? அன்னம் படைப்பவர்க்கல்லவா தெரியும்.
- ஆ என்ற ஏப்பமும் அலறிய கொட்டாவியும் ஆகா.
- ஆ என்று போனபிறகு அள்ளி இடுகிறதா?
- ஆக்கம் கெட்ட கூகை
- ஆக்க அறியாவிட்டால் புளியைக் கரை; அழகு இல்லாவிட்டால் மஞ்சளைப் பூசு.
- ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கமாட்டையா?
- ஆக்கப் பிள்ளை நம் அகத்தில்; அடிக்கப் பிள்ளை அயல் வீட்டிலோ?
- ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கல் ஆகாதா?
- ஆக்கம் கெட்ட அக்காள் மஞ்சள் அரைத்தாலும் கரி கரியாக வரும்.
- ஆக்கம் கெட்ட அண்ணன் வேலைக்குப் போனால் வேலை கிடைக்காது; வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது.
- ஆக்க மாட்டாத அழுகல் நாரிக்குத் தேட மாட்டாத திருட்டுச் சாவான்.
- ஆக்க மாட்டேன் என்றால் அரிசியைப் போடு.
- ஆக்கவில்லை, அரிக்கவில்லை; மூக்கெல்லாம் முழுக்கரியாக இருக்கிறதே!
- ஆக்க வேண்டாம், அரிக்க வேண்டாம் பெண்ணே; என் அருகில் இருந்தால் போதுமடி பெண்ணே.
- ஆக்கி அரித்துப் போட்டவள் கெட்டவள்; வழி காட்டி அனுப்பினவள் நல்லவள்.
- ஆக்கிக் குழைப்பேன்; அரிசியா இறக்குவேன்.
- ஆக்கிப் பெருக்கி அரசாள வைத்தேன்; தேய்த்துப் பெருக்கித் திரிசமம் பண்ணாதே.
- ஆக்கினவள் கள்ளி; உண்பவன் சமர்த்தன்.
- ஆக்கினையும் செங்கோலும் அற்றன அரை நாழிகையிலே.
- ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ்; குத்துகிறவள் சலித்தால் குந்தாணிபாழ்.
- ஆக்குகிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண்.
- ஆகட்டும் போகட்டும், அவரைக் காய் காய்க்கட்டும்; தம்பி பிறக்கட்டும்; தம்பட்டங்காய் காய்க்கட்டும்; அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும்; உன்னைக் கூப்பிடுகிறேனா, இல்லயா பார் என்றானாம்.
- ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான்.
- ஆக வேணும் என்றால் காலைப் பிடி; ஆகா விட்டால் கழுத்தைப்பிடி.
- ஆகாசத் தாமரை.
- ஆகாசக் கோட்டை கட்டியது போல.
- ஆகாசத்தில் எறிந்தால் அங்கேயே நிற்குமா?
- ஆகாசத்தில் பறக்க உபதேசம் சொல்லுகிறேன்; என்னை ஆற்றுக் கப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு.
- ஆகாசத்திலிருந்து அறுந்து விட்டேன்; பூமி தேவி ஏற்றுக் கொண்டாள்.
- ஆகாசத்தக்கு மையம் காட்டுகிறது போல்.
- ஆகாசத்துக்கு வழி எங்கே என்றால் போகிறவன் தலைமேலே.
- ஆகாசத்தைப் பருந்து எடுத்துக் கொண்டு போகிறதா?
- ஆகாசத்தையும் வடிகட்டுவேன்.
- ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்றான்.
- ஆகாசம் பார்க்கப் போயும் இடுமுடுக்கா?
- ஆகாசம் பெற்றது, பூமி தாங்கினது.
- ஆகாசமே விழுந்தாற் போலப் பேசுகிறாயே!
- ஆகாசம் பூமி பாதாளம் சாட்சி.
- ஆகாச வர்த்தகன்.
- ஆகாச வல்லிடி அதிர இடித்தது.
- ஆகாத்தியக்காரனுக்கு ஐசுவரியம்; அஷ்ட தரித்திரனுக்குப் பெண்ணும் பிள்ளையும்.
- ஆகாத்தியக்காரனுக்கு ஐசுவரியம் வந்தால் பிரம்மகத்திக்காரனுக்குப் பிள்ளை பிள்ளையாய்ப் பிறக்குது.
- ஆகாத்தியக்காரனுக்குப் பிரம்மகத்திக்காரன் சாட்சி.
- ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு; அதிலும் கெட்டது குருக்களுக்கு.
- ஆகாத நாளில் பிள்ளை பிறந்தால் அண்டை விட்டுக்காரனை என்ன செய்யும்?
- ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாச்சியம்.
- ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக் கொள்.
- ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்க வேண்டும்.
- ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அப்பனையும் ஆத்தாளையும் கொல்லுமேயொழிய, பஞ்சாங்கம் சொன்ன பார்ப்பானை என்ன செய்யும்?
- ஆகாதே உண்டது நீலம் பிறிது.
- ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்குமா?
- ஆகாயத்தில் கூட அரைக் குழிக்கு அவகாசம் இல்லை.
- ஆகாயத்தில் போகிற சனியனை ஏணி வைத்து இறக்கின மாதிரி.
- ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறது போல.
- ஆகாயத்தைப் படல் கொண்டு மறைப்பது போல.
- ஆகாயத்தை வில்லாக வளைப்பான்; மனலைக் கயிறாகத் திரிப்பான்.
- ஆகாயப் புரட்டனுக்கு அந்தரப் புரட்டன் சாட்சி சொன்னானாம்.
- ஆகாயம் பார்க்கப் போயும் இடுமுடுக்கா?
- ஆகாயம் போட்டது; பூமி ஏந்திற்று.
- ஆகாயம் மணல் கொழித்தால் அடுத்தாற் போல் மழை.
- ஆகாயம் விழுந்து விட்டது போல.
- ஆகாயம் மட்டும் அளக்கும் இருப்புத் தூணைச் செல் அரிக்குமா?
- ஆகிற காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள்.
- ஆகிற காலத்தில் அவிழ்தம் பலிக்கும்.
- ஆகிற காலத்திலெல்லாம் அவிசாரி ஆடி, சாகிற காலத்தில் சங்கரா என்றாளாம்.
- ஆகிறது அரைக் காசில் ஆகும்; ஆகாதது ஆயிரம் பொன்னாலும் ஆகாது.
- ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்; ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் ஆகான்.
- ஆகும் காய் பிஞ்சிலே தெரியும்.
- ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
- ஆகும் காலம் வந்தால் தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்.
- ஆங்காரத்தாலே அழிந்தவர் அனந்தம் பேர்.
- ஆங்காரிகளுக்கு அதிகாரி.
- ஆங்காரியை அடக்குபவன் அதிகாரி.
- ஆச்சாபுரம் காட்டிலே ஐம்பது புலி குத்தினவன்
- ஆச்சானுக்குப் பீச்சான்; மதனிக்கு உடன் பிறந்தான்; நெல்லுக் குத்துகிறவளுக்கு நேர் உடன் பிறந்தான். பறைச்சேரி நாயோடே பங்கம் அழிகிறான்.
- ஆச்சா விதைத்தால் ஆமணக்கு விளையுமா?
- ஆச்சி, ஆச்சி, மெத்தப் படித்துப் பேசாதே.
- ஆச்சி திரளவும் ஐயா உருளவும் சரியாக இருக்கும்.
- ஆச்சி நூற்கிற நூல் ஐயர் பூணூலுக்குச் சரி.
- ஆச்சி நூற்பது ஐயர் பூணூலுக்கும் காணாது.
- ஆசந்திரார்க்கம்.
- ஆசன கீதம் சீவன நாசம்.
- ஆசரித்த தெய்வமெல்லாம அடியோடே மாண்டது என்கிறான்.
- ஆசாரக் கள்ளன்.
- ஆசாரத்துக்கு ஆசாரம்; கைத்துக்குச் சுகம்.
- ஆசாரப் பூசைப்பெட்டி; அதன்மேல் கவிச்சுச் சட்டி.
- ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்து போனேனே!
- ஆசாரி குத்து.
- ஆசாரி செத்தான் என்று அகத்திக் கழி கட்டி அழுகிறாற்போல்.
- ஆசாரி பெண்ணுக்கு அழகா பார்க்கிறது?
- ஆசாரி வீட்டுக்கு அடுப்பு இரண்டு.
- ஆசானுக்கும் அடைவு தப்பும்; ஆனைக்கும் அடி சறுக்கும்.
- ஆசிரியர் சொல் அம்பலச் சொல்,
- ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை.
- ஆசை அண்டாதானால் அழுகையும் ஆண்டாது.
- ஆசை அண்டினால் அழுகையும் அண்டும்.
- ஆசை அதிகம் உள்ளவனுக்கு ரோசம் இருக்குமா?
- ஆசை அவள் மேலே; ஆதரவு பாய் மேலே.
- ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்; தொண்ணுாறு நாளும் போனால் துடைப்பக் கட்டை அடி.
- ஆசை இருக்கிறது. ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கிறது கழுதை மேய்க்க.
- ஆசை இருக்கிறது தாசில் பண்ண; அதிருஷ்டம் இருக்கிறது மண் சுமக்க.
- ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.
- ஆசை உண்டானால் பூசை உண்டு.
- ஆசை உள்ள இடத்தில் பூசை நடக்கும்.
- ஆசை உள்ள இடத்தில் பூசையும் அன்பு உள்ள இடத்தில் தென்பும்.
- ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.
- ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை.
- ஆசை உறவு ஆகுமா? ஆதரவு சோறு ஆகுமா?
- ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது?.
- ஆசை எல்லாம் தீர அடித்தான் முறத்தாலே.
- ஆசைக்காரனுக்கு ரோசம் இல்லை.
- ஆசைக்காக அக்காளுக்கு தாலி கட்டினானாம். கொஞ்சுவதற்காக கொழுந்தியாளுக்கு தாலி கட்டினானாம்.
- ஆசைக்கு அளவு இல்லை.
- ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையும்.
- ஆசைக்கு ரோசம் இல்லை.
- ஆசை கடுக்குது; மானம் தடுக்குது.
- ஆசை காட்டி மோசம் செய்கிறதா?
- ஆசை கொண்ட பேருக்கு ரோசம் இல்லை.
- ஆசைப்பட்டது கிடைக்கவில்லையென்றால் ஆண்பிள்ளை அடுத்த கண்ணும் பாரான்.
- ஆசை தீர்ந்தால் அல்லல் தீரும்.
- ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று.
- ஆசைப்பட்டு மோசம் போகாதே.
- ஆசை பெரிதோ? ஆனை பெரிதோ?
- ஆசை பெருக அலைச்சலும் பெருகும்.
- ஆசை மருமகன் தலைபோனாலும் ஆதிகாலத்து உரல் போகக் கூடாது.
- ஆசையினால் அல்லவோ பெண்களுக்கு மீசை முளைப்ப தில்லை?
- ஆசையும் நாசமும் அடுத்து வரும்.
- ஆசை ரோசம் அறியாது.
- ஆசை வெட்கம் அறியுமா?
- ஆசை வைத்தால் நாசந்தான்.
- ஆட்காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் காட்டிக் கொடுக்கும்.
- ஆட்டு உரம் ஒராண்டு நிற்கும்; மாட்டு உரம் ஆறாண்டு நிற்கும்.
- ஆட்டுச் சாணம் அவ்வருடம், மாட்டுச் சாணம் மறு வருடம்
- ஆட்டுக்கடாச் சண்டையிலே நரி அகப்பட்டதுபோல.
- ஆட்டம் நாலு பந்தி; புறத்தாலே குதிரை.
- ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள்; அடைப்பக் கட்டைக்கு ஒரு துடைப்பக் கட்டை.
- ஆட்டம் போட்ட வீட்டுக்கு விட்டம் ஒரு கேடா?
- ஆட்டம் எல்லாம் ஆடி ஓய்ந்து நாட்டுப் புறத்துக்கு வந்தான்.
- ஆட்டத்துக்குத் தகுந்த மேளம்; மேளத்துக்குத் தகுந்த ஆட்டம்.
- ஆட்காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக்காரனோ? அவன் கால் அடிபிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனோ?
- ஆட்டு உரம் பயிர் காட்டும்; ஆவாரை நெல் காட்டும்.
- ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்க வேண்டும்.
- ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது.
- ஆட்டுக்குட்டி எவ்வளவு துள்ளினாலும் ஆனைஉயரம் வருமா?.
- ஆட்டுக்கடா பின் வாங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
- ஆட்டுக்குட்டிக்கு ஆனை காவு கொடுக்கிறதா?.
- ஆட்டுக் குட்டி வந்து வேட்டியைத் தின்கிறது; ஓட்டு ஓட்டு.
- ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளையே கடித்ததாம்.
- ஆட்டுக்கு வேகம் பள்ளத்திலே; ஆனைக்கு வேகம் மேட்டிலே.
- ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; அறிவு இல்லாதவனுக்கு மூன்று கொம்பு.
- ஆட்டுக்குத் தோற்குமா கிழப்புலி?
- ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி மந்தையில் போடுகிறான்.
- ஆட்டைத் தேடி அயலார் கையில் கொடுப்பதைவிட வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது மேல்.
- ஆட்டைத் தோளில் போட்டுக் கொண்டு காடெங்கும் தேடினது போல.
- ஆட்சி புரிய அரண்மனை வாசலிலே பாரக் கழுக்காணி பண்ணிப் புதைத்திருக்கிறது.
- ஆட்டி அலைத்துக் காசு வாங்கினேன்; செல்லுமோ செல்லாதோ? அதைக் கொண்டு எருமை வாங்கினேன்; ஈனுமோ, ஈனாதோ?
- ஆடத் தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம்.
- ஆடப் பாடத் தெரியாதவருக்கு இரண்டு பங்கு உண்டு.
- ஆடப்போன கங்கை அண்டையில் வந்தாற் போல.
- ஆட மாட்டேன், பாட மாட்டேன், குடம் எடுத்துத் தண்ணீர்க்குப் போவேன்.
- ஆடவிட்டு நாடகம் பார்ப்பது போல்.
- ஆடடா சோமாசி, பெண்டாட்டி பாடையில் போய்ப் படுத்தாளாம்.
- ஆடம்பரம் டம்பம், அபிஷேகம் சூன்யம்.
- ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல.
- ஆடவன் செத்த பின்பு அறுதலிக்கும் புத்தி வந்தது.
- ஆடாட பூதிக்கு ஆயிரம் சொர்க்கம்.
- ஆடாச் சாதி ஊடாச் சாதியா?
- ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு.
- ஆடாததும் ஆடி ஐயனாருக்குக் காப்பும் அறுத்தாச்சு.
- ஆடாதே, ஆடாதே, கம்பங்கதிரே; அதற்கா பயந்தாய் சிட்டுக்குருவி?.
- ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.
- ஆடி அமர்ந்தது ஒரு நாழிகையில்.
- ஆடி அரை மழை.
- ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்
- ஆடி மாதத்தில் நாய் போல.
- ஆடி அழைக்கும்; தை தள்ளும்.
- ஆடி அறவெட்டை, அகவிலை நெல் விலை.
- ஆடி அறவெட்டை, போடி உன் ஆத்தாள் வீட்டுக்கு.
- ஆடி அவரை தேடிப் போடு.
- ஆடி அடி அமுங்கினால் கார்த்திகை கமறடிக்கும்.
- ஆடி அடி பெருகும்; புரட்டாசி பொன் உருகும்.
- ஆடிச்சீர் தேடி வரும்.
- ஆடிப் பட்டம் தேடிவிதை
- ஆடிப் பட்டத்து மழை தேடிப் போனாலும் கிடைக்காது.
- ஆடி அமாவாசையில் மழை பெய்தால் அரிசி விற்ற விலை நெல் விற்கும்.
- ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்.
- ஆடி ஆனை வால் ஒத்த கரும்பு, புரட்டாசி பதினைந்தில் விதைத்த வித்து.
- ஆடி ஒரு குழி அவரை போட்டால் கார்த்திகை ஒரு சட்டி கறி.
- ஆடி இருந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படா.
- ஆடி ஓடி நிலைக்கு வந்தது.
- ஆடினது ஆலங்காடு; அமர்ந்தது தக்கோலம்; மணக்கோலம் பூண்டது மணவூர்.
- ஆடி ஓடி நாடியில் அடங்கிற்று.
- ஆடிச் செவ்வாய் தேடிக் குளி; அரைத்த மஞ்சளைத் தேய்த்துக் குளி.
- ஆடி மாதத்தில் விதைத்த விதையும் ஐயைந்தில் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும்.
- ஆடியில் போடாத விதையும் அறுநான்கில் பிறக்காத பிள்ளையும் பிரயோசனம் இல்லை.
- ஆடிக் காற்றில் ஆனையும் அசையும் போது கழுதைக்கு என்ன கதி?
- ஆடிக்கு ஒரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒரு காய் காய்க்கும்.
- ஆடி பிறந்தால் ஆசாரியார்; தை பிறந்தால் தச்சப்பயல்.
- ஆடிக்குத் தை ஆறு மாசம்.
- ஆடி விதைப்பு, ஆவணி நடவு.
- ஆடிக் கீழ்காற்றும் ஐப்பசி மேல்காற்றும் அடித்தால் அவ்வாண்டும் இல்லை, மறு ஆண்டும் இல்லை மழை.
- ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்.
- ஆடி கழிந்த எட்டாம் நாள் கோழி அடித்துக் கும்பிட்டானாம்.
- ஆடிச் செவ்வாய் நாடிப் பிடித்தால் தேடிய கணவன் ஓடியே வருவான்.
- ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற; தை பிறந்தால் உப்புப் பானையைத் திற.
- ஆடி முதல் பத்து, ஆவணி நடுப்பத்து, புரட்டாசி கடைப்பத்து, ஐப்பசி முழுதும் நடலாகாது.
- ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இரா.
- ஆடு அடித்தால் அந்தப் பக்கம்; அகப்பை தட்டினால் இந்தப் பக்கம்.
- ஆடு அடித்தாலும் அன்றைக்குக் காணாது; மாடு அடித்தாலும் மறு நாள் காணாது.
- ஆடு அப்பூ, ஆவாரை முப்பூ.
- ஆடு அறியுமோ அங்காடி வாணிபம்?
- ஆடு அறுபது என்பானாம்; வெள்ளாட்டைக் கண்டால் விலுக்கு விலுக்கு என்பானாம்.
- ஆடு இருக்கப் புலி இடையனை எடாது.
- ஆடு இருந்த இடத்தில் அதர் இல்லை; மாடு இருந்த இடத்தில் மயிர் இல்லை.
- ஆடு இருந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படா.
- ஆடு உதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறான்.
- ஆடு ஊடாடக் காடு விளையாது.
- ஆடு எடுத்த கள்ளனைப் போல் விழிக்கிறான்.
- ஆடு ஓடின காடும் அரசன் போன வீதியும் அம்மா வீடு தேடிப் போன பெண்ணும் அடுத்த மாதம் குட்டிச் சுவராம்.
- ஆடு கடிக்கிறதென்று அறையில் இருப்பாளாம்; அகமுடையான் சம்பாதிக்கப் பேயாய்ப் பறப்பாளாம்.
- ஆடு கறக்கவும் பூனை குடிக்கவும் சரியாக இருந்தது.
- ஆடு கொண்டவன் ஆடித் திரிவான்; கோழி கொண்டவன் கூவித் திரிவான்.
- ஆடு கொண்டு உழுது ஆனை கொண்டு போர் அடித்தாற் போல் இருக்கிறது.
- ஆடு கொழுக்கக் கொழுக்கக் கோனானுக்குச் சந்தோஷம்.
- ஆடு கொழுத்தால் என்ன? ஆனை கட்டி வாழ்ந்தால் என்ன?.
- ஆடு கோழி ஆகாது; மீன் கருவாடு ஆகும்.
- ஆடு கோனான் இன்றித் தானாய்ப் போகுமா?.
- ஆடுதன் துருப்புச் சொல்லி ஆர் வாழ்ந்தார் அம்மானை?.
- ஆடு தழை மேய்ந்தாற் போல.
- ஆடுதன் ராஜா மாதிரி.
- ஆடு திருடுகிற கள்ளனுக்கு ஆக்கிப் போடுகிறவள் கள்ளி.
- ஆடு தின்பாளாம், ஆட்டைக் கண்டால் சீசீ என்பாளாம்.
- ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்.
- ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?.
- ஆடு பகை, குட்டி உறவா?.
- ஆடு பிடிக்கக் கரடி அகப்பட்டது போல்.
- ஆடு போல் சாப்பிட வேண்டும்; ஆனைபோல் குளிக்க வேண்டும்.
- ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா; பெண்டு பிள்ளை இல்லாதவன் தண்டுக்கு ராஜா.
- ஆடு மிதியாக் கொல்லையும் ஆளன் இல்லாப் பெண்ணும் வீண்.
- ஆடு மேய்த்தாற் போலவும் அண்ணனுக்குப் பெண் பார்த்தாற் போலவும்.
- ஆடு வாங்கப் போனவன் ஆனை விலை கேட்டானாம்.
- ஆடு வீட்டிலே, ஆட்டுக்குட்டி காட்டிலே.
- ஆடு வெட்டுகிற இடத்திலே பார்ப்பானுக்கு என்ன வேலை?.
- ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்.
- ஆடை உடையான் அவைக்கு அஞ்சான்.
- ஆடை வாய்க்கவும் ஆபரணம் வாய்க்கவும் அதிர்ஷ்டம் வேணும்.
- ஆடை வாய்ப்பதும் அகமுடையான் வாய்ப்பதும் அவரவர் அதிர்ஷ்டம்.
- ஆடைக்கும் கோடைக்கும் ஆகாது.
- ஆடே பயிர், ஆரியமே வேளாண்மை.
- ஆண் அழகனும் சோறும் அடைவாய் இருந்தால் வீடெல்லாம் பிள்ளை விட்டெறிந்து பேசும்.
- ஆண் அவலம், பெண் அவலம், ஆக்கி வைத்த சோறும் அவலம்.
- ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தைப் பழிப்பான்.
- ஆண்பிள்ளையை அடித்து வளர்; முருங்கையை ஒடித்து வளர்.
- ஆண் தாட்சண்யப் பட்டால் கடன்; பெண் தாட்சண்யப் பட்டால் விபசாரம்.
- ஆண்பிள்ளை அழுதால் போச்சு; பெண்பிள்ளை சிரிச்சால் போச்சு.
- ஆண் இன்றிப் பெண் இல்லை; பெண் இன்றி ஆண் இல்லை.
- ஆண் பிள்ளைக்கு அநியாயப்பட்டால் தீரும்; பெண் பிள்ளைக்கு அழுதால் தீரும்.
- ஆண் உறவும் உறவல்ல; வேலி நிழலும் நிழலல்ல.
- ஆண் முந்தியோ? பெண் முந்தியோ?
- ஆண் சிங்கத்தை ஆனை அடுக்குமா?
- ஆண் பிள்ளைச் சிங்கத்திற்கு யார் நிகர்?
- ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்.
- ஆண் பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருந்தாலும் அக்காளும் தங்கையும் ஒத்திரார்கள்.
- ஆண் இணலிலே நின்று போ; பெண் இணலிலே இருந்து போ.(யாழ்ப்பாண வழக்கு. இணல் - நிழல்.)
- ஆண்ட பொருளை அறியாதார் செய் தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.
- ஆண்டவர் தரிசனம் அன்பர் விமோசனம்.
- ஆண்டவன் ஒருவன் இருக்கிறான்.
- ஆண்டவன் விட்ட வழி.
- ஆண்டவன் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை போடலாம்.
- ஆண்டார் அன்னத்தை அதிரப் பிடிக்கவும் போகாது; செட்டியார் எட்டிக் கன்னத்தில் அடிக்கவும் போகாது.
- ஆண்டார் இருக்கும் வரையில் ஆட்டும் கூத்தும்.
- ஆண்டாருக்குக் கொடுக்கிறாயோ? சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ?
- ஆண்டாருக்கும் பறப்பு; கோயிலுக்கும் சிறப்பு.
- ஆண்டாரைப் பூதம் அஞ்சும்; மாண்டால் ஒழியப் போகாது.
- ஆண்டால் அம்மியும் தேயும்.
- ஆண்டி அடித்தானாம்; கந்தை பறந்ததாம்.
- ஆண்டி அண்ணாமலை, பாப்பாரப் பஞ்சநதம்.
- ஆண்டி அன்னத்துக்கு அழுகிறான்; அவன் நாய் அப்பத்துக்கு அழுகிறது.
- ஆண்டி ஆனைமேல் ஏறிவர நினைத்தது போல.
- ஆண்டிக்கு அரண்மனை இருந்தால் என்ன? எரிந்தால் என்ன?
- ஆண்டிக்கு இடுகிறாயோ? சுரைக்குடுக்கைக்கு இடுகிறாயோ?
- ஆண்டிக்கு அவன் பாடு; தாசனுக்குத் தன் பாடு.
- ஆண்டிக்கு அம்பாரக் கணக்கு என்ன?
- ஆண்டிக்கு இடச் சொன்னால் தாசனுக்கு இடச் சொல்வான்.
- ஆண்டிக்கு இடுகிறதே பாரம்.
- ஆண்டிக்கு எதற்கு அரிசி விலை?
- ஆண்டிக்கு எதற்கையா ஆனை?
- ஆண்டிக்கு எந்த மடம் சொந்தம்?
- ஆண்டிக்கு என்ன பித்து? கந்தல் பித்து.
- ஆண்டிக்கு வாய்ப் பேச்சு; அண்ணாவுக்கு அதுவும் இல்லை.
- ஆண்டிகள் கூடி மடம் கட்டுவதும் நாய் போர்வை வாங்கியதும் போல.
- ஆண்டி கிடக்கிறான் அறையிலே; அவன் சடை கிடக்கிறது தெருவிலே.
- ஆண்டி கிடப்பான் அறையிலே; கந்தை கிடக்கும் வெளியிலே.
- ஆண்டி கிடப்பான் மடத்திலே; சோளி கிடக்கும் தெருவிலே.
- ஆண்டிச்சி பெற்றது அஞ்சும் குரங்கு.
- ஆண்டி கையில் அகப்பட்ட குரங்குபோல் அலைதல்.
- ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்.
- ஆண்டி சங்கை ஏன் ஊதுகிறான்?
- ஆண்டி செத்தான்; மடம் ஒழிந்தது.
- ஆண்டி சொன்னால் தாதனுக்குப் புத்தி எங்கே போச்சு?
- ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் குரங்கு; பாப்பாத்தி பெற்ற பத்தும் பதர்.
- ஆண்டி சோற்றுக்கு அழுகிறான்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறது.
- ஆண்டி பெற்ற அஞ்சும் அவலம்.
- ஆண்டி பெற்ற அஞ்சும் குரங்கு; முண்டச்சி பெற்ற மூன்றும் முண்டைகள்.
- ஆண்டி பெற்ற அஞ்சும் பேய்; பண்டாரம் பெற்ற பத்தும் பாழ்.
- ஆண்டி மகன் ஆண்டி.
- ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
- ஆண்டி மடம் கட்டினது போலத்தான்.
- ஆண்டியும் ஆண்டியும் கட்டிக் கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக் கொள்ளும்.
- ஆண்டியும் தாசனும் தோண்டியும் கயிறும்.
- ஆண்டியே சோற்றுக்கு அலையும் போது லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம்.
- ஆண்டியைக் கண்டால் லிங்கன்; தாசனைக் கண்டால் ரங்கன்.
- ஆண்டியை அடித்தானாம்; அவன் குடுவையைப் போட்டு உடைத்தானாம்.
- ஆண்டி வேஷம் போட்டும் அலைச்சல் தீரவில்லை.
- ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தில்.
- ஆண்டு மறுத்தால் தோட்டியும் கும்பிடான்.
- ஆண்டு மாறின காரும் அன்று அறுத்த சம்பாவும் ஆளன் கண்ணுக்கு அரிது.
- ஆண்டைக்கு ஆளைக் காட்டுகிறான்; ஆண்டை பெண்டாட்டிக்கு ஆள் அகப்படுவது இல்லை.
- ஆண்டை கூலியைக் குறைத்தால் சாம்பான் வேலையைக் குறைப்பான்.
- ஆண்டைமேல் வந்த கோபத்தைக் கடாவின்மேல் காண்பித்தான்.
- ஆணவம் அழிவு.
- ஆணமும் கறியும் அடுக்கோடே வேண்டும்.
- ஆணன் உறவுண்டானால் மாமி மயிர் மாத்திரம்.
- ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.
- ஆணாய்ப் பிறந்தால் அருமை; பெண்ணாய்ப் பிறந்தால் எருமை.
- ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை கேடு செய்யாதே.
- ஆணுக்குப் பெண் அழகு.
- ஆணுக்குக் கேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை செய்தல் ஆகாது.
- ஆணுக்குப் பெண் அஸ்தமித்துப் போச்சா?
- ஆணுக்கு மீசை அழகு; ஆனைக்குத் தந்தம் அழகு.
- ஆணும் அவலம்; பெண்ணும் பேரவலம்.
- ஆணை அடித்து வளர்; பெண்ணைப் போற்றி வளர்.
- ஆணையும் வேண்டாம்; சத்தியமும் வேண்டாம்; துணியைப் போட்டுத் தாண்டு.
- ஆத்தாடி நீலியடி, ஆயிரம் பேரைக் கொன்றவன்டி.
- ஆத்தாள் அம்மணம்; அன்றாடம் கோதானம்.
- ஆத்தாள் என்றால் சும்மா இருப்பான்; அக்காள் என்றால் மீசைமேல் கை போட்டுச் சண்டைக்கு வருவான்.
- ஆத்தாள் படுகிற பாட்டுக்குள்ளே மகள் மோருக்கு அழுகிறாள்.
- ஆத்தாள் வீட்டுப் பெருமை அண்ணன் தம்பியோடே சொல்லிக் கொண்டாளாம்.
- ஆத்தாளும் மகளும் காத்தானுக்கு அடைக்கலம்; அவன் காத்தாலும் காத்தான்; கை விட்டாலும் விட்டான்.
- ஆத்தாளை அக்காளைப் பேசுகிறதில் கோபம் இல்லை; அகமுடையாளைப் பேசுகிறதற்குத்தான் கோபம் பொங்கிப் பொங்கி வருகிறது.
- ஆத்தாளோடு போகிறவனுக்கு அக்காள் எது? தங்கச்சி ஏது?
- ஆத்தி நார் கிழித்தாற்போல் உன்னைக் கிழிக்கிறேன்.
- ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?
- ஆத்திரத்துக்கு அவிசாரி ஆடினால் கோத்திரம் பட்ட பாடுபடுகிறது.
- ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
- ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம்; மூத்திரத்தை அடக்க முடியாது.
- ஆத்திரப் பட்டவனுக்கு அப்போது இன்பம்.
- ஆத்திரம் உடையான் தோத்திரம் அறியான்.
- ஆத்திரம் கழிந்தால் ஆண்டவன் ஏது?
- ஆத்திரம் கஷ்டத்தைக் கொடுக்கும்.
- ஆத்திரம் பெரிது; ஆனாலும் புத்தி மிகப் பெரிது.
- ஆத்தும சுத்தியாகிய நெஞ்சிலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்ச லக்ஷணம் தெரிந்து பலன் என்ன?
- ஆத்துமத் துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.
- ஆத்தூர் பாலூர் அழகான சீட்டஞ்சேரி, அழகு திருவானைக் கோவில் இருந்துண்ணும் விச்சூரு முப்போகம் நிலம் விளைத்தாலும் உப்புக்காகாத காவித்தண்டலம்.
- ஆத்தூரான் பெண்டாட்டி ஆரோடோ போனாளாம்; சேத்தூரான் தண்டம் அழுதானாம்.
- ஆத்துரு அரிசியும் வேற்றூர் விரகும் இருந்தால் சாத்தூர் சௌக்கியம்
- ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான்.
- ஆத்தை வீட்டுச் சொண்டே, மாமியார் வீட்டேயும் வந்தாயோ.
- ஆத்ம ஸ்துதி ஆறு அத்தியாயம்; பர நிந்தை பன்னிரண்டு அத்தியாயம்.
- ஆதரவு அற்ற வார்த்தையும் ஆணி கடவாத கை மரமும் பலன் செய்யாது.
- ஆதரவும் தேவும் ஐந்து வருடத்திலே பலன் ஈயும்.
- ஆதவன் உதிப்பதே கிழக்கு; அக்கம நாயக்கர் சொல்வதே வழக்கு; அதைக் கேட்டு நடத்தல் மினுக்கு; எதிர்த்துப் பேசினால் தொழுக்கு.
- ஆதவன் உதிப்பதே கிழக்கு; கணக்கன் எழுதுவதே கணக்கு.
- ஆதனக் கோட்டைக்கும் செவ்வாய்க் கிழமையாம்.
- ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா?
- ஆதாயம் உள்ளவரை ஆற்றைக் கட்டி இறைத்து விட்டுப் போகிறான்.
- ஆதாயமே செலவு; அறை இருப்பதே நிலுவை.
- ஆதி அந்தம் இல்லா அருமைப் பொருளே கர்த்தன்.
- ஆதி கருவூர், அடுத்தது. வெஞ்சமாக் கூடலூர்.
- ஆதி கருவூர், அழும்பப் பயல் வேலூர்.
- ஆதித்தன் தெற்கு வடக்கு ஆனாலும் சாதித்தொழில் ஒருவரையும் விடாது.
- ஆதி முற்றினால் வியாதி.
- ஆதீனக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா?
- ஆந்தை சிறிது; கீச்சுப் பெரிது.
- ஆந்தை விழிக்கிறது போல விழிக்கிறான்.
- ஆந்தை விழி விழித்தால் அருண்டு போவாரோ?
- ஆப்பக்காரியிடம் மாவு விலைக்கு வாங்கின மாதிரி.
- ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்தது போல.
- ஆபத்தில் அறியலாம் அருமைச் சிநேகிதனை.
- ஆபத்தில் காத்தவன் ஆட்சியை அடைவான்.
- ஆபத்தில் காத்தவன் ஆண்டவன் ஆவான்.
- ஆபத்துக்கு உதவாத நண்பனும் சமயத்துக்கு உதவாத பணமும் ஒன்றுதான்.
- ஆபத்துக்கு உதவாத பெண்டாட்டியை அழகுக்கா வைத்திருக்கிறது?
- ஆபத்துக்கு உதவினவனே நண்பன்.
- ஆபத்துக்கு உதவுவானா அவிசாரி அகமுடையான்.
- ஆபத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினது போல.
- ஆபத்துக்குப் பாபம் இல்லை.
- ஆபத்து சம்பத்து.
- ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு?
- ஆபஃபுனந்து, ஒருபிடி நாகக் கொழுந்து.
- ஆபால கோபாலம்.
- ஆம் என்ற தோஷம், கனத்தது வயிற்றிலே.
- ஆம் என்றும் ஊம் என்றும் சொல்லக் கூடாது.
- ஆம் காலம் ஆகும்; போம் காலம் போகும்.
- ஆம் காலம் எல்லாம் அவிசாரி ஆடிச் சாங்காலம் சங்கரா சங்கரா என்றாளாம்.
- ஆமணக்கு எண்ணெய் வார்த்துப் புட்டம் கழுவினாற் போல.
- ஆமணக்கும் பருத்தியும் அடர விதைத்தல் ஆகாது.
- ஆமணக்கு முத்து ஆணி முத்து ஆகுமா?
- ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?
- ஆமை அசையாமல் ஆயிரம் முட்டையிடும்.
- ஆமை எடுக்கிறது மல்லாத்தி; நாம் அதைச் சொன்னால் பொல்லாப்பு.
- ஆமைக்குப் பத்து அடி என்றால் நாய்க்கு நாலு அடி.
- ஆமை கிணற்றிலே, அணில் கொம்பிலே.
- ஆமை தன் வாயால் கெட்டது போல.
- ஆமை திடலில் ஏறினாற் போல.
- ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்; நாம் அதைச் சொன்னால் பாவம்.
- ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த விடும் உருப்படா.
- ஆமை புகுந்த வீடும் வெள்ளைக்காரன் காலடி வைத்த ஊரும் பாழ்.
- ஆமை மல்லாத்துகிறாற் போல.
- ஆமையுடனே முயல் முட்டையிடப் போய் கண் பிதுங்கிச் செத்ததாம்.
- ஆமையைக் கவிழ்த்து அடிப்பார்களோ; மல்லாத்திச் சுடுவார்களோ? நான் சொன்னால் பாவம்.
- ஆமை வேகமா, முட்டை வேகமா?
- ஆய்ந்து ஓய்ந்து பாராதான் தான் சாவக் கடவான்.
- ஆய்ந்து ஓய்ந்து அக்காளிடம் போனால் அக்காள் இழுத்து மாமன்மேல் போட்டாளாம்.
- ஆய்ச்சல் ஆய்ச்சலாய் மழை பெய்கிறது.
- ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
- ஆய் பார்த்த கல்யாணம் போய்ப் பார்த்தால் தெரியும்.
- ஆய் பிச்சை எடுக்கிறான்; பிள்ளை நீதிபதி வேலை பார்க்கிறான்.
- ஆய உபாயம் அறிந்தவன், அரிது அல்ல வெல்வது.
- ஆயிரம் அரைக் காசு.
- ஆயிரக் கல நெல்லுக்கு ஓர் அந்து போதும்.
- ஆயிரத்தில் ஒருவனே அலங்காரப் புருஷன்.
- ஆயிரம் ஆனாலும் ஆரணிச் சேலை ஆகாது.
- ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கண் விழிக்கிறது.
- ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கால் நீட்டினது போல.
- ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
- ஆயிரம் பேருக்கு போய் சொல்லி திருமணத்தை நடத்தலாம்.
- ஆயிரம் அகணியால் கட்டிய வீட்டுக்கு ஆனைப்பலம்.
- ஆயிரம் ஆனாலும் அவிசாரி சமுசாரி ஆகமாட்டாள்.
- ஆயிரம் ஆனாலும் பெண் புத்தி பின்புத்தி.
- ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது.
- ஆயிரம் ஆனாலும் மாயூரம் வெண்ணெய் ஆகுமா?
- ஆயிரம் இரவுகள் வந்தாலும் அது முதலிரவுக்கு ஈடாகுமா?
- ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார்; துணி பொறுக்கி தோம் தோம் என்று கூத்தாடுவான்.
- ஆயிரம் உளி வாய்ப்பட்டு ஒரு லிங்கம் ஆக வேணும்.
- ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்; அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
- ஆயிரம் எறும்பும் ஆனைப்பலம்.
- ஆயிரம் கட்டு ஆனைப் பலம்.
- ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்கும்.
- ஆயிரம் கப்பியில் நழுவின சுப்பி.
- ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.
- ஆயிரம் காக்கைக்குள் ஓர் அன்னம் அகப்பட்டது போல.
- ஆயிரம் காலத்தில் ஆனி அடி அருகும்; தேக்கு நீர் வற்றும்; தேவதாரு பால் வற்றும்.
- ஆயிரம் காலத்துப் பயிர்.
- ஆயிரம் காலம் குழலில் இட்டாலும் நாயின் வால் நிமிர்ந்து விடுமா?
- ஆயிரம் காலே அரைக்காற் பணம்.
- ஆயிரம் காலே மாகாணி.
- ஆயிரம் குணத்துக்கு ஒரு லோப குணம் தட்டு.
- ஆயிரம் குதிரையை அற வெட்டின சிப்பாய்தானா இப்போது பறைச் சேரியில் நாயோடு பங்கம் அழிகிறான்?
- ஆயிரம் குருடர்கள் சேர்ந்தாலும் சூரியனைப் பார்க்க முடியுமா?
- ஆயிரம் கொடுத்து ஆனை வாங்கி அங்குசம் வாங்கப் பேரம் பண்ணினானாம்.
- ஆயிரம் கொடுத்து ஆனை வாங்குகிறோமே, அது பல் விளக்குகிறதா?
- ஆயிரம் கோவிந்தம் போட்டாலும் அமுது படைக்கிறவனுக்கு அல்லவோ தெரியும் வருத்தம்?
- ஆயிரம் கோழி தின்ற வரகு போல்.
- ஆயிரம் செக்கு ஆடினாலும் அந்திக்கு எண்ணெய் இல்லை.
- ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து.
- ஆயிரம் சொன்னாலும் அவிசாரி சமுசாரி ஆவாளா?
- ஆயிரம் தடவை சொல்லி அழுதாச்சு.
- ஆயிரம் தலை படைத்த ஆதிசேடனாலும் சொல்ல முடியாது.
- ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
- ஆயிரம் நற்குணம் ஒரு லோப குணத்தால் கெடும்.
- ஆயிரம் நாள் இருந்தாலும் அநியாயச் சாவு.
- ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக் கொண்டால் நஷ்டமா?
- ஆயிரம் பட்டும் அவம் ஆச்சு; கோயிலைக் கட்டியும் குறை ஆச்சு.
- ஆயிரம் பனை உள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஓர் ஈர்க்கு இல்லை.
- ஆயிரம் பாட்டுக்கு அடி தெரியும்; நூறு பாட்டுக்கு நுனி தெரியும்.
- ஆயிரம் பாம்பில் ஒரு தேரை பிழைக்கிறாற் போல.
- ஆயிரம் பேர் கூடினாலும் ஓர் அந்துப்பூச்சியைக் கொல்லக் கூடாது.
- ஆயிரம் பேர் இடத்தில் சிநேகம் பண்ணினாலும் ஆண்பிள்ளைகளுக்கென்ன?
- ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்து வை.
- ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.
- ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பனத்தில் சவுக்கு.
- ஆயிரம் பொன் போட்டு ஆனை வாங்கி அரைப் பணத்து அங்குசத்துக்குப் பால் மாறுகிறதா?
- ஆயிரம் பொன் பெற்ற குதிரையானாலும் சவுக்கடி வேண்டும்.
- ஆயிரம் பொன்னுக்கு ஆனை வாங்கினாலும் அரைக் காசுக்குத் தான் சாட்டை வாங்க வேணும்.
- ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.
- ஆயிரம் முடி போட்டாலும் ஆனைப் பலம் வருமா?
- ஆயிரம் ரூபாய் முதலில்லாமல் பத்து ரூபாய் நஷ்டம்.
- ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது.
- ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.
- ஆயிரம் வந்தாலும் கோபம் ஆகாது.
- ஆயிரம் வருஷம் ஆனாலும் ஆனை மறக்குமா?
- ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதிச் சாவு ஆகாது.
- ஆயிரம் வித்தை கற்றாலும் உலகத்தில் ஆடம்பரம் வேண்டும்.
- ஆயில்யத்தில் மாமியார் ஆசந்தியிலே.
- ஆயுசுக்கும் வியாதிக்கும் சம்பந்தம் இல்லை.
- ஆயுசு கெட்டியானால் ஒளடதம் பலிக்கும்.
- ஆயுசு பூராவாக இருந்தால் மாந்தம் மயிரைப் பிடுங்குமா?
- ஆயுதப் பரீட்சை அறிந்தவன் ஆயிரத்தில் ஒருவன்.
- ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா?
- ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறது போல.
- ஆர் அடா என் கோவிலிலே ஆண் நாற்றம், பெண் நாற்றம்?
- ஆர் அடா விட்டது மான்யம்? நானே விட்டுக் கொண்டேன்.
- ஆர் அற்றுப் போனாலும் நாள் ஆற்றும்.
- ஆர் ஆக்கினாலும் சோறு ஆகவேணும்.
- ஆர் ஆத்தாள் செத்தாலும் பொழுது விடிந்தால் தெரியும்.
- ஆர் ஆர் என்பவர்கள் எல்லாம் தீக்குளிப்பார்களா?
- ஆர் ஆருக்கு ஆளானேன், ஆகாத உடம்பையும் புண்ணாக்கிக் கொண்டு.
- ஆர் இட்ட சாபமோ அடி நாளின் தீவினையோ?
- ஆர் கடன் ஆனாலும் மாரி கடன் ஆகாது.
- ஆர் கடன் நின்றாலும் மாரி கடன் நிற்காது.
- ஆர் கடன் பட்டாலும் மாரி கடன் வைக்கக் கூடாது.
- ஆர் குடியைக் கெடுக்க ஆண்டி வேஷம் போட்டாய்?
- ஆர் குத்தினாலும் அரிசி ஆவது ஒன்று.
- ஆர் கெட்டால் என்ன? ஆர் வாழ்ந்தால் என்ன?
- ஆர் சமைத்தாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
- ஆர் சுட்டாலும் பணியாரம் ஆகவேண்டும்.
- ஆர்த்தார் எல்லாம் போருக்கு உரியவர் அல்லர்.
- ஆர் புருஷனை ஆர் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியும்?
- ஆர்மேல் கண்? அனந்திமேல் கண்.
- ஆர் வாழ்வு ஆருக்கு நின்றது?
- ஆர் வாழ்வுதான் சதம்?
- ஆர் வைத்த கொள்ளியோ வீடு பற்றி எரிகிறது.
- ஆரக் கழுத்தி அரண்மனைக்கு ஆகாது.
- ஆரணியமான அழகாபுரிக்கு ஒரு கோரணியான குரங்கு வந்து தோன்றிற்று.
- ஆரம்ப சூரத்தனம்.
- ஆரல்மேல் பூனை அந்தண்டை பாயுமோ இந்தண்டை பாயுமோ?
- ஆராகிலும் படி அளந்து விட்டதா?
- ஆரால் கேடு, வாயால் கேடு.
- ஆராய்ந்து பாராதவன் காரியம் தான் சாந் துயரம் தரும்.
- ஆராய்ந்து பாராமுன் தலையிடாதே.
- ஆராவது என்னைத் தூக்கி மாத்திரம் பிடிப்பார்களானால் நான் பிணக்காடாக வெட்டுவேன் என்று முடவன் கூறியது போல.
- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
- ஆருக்கு அழுவேன் அப்பா ஹைதர் அலி.
- ஆருக்கு ஆகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாள் பொறுத்துக் கேட்கும்; ஆத்மத் துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.
- ஆருக்கு ஆர் சதம், ஆருக்கு என்று அழுவேனடா ஹைதர் அலி?
- ஆருக்குப் பிறந்து மோருக்கு அழுகிறாய்?
- ஆருக்கும் அஞ்சான், ஆர் படைக்கும் தோலான்.
- ஆருக்கும் பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
- ஆருக்கும் மாட்டாதவன் பெண்டுக்கு மாட்டுவான்.
- ஆருக்கு வந்ததோ, எவருக்கு வந்ததோ என்று இருக்காதே.
- ஆருக்கு வந்த விருந்தோ என்று இருந்தால் விருந்தாளி பசி என்னாவது?
- ஆரும் அகப்படாத தோஷம், மெத்தப் பதிவிரதை.
- ஆரும் அற்றதே தாரம்; ஊரில் ஒருத்தனே தோழன்.
- ஆரும் அற்றவருக்குத் தெய்வமே துணை.
- ஆரும் அறியாத அரிச்சந்திரன் கட்டின தாலி.
- ஆரும் அறியாமல் கொண்டு கொடுத்தானாம்; காடு மேடெல்லாம் கரி ஆக்கினானாம்.
- ஆரும், ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு.
- ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேதம் செய்தான்.
- ஆரும் இல்லாப் பெண்ணுக்கு அண்டை வீட்டுக்காரன் மாப்பிள்ளை.
- ஆரே சாரே என்கிறவனுக்குத் தெரியுமா? அக்கினி பார்க்கிறவனுக்குத் தெரியுமா?
- ஆரை இறுக்கி முகம் பெறுகிறது? பிள்ளையை இறுக்கி முகம் பெறுகிறது.
- ஆரைக் காது குத்துவது?
- ஆரைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே.
- ஆரை நம்பித் தோழா, ஆற்றுக்கு ஏற்றம் போட்டாய்?
- ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக் கூடாது.
- ஆரை பற்றிய நஞ்சையும் அறுகு பற்றிய புஞ்சையும்.
- ஆரோக்கியம் பெரும் பாக்கியம்.
- ஆரோக்கியமே ஆயுசு விருத்தி.
- ஆரோ செத்தாள்? எவளோ அழுதாளாம்.
- ஆரோடு போனாலும் போதோடு வந்துவிடு.
- ஆல் என்னிற் பூல் என்னுமாறு.
- ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி.
- ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர்.
- ஆலகால விஷம் போன்றவன் அந்தரம் ஆவான்.
- ஆலங்காட்டுப் பேய் மாதிரி அலைகிறான்.
- ஆலசியம் அதிக விஷம்.
- ஆலம்பாடி அழகு எருது; உழவுக்கு உதவா இழவு எருது.
- ஆலமரத்துக்கு அறுகம்புல்லின் வேரா?
- ஆலமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தது போல.
- ஆலமரத்தைப் பிடித்த பேய் அத்தி மரத்தைப் பிடித்ததாம்.
- ஆலமரத்தை விழுது தாங்குவது போல.
- ஆலமரம் பழுத்தால் பறவைக்குச் சீட்டு அனுப்புவார்களா?
- ஆலயத்துக்கு ஓர் ஆனையும் ஆஸ்தானத்துக்கு ஒரு பிள்ளையும்.
- ஆலயம் அறியாது ஓதிய வேதம்.
- ஆலயம் இடித்து அன்னதானம் பண்ணப் போகிறான்.
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
- ஆலின்மேற் புல்லுருவி.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
- ஆலூரு, சாலுரு, அறுதலிப் பாக்கம், முண்டை களத்துாரு; மூதேவி முறப்பாக்கம்.
- ஆலே பூலே என்று அலம்பிக் கொண்டிருக்கிறது.
- ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
- ஆலைக் கரும்பு போலவே நொந்தேன்.
- ஆலைக் கரும்பும் வேலைத் துரும்பும் போல ஆனேன்.
- ஆலைக்குள் அகப்பட்ட சோலைக் கரும்பு போல.
- ஆலை பாதி; அழிம்பு பாதி.
- ஆலை வாயிலே போன கரும்பு போல்.
- ஆலை விழுது தாங்கினது போல.
- ஆவணி அழகன்.
- ஆவணி அழுகல் தூற்றல்.
- ஆவணி அவிட்டத்திற்கு அசடியும் சமைப்பாள்.
- ஆவணி இலை அசையக் காவேரி கரை புரள.
- ஆவணி தலை வெள்ளமும் ஐப்பசி கடை வெள்ளமும் கெடுதி.
- ஆவணி பறந்தால் புரட்டாசி வரும்; தாவணி பறந்தால் புடைவையாகி வரும்.
- ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும்.
- ஆவணி மாதம் அழுகைத் துாற்றல்.
- ஆவணி மாதம் ஐந்தாந் தேதி சிங்க முழக்கம், அவ்வருஷம் மழை.
- ஆவணி மாதம் தாவணி போட்டவள் புரட்டாசி மாதம் புருஷன் வீடு போனாளாம்.
- ஆவணியில் அகல நடு; ஐப்பசியில் அனைத்து நடு.
- ஆவணி முதல் நட்ட பயிர் பூவணி அரசன் புகழ் போலும்.
- ஆவணியில் நெல் விதைத்தால் ஆனைக் கொம்பு தானாய் விளையும்.
- ஆவத்தை அடரான் பாவத்தைத் தொடரான்.
- ஆவதற்கும் அழிவதற்கும் பேச்சே காரணம்.
- ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.
- ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே.
- ஆவர்க்கும் இல்லை; தேவர்க்கும் இல்லை.
- ஆவர் மாத்திரம் இருந்தால் என்ன? அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்.
- ஆவாரை இலையும் ஆபத்துக்கு உதவும்.
- ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ?
- ஆவுடையாரையும் லிங்கத்தையும் ஆறு கொண்டு போகச்சே சுற்றுக் கோயில் சுவாமி எல்லாம் சர்க்கரைப் பொங்கலுக்கு அழுகின்றனவாம்.
- ஆவுடையார் கோயில் அடங்கலுக்குப் புறத்தி.
- ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
- ஆவும் தென்னையும் அஞ்சு வருஷத்தில் பலன் ஈயும்.
- ஆவென்று போனபின் அள்ளி இடுவது ஆர்?
- ஆ வேறு நிறம் ஆனாலும் பால் வேறு நிறம் ஆகுமா?
- ஆழ்வார் சாதித்தது ஆயிரம்; அம்மையார் சாதித்தது பதினாயிரம்.
- ஆழ்வாரே போதாதோ? அடியாரும் வேண்டுமோ?
- ஆழ அமுக்கினாலும் நாழி நானாழி கொள்ளாது.
- ஆழ உழுதால் ஆட்டுரத்துக்கும் அதிகம்.
- ஆழமறியாமல் காலை இடாதே.
- ஆழ உழுதாலும் அடுக்க உழு.
- ஆழ உழுது அரும் பாடு பட்டாலும் பூமி விளைவது புண்ணியவான்களுக்கே.
- ஆழங்கால் சேற்றில் அழுந்தியிருக்கிறான்.
- ஆழப் பொறுத்தாலும் வாழப் பொறுக்க மாட்டார்கள்.
- ஆழம் அறியாமல் காலை விட்டுக் கொண்டேன்; அண்ணாமலை அப்பா காலை விடு.
- ஆழம் அறியும் ஓங்கில்; மேளம் அறியும் அரவம்.
- ஆழாக்கு அரிசி அன்ன தானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம்.
- ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பைப் பார்.
- ஆழாக்கு அரிசி வாங்கி ஐந்து கடை மீனை வாங்கிப் பொல்லாத புருஷனுக்குப் போட நேரம் இல்லை.
- ஆழி எல்லாம் வயல் ஆனால் என்ன? அவனி எல்லாம் அன்னமயம் ஆனால் என்ன?
- ஆழி கொண்டாலும் காழி கொள்ளாது.
- ஆழுக்கும் பாழுக்கும் ஒருவந்துாரான்; கடா வெட்டுக்கு மோகனுராான்.
- ஆழும் பாழும் அறைக்கீரைப் பாத்தியும்.
- ஆழும் பாழும் ஆகிறது.
- ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
- ஆள் அகப்பட்டால் மிரட்டுகிறதா?
- ஆள் அண்டிப் பேசாதவனும் செடி அண்டிப் பேளாதவனும் ஒன்று.
- ஆள் அரை முழம்; கோவணம் முக்கால் முழம்.
- ஆள் அற்ற பாவம் அழுதாலும் தீராது.
- ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு.
- ஆள் ஆளும் பண்ணாடி எருது ஆர் மேய்க்கிறது?
- ஆள் ஆளை இடிக்கும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரை இடிக்கும்.
- ஆள் ஆளைக் குத்தும்; பகரம் பத்துப் பேரைக் குத்தும்.
- ஆள் ஆனையை மறந்தாலும் ஆனை ஆனை மறக்குமா?
- ஆள் இருக்கக் குலை சாயுமா?
- ஆள் இருக்கும் இளக்காரத்தில் ஆவாரையும் பீயை வாரி அடிக்கும்.
- ஆள் இல்லா ஊருக்கு அழகு பாழ்.
- ஆள் இல்லாத இடத்தில் அசுவமேத யாகம் பண்ணினது போல.
- ஆள் இல்லாப் படை அம்பலம்.
- ஆள் இல்லாப் பத்தினி, இடம் இல்லாப் பத்தினி, ஆளைக் கண்டால் ஈடு இல்லாப் பத்தினி.
- ஆள் இல்லாமல் அடிக்கடி ஓடுமா?
- ஆள் இல்லாமல் ஆயுதம் வெட்டுமா?
- ஆள் இளந்தலை கண்டால் தோணி மிதக்கப் பாயும்.
- ஆள் இளப்பமாய் இருந்தால் எமனையும் நமனையும் பலகாரம் பண்ணுவான்.
- ஆள் இளப்பமாய் இருந்தால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்.
- ஆள் இளைத்ததைக் கண்டால் ஆவாரையும் பீ வாரி அடிக்கும்.
- ஆள் உள்ளுக்குள்ளே இருக்கிறான்.
- ஆள் ஏற நீர் ஏறும்.
- ஆள் ஏறினால் உலை ஏறும்; உலை ஏறினால் உப்பு ஏறும்.
- ஆள் கண்ட சமுத்திரம்.
- ஆள் கண்டு ஏய்க்குமாம் ஆலங்காட்டு நரி.
- ஆள் காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் பிடித்துக் கொடுக்கும்.
- ஆள் காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக்காரனா? அவன் காலடி பிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனா?
- ஆள் காட்டிய விரலுக்கும் அன்னதானப் பலன்.
- ஆள் கால், வாய் முக்கால்.
- ஆள்கிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண்.
- ஆள் கொஞ்சம் ஆகிலும் ஆயுதம் மிடுக்கு.
- ஆள் பஞ்சையாய் இருந்தாலும் ஆயுதம் திறமாய் இருக்க வேண்டும்.
- ஆள் பாதி, அலங்காரம் பாதி.
- ஆள் பாதி, ஆடை பாதி.
- ஆள் பாதி, ஏர் பாதி.
- ஆள் பாரம் பூமியிலே.
- ஆள் போகிறது அதமம்; மகன் போகிறது மத்தியமம்; தான் போகிறது உத்தமம்.
- ஆள் போனால் சண்டை வருமென்று நாயை விட்டு ஏவின மாதிரி.
- ஆள் மதத்தால் கீரை; ஆனை மதத்தால் வாழை.
- ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்.
- ஆள் மறந்தாலும் ஆனை மறக்காது.
- ஆள் ஜம்பமே தவிர வேலை ஜம்பம் கிடையாது.
- ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
- ஆளத் தெரியாத அண்ணாக்கள்ளன் ஒரு குழம்பு வைக்கத் தெரியவில்லை என்றானாம்.
- ஆள மாட்டாதவனுக்குப் பெண்டாட்டி ஏன்?
- ஆளவந்தாரும் உடையவரும் சேர்ந்தால் வைகுண்டத்துக்குப் படி கட்டியிருப்பார்கள்.
- ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது.
- ஆளன் இல்லாத மங்கைக்கு அழகு பாழ்.
- ஆளன் இல்லாதவள் ஆற்று மணலுக்குச் சரி.
- ஆளன் உறவு உண்டானால் மாமி மயிர் மாத்திரம்.
- ஆளனைப் பிரிந்திருத்தல் அரிவையர்க்கு அழகன்று.
- ஆளான ஆள் புகுந்தால் ஆமணக்கு விளக்கெண்ணெய் ஆகும்.
- ஆளான ஆளுக்கு அவிழ் அகப்படாக் காலத்திலே காக்காய்ப் பிசாசு கஞ்சிக்கு அழுகிறது.
- ஆளில் கட்டை அரண்மனைக்கு உதவான்.
- ஆளிலும் ஆள் அம்மாப் பேட்டை ஆள்.
- ஆளுக்கு ஆள் வித்தியாசம்.
- ஆளுக்கு ஒத்த ஆசாரமும் ஊருக்கு ஒத்த உபசாரமும்.
- ஆளுக்கு ஒரு குட்டு வைத்தால் அடியேன் தலை மொட்டை.
- ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.
- ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை.
- ஆளுக்குக் கீரைத்தண்டு; ஆனைக்கு வாழைத்தண்டு.
- ஆளுக்குத் தக்கபடி வேஷம் போடுதல்.
- ஆளுக்குத் தகுந்த சொட்டுக் கொடுக்கிறது.
- ஆளுக்குத் துக்குணி ஆள் பாரம்.
- ஆளுக்குள்ளே ஆளாய் இருப்பான்.
- ஆளும் அம்பும்.
- ஆளும் கோளும் படைத்தவனை வேலும் கோலும் என்ன செய்யும்?
- ஆளை அடித்தால் அரைப்பணம்.
- ஆளை அறிந்து தாண்டுகிறதா?
- ஆளை அறிந்துதான் அறுக்கிறான்.
- ஆளை ஆள் அறிய வேண்டும்; மீனைப் புளியங்காய் அறிய வேண்டும்.
- ஆளை ஆள் குத்தும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும்.
- ஆளை ஏய்க்குமாம் நரி: அதனை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு.
- ஆளைக் கண்டால் ஆறு மணி; ஆளைக் காணா விட்டால் மூன்று மணி.
- ஆளைக் கண்டு ஏமாற்றுமாம் ஆலங்காட்டுப் பேய்.
- ஆளைக் கண்டு மலைக்காதே; ஊது காமாலை.
- ஆளைச் சுற்றிப் பாராமல் அளக்கிறதா?
- ஆளைச் சுற்றிப் பாராமல் அழுகிறாள் ஒரு காலே.
- ஆளைச் சேர்த்தாயோ? அடிமையைச் சேர்த்தாயோ?
- ஆளை நீட்டிப் போடு.
- ஆளைப் பார் சோளக்காட்டிலே.
- ஆளைப் பார், சோளக் கொல்லைப் பொம்மை மாதிரி.
- ஆளைப் பார்த்தால் அழகுதான்; ஏரில் கட்டினால் குழவுதான்.
- ஆளைப் பார்த்தால் அழகுபோல; வேலையைப் பார்த்தால் குழவு போல.
- ஆளைப் பார்த்தால் அழகு மலை; வேலையைப் பார்த்தால் குழவு மலை.
- ஆளைப் பார்த்தான்; தலையில் அடித்தான்.
- ஆளைப் பார்த்தான் வாயால் ஏய்த்தான்.
- ஆளைப் பார்த்து ஆசனம் போடுவான்.
- ஆளைப் பார்த்துக் கூலி கேட்கிறது; அவனைப் பார்த்துப் பெண்டு கேட்கிறது.
- ஆளைப் பார்த்து மலைக்காதே; ஊது கணை.
- ஆளைப் பார்; முகத்தைப் பார்.
- ஆற்றங்கரை மரம் விழும்.
- ஆற்க்காட்டு நவாபு என்றாலும் அரைக்காசுக்குப் பயன் இல்லை.
- ஆற்றித் தூற்றி அம்பலத்திலே வைக்கப் பார்க்கிறான்.
- ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
- ஆற்றங்கரையில் தண்ணீர்; அடுப்பங்கரையில் வெந்நீர்.
- ஆற்றப் புழுதி ஈரம் தாங்கும்.
- ஆற்றாக் குலைப் பொல்லாப்பு அடித்துக் கொள்ளுகிறான்.
- ஆற்றில் இருந்து அரகராப் பாடினாலும் சோற்றில் இருக்கிறான் சொக்கப்பன்.
- ஆற்றில் கரைத்த புளியும் அங்காடிக்கு இட்ட பதரும் ஆயிற்று.
- ஆற்றில் கரைத்த பெருங்காயம் போல்.
- ஆற்றில் கரைத்த மஞ்சள்.
- ஆற்றில் நிறையத் தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்கப் போகிறதா நாய்?
- ஆற்றில் நிறையத் தண்ணீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.
- ஆற்றில் பெரு வெள்ளம் நாய்க்கு என்ன? சளப்புத் தண்ணீர்.
- ஆற்றிலே ஆயிரம் காணி தானம் பண்ணினாற் போலே.
- ஆற்றிலே இறங்கினால் ஐம்பத்தெட்டுத் தொல்லையாம்.
- ஆற்றிலே ஊறுகிறது, மணலிலே சுவருகிறது.
- ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்.
- ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடக்க வேண்டும்.
- ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, ஐயா குடி.
- ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு; குப்பையிலே போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து போடு.
- ஆற்றிலே போட்டுக் குளத்திலே தேடுவது போல.
- ஆற்றிலே போனாலும் போவேனே அன்றித் தெப்பக்காரனுக்குக் காசு கொடுக்க மாட்டேன் என்றானாம்.
- ஆற்றிலே வந்தது மடுவிலே போயிற்று.
- ஆற்றிலே வருகிறது, மணலிலே சொருகுகிறது.
- ஆற்றிலே விட்ட தர்ப்பை போல் தவிக்கிறேன்.
- ஆற்றிலே விட்ட தெப்பத்தைப் போலத் தவிக்கிறேன்.
- ஆற்றிலே விளைகிறது மணலிலே சிதறுகிறது.
- ஆற்றிலே வெள்ளம் போனால் அதற்கு மேலே தோணி போகும்.
- ஆற்றிலே வெள்ளம் வந்தால் ஆனை தடுக்குமா?
- ஆற்று அருகில் இருந்த மரமும் அரசு அறிந்த வாழ்வும் நிலை அல்ல.
- ஆற்றுக்கு அருகில் குடியிருந்த கதை.
- ஆற்றுக்கு ஒரு நாணல்; நாட்டுக்கு ஒரு பூணல்.
- ஆற்றுக்குச் செய்து அபத்தம்; கோயிலுக்குச் செய்து குற்றம்.
- ஆற்றுக்கு நெட்டையும் சோற்றுக்குக் குட்டையும் வாசி.
- ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா? சோற்றுக்குப் பயற்றங்காய் துணையா?
- ஆற்றுக்குப் போகிறதும் இல்லை; அழகரைக் கும்பிடுகிறதும் இல்லை.
- ஆற்றுக்குப் போவானேன்? செருப்பைக் கழற்றுவானேன்?
- ஆற்றுக்குப் போன ஆசாரப் பாப்பாத்தி துலுக்கச்சி மேலே துள்ளி விழுந்தாளாம்.
- ஆற்றுக்கும் பயம்; காற்றுக்கும் பயம்.
- ஆற்றுக்கு மிஞ்சி அரகராப் போட்டாலும் சோற்றுக்கு மிஞ்சித் சொக்கேசன்.
- ஆற்றுக்குள்ளே போய் அரகரா சிவசிவா என்றாலும் சோற்றுக்குள்ளே இருக்கிறானாம் சொக்கலிங்கம்.
- ஆற்றுதே, என்னைத் தேற்றுதே, அம்பலத்திலே என்னை ஏற்றுதே என்றான்.
- ஆற்றுநீர் ஊற்றி அலசிக் கழுவினாலும் வேற்று நீர் வேற்று நீர் தான்.
- ஆற்று நீர் பித்தம் போக்கும்; குளத்து நீர் வாதம் போக்கும்; சோற்று நீர் எல்லாம் போக்கும்.
- ஆற்று நீர் வடிந்த பின் ஆற்றைக் கடக்க நினைத்தானாம்.
- ஆற்று நீரில் அலசிக் கழுவினாலும் அலை.
- ஆற்று நீரை நாய் நக்கிக் குடிக்குமோ? எடுத்துக் குடிக்குமோ?
- ஆற்றுப் பெருக்கும் அரச வாழ்வும் அரை நாழிகை.
- ஆற்று மண்ணுக்கு வேற்று மண் உரம்.
- ஆற்று மணலிலே தினம் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்.
- ஆற்று மணலை அரைத்துக் கரைத்தாலும் வேற்று முகம் வேற்று முகந்தான்.
- ஆற்று மணலை அளவிடக் கூடாது.
- ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; அருச்சுனன் மனைவியரை எண்ண முடியாது.
- ஆற்று மணலையும் ஆகாசத்து நட்சத்திரத்தையும் அளவிடப்படுமோ?
- ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.
- ஆற்றுவார் இல்லாத துக்கம் நாளடைவில் ஆறும்.
- ஆற்றுவாரும் இல்லை; தேற்றுவாரும் இல்லை.
- ஆற்று வெள்ளம் ஆனையை என்ன செய்யும்?
- ஆற்றுார் அரிசியும் வேற்றூர் விறகும் இருந்தால் சாத்தூர் செளக்கியம்.
- ஆற்றுார் சேற்றுார் ஆற்றுக்கு அடுத்த ஊர், ஆறுமுக மங்கலம் ஆர் ஒருவர் போனாலும் சோறு கொண்டு போங்கள் சொன்னேன், சொன்னேன்.
- ஆற்றை அடைக்கும் அதிவிடையம்.
- ஆற்றைக் கட்டிச் செட்டியார் இறைத்தால் சும்மாவா இறைப்பார்?
- ஆற்றைக் கடக்க ஒருவன் உண்டானால் அவனைக் கடக்கவும் ஒருவன் உண்டு.
- ஆற்றைக் கடக்கும்வரையில் அண்ணன் தம்பி; அப்புறம் நீ ஆர்? நான் ஆர்?
- ஆற்றைக் கடத்தி விடு; ஆகாசத்தில் பறக்கக் குளிகை தருகிறேன் என்கிறான் மந்திரவாதி.
- ஆற்றைக் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
- ஆற்றைக் கண்டாயோ? அழகரைச் சேவித்தாயோ?
- ஆற்றைக் காணாத கண்களும் அழகரை வணங்காத கைகளும் இருந்தும் பயன் இல்லாதவை.
- ஆற்றைக் கெடுக்கும் நாணல்; ஊற்றைக் கெடுக்கும் பூணுால்.
- ஆற்றைத் தாண்டியல்லவோ கரை ஏறவேண்டும்?
- ஆற்றோடு போகிற பிள்ளையில் பெண்ணுக்கு ஓர் அகமுடையான் கருப்பாகப் போச்சோ?
- ஆற்றோடு போகிறவன் நல்ல வேலைக்காரன்.
- ஆற்றோடு போனாலும் ஆற்றூரோடே போகாதே.
- ஆற்றோடு போனாலும் கூட்டோடு போகாதே.
- ஆற்றோடு போனாலும் தெப்பக்காரனுக்குக் காசு தர மாட்டேன்.
- ஆற்றோடு போனாலும் போவான் செட்டி; தோணிக்காரனுக்கு அரைக்காசு கொடுக்கமாட்டான்.
- ஆற்றோடு வந்த நீர் மோரோடு வந்தது.
- ஆறாம் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் ஆனான குடித்தனமும் நீறாய் விடும்.
- ஆறாம் திருநாள் ஆனை வாகனம்.
- ஆறாம் மாசம் அரைக் கல்யாணம்.
- ஆறா மீனின் ஓட்டம்.
- ஆறாவது பிள்ளை ஆனை கட்டி வாழ்வான்.
- ஆறாவது பிள்ளை பிறந்தால் ஆனை கட்டி வாழலாம்.
- ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
- ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
- ஆறிலே செத்தால் அறியா வயசு; நூறிலே செத்தால் நொந்த வயசு.
- ஆறின சோறு ஆளனுக்கு மிஞ்சும்.
- ஆறின சோறு பழஞ் சோறு.
- ஆறின புண்ணிலும் அசடு நிற்கும்.
- ஆறினால் அச்சிலே வார்; ஆறாவிட்டால் மிடாவிலே வார்.
- ஆறு அல்ல, நூறு அல்ல, ஆகிறது ஆகட்டும்.
- ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
- ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
- ஆறு இல்லா ஊருக்குக் கேணியே கங்கை.
- ஆறு எல்லாம் கண்ணீர்; அடி எல்லாம் செங்குருதி.
- ஆறு எல்லாம் பாலாய் ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கும்?
- ஆறுக்கு இரண்டு பழுதில்லை.
- ஆறு கடக்கைக்குப் பற்றின தெப்பம் போகவிடுமாப் போலே.
- ஆறு கல்யாணம்; மூன்று பெண்கள்; மார்போடே மார்பு இடிபடுகிறது.
- ஆறு காதம் என்கிறபோது கோவணத்தை அவிழ்ப்பானேன்?
- ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
- ஆறு காதம் என்ன, அவிழ்த்துக் கொண்டானாம் அரைத்துணியை.
- ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
- ஆறு காதம் என்கிற போதே கோவனம் கட்டினானாம்.
- ஆறு கெட நாணல் இடு; ஊறு கெடப் பூணூல் இடு; காடு கெட ஆடு விடு; மூன்றும் கெட முதலையை விடு.
- ஆறு கெடுத்தது பாதி; தூறு கெடுத்தது பாதி.
- ஆறு கொத்து, நூறு இறைப்பு; ஆறு சீப்பு, நூறு காய்.
- ஆறு கொத்து, நூறு தண்ணீர்.
- ஆறு கோணலாய் இருந்தாலும் நீரும் கோணலோ? மாடு கோணலாய் இருந்தாலும் பாலும் கோணலோ?
- ஆறு நாள் நூறு உழவிலும் நூறு நாள் ஆறு உழவு மேல்.
- ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்கப் போகிறதா நாய்?
- ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் பாய்கிறது கொஞ்சம், சாய்கிறது கொஞ்சம்.
- ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ?
- ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு?
- ஆறு நூறு ஆகும்; நூறும் ஆறு ஆகும்.
- ஆறு நேராய்ப் போகாது.
- ஆறு நேரான ஊர் நில்லாது.
- ஆறு நேரான ஊரும், அரசனோடு எதிர்த்த குடியும், புருஷனோடு ஏறு மாறான பெண்டிரும் நீறு நீறு ஆகிவிடும்.
- ஆறு பாதிக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கே.
- ஆறு பார்த்து வந்தாலும் நாய் நக்கிக் குடிக்கும்.
- ஆறு பார்க்கப் போக ஆய்க்குப் பிடித்தது சளிப்பு.
- ஆறு பார்ப்பானுக்கு இரண்டு கண்.
- ஆறு பிள்ளை அழிவுக்கு லட்சணம்.
- ஆறு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவமாம்.
- ஆறு போவதே கிழக்கு; அரசன் செல்வதே வழக்கு.
- ஆறும் கடன்; நூறும் கடன், பெரிசாச் சுடடா பணியாரத்தை.
- ஆறும் கருவில் அமைத்தபடி.
- ஆறும் நாலும் பத்து; நாலும் ஆறும் பத்து.
- ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா?
- ஆறு மாசம் பழுத்தாலும் விளா மரத்தில் வௌவால் சேராது.
- ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற் போல.
- ஆறு மாதத்துக்கு வட்டி இல்லை; அப்புறம் முதலே இல்லை.
- ஆறு மாதம் வீட்டிலே; ஆறு மாதம் காட்டிலே.
- ஆறுமுக மங்கலத்துக்கு ஆர் போனாலும் சோறு உண்டு போங்கள், சொன்னேன்; சொன்னேன்.
- ஆறு வடியும் போது கொல்லும்; பஞ்சம் தெளியும் போது கொல்லும்.
- ஆறு வடிவிலேயும் கருப்புத் தெளிவிலேயும் வருத்தும்.
- ஆன காரியத்துக்கு மேளம் என்ன? தாளம் என்ன?
- ஆன குலத்தில் பிறந்து ஆட்டை மாட்டை மேய்க்காமல் ஓலைவாரியாய்ப் போனானே!
- ஆனதுக்கு ஓர் ஆகாதது; ஆகாததற்கு ஓர் ஆனது.
- ஆனது அல்லாமல் ஆவதும் அறிவமோ?
- ஆன தெய்வத்தை ஆறு கொண்டு போகிறது; அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருவிழாவா?
- ஆனந்த தாண்டவபுரத்தில் எல்லோரும் அயோக்கியர்கள், உங்களைத் தவிர.
- ஆனந்த பாஷ்பத்துக்கு அரைப்பலம் மிளகு.
- ஆனமட்டும் ஆதாளி அடித்துப் போட்டு ஆந்தை போல் விழிக்கிறான்.
- ஆன மாட்டை விற்றவனும் அறுகங் காட்டைத் தொட்டவனும் கெட்டான்.
- ஆன முதலை அழிப்பவன் மானம் இழப்பது அரிதல்ல.
- ஆனா ஆதிவாரம் ஆகாவிட்டால் சோமவாரம்
- ஆனவன் ஆகாதவன் எல்லாவற்றிலும் உண்டு.
- ஆனாங் கோத்திரத்துக்கு ஏனாந் தர்ப்பயாமி.
- ஆனால் ஆதி வாரம்; ஆகாவிட்டால் சோம வாரம்.
- ஆனால் அச்சிலே வார்; ஆகா விட்டால் மிடாவிலே வார்.
- ஆனால் தெரியாதா? அழுகைக் குரல் கேட்காதா?
- ஆனால் பிரம்ம ரிஷி; ஆகாவிட்டால் ரோம ரிஷி.
- ஆனால் விட்டு அடுப்பு எரியும்; போனால் விட்டுப் புத்தி வரும்.
- ஆனான ஆளெல்லாம் தானானம் போடுகிறபோது, கோணல் கொம்பு மாடு கொம்பைக் கொம்பை அலைக்கிறது.
- ஆனானப்பட்ட சாமி எல்லாம் ஆடிக் காற்றில் பறக்குது; அனுமந்தப் பெருமாளுக்குத் தெப்பத் திருநாளாம்.
- ஆனானப் பட்டவர்கள் எல்லாம் தானானம் அடிக்கறச்சே அழுகற் பூசணிக்காய் தெப்பம் போடுகிறதே!
- ஆனி அடி எடார்; கூனி குடி புகார்.
- ஆனி அடை சாரல், ஆவணி முச்சாரல், ஆடி அதி சாரல்.
- ஆனி அரணை வால் பட்ட கரும்பு, ஆனை வால் ஒத்தது.
- ஆனி அரை ஆறு; ஆவணி முழு ஆறு.
- ஆனி அறவட்டை, போடி உங்கள் ஆத்தாள் வீட்டுக்கு.
- ஆனி ஆவணியில் கிழக்கு வில் பூண்டால் பஞ்சம் உண்டு.
- ஆனி ஆனை வால் ஒத்த கரும்பு.
- ஆனித் தூக்கம்.
- ஆனி மாதம் போடுகிற பூசணியும் ஐயைந்து வயசிற் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும்.
- ஆனி முற்சாரல்; ஆடி அடைசாரல்.
- ஆனியில் அடி கோலாதே; கூனியில் குடி போகாதே.
- ஆனியும் கூனியும் ஆகா.
- ஆனை அசைந்து உண்ணும்.
- ஆனை அசைந்து தின்னும்; வீடு அசையாமல் தின்னும்.
- ஆனை அசைந்து வரும்; அடி பெயர்ந்து வரும்.
- ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
- ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
- ஆனைக்கும் அடிசறுக்கும்.
- ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
- ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
- ஆனை அசைந்து வரும்; அடி மேகம் சுற்றி வரும்.
- ஆனை அசைந்து வரும்; பூனை பாய்ந்து வரும்.
- ஆனை அசைந்து வாங்கும், வீடு அசையாமல் வாங்கும்.
- ஆனை அடம் பிடிக்கிறது போல.
- ஆனை அடம் வைத்தாற்போல் அமர அமரப் பதித்த வைத்திருக்கிறார்.
- ஆனை அடமும் பூனைப் பாய்ச்சலும்.
- ஆனை அடியில் அடங்கா அடி இல்லை.
- ஆனை அடியும் சரி, குதிரை குண்டோட்டமும் சரி.
- ஆனை அத்தனை தீப்போட்டாலும் பானை அடியிலேதான்.
- ஆனை அம்பலம் ஏறும்; ஆட்டுக்குட்டி அம்பலம் ஏறுமா?
- ஆனை அயர்ந்தாலும் பூனை அயராது.
- ஆனை அரசன் கோட்டையைக் காக்கும்; பூனை எலிவளையைக்காக்கும்.
- ஆனை அரசு செய்த காட்டிலே பூனை அரசு செய்வது போல.
- ஆனை அரைக் காசுக்குக் கிடைத்தாலும் வேண்டாம்.
- ஆனை அழிகுட்டி போட்டாற் போல.
- ஆனை அழிப்பது தெரிய வில்லையாம்; ஆடுஅழிப்பது தெரிகிறதாம்.
- ஆனை அழுக்கு அலம்பினால் தெரியும்.
- ஆனை அழுதால் பாகன் பழியா?
- ஆனை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும்.
- ஆனை அறிவு பூனைக்கு ஏது?
- ஆனை ஆங்காரம் அடி பேரு மட்டும்.
- ஆனை ஆசார வாசலைக் காக்கும்; பூனை புழுத்த மீனைக் காக்கும்.
- ஆனை ஆயிரம் கேட்டாலும் கொடுப்பானே கர்ணப்பிரபு.
- ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா?
- ஆனை ஆனை என்றால் தந்தம் கொடுக்குமா?
- ஆனை இருக்கும் இடத்தைக் காட்ட வேண்டாம்.
- ஆனை இருந்த இடமும் அரசன் இருந்த இடமும் ஒரு நாளும் பொய்யாகா.
- ஆனை இருந்தால் சேனைக்குப் பலம்.
- ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.
- ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.
- ஆனை இல்லாத ஊர்வலம் பருப்பு இல்லாத கல்யாணம்.
- ஆனை இல்லாத ஊர்வலம் மாதிரி.
- ஆனை இளைத்தால் ஆடு ஆகுமா?
- ஆனை இளைத்தால் எவ்வளவு இளைக்கும்?
- ஆனை உயரம் பூனை ஆகுமா?
- ஆனை உண்ட விளாங்கனி போல.
- ஆனை உறங்குவதும் ஆட்டுக்கிடா பிந்துவதும்.
- ஆனை ஊர்வலத்தில் அடைபட்டதாம் காவேரி.
- ஆனை ஊற்றுக்குக் கொசு எம்மட்டோ?
- ஆனை எதிர்த்து வந்தாலும் ஆனைக்காவில் நுழையாதே.
- ஆனை எவ்வளவு பெரிதானாலும் அங்குசக் குச்சிக்கு அடக்கந்தானே?
- ஆனை ஏற அங்குசம் இல்லாமல் முடியுமா?
- ஆனை ஏற ஆசை; தாண்டி ஏறச் சீவன் இல்லை.
- ஆனை ஏறிச் சந்தின் வழியாக நுழைவானேன்?
- ஆனை ஏறித் திட்டிவாசலில் நுழைவதுபோல.
- ஆனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்தாற்போல.
- ஆனை ஏறினால் மாவுத்தன்; குதிரை ஏறினால் ராவுத்தன்.
- ஆனை ஏறினால் வானம் எட்டுமோ?
- ஆனை ஏறினாலும் அம்பலத்தில் இறங்கத்தான் வேண்டும்.
- ஆனை ஏறும் பெரும்பறையன் ஆரூரில் இருப்பான்.
- ஆனை ஒட்டினாலும் மாமி ஒட்டான்.
- ஆனை ஒரு குட்டி போட்டும் பலன்; பன்றி பல குட்டி போட்டும் பலன் இல்லை.
- ஆனை ஒரு குட்டி போடுவதும் பன்றி பல குட்டி போடுவதும் சரி ஆகுமா?
- ஆனைக்கண் ஐசுவரியம்.
- ஆனைக் கண்ணிலே மோதிரம் பண்ணி வானக் கண்ணி போட்டாளாம்.
- ஆனைக்கண் விழுந்த பலாக்காய் போல.
- ஆனைக் கவடும் பூனைத் திருடும்.
- ஆனைக் கறுப்பைக் கண்ட அட்டை, எனக்கு என்ன குறைச்சல் என்று சொல்லிக் கொண்டதாம்.
- ஆனைக் கன்றும் வளநாடும் கொண்டு வந்தானோ?
- ஆனைக்காரன் ஆனைக்குத் தன் வீட்டைக் காண்பித்துக் கொடாதது போல.
- ஆனைக்காரன் பெண் அடைப்பைக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டாளாம்.
- ஆனைக்காரன் பெண்டாட்டி பூனைக்குட்டியைப் பெற்றாளாம்.
- ஆனைக்காரன் மனைவி ஆண் பிள்ளை பெற்றால் காச்சு மூச்சென்றிருக்கும்.
- ஆனைக்காரனுக்கு ஆனையாலே சாவு.
- ஆனைக்கால்காரன் மிதித்து விடுவதாகப் பயங்காட்டலாம்; மிதிக்கக் கூடாது.
- ஆனைக் காலில் அகப்பட்ட செல்லுப் போல.
- ஆனைக் காலில் பாம்பு நுழைந்தாற் போல.
- ஆனைக் காலில் மிதிபட்ட சுண்டெலி போல.
- ஆனைக் காலின்கீழ் எறும்பு எம்மாத்திரம்?
- ஆனைக்கு அகங்காரமும் பெண்களுக்கு அலங்காரமும்.
- ஆனைக்கு அடி தூரம், எறும்புக்கு ஏழு காதம்.
- ஆனைக்கு அம்பாரி அழகு; அரசனுக்கு முடி அழகு.
- ஆனைக்கு அரைஅடி; எலிக்கு எட்டு அடி.
- ஆனைக்கு அறுபது முழம், அறக்குள்ளனுக்கு எழுபது முழம்.
- ஆனைக்கு ஆயிரம் பாத்தி வேணும்; தோட்டக்காரன் என்ன செய்வான்?
- ஆனைக்கு ஆயிர முழம் அகல வேணும்
- ஆனைக்கு ஆறு அடி; பூனைக்கு இரண்டு அடி.
- ஆனைக்கு ஆனை கைகொடுத்தாற் போல.
- ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.
- ஆனைக்கு உடல் எல்லாம் தந்தம்; மனிதனுக்கு உடல் எல்லாம் பொய்.
- ஆனைக்கு எதிரி நெருஞ்சி முள்.
- ஆனைக்கு ஏற்ற கோடாலி.
- ஆனைக்கு ஒரு கவளம்; ஆளுக்கு ஒரு வேளைச் சோறு.
- ஆனைக்கு ஒரு காலம்; பூனைக்கு ஒரு காலம்.
- ஆனைக்கு ஒரு பிடி; எறும்புக்கு ஒன்பது பிடி.
- ஆனைக்குக் கட்டிய கூடாரம் போல.
- ஆனைக்குக் கண் அளந்தார்; ஆட்டுக்கு வால் அளந்தார்.
- ஆனைக்குக் கண் அளந்து வைத்திருக்கிறது.
- ஆனைக்குக் கண் சிறுத்து வர, காது அசைந்து வர.
- ஆனைக்குக் கரும்பு; கழுதைக்குத் தாள்; நாய்க்குக் கருப்புக் கட்டி.
- ஆனைக்குக் கரும்பும் நாய்க்கு வெள்ளெலும்பும் போல.
- ஆனைக்குக் கால் குட்டை; பானைக்குக் கழுத்துக் குட்டை.
- ஆனைக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் போதுமா?
- ஆனைக்குக் கோபம் வந்தால் அகத்தைப் பிளக்கும்; பூனைக்குக் கோபம் வந்தால் புல்லுப்பாயைப் பிறாண்டும்.
- ஆனைக்குக் கோவணம் கட்ட ஆராலே முடியும்?
- ஆனைக்குச் சிட்டுக்குருவி மத்தியஸ்தம் போனாற்போல.
- ஆனைக்குச் செருப்புத் தைத்தாற்போல.
- ஆனைக் குட்டிக்குப் பால் வார்த்துக் கட்டுமா?
- ஆனைக் குட்டி கொழுக்கவில்லையே என்று உட்கார்ந்து அழுததாம் சிங்கக் குட்டி.
- ஆனைக்குத் தலை மட்டம்; தவளைக்குத் தொடை மட்டம்.
- ஆனைக்குத் தீனி அகப்பையில் கொடுத்தால் போதாது.
- ஆனைக்குத் தீனி இடும் வீட்டில் ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா?
- ஆனைக்குத் தீனி வைத்துக் கட்டுமா?
- ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்.
- ஆனைக்குத் தெரியுமா அங்காடி விலை?
- ஆனைக்குத் தேரை இட்டது போல.
- ஆனைக்கு நீச்சம், முயலுக்கு நிலை.
- ஆனைக்குப் பகை சுள்ளெறும்பு.
- ஆனைக் குப்பத்தான் போலே
- ஆனைக்குப் பனை சர்க்கரை.
- ஆனைக்குப் புண் வந்தால் ஆறாது.
- ஆனைக்குப் பூனை போலவும் வால் இல்லையே!
- ஆனைக்கும் அசையாதது ஆட்டுக்கு அசையும்.
- ஆனைக்கும் அடி சறுக்கும்.
- ஆனைக்கும் அடி தவறும்; பூனைக்கும் எலி தவறும்.
- ஆனைக்கும் அடி தவறும்; வேடனுக்கும் குறி தவறும்.
- ஆனைக்கும் உண்டா ஏழரை நாட்டுச் சனி?
- ஆனைக்கும் உண்டு அவகேடு.
- ஆனைக்கும் சரி, பூனைக்கும் சரி.
- ஆனைக்கும் பானைக்கும் சரியாய்ப் போச்சு.
- ஆனைக்கும் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம்.
- ஆனைக்கு மங்கள ஸ்நானம்; கிண்ணத்தில் எண்ணெய் எடு.
- ஆனைக்கு மதம் பிடிக்க, பாகனுக்குக் கிலி பிடிக்க.
- ஆனைக்கு மதம் பிடித்தால் காடு கொள்ளாது.
- ஆனைக்கு முன் முயல் முக்கினது போல.
- ஆனைக்கு ராஜா மூங்கில் தடி.
- ஆனைக்கு லாடம் அடித்ததைக் கண்டதுண்டா?
- ஆனைக்கு வாழைத்தண்டு; ஆளுக்குக் கீரைத்தண்டு.
- ஆனைக்கு வேகிற வீட்டில் பூனைக்குச் சோறு இல்லையா?
- ஆனைக் கூட்டத்தில் சிங்கம் புகுந்தது போல.
- ஆனைக் கூட்டம் எதிர்த்தால் பூனைக்குட்டி என்ன செய்யும்?
- ஆனைக் கேடும் அரசு கேடும் உண்டா?
- ஆனை கட்டச் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுக்கும்.
- ஆனை கட்டத் தாள்; வானை முட்டப் போர்.
- ஆனை கட்டி ஆண்டால் அரசனும் ஆண்டி ஆவான்.
- ஆனை கட்டி ஆளும் அரசனோ?
- ஆனை கட்டி உழுகிறான்.
- ஆனை கட்டித் தீனி போட முடியுமோ?
- ஆனை கட்டியார் வீட்டில் வாழ்க்கைப்பட்டால் ஆறு கலம் அரிசி யாவது சிறப்பு வைக்க வேண்டாமா?
- ஆனை கட்டி வாழ்ந்தவன் வீட்டில் பானை சட்டிக்கு வழி இல்லை.
- ஆனை கட்டின மரம் ஆட்டம் கொடுக்கும்.
- ஆனை கட்டும் தொழுவத்தில் பூனை கட்டலாமா?
- ஆனை கண்ட பிறவிக் குருடன் அடித்துக் கொள்கிறது போல.
- ஆனை கண் பருத்தால் அகிலத்தை ஆளாதா?
- ஆனை கலக்குகிற குட்டையில் கொக்கு மீனைப் பிடிக்கச் சென்றதாம்.
- ஆனை கவுளில் அடக்கிய கல்லைப்போல.
- ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்; அட்டைகறுத்தால் உதவி என்ன?
- ஆனை கறுத்தால் ஆயிரம் பொன், பூனை கறுத்தால் என்ன பெறும்?
- ஆனை கறுத்தால் என்ன? அசல் வீடு வாழ்ந்தால் என்ன?
- ஆனை கறுத்திருந்தும் ஆயிரம் பொன் பெறும்.
- ஆனைகறுப்போ வெள்ளையோ, கொம்பு வெள்ளைதான்.
- ஆனை காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் பாகனுக்கு அடிமை.
- ஆனை காணாமற் போனால் இரண்டு சட்டியில் தேடினால் அகப்படுமா?
- ஆனை காதில் கட்டெறும்பு புகுந்தாற் போல.
- ஆனை கிட்டப் போக ஆசையாக இருக்கிறது; மாணி எட்ட வில்லை.
- ஆனை குட்டி போட்டாற் போல்.
- ஆனை குட்டி போட்டதென்று முயல் முக்கினாற்போல.
- ஆனை குட்டி போடுகிறது என்று ஆடும் போட்டால் புட்டம் கீறி விடும்.
- ஆனை குட்டி போடும் போடும் என்று எண்ணி லத்தி போட்டதாம்.
- ஆனை குட்டையைக் குழப்புவது போல.
- ஆனை குடிக்கும் தண்ணீர் பூனை குடிக்குமா?
- ஆனை குண்டு சட்டியிலும் குழிசியிலும் உண்டோ?
- ஆனை குப்புற விழுந்தால் தவளைகூட உதைத்துப் பார்க்குமாம்.
- ஆனை குளிக்கச் செம்பு தண்ணீரா?
- ஆனை குளித்த குளம் போல.
- ஆனை குறட்டில் அவல் அடக்குகிறதுபோல எந்த மட்டும் அடக்குகிறது?
- ஆனை கெட்டுக் குடத்தில் கை இடுகிறதா?
- ஆனை கெட்டுப் போகக் குடத்தில கைவிட்டுப் பார்க்கிறதா?
- ஆனை கெடுத்தவன் குடத்தில் கை இட்டாற் போல.
- ஆனை கெடுத்தவன் பானையில் தேடினாற் போல.
- ஆனை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்கிறதா?
- ஆனை கேடு, அரசு கேடு உண்டா?
- ஆனை கொடுத்தவன் அங்குசம் கொடானா?
- ஆனை கொடுத்து ஆடு வாங்கினான்.
- ஆனை கொடுத்தும் அங்குசத்துக்குப் பிணக்கா?
- ஆனை கொழுத்தால் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும்
- ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு; மனிதன் கொழுத்தால் கீரைத்தண்டு.
- ஆனை கொடிற்றில் அடக்குகிறது போல எந்த மட்டும் அடக்குகிறது?
- ஆனைச் சிவப்பிலும் அதிகச் சிவப்பு!
- ஆனைக் கவடும் பூனைத் திருடும்.
- ஆனைச் சொப்பனம் கண்டவருக்குப் பானைப் பொன்.
- ஆனை சிங்கக்குட்டி போடுவது போல.
- ஆனை சிந்திய சிறு கவளம் எறும்புக் கூட்டத்துக்குப் பெருவளம்.
- ஆனை சீர் தந்த எங்கள் அம்மான் கத்திரிக்காய்க்குக் குண்டா கரணம் போடுகிறான்.
- ஆனை செத்தாலும் ஆயிரம் பொன்.
- ஆனை சொற்படி பாகன்; பாகன் சொற்படி ஆனை.
- ஆனைத் தலையளவு பெருங்காயம் கரைத்த வீடா?
- ஆனைத் துதிக்கையில் எலும்பே கிடையாது.
- ஆனைத் தோலை எலி கரண்டினது போல.
- ஆனை தம்பட்டம் அடிக்க ஓநாய் ஒத்து ஊதிற்றாம்.ஆனை தம்பட்டம் அடிக்க ஓநாய் ஒத்து ஊதிற்றாம்.
- ஆனை தரைக்கு ராஜா; முதலை தண்ணீருக்கு ராஜா.
- ஆனை தழுவிய கையால் ஆட்டுக்குட்டியைத் தழுவுகிறதா?
- ஆனை தன் கோட்டிடை வைத்த கவளம் போல.
- ஆனை தன் தலையிலே மண்ணைப் போட்டுக் கொள்வது போல.
- ஆனை தன் பலம் அறியாது.
- ஆனை தன் பலம் அறியாமல் மத்தகத்தில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போல.
- ஆனை தன் பலம் அறியாமல் மத்தகத்தை மதில் சுவரில் முட்டிக் கொண்டது போல.
- ஆனை தன்னைக் கட்டும் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுத்தது போல.
- ஆனை தாழ்ந்து அரசு வளர்ந்தது.
- ஆனை திரும்ப அரைக்கால் நாழிகை.
- ஆனை தின்ற விளாங்கனி போல.
- ஆனை தும்பிக்கையில் வீசுகிறது என்று கழுதை வாலால் வீசினது போல.
- ஆனை துரத்தி வந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது.
- ஆனை துறடு அறியும்; பாகன் நோக்கு அறிவான்.
- ஆனை தொட்டாலும் மரணம் வரும்.
- ஆனை தொடுவுண்ணின் மூடும் கலம் இல்லை.
- ஆனை நடைக்கும் குதிரை ஓட்டத்துக்கும் சமம்.
- ஆனை நிழல் பார்க்கத் தவளை அழித்தாற் போல.
- ஆனை நிற்க நிழல் உண்டு; மிளகு உருட்ட இலை இல்லை.
- ஆனை நீட்டிப் பிடிக்கும்; பூனை தாவிப் பிடிக்கும்.
- ஆனை நுழைய அடுக்களை பிடிக்குமா?
- ஆனைப் பசிக்கு ஆத்திக் கீரையா?
- ஆனைப் பசிக்குச் சோளப் பொறியா?
- ஆனைப் பாகன் மனைவி ஆறுமாசத்துக்கு விதவை.
- ஆனைப் பாகன் வீட்டை ஆனைக்குக் காட்ட மாட்டான்.
- ஆனைப் பாகனுக்கு ஆனையால் சாவு.
- ஆனைப் பாகனும் குதிரைப் பாகனும் சவாரி செய்தாற் போல.
- ஆனை பட்டால் கொம்பு; புலி பட்டால் தோல்.
- ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டி உயரமாவது இருக்காதா?
- ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டிக்குத் தாழுமா?
- ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
- ஆனை படுத்தால் குதிரை உயரம் வராதா?
- ஆனை பழக்க ஆனை வேண்டும்.
- ஆனை பாய்ந்தால் ஆர் பிடிப்பார்?
- ஆனை பார்க்க வெள்வெழுத்தா?
- ஆனை பிடிக்கப் பூனைச் சேனை.
- ஆனை பிடிப்பவனுக்குப் பூனை எம்மாத்திரம்?
- ஆனை புக்க புலம் போல.
- ஆனை புகுந்த கரும்புத் தோட்டமும் அமீனா புகுந்த வீடும் உருப்படா.
- ஆனை புலி வந்தாலும் தாண்டுவான்.
- ஆனை பெரிது, ஆனாலும் அதன் கண் சிறிது.
- ஆனை பெருத்தும் ஊனம் உதறாதே.
- ஆனை பெருமாளது; ஆர் என்ன சொன்னால் என்ன?
- ஆனை போக அதன் வால் போகாதோ?
- ஆனை போகிற வழியிலே எறும்பு தாரை விட்டது போல்.
- ஆனை போய் ஆறு மாசம் ஆனாலும் தாரை மறையுமா?
- ஆனை போல் ஐந்து பெண் இருந்தாலும் பூனை போல் ஒரு நாட்டுப் பெண் வேண்டும்.
- ஆனை போல வந்தான்; பூனை போலப் போகிறான்.
- ஆனை போனதே வீதி.
- ஆனை போன வீதியிலே ஆட்டுக்குட்டி போகிறது வருத்தமா?
- ஆனை போன வீதியையும் கேட்க வேண்டுமா?
- ஆனை போனாலும் அடிச்சுவடு போகாது.
- ஆனை மதத்தால் கெட்டது; அரசன் பயத்தால் கெட்டான்.
- ஆனை மதம் பட்டால் அழகாகும்; பூனை மதம் பட்டால் என்ன ஆகும்?
- ஆனை மதம் பட்டால் காடு கொள்ளாது; சாது மதம் பட்டால் ஊர் கொள்ளாது.
- ஆனை மதத்தால் வாழைத்தண்டு; ஆண் பிள்ளை மதத்தால் கீரைத்தண்டு.
- ஆனை மயிர் கட்டின ஆண் சிங்கம்.
- ஆனை மிதித்த காசு பானை நிரம்பும்.
- ஆனை மிதித்தால் பிழைப்பார்களா?
- ஆனை மிதித்து ஆள் பிழைக்கவா?
- ஆனை மிதித்துக் கொல்லும்; புலி இடிந்து கொல்லும்.
- ஆனை முட்டத் தாள்; வானம் முட்டப் போர்.
- ஆனை முட்டத் தேர் நகரும்.
- ஆனை முதல் எறும்பு வரைக்கும்.
- ஆனை முன்னே ஆட்டுக்குட்டி; பின்னே சிங்கக்குட்டி.
- ஆனை முன்னே முயல் முக்கினது போல.
- ஆனை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோற்றை அவிழ்த்தானாம்.
- ஆனை மேய்கிற காட்டில் ஆட்டுக்குட்டிக்குப் புல் கிடைக்காமல் போகுமா?
- ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடம் இல்லையா?
- ஆனைமேல் அங்கு மணி எடுத்தாலும் ஆனை வால் கூழை வால்.
- ஆனைமேல் அங்குமணிச் சீர் எடுத்துக் கொண்டு வந்தாலும் மாமியார் இல்லை என்பாள்.
- ஆனைமேல் அம்பாரி போனால் பூனைக்கு என்ன புகைச்சலா?
- ஆனைமேல் அம்பாரி வைத்து வரிசை வந்தாலும் ஆனை வால் கூழை என்பார்.
- ஆனைமேல் இடும் பாரத்தைப் பூனை மேல் இடலாமா?
- ஆனைமேல் இருக்கிற அரசன் சோற்றைக் காட்டிலும் பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறு மேல்.
- ஆனைமேல் இருப்பவனைச் சுண்ணாம்பு கேட்டாற் போல.
- ஆனைமேல் உட்கார்ந்திருப்பவன் வெறிநாய் கடிக்குமென்று அஞ்சுவானா?
- ஆனைமேல் ஏறிப் பாறை மேல் விழுவதா? நாயின் மேல் ஏறி மலத்தின்மேல் விழுவதா?
- ஆனைமேல் ஏறினால் ஆருக்கு லாபம்?
- ஆனை மேல் ஏறு என்றால் பானை மேல் ஏறுவார்? பானைமேல் ஏறு என்றால் ஆனைமேல் ஏறுவார்.
- ஆனைமேல் ஏறுவேன்; வீரமணி கட்டுவேன்.
- ஆனைமேல் திருமஞ்சனம் வருவதென்றால் பெருமாளுக்கு யோகந்தான்.
- ஆனைமேல் போகிறவன் அந்து காலன்; குதிரை மேல் போகிறவன் குந்து காலன்.
- ஆனைமேல் போகிறவனையும் பானையோடு தின்றான் என்கிறது.
- ஆனைமேல் வந்தானா? குதிரை மேல் வந்தானா?
- ஆனையின் அதிகாரம் சிற்றெறும்பினிடம் செல்லாது.
- ஆனையின் கண்ணுக்குச் சிற்றெறும்பும் மலையாம்.
- ஆனையின் கரும்புக்குக் காட்டெருமை வந்ததாம்.
- ஆனையின் காதில் எறும்பு புகுந்தது போல.
- ஆனையின் மூச்சில் அகப்பட்ட கொசுப் போல.
- ஆனையின்மேல் இருப்பவனைச் சுண்ணாம்பு கேட்டால் அகப்படுமா?
- ஆனையின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாமா?
- ஆனையும் அறுகம் புல்லினால் தடைப்படும்.
- ஆனையும் ஆனையும் உரசிக் கொள்ளக் கொசுவுக்குப் பிடித்ததாம் அனர்த்தம்.
- ஆனையும் ஆனையும் மோதும் போது இடையிலே அகப்பட்ட கொசுவைப் போல.
- ஆனையும் நாகமும் புல்லினால் தடைப்பட்டன.
- ஆனையும் பானையும் ஒன்றானால் பானையே நல்லது.
- ஆனையை அடக்கலாம்? அடங்காப் பிடாரியை அடக்க முடியாது.
- ஆனையை அடக்கலாம்? ஆசையை அடக்க முடியாது.
- ஆனையை அடக்குபவனும் அகமுடையாளுக்கு அடக்கம்.
- ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இரும்பு அங்குசத்துக்கு ஏமாந்து நிற்பானேன்?
- ஆனையை இடுப்பிலே கட்டிச் சுளகாலே மறைப்பான்.
- ஆனையைக் கட்ட ஊணான் கொடி போதுமா?
- ஆனையைக் கட்டி ஆள ஆண்டியால் முடியுமா?
- ஆனையைக் கட்டி ஆளலாம்; அரைப் பைத்தியத்தைக் கட்டி ஆள முடியாது.
- ஆனையைக் கட்டிச் சுளகாலே மறைப்பாள்.
- ஆனையைக் கட்டித் தீனி போட முடியுமா?
- ஆனையைக் கண்டு அஞ்சாதவன் ஆனைப் பாகனைக் கண்டால் அஞ்சுவானா?
- ஆனையைக் குடத்தில் அடைக்க முடியுமா?
- ஆனையைக் குத்தி முறத்தினால் மறைப்பாள்.
- ஆனையைக் குளிப்பாட்ட அண்டா நீர் போதுமா?
- ஆனையைக் கெடுத்தவன் பானையில் தேடினாற் போல்.
- ஆனையைக் கொட்டத்தில் அடைத்தாற் போல.
- ஆனையைக் கொடுத்துத் துறட்டுக்கு மன்றாடினாற் போல.
- ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்ல மாட்டானா?
- ஆனையைக் கொன்று அகப்பையால் மூடினாற் போல்.
- ஆனையைச் சுளகால் மறைப்பது போல.
- ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை பூனையைத் தரையில் இழுக்குமா?
- ஆனையைத் துரத்த நாயா?
- ஆனையைத் தேடப் பானையில் கை விட்டது போல.
- ஆனையை நம்பிப் பிழைக்கலாம்; ஆண்டியை நம்பிப் பிழைக்க முடியுமா?
- ஆனையை நோண்டினால் அது உன்னை நோண்டிவிடும்.
- ஆனையைப் படைத்த பகவான் பூனையையும் படைத்திருக்கிறார்.
- ஆனையைப் பார்க்க ஆயிரம் பேர்.
- ஆனையைப் பார்க்க வெள்ளெழுத்தா?
- ஆனையைப் பார்த்த கண்ணுக்குக் கரடியைப் பார்ப்பதுபோல் இருந்ததாம்.
- ஆனையைப் பார்த்துவிட்டுப் பூனையைப் பார்த்தால் பிடிக்குமா?
- ஆனையைப் பிடிக்க ஆனைதான் வேண்டும்.
- ஆனையைப் பிடிக்க எலிப் பொறியா?
- ஆனையைப் பிடித்துக் கட்ட அரை ஞாண் கயிறு போதுமா?
- ஆனையைப் பிடிப்பதும் கரகத்தில் அடைப்பதும் அதுவே செல்லப் பிள்ளைக்கு அடையாளம்.
- ஆனையைப் பிடிப்பான் ஆண் பிள்ளைச் சிங்கம்; பானையைப் பிடிப்பாள் பத்தினித் தங்கம்.
- ஆனையைப் புலவனுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.
- ஆனையைப் பூனை மறைத்ததாம்.
- ஆனையைப் போக்கினவன் குடத்திலே தேடின மாதிரி.
- ஆனையைப் போல் சுவர் எழுப்பினால் ஆர் தாண்டுவார்கள்?
- ஆனையைப் போல வஞ்சனை; புலியைப் போலப் போர்.
- ஆனையை முறுக்கி ஆளச் சாமர்த்தியம் இருந்தாலும் அகமுடையாளை அடக்கி ஆளத் திறமை இல்லாதவன் இருந்தென்ன பிரயோசனம்?
- ஆனையை வாங்கலாமா லஞ்சம்?
- ஆனையை வாங்கிவிட்டுத் துறட்டுக்கு மன்றாடுகிறான்.
- ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.
- ஆனையை விழுங்குவான்; கடைவாயில் ஒட்டிய ஈயைக் கண்டு நடுங்குவான்.
- ஆனையை விற்றா பூனைக்கு மருத்துவம் பார்ப்பது?
- ஆனையை விற்றுத் துறட்டுக்கு மன்றாடுகிறான்.
- ஆனையோடு பிறந்த அலங்காரி, சேனையோடு பிறந்த சிங்காரி.
- ஆனை லத்தி ஆனை ஆகுமா?
- ஆனை லத்தி போடுகிற மாதிரி குதிரை லத்தி போட்டால் குண்டி கிழிந்து போகும்.
- ஆனை வந்தால் ஏறுவேன்; சப்பாணி வந்தால் நகருவேன்.
- ஆனை வந்தாலும் ஏற வேண்டும்; சப்பாணி வந்தாலும் ஏற வேண்டும்.
- ஆனை வந்தாலும் தாண்டுவான்; புலி வந்தாலும் தாண்டுவான்.
- ஆனை வந்து விரட்டினாலும் ஆனைக் காவில் நுழையாதே.
- ஆனை வயிறு ஆனாலும் பானைக்குள்ளேதான்.
- ஆனை வயிறு நிறைந்தாலும் ஆட்டுக் குட்டிக்கு வயிறு நிறையாது.
- ஆனை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே:
- ஆனை வலம் கிடைத்தாலும் பூனை வலம் கிடைக்காது.
- ஆனை வாகனம் ராச லட்சணம்.
- ஆனைவாய்க் கரும்பும் பாம்பின் வாய்த் தேரையும் யமன்கைக் கொண்ட உயிரும் திரும்பி வரா.
- ஆனை வாயில் அகப்பட்ட கொசுவைப் போல்.
- ஆனை வாயில் போன விளாம் பழம் போல.
- ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வால் பிடித்துக் கரை ஏறலாமா?
- ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம்; நாய் வால் பிடித்து ஆவது என்ன?
- ஆனை வாழ்ந்தால் என்ன? பூனை தாலி அறுத்தால் என்ன?
- ஆனை விலை, குதிரை விலை.
- ஆனை விழுங்கிய அம்மையாருக்குப் பூனை ஒரு சுண்டாங்கி.
- ஆனை விழுந்தால் அதுவே எழுந்திருக்கும்.
- ஆனை விழுந்தாலும் குதிரை மட்டம்.
- ஆனை விற்றால் ஆனை லாபம்; பானை விற்றால் பானை லாபம்
- ஆனை விற்றும் துறட்டுக்குப் பிணக்கா?
- ஆனை வீட்டிலே பிறந்து அடைப்பக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டாளாம்.
- ஆனை வெளுக்கத் தாழி செய்தது போல.
- ஆனை வேகம் அடங்கும் அங்குசத்தால்.
- ஆச்சியம் பூச்சியம்.
- ஆஸ்தி இல்லாதவன் அரை மனிதன்.
- ஆஸ்தி உள்ளவன் ஆஸ்திக்கு அடிமை.
- ஆஸ்தி உள்ளவனுக்கு நாசம் இல்லை.
- ஆஸ்திக்கு ஓர் ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும்.
- ஆஸ்திக்கு மிகுந்த அபராதமும் இல்லை; தலைக்கு மிஞ்சின தண்டமும் இல்லை.
- ஆஸ்தி பாஸ்தி.
இ
[தொகு]- இக்கரைக்கு அக்கரை பச்சை
- இக்கரையில் பாகலுக்கு அக்கரையில் பந்தல்
- இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
- இகழ்ச்சி உடையோன் புகழ்ச்சி அடையான்
- இங்கிதம் தெரியாதவளுக்குச் சங்கீதம் தெரிந்து பலன் என்ன?
- இங்கு அற்றவருக்கு அங்கு உண்டு
- இங்கு அற்றவருக்கு அங்கு ஒரு விஸ்வரூப தரிசனம்
- இங்கு இருந்த பாண்டம் போல
- இங்கும் புதையல் இருக்குமா ரங்கா? அதற்குச் சந்தேகமா வெங்கா?
- இங்கே தலையைக் காட்டுகிறான்; அங்கே வாலைக் காட்டுகிறான்
- இங்கே வாடா திருடா, திருட வந்தாயா என்றாளாம்; உன் வீடு இருக்கிற அழகுக்கா விழித்துக் கொண்டிருக்கிறாய் என்றானாம்
- இங்கே வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது
- இச்சிக் கொண்டே என்னோடே நிற்கிறான்
- இச்சித்த காரியம் இரகசியம் அல்ல,
- இச்சிப் பெட்டின வாரிக்கு இஞ்சினீரிங் டிபார்ட்மெண்ட்
- இச்சை உள்ள காமுகர்க்குக் கண் கண்ட இடத்திலே
- இச்சைச் சொல் யாசகத்தால் இடர்ப்பட்டவன் இல்லை
- இச்சையாகிய பாக்கியம் இருக்கப் பிச்சைக்குப் போவானேன்?
- இச்சையும் இல்லை; இருமையும் இல்லை
- இசலிக் கொண்டே என்னோடே நிற்கிறான்
- இசை இல்லாப் பாட்டு இழுக்கு
- இசைவில்லாப் பாட்டு இழுக்கு
- இசைவு வந்தது வடமலை அப்பா!
- இஞ்சி இலாபம் மஞ்சளில்
- இஞ்சி என்றால் தெரியாதா? எலும்மிச்சம் பழம் போலத் தித்திப்பாய் இருக்குமே!
- இஞ்சி தின்ற குரங்கு போல
- இஞ்சியில் பாய்ந்தால் என்ன? மஞ்சளில் பாய்ந்தால் என்ன? இஞ்சி லாபம் மஞ்சளிலே
- இட்ட அடி கொப்புளிக்க எடுத்த அடி தள்ளாட
- இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு
- இட்ட உறவு ஏனாதிக்கூட்டம்; வார்த்த உறவு வண்ணாரக் கூட்டம்
- இட்ட எழுத்திற்கு மேல் ஏற ஆசைப்பட்டால் கிடைக்குமா?
- இட்ட கடன் பட்ட கடனுக்கு ஈடாகாது
- இட்ட குடி கெடுமா?
- இட்ட குடியும் கெட்டது; ஏற்ற குடியும் கெட்டது
- இட்ட கையை நத்துமா? இடாத கையை நத்துமா?
- இட்டத்தில் ஒன்றும் குறையாது
- இட்டத்தின் மேலே ஏறாசைப்பட்டால் கிடைக்குமோ?
- இட்டது எல்லாம் கொள்ளும் பட்டி மகள் கப்பரை
- இட்டது எல்லாம் பயிர் ஆகுமா? பெற்றது எல்லாம் பிள்ளை ஆகுமா?
- இட்ட படியே ஒழிய ஆசைப்பட்டுப் பலன் இல்லை
- இட்டம் அற்ற முனியன், அட்டமத்துச் சனியன்
- இட்டலிக் குப்பன்
- இட்டவர்கள் தொட்டவர்கள் கெட்டவர்கள்; இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்
- இட்டவள் இடா விட்டால் வெட்டுப் பகை
- இட்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா?
- இட்ட வீட்டுக்குப் பிட்டு இட்டுக்கொண்டு, இடிந்த வீட்டுக்கு மண் இட்டுக் கொண்டு திரிகிறான்
- இட்டார்க்கு இட்ட படி
- இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
- இட்டாருக்கு இட்ட பலன்
- இட்டார்க்கு இட்ட பலன்; ஆண்டிக்கு அமைந்த பலன்
- இட்டாருக்கு இடலும், செத்தாருக்கு அழுதலும்
- இட்டாருக்கு இட வேணும்; செத்தாருக்கு அழ வேணும்
- இட்டு ஆளாப் பெண்ணுக்குச் சுட்டாலும் தெரியாது
- இட்டு உண்டான் செல்வம் தட்டுண்டாலும் கெடாது
- இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
- இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை
- இட்டுக் கெட்டாரும் இல்லை; ஈயாது வாழ்ந்தாரும் இல்லை
- இட்டுப் பிறந்தால் எங்கும் உண்டு
- இட்டுப் பேர் பெறு; வெட்டிப் பேர் பெறு
- இட்டு வைத்தால் தின்னவும் எடுத்து வைத்தால் அடுக்கவும் தெரியும்
- இடக்கண், வலக்கண்
- இடக்கனுக்கு வழி எங்கே? கிடக்கிறவன் தலை மேலே
- இடக்காதில் வாங்கி வலக்காதில் விடுவது
- இடக்குக் குடை பிடிக்கலாமா?
- இடது கைக்கு வலது கை துணை; வலது கைக்கு இடது கை துணை
- இடது கை பிட்டத்துக்கு எளிது
- இடது கை வலது கை தெரியவில்லை
- இடம் அகப்படாத தோஷம்; மெத்தப் பதிவிரதை
- இடம் இராத இடத்தில் அகமுடையானைப் பெற்றவள் வந்தாளாம்; போதாக் குறைக்குப் புக்ககத்து அத்தையும் வந்தாளாம்
- இடம் கண்டால் மடத்தைப் பிடிக்கலாம்
- இடம் கண்டால் விடுவானோ யாழ்ப்பாணத்தான்
- இடம் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கலாம்
- இடம் பட வீடு இடேல்
- இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பண்ணல் ஆகாது
- இட மாட்டாதவன் எச்சில் என்றானாம்
- இட வசதி இல்லாத பதிவிரதை
- இடறின காலிலே இடறுகிறது
- இடன் அறிந்து ஏவல் செய்
- இடாதவனுக்கு இட்டுக் காட்டு
- இடான், தொடான், மனுஷர்மேல் செத்த பிராணன்
- இடி இடி எங்கே போகிறாய்? ஏழையின் தலையில் விழப் போகிறேன்
- இடி இடித்தாலும் படபடப்பு ஆகாது
- இடி ஓசை கேட்ட பாம்பு போல
- இடிக்கிறவன் ஒன்றை நினைத்துக்கொண்டு இடித்தால், குடிக்கிறவன் ஒன்றை நினைத்துக்கொண்டு குடிப்பான்
- இடிக்கிற வானம் பெய்யாது
- இடிக்குக் குடை பிடிக்கலாமா?
- இடி கொம்புக்காரன் கோழிக் குஞ்சின் சத்தத்திற்கு அஞ்சுவானா?
- இடி கொம்பும் விட்டுப் பிடி கொம்பும் விட்டது போல
- இடி சோறு தின்கிறான்
- இடித்த புளி போல் இருக்கிறான்
- இடித்தவளுக்கும் புடைத்தவளுக்கும் ஒன்று; ஏன் என்று வந்தவளுக்கு இரண்டு
- இடித்த வானம் பெய்யாது
- இடித்து அடித்து ஒரு கூடை இடுவதிலும் பிடி சோறு அன்பாய்ப் போடுவது போதும்
- இடிந்து கிடந்த அம்பலம் போல
- இடியேறு கேட்ட நாகம் போல
- இடி விழுந்த ஊரில் குடி இருந்தாலும் இடை விழுந்த ஊரில் குடியிருக்கல் ஆகாது
- இடி விழுந்த மரம்போல ஏங்குதல்
- இடி விழுவானுக்கு வாழ்க்கைப்பட்டு எந்நேரமும் குடி சாமம்
- இடுகிற தெய்வம் எங்கும் இடும்
- இடுகிறவன் தன்னவன் ஆனால் இடைப் பந்தியில் இருந்தால் என்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன?
- இடுப்பில் இரண்டு காசு இருந்தால் சருக்கென்று இரண்டு வார்த்தை வரும்
- இடுப்பிலே காசு இருந்தால் அசப்பிலே வார்த்தை வரும்
- இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கதி
- இடுப்புக்கு மேலே அந்தரங்கம் இல்லை
- இடுப்புச் சுருங்குவது பெண்களுக்கு அழகு
- இடுப்பு வைத்த இடமெல்லாம் அடுப்பு வைத்தான்
- இடும்பனுக்கு வழி எங்கே? இருக்கிறவன் தலை மேலே
- இடும்பு செய்வாருக்கு இராப்பகல் நித்திரை இல்லை
- இடும்பும் கரம்பும் அழியும்
- இடும்பைக்கு ஈன்ற தாய் போல
- இடுவது பிச்சை; ஏறுவது மோட்சம்
- இடுவார் இடுவதையும் கெடுவார் கெடுப்பார்
- இடுவார்க்கு இல்லை கெடுவாழ்வு
- இடுவார் பிச்சையைக் கெடுக்கிறதா?
- இடுவான் இடுவான் என்று ஏக்கற்று இருந்தாளாம்; நாலு நாழி கொடுத்து நாலாசை தீர்த்தாளாம்
- இடை ஆண்டியும் இல்லை; குயத் தாதனும் இல்லை
- இடைக் கணக்கன் செத்தான்; இனிப் பிழைப்பான் நாட்டான்
- இடைக் கிழவி எப்போது சாவாளோ? இடம் எப்போது ஒழியுமோ?
- இடைக் கோழி இராத் தங்குமா?
- இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் சொன்னாளாம்
- இடைச்சி ஆத்தாள் தோளிக்கு
- இடைச்சிக்கு எட்டுத் தாலி; பறைச்சிக்குப் பத்துத் தாலி
- இடைச்சிக்கு மாப்பிள்ளை என்றைக்கிருந்தாலும் வருவான்
- இடைச்சி சம்பத்தும் சாணாத்தி வாழ்வும் சரி
- இடை சாய்ந்த குடம் கவிழும்
- இடைத் தெருவில் ஊர்வலம் வரும்போது குசத்தெரு எங்கே என்கிறான்
- இடைப் பிறப்பும் கடைப் பிறப்பும் ஆகா
- இடைப் புத்தி பிடரியிலே
- இடையன் எப்போது சாவானோ, கம்பளி எப்போது மிஞ்சுமோ?
- இடையன் எறிந்த மரம் போல
- இடையன் கரடிமேல் ஆசைப்பட்டது போல
- இடையன் கல்யாணம் பொழுது விடிந்து போச்சு
- இடையன் கல்யாணம் விடியும் பொழுது
- இடையன் கெடுத்தது பாதி; மடையன் கெடுத்தது பாதி
- இடையன் செய்வது மடையன் செய்யான்
- இடையன் பிடரியிலே ஆட்டைப் போட்டுக்கொண்டு தேடினாற் போல்
- இடையன் பெருத்தாலும் இடையன் கிடை நாய் பெருக்காது
- இடையன் பேரிலே சந்நதம் வந்தது போல்
- இடையன் பொறுத்தாலும் இடையன் நாய் பொறாதது போல
- இடையன் வந்ததும் படுக்க வேண்டியதுதான்
- இடையன் வெட்டின கொம்பு போல
- இடையன் வெட்டு அறா வெட்டு
- இடையனில் ஆண்டி இல்லை; குசவனில் தாதன் இல்லை
- இடையனுக்குப் பிடரியிலே புத்தி
- இடையனும் பள்ளியும் இறைத்த புலம் பாழ்
- இடையாலும் கடையாலும் சங்கம் அழிவதாக
- இடையூறு செய்தோன் மனையில் இருக்காது பேய் முதலாய்
- இண்டம் பிடித்தவன்
- இணக்கம் அறிந்து இணங்க வேண்டும்
- இணக்கம் இல்லாதவனோடு என்ன வாது?
- இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி
- இணங்கினால் தித்திப்பு; பிணங்கினால் கசப்பு
- இணை பிரியா அன்றில் போல
- இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகாது?
- இத்தனை பெரியவர் கைப்பிடித்து இழுத்தால் மாட்டேன் என்று எப்படிச் சொல்வது?
- இத்தனை பேர் பெண்டுகளில் என் பிள்ளைக்கு ஒரு தாய் இல்லை
- இத்தனையும் செய்து கத்தரி நட்டவன் இல்லையென்று சொன்னான்
- இதற்கா பயப்பட்டேன் என் ஆண்டவனே, ஆனை குதிரை வந்தாலும் தாண்டுவனே
- இது எமன் ஆச்சே!
- இது எல்லாம் பொம்மலாட்டம்
- இது என் குலாசாரம்; இது என் வயிற்று ஆகாரம்
- இது என்ன வெள்ளரிக்காய் விற்ற பணமா?
- இது சொத்தை; அது புழுத்தது
- இது தெரியாதா இடாவே? நுகத்தடிக்கு நாலு துளை
- இது பெரிய இடத்துப் பேச்சு
- இதைச் சொன்னான் பரிகாரி; அதைக் கேட்டான் நோயாளி
- இந்த அடிக்கு எந்த நாயும் சாகும்
- இந்த அம்பலம் போனால் செந்தி அம்பலம்
- இந்த அமாவாசைக்கும் வெட்கம் இல்லை; வருகிற அமாவாசைக்கும் வெட்கம் இல்லை
- இந்த உலக வாழ்வு சதமா?
- இந்த ஊருக்கு எமனாக வந்தான்
- இந்த எலும்பைக் கடிப்பானேன்? சொந்தப் பல்லும் போவானேன்?
- இந்தக் கண்ணிற் புகுந்து அந்தக் கண்ணிற் புறப்படுகிறான்
- இந்தக் கருப்பிற் செத்தால் இன்னும் ஒரு கருப்பு மயிரைக் பிடுங்குமா?
- இந்தக் குண்டுக்குத் தப்பினாலே மக்கமே கதி
- இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்?
- இந்தக் கூழுக்கோ பதினெட்டுத் திருநாமமும் நடுவிலே ஒரு திருச்சூர்ணமும்
- இந்தக் கைப் புழுதி தேவலையா? இந்தக் கைச் சாம்பல் தேவலையா?
- இந்தச் சளுக்கனுக்கு இரண்டு பெண்சாதி; வந்தவாசி மட்டும் வல்ல வாட்டு
- இந்தச் சிற்றுண்டி எனக்குத் தெவிட்டிப் போயிற்று
- இந்த நாயை ஏன் இப்படிச் செய்கிறாய்?
- இந்தப் பூராயத்தில் குறைச்சல் இல்லை
- இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா?
- இந்தப் பெரிய கொள்ளையிலே அப்பா என்னப் பிள்ளை இல்லை
- இந்தப் பெருமையையும் பந்தல் அழகையும் பார்த்தாயா பண்ணைக்காரா?
- இந்தப் பையனுக்கு இந்த வீட்டு ஓதம் உறைத்து விட்டது
- இந்த மடம் இல்லாவிட்டால் இன்னொரு சந்தை மடம்
- இந்த மூஞ்சிக்குத் தஞ்சாவூர்ப் பொட்டு; வந்தவாசி வரையில் வல்லவாட்டு; அதைக் கழுவப் புழலேரித் தண்ணீர்
- இந்த வளைவு சிக்கினால் எப்படித்தான் பிள்ளை பிழைக்கும்?
- இந்த வீட்டிலே வைத்தது மாயமாய் இருக்கிறது
- இந்த வீட்டுக்கு வந்தாலும் வந்தேன்; பக்கத்து வீட்டுக் கருவாட்டு நாற்றம் போச்சு
- இந்திரன் கெட்டதும் பெண்ணாலே; சந்திரன் கெட்டதும் பெண்ணாலே
- இந்திரனைச் சந்திரனை இலையாலே மறைப்பாள்; எமதர்ம ராசாவைக் கையாலே மறைப்பாள்
- இந்திராணிக்கு இந்திரன் வாய்த்தது போல
- இந்திராதி தேவர்க்கும் வந்திடும் தீவினை
- இந்திரைக்கு மூத்தவள் மூதேவி
- இப்படிப் பார்த்தால் ஸ்த்ரீ ஹத்தி; அப்படிப் பார்த்தால் பிரம்ம ஹத்தி
- இப்போது இல்லையெனின் எப்போதும் இல்லை
- இம்பூரல் தெரியாமல் இருமிச் செத்தான்
- இம்மிய நுண்பொருள் ஈட்டி நிதியாக்கிக் கம்மியருள் மூவர் களிறு
- இம்முனு போனாளாம்; பிள்ளையைப் பெற்றாளாம்
- இமயம் சேர்ந்த காக்கையும் பொன்னாகும்
- இமயம் முதல் குமரி வரையில்
- இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது
- இயல்பாய் மணம் இல்லாச் சந்தனக் கட்டை இழைத்தாலும் மணக்காது
- இயற்கை அழகே லேசான ஆபரணம்
- இயற்கை வாசனையோ? செயற்கை வாசனையோ?
- இரக்கப் போனாலும் சிறக்கப் போ
- இரக்கம் இல்லாதவன் நெஞ்சு இரும்பினும் கொடிது,
- இரங்காதவர் உண்டா? பெண் என்றால் பேயும் இரங்கும்
- இரட்டைத் தோணியில் கால் வைத்தாற் போல
- இரண்டு ஆட்டில் ஊட்டின குட்டியாய்த் தீர்ந்தது
- இரண்டு ஆட்டிலே ஒட்டின குட்டி
- இரண்டு எழுத்து மந்திரம், பச்சிலையால் தந்திரம்
- இரன்டு ஏற்றம் இறைக்க எங்கள் அப்பனுக்குத் தெரியாது
- இரண்டு ஓடத்தில் கால் வைக்கிறதா?
- இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே
- இரண்டு கண்ணும் பொட்டை; பெயர் புண்டரீகாக்ஷன்
- இரண்டு கை தட்டினால்தான் ஓசை உண்டு
- இரண்டு கை போதாது
- இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான்
- இரண்டு சாஸ்திரிகள், இரண்டு ஜோசியர்கள், இரண்டு புலவர்கள், இரண்டு தாசிகள், இரண்டு வைத்தியர்கள், இரண்டு நாய்கள், இரண்டு கடிகாரங்கள், சேர்ந்து போக மாட்டார்கள்
- இரண்டு தோணியில் கால் வைக்கிறதா?
- இரண்டு நாய்க்கு ஓர் எலும்பு போட்டாற் போலே
- இரண்டு பட்ட ஊரிலே குரங்கும் குடி இராது
- இரண்டு பெண் கொண்டானுக்கு நடையிலே வாருகோல்; ஒரு பெண் கொண்டானுக்கு உறியிலே சோறு
- இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்டம்
- இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பு ஏன்?
- இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குக் கொண்டை உண்டோடி?
- இரண்டும் இரண்டு அகப்பை;
- இரண்டும் கழன்ற அகப்பை
- இரண்டும் கெட்டான் பேர்வழி
- இரண்டு வீட்டிலும் கல்யாணம்; இடையே செத்ததாம் நாய்க்குட்டி
- இரண்டு வீட்டு விருந்தாளி கெண்டை புரட்டிச் செத்தான்
- இரத்தினத்தைச் சேர்ந்த இழை போல
- இரந்தவன் சோறு என்றைக்கும் பஞ்சம் இல்லை
- .இரந்து உண்டவன் இருந்து உண்ணான்
- இரந்து குடித்தாலும் இருந்து குடி
- இரந்தும் பரந்தவைக்குக் கொடுக்கவேணும்
- இரந்தும் பருந்துக்கு இடு
- இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன்
- இரப்பவனுக்கு ஈவார் பஞ்சமா?
- இரப்பவனுக்கு எங்கும் பஞ்சம் இல்லை
- இரப்பவனுக்கு வெறுஞ் சோறு பஞ்சமா?
- இரப்பான் சோற்றுக்கு எப்போதும் பஞ்சம் இல்லை
- இரப்பான் சோற்றுக்கு வெண்சோறு பஞ்சமா?
- இரப்பானைப் பிடித்ததாம் பறைப் பருந்து
- இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது; என் பிள்ளை ஆணை, நான் கொடுக்கமாட்டேன்
- இரவல் உடைமையும் இல்லாதாள் புடைவையும், அவிசாரி அக முடையானும் ஆபத்துக்கு உதவா
- இரவல் கொடாதவை இருந்தாளமாட்டினம்
- இரவல் சதம் ஆகுமா? மதனி உறவு ஆகுமா?
- இரவல் சதமா? திருடன் உறவா?
- இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்
- இரவல் சோறு தஞ்சம் தாங்காது
- இரவல் துணியாம்; இரவல் துட்டாம்; இழுத்துக் கொட்டு மேளத்தை; இறுகிக் கட்டு தாலியை
- இரவல் நகையும் இல்லாத வஸ்துவும் அவிசாரி அகமுடையானும் ஆபத்துக்கு உதவார்
- இரவல் புடைவையிலே இது நல்ல கொய்சகந்தான்
- இரவல் புருஷா, கதவைத் திற; ஏமாளிப் புருஷா, வீட்டை விடு
- இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே
- இரவிமுன் பணி போல
- இரவில் உண்ணாமல் பகல் உண்ணாதவனுக்குப் பெருத்தல் இல்லை
- இரவில் எதுசெய்தாலும் அரவில் செய்யாதே
- இரவில் போனாலும் பரக்கப் போக வேண்டும்
- இரவு உண்ணான் பருத்திருப்பான்
- இரவு எல்லாம் இறைத்தும் பொழுது விடிந்து போச்சு
- இரவு எல்லாம் திருடினாலும் கன்னக்கோல் சாத்த ஓர் இடம் வேண்டாமா?
- இரவு வேளையில் ருத்திராட்சப் பூனை போல்
- இராக் கண்ட கனவு மிடாப் போல வீங்கின கதை
- இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
- இராச் செத்தால் பகல் பிழைக்கிறான்
- இராச திசையில் கெட்டவணுமில்லை
- இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்
- இராத்திரி செத்தால் விளக்கெண்ணெய்க்கு இல்லை; பகலில் செத்தால் வாய்க்கரிசிக்கு இல்லை
- இராப்பகல் கண்ணிலே
- இராப் பட்டினி கிடந்தவன் அகவிலை கேட்பானா?
- இராப் பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம்
- இராப் பட்டினி கிடந்தவனுக்குப் பாதித் தோசை போதாதா?
- இராப் பட்டினி, பகல் கொட்டாவி
- இராப் பட்டினி பாயோடே
- இராப் பிறந்த குழவி பகலிலே கத்தும்; பகல் பிறந்த குழந்தை இராவிலே கத்தும்
- இராப் பிறந்த பிள்ளையும் ஆகாது; பகல் பிறந்த பிள்ளையும் ஆகாது
- இராமனைப் போல் அரசன் இருந்தால் அனுமனைப் போல் சேவகன் இருப்பான்
- இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன வேண்டும் என்றானாம்
- இராவணன் என்றால் படையும் நடுங்கும்
- இரிசிக்குப் புருஷன் ஆசை உண்டா?
- இரிசியார் உடைமை இராத் தங்கப் போகாது
- இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்டாற் போல்,
- இருக்க இருக்க எல்லாம் இசைவாகும்
- இருக்கச் சாண் இடம் இல்லாமல் போனாலும் பெருக்கப் பெருக்கப் பேசுவதில் மாத்திரம் குறைவில்லை
- இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின்னு
- இருக்கிற அளவோடு இருந்தால் எல்லாம் தேடி வரும்
- இருக்கிற அன்றைக்கு எருமை மாடு தின்றாற் போல
- இருட்டினால் எப்போதும் இரண்டு பணம் கேட்கிறான்
- இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம்
- இருக்கிற இடத்தை விளக்கேற்றித்தான் பார்க்க வேண்டும்
- இருக்கிறது மூன்று மயிர்; அதில் இரண்டு புழுவெட்டு
- இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடித்தானாம்
- இருக்கிறபோது பெருங்கும்பம்; இல்லாத போது காவிக் கும்பம்
- இருக்கிற வரையில் இருள் மூடிச் போச்சாம்; செத்தவன் கண் செந்தாமரை என்றானாம்
- இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வயாய்ச் சிரைப்பான்
- இருக்கிறவன் நல்லவன் ஆனால் இடைப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன?
- இருக்கிறவனுக்கு ஒரு வீடு; இல்லாதவனுக்கு அநேக வீடு
- இருக்கிறவனுக்கு ஒன்று; இல்லாதவனுக்குப் பத்து
- இருக்கும் இடம் ஏவுமா?
- இருக்கும் போதே இரக்கப் போவானேன்?
- இருக்கும் வளையில் எலியையும் கொல்ல முடியாது
- இருசி உடைமை இராந் தங்கல் ஆகாது
- இரு சுழி இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும்
- இருட்டில் உதட்டைப் பிதுக்கின மாதிரி
- இருட்டில் சிவப்பாய் இருந்தால் என்ன; கறுப்பாய் இருந்தால் என்ன?
- இருட்டில் போனால் திருட்டுக் கை நில்லாது
- இருட்டிலே குருட்டு ஆண்டி
- இருட்டு அறையில் மங்கு கறந்து எய்த்தாற் போல
- இருட்டு உள், சுருட்டுப் பாய், முரட்டுப் பெண்டாட்டி
- இருட்டுக்கு எல்லாம் சரி
- இருட்டுக் குடிவாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்
- இருட்டு வீட்டில் குருட்டுப் பிள்ளை பெற்றாளாம்
- இருட்டு வீட்டில் நுழைந்தாலும் திருட்டுக் கை சும்மா இராது
- இருட்டு வீட்டில் குருட்டுக் காக்காய் ஒட்டுகிறது போல;
- இருட்டு வீட்டிலே குருட்டுக் கொக்குப் பிடித்தாற் போல
- இருட்டு வேலையோ? குருட்டு வேலையோ?
- இருட்டைக் கொண்டு ஓட்டையை அடைத்தது போல்,
- இருத்தினவன் தோளில்தான் அழுத்துவார்கள்
- இருதயத்தில் நினைத்தது எல்லாம் எழுதிக் கட்டு
- இருதயத்து எழுந்த புண் போல
- இருதலைக் கொள்ளி எறும்பு போல்
- இருதலைக் கொள்ளியில் எறும்பு பிழையாது
- இருதலை மணியன் பாம்பைப் போல்
- இருதலை வழக்கு நூலினும் செம்மை
- இரு தோணியில் கால் வைக்காதே
- இருந்த இடத்து வேலை என்றால் எங்கள் வீட்டுக்காரரையும் கூப்பிடுங்கள்
- இருந்த இடத்து வேலைக்காரன் எங்கள் வீட்டு ஆண் பிள்ளையாம்
- இருந்த இடம் ஏழு முழம் ஆழம் வெந்து போகும்
- இருந்த இடம் தெரியாமல் புல் முளைத்துப் போயிற்று
- இருந்த கால் மூதேவி; நடந்த கால் சீதேவி
- இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப் பறையனுக்குத் தாரை வார்த்தது போல
- இருந்தல்லவோ படுக்க வேணும்?
- இருந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி
- இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே நின்றவன் ஒரு காதம் போவான்
- இருந்தவன் தலையிலே இடி விழுந்தாற் போல
- இருந்தவனுக்குப் போனவன் குணம்
- இருந்த வெள்ளத்தைத் தள்ளிற்றாம் வந்த வெள்ளம்
- இருந்தால் அப்பன்; இல்லாவிட்டால் சுப்பன்
- இருந்தால் இடுவது; இல்லையேல் விடுவது
- இருந்தால் ஓணம்; இல்லா விட்டால் ஏகாதசி
- இருந்தால் இருப்பீர்; எழுந்தால் நிற்பீர்
- இருந்தால் செட்டி; எழுந்திருந்தால் சேவகன்
- இருந்தால் துவாதசி; இல்லா விட்டால் ஏகாதசி
- இருந்தால் நவாப் சாயபு; இல்லா விட்டால் பக்கிரி சாயபு
- இருந்தால் பூனை; பாய்ந்தால் புலி
- இருந்து அடித்தேன்; பறந்து போயிற்று
- இருந்து இருந்து இடையனுக்கு வாழ்க்கைப்பட்டாளாம்
- இருந்து இருந்து ஒரு பிள்ளை பெற்றாள், மலமும் ஜலமும் இல்லாமல்
- இருந்து இருந்து ஒரு பெண்ணைக் கொண்டான்; மலஜலம் எல்லாம் வீட்டுக்குள்ளே
- இருந்து இருந்து பார், இடி விழுவான் காரியத்தை
- இருந்து கொடுத்தால் நடந்து வாங்கு
- இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்க வேண்டியதாய் இருக்கிறது
- இருந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான்
- இரு நாய்க்கு இட்ட எலும்பு போல
- இருப்பது எல்லாம் இருந்துவிட்டு இளித்த வாயன் ஆவானேன்?
- இருப்பது பொய்; போவது மெய்
- இருப்பவனுக்கும் கேளாதவனுக்கும் கொடுக்காதே
- இருப்பிடம் தலைப்பிள்ளை; தலைக்கடை தென்னம் பிள்ளை
- இரும்புக்கட்டியைக் காற்று அடித்தபோது இலவம் பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம்
- இரும்புக் கதவை இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுப்பதா?
- இரும்பு கோணினால் ஆனையை வெல்லலாம்; கரும்பு கோணினால் சுட்டியும் பாகும் ஆகும்
- இரும்புச் சலாகையை விழுங்கிவிட்டு இஞ்சிச் சாற்றைக் குடிப்பதா?
- இரும்பு செம்பு ஆனால் திரும்பிப் பொன் ஆகும்
- இரும்பு செம்பு ஆனால் துரும்பு தூண் ஆகும்
- இரும்புத் துறட்டுக்கு அசையாத புளியங்காய் திருப்பாட்டுக்கு அசையுமா?
- இரும்புத் தூணை எறும்பு அரித்தாற்போல்
- இரும்புத் தூணைச் செல் அரிக்குமா?
- இரும்புப் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?
- இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா
- இரும்பும் குறும்பும் இருக்கக் கெடும்
- இரும்பு முளைத்தாலும் கரும்பு முளைக்காது
- இரும்பை எலி கவ்விற்று என்கிறான், படுக்காளி
- இரும்பை எலி தின்னுமா?
- இரும்பை எறும்பு அரிக்குமா?
- இரும்பைக் கறையான் அரித்தால் குழந்தையைப் பருந்து கொண்டு போகாதா?
- இருமலே இடி விழுகிறது; தும்மல் எப்படியோ?
- இரு மனசு மங்கையோடு இணங்குவது அவம்
- இருமும்போது கட்டிய தாலி தும்மும்போது அறுந்து விட்டது
- இருவர் ஒத்தால் ஒருவருக்கும் பயம் இல்லை
- இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை
- இருவர் நட்பு ஒருவர் பொறை
- இருவரும் ஒத்தால் பிணக்கு வருவானேன்?
- இருவிரல் தோலும் அவற்றின்மேல் மயிரும் எனக்கு இல்லையே!
- இருளன் பிள்ளைக்கு எலி பஞ்சமா?
- இருளன் பிள்ளைக்கு எலி பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?
- இருளன் ராஜவிழி விழிப்பானா?
- இருளுட் ஒரு காலம்; நிலவும் ஒரு காலம்
- இரை விழுங்கின பாம்பு போல
- இல்லது வாராது; உள்ளது போகாது
- இல்லறம் பெரிது; துறவறம் சிறிது
- இல்லறம் அல்லது நல்லறம் அன்று
- இல்லறம் நல்லறம்
- இல்லாத சொல் அல்லல்படும்
- இல்லாததைக் கொண்டு கல்லாததைக் கனா என்றால் யாரால் முடியும்?
- இல்லாத பிள்ளைக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை
- இல்லாதவன் கோபம் பொல்லாதது
- இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழி
- இல்லாதவன் பொல்லாதவன்
- இல்லாதவனோ, பொல்லாதவனோ?
- இல்லாத வீட்டுக்கு இலஞ்சியம்
- இல்லாது சொல்லி அல்லற்படுதல்
- இல்லாது பிறவாது; அள்ளாது குறையாது
- இல்லாது இல்லன்; இருப்பதும் இல்லன்
- இல்லார் இருமையும் நல்லது எய்தான்
- இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா?
- இல்லிடம் இல்லார்க்கு நல்லிடம் இல்லை
- இல்லு அலுக்கானே பண்டுக வச்சுனா
- இல்லை என்கிற மகராசி இல்லை என்றாள்; தினம் போடுகிற மூதேவிக்கு என்ன வந்தது?
- இல்லை என்ற வீட்டில் பல்லியும் சேராது
- இல்லையா இலை மறைவு, காய் மறைவு?
- இல்லையே ஒன்றுக்கும் உதவாத ஒன்று
- இல்லோர் இரப்பது இயல்பு
- இலக்கணப் பெண்சாதி மானியம் காக்கிறாள்
- இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான்
- இலக்கணம் புலவர்க்கு அணிகலன்
- இலங்கையில் பிறந்தவன் எல்லாம் இராவணன் ஆவது இல்லை
- இலங்கையைச் சுட்ட குரங்கு
- இலந்தைப் பழப் புழுப் போலத் துடிக்கிறது
- இலவசமாய் வந்த மாட்டை நிலவிலே கட்டி ஓட்டு
- இலவு காத்த கிளி போல
- இலுப்பைச் சர்க்கரைக் கொடையாம்; துரைகள் மெச்சின நடையாம்
- இலுப்பைப் பூப்போல்
- இலுப்பைப் பூவைத் திருப்பினால் இரண்டு புறமும் பொத்தல்
- இலை அசைந்தாலும் இலைக்குக் கேடு; முள் அசைந்தாலும் இலைக்குக் கேடு
- இலைக்கும் உண்டு, மட்டையும் பழுப்பும்
- இலை சாய்கிற பக்கம் குலை சாயும்
- இலை தின்னி காய் அறியான்
- இலைப் பழுப்பு ஆனாலும் குலப்பழுப்பு ஆகாது
- இலைப் புரை கிளைத்தல்
- இலைமறை காய் போல்
- இலை மறைவு, காய் மறைவு
- இலை மறைவு, தலை மறைவு
- இலையும் பழுப்பும் எங்கும் உண்டு
- இவ்வூர்ப் பூனையும் புலால் தின்னாது
- இவருக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தாற் போல் ஆகிறது
- இவ நான் தாலி கட்டின பொண்டாட்டி. இவள நான் அடிப்பேன், உதைப்பேன், எதுவேண்டுமானாலும் செய்வேன்.
- இவன் ஊராருக்குப் பிள்ளை
- இவன் கல்லாது கற்றவன் உள்ளங்கையில் வைகுந்தம் காட்டுவான்
- இவன் புத்தி உலக்கைக் கொழுந்து,
- இவன் மகா பெரிய கள்ளன்; காலாலே முடிந்ததைக் கையாலே அவிழ்ப்பது அரிது
- இவன் வாழ்ந்த வாழ்வு மறுகிலேன் மல்லாக்கினேன்
- இவனுக்கும் அவனுக்கும் ஏழு பொருத்தம்
- இழப்பாரை ஜயிப்பார் இல்லை; எதிர்ப்பாரை ஜயிப்பார் உண்டு
- இழந்த சொத்துப் பெரிய சொத்து
- இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
- இழவுக்கு வந்தவளை உழவுக்கு அழைத்தானாம்
- இழவு கொடுப்பானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை
- இழவு சொன்னவன் மேலா பழி?
- இழவு வீட்டுக்குப் போனாலும் இடக்கை நீளும்
- இழவைத் துறப்பவர் எல்லாம் துறப்பார்
- இழுக்கான பொன்னைப் புடத்தில் வைத்து எடுப்பார்
- இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று
- இழுத்தபடி எல்லாம் வரும் தங்கக் கம்பி
- இளங்கன்று பயமறியாது
- இழுத்துப் பிடித்து நின்றாலும் வழுக்கி வழுக்கிப் போகும்
- இழுத்து மூட வேணும்
- இழுவை கண்டால் அடி பார்ப்பானேன்?
- இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திர வர்ணப்பட்டு
- இழை ஊடாடா நட்புப் பொருள் ஊடாடக் கெடும்
- இழையத் தீட்டிக் குழைய வடித்தது போல
- இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் குண்டியைத் தூக்கி அடிப்பான்
- இளங் கன்று பயம் அறியாது
- இளஞ்சிங்கம் மதயானைக்கு அஞ்சுமா?
- இளநீர்க் காய் உதிர்க்கிறது போல
- இளமைச் சோசியம்; முதுமை வைத்தியம்
- இளமையில் கல்வி எப்போதும் நிற்கும்
- இளமையில் கல்வி சிலையில் எழுத்து
- இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து
- இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்
- இளமையில் சோம்பல், முதுமையில் வறுமை
- இளமையில் பழக்கம் எப்போதும் மறவாது
- இளமையில் பழக்கம் சுடுகாடு மட்டில்
- இளமையில் பழக்கம் முதுமையில் சுபாவம்
- இளமையில் முயற்சி முதுமையில் காக்கும்
- இளமையும் முதுமையும் சரியான வயசு அல்ல
- இளவெயில் காயாத நீயா தீப் பாயப் போகிறாய்?
- இளிச்ச கண்ணி பிளிச்சை வாங்காள்
- இளிச்ச வாயனைக் கண்டால் எல்லாருக்கும் இளக்காரம்
- இளித்துக் கொண்டிருந்தாளாம் மடத்தாயி; ஏறி அடித்தானாம் தவசிப் பிள்ளை
- இளைஞன் ஆனாலும் ஆடுவான் மூப்பு
- இளைத்த உடம்புக்கு இரும்பைக் கொடு
- இளைத்த நாயை ஏறி மிதிப்பது போல,
- இளைத்த நேரத்துக்குப் புளித்த மோர்
- இளைத்தவர் கிளைப்பார்; கிளைத்தவர் இளைப்பார்
- இளைத்தவரைச் செயிப்பார் உண்டோ?
- இளைத்தவன் இரும்பு தின்ன வேண்டும்
- இளைத்தவன் இரும்பை உண்; வலுத்தவன் வாளம் உண்
- இளைத்தவன் எள்ளு; வலுத்தவன் கரும்பு
- இளைத்தவன் எள்ளு; வலுத்தவன் வாழை
- இளைத்தவன் எள்ளு விதைக்க வேண்டும்; கொழுத்தவன் கொள்ளு விதைக்க வேண்டும்
- இளைத்தவன் எள்ளு விதைப்பான்; பருத்தவன் கரும்பு போடுவான்
- இளைத்தவன் ஒரு வருஷத்துக்கு எள் விதைக்க வேண்டும்
- இளைத்தவன் சிநேகிதனைச் சேர்
- இளைத்தவன் தலையில் ஈரும் பேனும்
- இளைத்தவன் தலையில் சொட்டு
- இளைத்தவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மச்சினி
- இளைத்தவனைக் கண்டானாம், ஏணிப் பந்தம் பிடித்தானாம்
- இளைத்தவனை வலியான் கோபித்தால் வலியானை வல்லவன் கேட்பான்
- இளைத்து இனத்தாரிடம் போவானேன்?
- இறங்கு பொழுதில் மருந்து குடி
- இறடுங்கால் இறடும்
- இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி
- இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்
- இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும்
- இறந்தால் போச்சு மூச்சு; மறந்தால் போச்சுக் காசு
- இறந்தாலும் சிங்காரக் கழுவில் இறக்க வேண்டும்
- இறந்து இறந்து பிறந்தாலும் இருவக்கரையானாய்ப் பிறக்க வேணும்
- இறப்பில் இருந்த அகப்பை சோற்றில் விழுந்த மாதிரி
- இறாக் கறியோ, புறாக் கறியோ?
- இறுகினால் களி , இளகினால் கூழ்
- இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை
- இறுப்பானுக்குப் பணமும் கிடையாது; உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது
- இறைக்க, இறைக்கக் கிணறு சுரக்கும்
- இறைக்க ஊறும் மணற்கேணி; ஈயப் பெருகும் பெருஞ் செல்வம்
- இறைக்கிறவன் இளிச்ச வாயனாக இருந்தால் மாடு மச்சான் முறை கொண்டாடும்
- இறைக்கும் கிணறு ஊறும்
- இறைச்சி தின்றவன் கடுப்புக்கு மருந்து அறிவான்
- இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக் கொள்ளலாமா?
- இறைத்த கிணறு ஊறும், இறையாத கேணி நாறும்
- இறைத்த கிணறு சுரக்கும்
- இறைத்தோறும் ஊறும் கிணறு
- இறையாத கிணறு பாழும் கிணறு
- இறைவனை ஏற்று; அரசனைப் போற்று
- இன்சொல் இடர்ப்படுவது இல்லை
- இன்சொல்லால் இடர் வராது
- இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு
- இன்ப துன்பம் இரண்டும் காவடிப் பானைகள் போல
- இன்பம் உற்றிடில் துன்பம் இல்லை
- இன்பம் வருவதும் துன்பம் வருவதும் எடுத்த உடலுக்கு வரம்
- இன்பமும் துன்பமும் இணை விடா
- இன்பமும் துன்பமும் இதயத்தே ஆம்
- இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு இயல்பு
- இன்பமும் துன்பமும் பொறுமையிலே
- இன்பமும் துன்பமும் யாருக்கும் உண்டு
- இன்று அற்று இன்று போகிறதா?
- இன்று இருப்பவர் நாளைக்கு இல்லை
- இன்றைக்கு அரசன் நாளைக்கு ஆண்டி
- இன்றைக்கு அறையில் இருந்தால் நாளைக்கு அம்பலத்தில் வந்தே தீரும்
- இன்றைக்கு ஆகிறது நாளைக்கு ஆகட்டும்
- இன்றைக்கு ஆவது நாளைக்கு ஆகுமா?
- இன்றைக்கு ஆளுவார் நாடு; நாளைக்குக் கையில் ஆளுவார் ஓடு
- இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை
- இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கும் இலை அறுப்பான்
- இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
- இன்றைக்கு எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் அழகை; பசியாது
- இன்றைக்கு என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்,
- இன்றைக்குச் சிரிப்பு; நாளைக்கு அழுகை,
- இன்றைக்குச் சின்னதுக்கு வந்தால் நாளைக்குப் பெரியதுக்கு வரும்
- இன்றைக்கு செத்தால் நாளைக்கு இரண்டு நாள் இன்னம் இருக்கிறது தேருக்குள் சிங்காரம் (இன்னும்) இன்னம் இன்னம் இசைச்சொல் அனேகம் இன்னமும் கெடுகிறேன் பந்தயம் என்ன என்றது போல இன்னமும் பேயோடேனும் பிரிவு
- இன்றும் கிடக்குது ரியோ ரியோ இனக்கூட்டு ஆனாலும் நிலக்கூட்டு ஆகாது இனத்தால் இனம் ஆகும்;பணத்தால் ஜனம் ஆகும் இனத்தை இனம் சேரும் இனத்தை இனம் தழுவும்
- இனம் இனத்தோடு சேரும்;பணம் பணத்தோடு சேரும் இனம் இனத்தோடே;வெள்ளாடு தன்னோடே இனம் கெட்ட ஏகாதசிக்கு என்ன பலகாரம்? இனம் பிரிந்த மான் போல
- இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
- இனாம் வந்த மாட்டை நிலவில் கட்டி ஓட்டு என்றானாம் இனிமேல் எமலோகம் பரியந்தம் சாதிக்கலாம் இனிமேல் ஒரு தெய்வத்தை கை எடுக்கிறதா? இஷ்கா இஷ்பாவாக இருக்கிறான் இஷ்டம் அற்ற முனியன் அஷ்டமத்து சனியன்
- இஷ்ராவினால் தெரிந்து கொள்ளாதவன் என்ன சொன்னாலும் தெரிந்து கொள்ள மாட்டான்
ஈ
[தொகு]- ஈ அடித்தான் காப்பி.
- ஈ எறும்பு எண்ணாயிரமும் சிரிக்கிறது.
- ஈ என்று போயிருக்கிறான்.
- ஈ ஏறி மலை குலுங்கினது போல.
- ஈ ஏறி மலை சாயுமா?
- ஈ ஓட்டுகிறான்
- ஈ முட்டுவது எருமைக்கடா முட்டுவது போல.
- ஈ விழுந்தாலும் எடுத்தாலொழியப் போகுமா?
- ஈ விஷ்டித்ததும் நாய் திருடித் தின்றதும்.
- ஈகை உடையோன் எக்களிப்பு அடைவான்
- ஈக் கடித்த பெண்ணுக்கு இழை ஒட்டுவதா?
- ஈக் கலையாமல் தேன் எடுப்பார்கள்; எடுக்காமல் பிடிப்பார்கள்
- ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
- ஈக்கு விடம் தலையில்; தேளுக்கு விடம் கொடுக்கில்
- ஈக்கும் ஆனைக்கும் சம்பந்தமா?
- ஈக்கும் நாய்க்கும் தடை இல்லை.
- ஈக்கும் பாலுக்கும் எச்சில் இல்லை.
- ஈசல் இறகு எல்லாவற்றிலும் மிருது.
- ஈசல் பறந்தால் மழை.
- ஈசல் பிறந்தால் மழை மாறும்.
- ஈசல் புற்றில் கரடி வாய் வைத்தாற் போல.
- ஈசல் பெறும் போக்கில் சொறியாந் தவளை வேட்டை ஆடும்.
- ஈசல் பெறும் போக்கில் தவளை தத்தி விழுங்குது.
- ஈசல் பொறுக்கி பேசவும் அறியான்.
- ஈசல் மடிந்தாற் போலே மாண்டதே சேனை.
- ஈசனுடைய அடியார் மனம் எரிந்து புகைந்தால் வீண் போகுமா?3745
- ஈசனைப் போற்று; அரசனை வாழ்த்து.
- ஈசனைப் போற்று; அரசனை வாழ்த்து.
- ஈசான்ய மின்னலுக்கு எருதும் நடுங்கும்
- ஈசான்ய மின்னலுக்கு எருதும் நடுங்கும்.
- ஈசுவரனுக்குத்தான் வெளிச்சம்
- ஈசுவரன் கிருபை எல்லார்க்கும் போதும்.
- ஈசுவரன் கிருபை எல்லார்க்கும் போதும்.
- ஈசுவரன் கோவில் திருநாள் ஒரு நாள் கந்தாயம்.
- ஈசூரும் பூதூரும் என்றும் இழப்பு.
- ஈச்ச முள் கொண்டு இறுக இறுகத் தைத்தாலும் தேற்றிய வசனம் சொல்லாமல் விடான்.
- ஈச்சங் கள் எதிலும் குளிர்ச்சி.
- ஈச்சங் காட்டில் எருமை குடி இருந்தது போல.
- ஈச்சங் குலையில் தேன் வைத்த மாதிரி.
- ஈச்சமுள்ளாலே இருவாயும் தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் இல்லை, பூவுக்கு மணம் இல்லை என்கிறான்.
- ஈஞ்சைக் கண்டால் கிழி; எருக்கைக் கண்டால் சொடுக்கு.
- ஈடன் பாடு அஞ்சான்? கூழை எருது நுளம்புக்கு அஞ்சாது.
- ஈடு ஆகாதவனை எதிராக்காதே.
- ஈடு இணை அற்றது
- ஈடு உள்ள குடிக்குக் கேடு இல்லை.
- ஈடு ஜோடு எங்கும் கிடையாது.
- ஈடு ஜோடு சொல்ல முடியாது.
- ஈடும் எடுப்பும் இல்லாதது.
- ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பதின் காதம் குத்தும்.
- ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாளம் வரையில் பாயும்.
- ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
- ஈட்டி வாயன் தேடிக் கற்பூர வாயனுக்குக் கொடுத்தது போல
- ஈட்டிய பொருளினும் எழுத்தே உடைமை
- ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய் இருந்தால் வாசி.
- ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இரு குமரி.
- ஈதல் உடையானை யாவரும் புகழ்வர்.
- ஈந்து பார்த்தால் இம்மி வெளியாகும்.
- ஈப் பறக்க இசை கேடு வந்தாற் போல் ஆச்சுது.
- ஈப் பிசினி இரப்பதுகூடக் கஞ்சிசம்.
- ஈப்பாக்கு வைத்த மாதிரி.
- ஈமக் கடனை எழுந்து முறை செய்
- ஈயத்தைக் காதில் காய்ச்சி ஊற்றினாற் போல.
- ஈயத்தைக் காய்ச்சலாம்; இரும்பைக் காய்ச்சலாமா?
- ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை
- ஈயத்தைப் புடம் வைத்தால் ஈயம் வெள்ளி ஆகுமா?
- ஈயப் பெருகும் பெருஞ் செல்வம்.
- ஈயம் பிடித்தவன் எது சொல்லினும் கேளான்.
- ஈயாத கருமிக்கு ஏராளச் செலவு.
- ஈயாத பத்தினியிடம் ஈ என்றாலும், இல்லையே அது கொசு என்பாளாம்
- ஈயாத புல்லர் இருந்தென்ன? போய் என்ன?
- ஈயாத புல்லனை எவ்விடத்திலும் காணோம்.
- ஈயாத லோபி இருந்தென்ன? போய் என்ன?
- ஈயாதார் வாழ்ந்தென்ன? இண்டஞ்செடி பழுத்து என்ன?
- ஈயாப் பத்தன் பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிறான்
- ஈயார் உறவும் ஈகை இல்லா அன்பும் பாழ்
- ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
- ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
- ஈயார் பொருளுக்குத் தீயார்.
- ஈயுந்தனையும் எரு விடு; காயுந்தனையும் களை பறி
- ஈயும் எறும்பும் எங்கும் உண்டு
- ஈயைப் பிடித்தால் கை வேறு, கால் வேறு.
- ஈயைப் போல் சுத்தமும் எறும்பைப்போல் சுறுசுறுப்பும்.
- ஈர நாவிற்கு எலும்பில்லை.
- ஈர நாவுக்கு எலும்பு இல்லை.
- ஈர நிலத்தில் ஏரைப் பிடி.
- ஈர நெஞ்சம் இரங்கும்; இரங்கா நெஞ்சம் அரங்கும்.
- ஈரச் சீலையைப் போட்டுக் கழுத்தை அறுப்பான்.
- ஈரத் துணியைப் போட்டுக் கழுத்தை வெட்டுவான்.
- ஈரத்தில் ஏரைப் பிடி.
- ஈரமும் கொங்கும் எதிர்த்து மின்னினால் சாமத்துக்கு மழை தப்பாமல் வரும்.
- ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா?
- ஈரம் இருக்கிற இடத்திலே ஈ மொய்க்கும்.
- ஈரம் இல்லா நெஞ்சத்தார்க்கு என் செய்தும் என்ன?
- ஈரம் உடையோரை யாவரும் புகழ்வர்.
- ஈரம் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.
- ஈரம் கண்டு அவிசாரி பிடிக்கிறவர்.
- ஈரம் காய்ந்தால் பிட்டத்தில் மண் ஒட்டாது.
- ஈரம் போகாமல் எருவை மூடு.
- ஈரலிலே மயிர் முளைத்தவன்.
- ஈரூரில் உழுதவனும் கெட்டான்; இரண்டு பெண் கட்டினவனும் கெட்டான்.
- ஈரூர் வேளாண்மையும் தாரம் இரண்டும் தனக்குப் பகை.
- ஈரை நினைப்பான், பேரை மறப்பான்.
- ஈரைப் பேன் ஆக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறது.
- ஈர் உருவப் பேன் அகப்படும்.
- ஈர் பேன் ஆகிப் பேன் பெருமாள் ஆனதுபோல,
- ஈர்க்கிலே குத்தி இறப்பிலே வைத்தாற்போல.
- ஈர்ந்து உழும் புன்செய் ஈரம் தாங்கும்.
- ஈவதினும் மேல் இல்லை; இரப்பதினும் தாழ்வு இல்லை.
- ஈவதைக் கண்டார் யாவரும் அண்டார்.3820
- ஈவோனுக்கு ஒரு போது உணவு; இரப்போனுக்குப் பல போது உணவு.
- ஈனம் மானம் அற்றவன் இரந்து வயிறு வளர்ப்பான்.
- ஈனருக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் எல்லாம் பாழ்.
- ஈனரை அடுத்தால் மானம் அழியும்.
- ஈனவும் தெரியாது; எடுக்கவும் தெரியாது.
- ஈனனுக்கு இரு செலவு.
- ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்.
- ஈனாப் பெண்கள் இருவர் கூடினால் காயா வரகு நீறாய்ப் போம்.
உ
[தொகு]- உகம் முடிய மழை பெய்தாலும் ஓட்டாங் கிளிஞ்சல் பயிர் ஆகுமா?
- உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
- உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
- உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
- உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
- உச்சத்தில் சொன்னால் அச்சம் இல்லை
- உச்சந் தலையில் செருப்பால் அடித்தது போல.
- உச்சந் தலையில் முள் தைத்து உள்ளங்காலில் புரை ஓடிற்றாம்.
- உச்சந் தலையில் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா?
- உச்சனை உச்சன் பார்த்தால் மச்சு வீடும் குச்சு வீடாகும்.
- உங்கள் அப்பன் ஆர்க்காட்டு நவாபா?
- உங்கள் அப்பன் ஏழரைக் கோடி.
- உங்கள் அப்பன் சீமை ஆளுகிறானா?
- உங்கள் அப்பன் செத்தான்; பழி உன்னை விடேன்.
- உழக்கு அரிசி ஆனாலும் ஓயாது மெல்லுவாள்.
- உலகம் பல விதம்
- உச்சி குளிர்ந்தது.
- உங்கள் அப்பன் பூச்சிக்குப் பயப்பட்டானா, உன் பூச்சிக்குப்பயப்பட?
- உங்கள் உறவிலே வேகிறது ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்.
- உங்களைக் கடலிலே கை கழுவினேன்.
- உங்கள் பெண்டுகள் கொண்டான் அடித்தால் கண்கள் கொள்ளாது
- உங்கள் வீட்டுப் பனங்கட்டை ஒற்றைப் பணத்தை முடிந்து கொண்டு கிடக்குமோ?
- உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
- உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
- உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
- உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
- உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
- உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
- உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
- உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
- உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
- உலோபிக்கு இரட்டை செலவு.
- உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
- உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
- உளவு இல்லாமல் களவு இல்லை.
- உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
- உள்ளது போகாது இல்லது வாராது.
- உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
- உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
- உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
- உகிர்ச் சுற்றின்மேல் அம்மி விழுந்தாற் போல்.
- உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்.
- உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பார்.
- உச்சஸ்தானே ஷு பூஜித.
- உச்சாணிக் கிளையில் ஏறினால் உயிருக்கு ஆபத்துத்தானே?
- உச்சி இட உச்சி இட உள்ளே குளிர்ந்தது.
- உச்சி மீனுக்கு எட்டாம் மீன் உதய மீன்.
- உசிர் இருந்தால் உப்பு மாற்றிக் குடிக்கலாம்.
- உசு பிடி என்றால் நீ பிடி என்கிறது நாய்.
- உஞ்ச விருத்திக்குப் போனாலும் பஞ்சம் இல்லாமல் இருக்க வேணும்.
- உட்கார்ந்தவன் காலில் மூதேவி; ஓடுபவன் காலிலே சீதேவி.
- உட்கார்ந்தவனைக் கட்டமாட்டாதவன் ஓடுகிறவனைக் கட்டுவானா?
- உட்கார்ந்து அல்லவோ படுக்க வேண்டும்?
- உட்கார்ந்து இருக்கச்சே அடித்தால் பொன்னாகும்; ஓடச்சே அடித்தால் செம்பானாலும் ஆகும்;இரும்பானாலும் ஆகும்.
- உட்காரச் சொல்லாத சர்க்கரை போல் பேச்சு.
- உட்சுவர் இருக்க வெளிச்சுவர் பூசலாமா
- உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.
- உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி.
- உடம்பிலே காய்த்துத் தொங்குகிறதா?
- உடம்பிலே பயம் இருந்தால் நன்றாகச் செய்வான்.
- உடம்பு உளைந்த கழுதை உப்புக் களத்துக்குப் போனது போல.
- உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்.
- உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தவன்.
- உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலைக் கெடுத்தானாம்.
- உடம்பு எல்லாம் புளுகு; பல் எல்லாம் ஊத்தை.
- உடம்புக்குப் பால் குடிப்பதா? ஊருக்குப் பால் குடிப்பதா?
- உடம்பு தேற்றிக் கொண்டு அல்லவா யோகத்தில் போக வேண்டும்?
- உடம்பு முழுவதும் நனைந்தவர்க்குக் கூதல் என்ன?
- உடம்பை ஒடித்துக் கடம்பில் விடு.
- உடம்பைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் சமானமாகாது.
- உடம்போடே ஒரு நாட்டியம் உண்டா?
உடம்போடே பிறந்தது.
- உடல் அளவு விரதம்; பொருள் அளவு தானம்.
- உடல் இரண்டு, உயிர் ஒன்று.
- உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாக் கவலை.
- உடல் ஒருவனுக்குப் பிறந்தது; நாக்குப் பலருக்குப் பிறந்தது.
- உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு தெரு முழுவதும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்.
- உடல் மெச்சப் பால் குடிக்கிறாயா? ஊர் மெச்சப் பால் குடிக்கிறாயா?
- உடலுக்குக் கை துரோகம்.
- உடலுக்குள்ளே நாக்கை வளைக்கிறதா?
- உடலுக்கோ பால் வார்த்து உண்பது? ஊருக்கோ பால் வார்த்து உண்பது?
- உடலும் உயிரும் போல.
- உடன் பிறந்தே கொல்லும் வியாதி.
- உடன் பிறப்பால் தோள் வலி போம்.
- உடன் பிறப்பு இல்லாத உடம்பு பாழ்.
- உடாப் புடைவை பூச்சிக்கு இரை.
- உடுக்காத புடைவையைச் செல் அரிக்கும்.
- உடுக்கு அடிக்கிறவனுக்கு நடுக்கக் கை வேறு.
- உடுக்கைக்கு இடை சிறுத்தால் ஓசை உண்டு; உரலுக்கு இடை சிறுத்தால் உதவி என்ன?
- உடுத்த சீலை பாம்பாய்க் கடித்தது போல.
- உடுத்துக் கெட்டான் துலுக்கன்; உண்டு கெட்டான் மாத்துவன்.
- உடுத்துக் கெட்டான் வெள்ளைக்காரன்; உண்டு கெட்டான் சோனகன்; புதைத்துக் கெட்டான் தமிழன்.
- உடுப்பது பீறல் ஆடை; நடப்பது தந்தக் குறடாம்.
- உடுப்பாரைப் பார்த்தாலும் உண்பாரைப் பார்க்கலாமா?
- உடும்பு உடும்பே இண்டிக்குப் போ.
- உடும்புக்கு இரண்டு நாக்கு; மனிதனுக்கு ஒரு நாக்கு.
- உடும்புப் பிடி.
- உடும்பு பிடித்தது போதும்; கையை விடு.
- உடும்பு போனால் போகிறது; கை வந்தால் போதும்.
- உடும்பு வேண்டாம்; கை வந்தால் போதும்.
- உடை குலைந்த பிறகு முறை கொண்டாடுவதோ?
- உடைத்த சட்டி உலைக்கு உதவாது,
உடைத்து ஓடு பொறுக்குகிறான்.
- உடைந்த சங்கில் காற்றுப் பரியுமா?
- உடைந்த சங்கு ஊது பரியுமா?
- உடைந்த தடியை ஒரு போதும் நம்பாதே.
- உடை முள்ளுக்கு எதிரே உதைக்கலாமா?
- உடைமை என்பது கல்வி உடைமை.
- உடைமைக்கு ஒரு முழுக்கு; உடையவனுக்கு ஒன்பது முழுக்கு.
- உடைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா?
- உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
- உடையவன் அறிந்திடாத சடுக்கு இல்லை.
- உடையன் இல்லாச் சேலை ஒருமுழம் கட்டை.
- உடையவன் கண் ஓடாப் பயிர் உடனே அழியும்.
- உடையவன் காற்றுப் படாப் பயிர் ஒருமுழம் கட்டை.
- உடையவன் சொற்படி உரலைச் சுற்றிக் குழி பறி.
- உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?
- உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை.
- உடையவன் பொறுத்தாலும் உடையவன் வீட்டு நாய் பொறுக்காது.
- உடையார் இல்லாவிட்டாலும் உடையார் பொல் இருக்கிறது.
- உடையார் உண்டைக் கட்டிக்கு அழும் போது லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்கிறதாம்.
- உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு என்ன?
- உண் உண் என்று உபசரிப்பான் இல்லாத வாசலிலே உண்ணுமை கோடி பெறும்.
- உண்கிற சோற்றிலே கல்லைப் போடுகிறதா?
- உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா?
- உண்கிற சோறு வெல்லம்.
- உண்கிற வயிற்றை ஒளிக்கிறதா?
- உண்ட இடத்தில் உட்கார்ந்திருந்தால் கண்ட பேர் கரிப்பார்கள்.
- உண்ட இலையில் உட்கார்ந்தால் சண்டை வளரும்
- உண்ட இளைப்புத் தொண்டருக்கும் உண்டு.
- உண்ட உடம்பு உருளும்; தின்ற பாக்குச் சிவக்கும்.
- உண்டவன் உடம்புக்கு உறுதி, உழுத புலத்தில் நெல்
- உண்ட சுற்றம் உருகும்
- உண்ட சோற்றிலே நஞ்சைக் கலந்தாற்போல்.
- உண்ட சோற்றுக்கு இரண்டகம் பண்ணுகிறதா?
- உண்டதுதானே ஏப்பம் வரும்?
- உண்டதும் தின்றதும் லாபம்; பணியில் கிடந்தது லோபம்.
- உண்ட பிள்ளை உரம் பெறும்.
- உண்ட பேர் உரம் பேசுவார்.
- உண்ட வயிற்றுக்கு உபசாரமா?
- உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத் தலைக்கு எண்ணெயும் போல.
- உண்ட வயிறு கேட்கும்; தின்ற பாக்குச் சிவக்கும்.
- உண்டவன் உண்டு போக என் தலை பிண்டு போகிறது.
- உண்டவன் உரம் செய்வான்.
- உண்டவன் பாய் தேடுவான்; உண்ணாதவன் இலை தேடுவான்.
- உண்ட வீட்டிலே உட்காராமல் போனால் கண்டவர்கள் எல்லாம் கடுகடு என்பார்கள்.
- உண்ட வீட்டிலே கிண்டி தூக்குவது போல.
- உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?
- உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கிறவன் உண்டா?
- உண்டார் மேனி கண்டால் தெரியும்.
- உண்டால் உடம்பு சொல்லும், விளைந்தால் வைக்கோற்போர் சொல்லும்.
- உண்டால் கொல்லும் விஷம்.
- உண்டால் கொல்லுமோ? கண்டால் கொல்லுமோ?
- உண்டால் தின்றால் உறவு; கொண்டால் கொடுத்தால் உறவு.
- உண்டால் தின்றால் ஊரிலே காரியம் என்ன?
- உண்டால் தீருமா பசி? கண்டால் தீருமா?
- உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டு
- உண்டான தெய்வங்கள் ஒதுங்கி நிற்கையில் சுற்றுப்பட்ட தெய்வம் ததியோதனத்துக்கு அழுததாம்.
- உண்டான போது கோடானுகோடி
- உண்டானால் உண்டு. உலகு அஸ்தமனமா?
- உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
- உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
- உண்டு இருக்க மாட்டாமல் ஊர் வழியே போனானாம்; தின்று இருக்க மாட்டாமல் தேசாந்தரம் போனானாம்.
- உண்டு உறியில் இரு என்றால் உருண்டு கீழே விழுந்தானாம்.
- உண்டு என்ற பேருக்கு ஈசன் உண்டு; இல்லை என்ற பேருக்கு இல்லை.
- உண்டு என்று பெண் கொடுத்தால் சாதிகுலம் கேட்டானாம்.
- உண்டு கண்ட பூனை உறியைத் தாவும்.
- உண்டு களித்தவனிடம் சோற்றுக்குப் போ; உடுத்துக் களித்தவனிடம் துணிக்குப் போ.
- உண்டு கெட்டவனும் தின்று கெட்டவனும் இல்லை.
- உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இருக்குமா?
- உண்டு தின்று உயரமானால் ஊரிலே காரியம் என்ன?
- உண்டு தின்று உள்ளே இரு என்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?
- உண்டு ருசி கண்டவன் ஊரை விட்டுப் போகான்; பெண்டு ருசி கண்டவன் பேர்த்து அடி வையான்.
- உண்டை பட்டு உறங்குகிற குருவிபோல.
- உண்ண இலை தேடி உறங்கப் பாய் தேடிச் சிவனே என்று இருந்தேன்
- உண்ண உணவும் நிற்க நிழலும்.
- உண்ணக் கை சலித்திருக்கிறான்.
- உண்ணச் சோறும் உடுக்கத் துணியும் ஒண்டக் கூரையும் வேண்டும்.
- உண்ணப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.
- உண்ணப் பார்த்தாலும் உழைக்கப் பாராதே,
- உண்ண வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்திற்றாம்.
- உண்ண வருகிறாயோ சோம்பலே, உன் குறுணி அரை நாழிவேலைக்கு வருகிறாயோ சோம்பலே; நான் சற்றே நோயாளி.
- உண்ண வா என்றால் குத்த வருகிறான்.
- உண்ணவும் தின்னவும் என்னைக் கூப்பிடு; ஊர்க்கணக்குப் பார்க்க என் தம்பியை அழை.
- உண்ணா உடம்பு உருகாது; தின்னாப் பாக்குச் சிவக்காது.
- உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக் குறி இடுவேன்.
- உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும், உடுக்காப் புடைவை புட்டிலாக்கும்.
- உண்ணாத தின்னாத ஊர் அம்பலம்.
- உண்ணா நஞ்சு ஒருகாலும் கொல்லாது.
- உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம்; உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது
- உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம்; உடுக்காமல் ஒரு வீடும் போகலாகாது.
- உண்ணாமல் கெட்டது உறவு; கேளாமல் கெட்டது கடன்.
- உண்ணாமல் தின்னாமல் உறவின் முறையுாருக்கு ஈயாமல்.
- உண்ணாமல் தின்னாமல் ஊர் அம்பலம் ஆனேனே!
- உண்ணாமல் தின்னாமல் வயிறு உப்புசம் கொண்டேன்.
- உண்ணி கடித்த நாய் உதறுவது போல.
- உண்ணியைக் கண்டால் ஊரிள் பஞ்சம் தெரியும்.
- உண்ணுகிற சோறு வெல்லம்.
- உண்ணுகிற வயிற்றை ஒளிக்கிறதா?
- உண்ணுபவன் உண்டு விட்டுப் போனால் உன் தலைப்புண் விட்டுப்போகிறது.
- உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி.
- உண்ணுவார் இல்லை; உறங்குவார் இல்லை. ஒரு கட்டு வெற்றிலை தின்பார் இல்லை, சாந்து சந்தனம் பூசுவார் இல்லை. தலைக்குத் தப்பளம் போடுவார் இல்லை, வா மருமகளே வா
- உண்ணுவாளாம், தின்னுவாளாம் சீதா தேவி; உடன்கட்டை ஏறுவாளாம் பெருமா தேவி.
- உண்ணேன், உண்ணேன் என்றால் உடலைப் பார்த்தால் தெரியும்.
- உண்பது நாழி; உடுப்பது நான்கு முழம்; எண்பது கோடி நினைந்து எண்ணும் மனம்.
- உண்பன, தின்பன உறவுதான்; செத்தால் முழுக்குத்தாள்.
- உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.
- உண்பார் பாக்கியம், சம்பா விளையும்.
- உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்த்தல் ஆகாது.
- உண்பான் தின்பான் திவசப்பிராமணன்; குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.
- உண்பான் தின்பான் சேவைப் பெருமாள்; குத்துக்கு நிற்பான் வைராகி.
- உண்பான் தின்பான் பைராகி; குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.
- உண்மை உயர்வு அளிக்கும்.
- உண்மைக்கு உத்தரம் இல்லை.
- உண்மை சொல்லிக் கெட்டாரும் இல்லை; பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.
- உண்மை சொன்னால் உண்மை பலிக்கும்; நன்மை சொன்னால் நன்மை பலிக்கும்.
- உண்மை நன்மொழி திண்மை உறுத்தும்.
- உண்மைப் படு, உறுதிப்படு.
- உண்மையைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.
- உண்மையைச் சொன்னால் உடம்பு எரிச்சல்.
- உணர்வு இல்லாக் கருவியும் உப்பு இல்லாச் சோறும் சரி.
- உணவு விளைவிப்பது சட்டியில்; உறவு விளைவிப்பது பட்டியில்.
- உத்தமச் சேரிக் குயவனுக்கு ஒன்றால் ஒன்று குறைவு இல்லை, உத்தம சேவகன் பெற்ற தாய்க்கு அதிகம்.
- உத்தமம் ஆன பத்தினி ஊர்மேலே வருகிறாள்; வீட்டுக்கு ஒரு துடைப்பக்கட்டை, உஷார், உஷார்.
- உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.
- உத்தமனுக்கு ஓலை எதற்கு?
- உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடம்படிக்கை வேண்டாம்.
- உத்தரத்தில் ஒரு பிள்ளை; உறவுக்கெல்லாம் ஒரு தொல்லை.உத்தரத்தில் ஒரு பிள்ளை; உறவுக்கெல்லாம் ஒரு தொல்லை.
- உத்தரத்து அளவு கேட்டால் அரிவாள் பிடி அளவு வரும்.
- உத்தரம் இல்லாமல் வீடு கட்டுகிற மாதிரி.
- உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாகிறதா?
- உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாகிறதா?
- உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாகிறதா?
- உத்தியோகத்துக்குத் தக்க ககம்.
- உத்தியோகம் குதிரைக் கொம்பாய் இருக்கிறது.
- உத்தியோகம் தடபுடல்; சேவிக்கிற இவர் இன்னார் இனியார் என்று இல்லை; சம்பளம் கணக்கு வழக்கு இல்லை; குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு.
- உத்தியோகம் போன ஊரில் மத்தியானம் இருக்கதே.
- உதட்டிலே புண், மாடு கறக்க முடியவில்லை.
- உதட்டிலே புன்னகையும் உள்ளத்திலே எரிச்சலும்.
- உதட்டிலே வாழைப்பழம் உள்ளே தள்ளுவார் உண்டோ?
- உதட்டுக்குப் பால் மாறின தாசியும் மேட்டுக்குப் பால் மாறின கணக்கனும்.
- உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகா
- உதட்டுத் துரும்பு ஊதப் போகாது.
- உதட்டு வாழைப் பழத்தை உள்ளே தள்ள ஓர் ஆள் வேண்டும்.
- உதடு ஒட்டாமல் பேசுகிறான்.
- உதடு தேய்வதைவிட உள்ளங்கால் தேயலாம்.
- உதடு தேன் சொரிய, உள்ளே நெஞ்சு எரிய.
- உதடு வெல்லம்; உள்ளம் கள்ளம்.
- உதயத்தில் வந்த மழையும் ஆஸ்தமிக்க வந்த மாப்பிள்ளையும் விடா.
- உதர நிமித்தம் பகுக்குத வேஷம்.
- உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினது போல.
- உதவாப் பழங்கலமே, ஓசை இல்லா வெண்கலமே.
- உதவா முட்டி சுத்தரம், ஒதுகிறாளாம் மந்திரம்
- உதவி செய்வாருக்கு இடையூறு ஏது?
- உதறி முடிந்தால் ஒரு குடுமிக்குப் பூ இல்லையா?
- உதறு காலி முண்டை உதறிப் போட்டாள்.
- உதறு காலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள்.
- உதாரிக்குப் பொன் துரும்பு.
- உதிக்கின்ற கதிரோன் முன்னே ஒளிக்குய் மின்மினியைப் போல்.
- உதி பெருத்தாலும் உத்தரத்துக்கு உதவாது.
- உதிரத்துக்கு அல்லவோ உருக்கம் இருக்கும்?
- உதிரம் உறவு அறியும்.
- உதைத்த கால் புழுக்கிறதற்கு முன்னே அடி வயிறு சீழ்க்கட்டுகிறது.
- உதைத்த காலை முத்தம் இடுவது.
- உதைத்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் உபயோகப்படா.
- உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான்.
- உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான்; கொட்டி வெளுப்பான் கொங்கு வண்ணான்.
- உதைபட்ட நாய் ஊரெல்லாம் சுற்றினாற்போல.
- உப்பளத்து மண்ணும் உழமண்ணும் செம்மண்ணும் காவேரி மண்ணும் கலந்து வழங்குகிறது.
- உப்பின் அருமை உப்பு இல்லாவிட்டால் தெரியும்.
- உப்பு இட்ட பாண்டமும் உபாயம் மிகுந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தாமே உடையும்.
- உப்பு இட்டவரை உள்ளளவும் நினை.
- உப்பு இட்டுக் கெட்டது மாங்காய், உப்பு இடாமற் கெட்டது தேங்காய்.
- உப்பு இருக்கிறதா என்றால் பப்பு இருக்கிறது என்றார்.
- உப்பு இருந்தால் பருப்பு இராது; பருப்பு இருந்தால் உப்புஇராது.
- உப்பு இருந்த பாண்டமும் உளவு அறிந்த நெஞ்சமும் தப்பாமல் தட்டுண்டு உடையும்.
- உப்பு இல்லாக் கீரை குப்பையில் இருந்தால் என்ன? உபயோகம் அற்ற அகமுடையான் பக்கத்தில் இருந்தால் என்ன?
- உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.
- உப்பு இல்லாமல் கலக்கஞ்சி குடிப்பான்.
- உப்பு இல்லாவிட்டால் தெரியும் உப்பு அருமை; அப்பன் இல்லா விட்டால் தெரியும் அப்பன் அருமை.
- உப்பு உந்தியா செட்டியாரே என்றால் பப்பு உந்தி என்கிறார்.
- உப்பு உள்ள பாண்டம் உடையும்.
- உப்பு எடுத்த கையாலே கர்ப்பூரமூம் எடுக்க வேண்டும்.
- உப்புக் கட்டினால் உலகம் கட்டும்.
- உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல.
- உப்புக்கு ஆகுமா, புளிக்கு ஆகுமா?
- உப்புக்கும் உதவாதவன் ஊருக்கு உதவமாட்டான்.
- உப்புக்கும் உதவாத விஷயம்.
- உப்புச் சப்பு இல்லாத காரியம்.
- உப்புச் சட்டியும் வறை ஓடும் தோற்றுவிட்டான்.
- உப்புச் சமைந்தால் உப்பின் அருமை தெரியும்; அப்பன் சமைந்தால் அப்பன் அருமை தெரியும்.
- உப்புத் தண்ணீரும் கப்பு மஞ்சளும் ஊறிப் போச்சுது.
- உப்புத் தண்ணீருக்கு விலாமிச்சவேர் வேண்டுமா?
- உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
- உப்பு நளபாகமாய் இருக்கிறது.
- உப்பு நீர் மேகம் உண்டால் உலகில் பிரவாகம்.
- உப்புப் புளிக்கு ஆகாத சமாசாரம், உப்புப் பெறாத காரியத்துக்கு ஊரைக் கூட்டினானாம்.
- உப்புப் பெறாதவன் பருப்புப் பெற்றான்; உறித்தயிரைப் போய் எட்டி எட்டிப் பார்த்தானாம்.
- உப்புப் பொதிக்காரன் உருண்டு உருண்டு அழுதானாம், வெற்றிலைப் பொதிக்காரன் விழுந்து விழுந்து சிரித்தானாம்.
- உப்புப் போட்டுச் சோறு தின்றால் சுரணை இருக்கும்.
- உப்பும் இல்லை, சப்பும் இல்லை.
- உப்பும் இல்லை, புளியும் இல்லை.
- உப்பும் இல்லை, புளியும் இல்லை, உண்டைக் கட்டியே, உன்னை விட்டால் கதியும் இல்லை பட்டைச் சாதமே!
- உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?
- உப்பும் சோறும் உணர்த்தியாய் உண்ணவில்லையோ?
- உப்பு மிஞ்சினால் உப்புச் சாறு; புளி மிஞ்சினால் புளிச் சாறு.
- உப்பு மிஞ்சினால் தண்ணீர்; தண்ணீர் மிஞ்சினால் உப்பு.
- உப்பு முதல் கர்ப்பூரம் வரையில்.
- உப்பு வண்டிக்காரன் உருண்டு அழுதான்; வெற்றிலை வண்டிக்காரனும் விழுந்து அழுதான்
- உப்பு வாணிகன் அறிவானோ கர்ப்பூர விலை?
- உப்பு விற்கச் சொன்னாளா? ஊர்ப் பெரிய தனம் செய்யச் சொன்னாளா?
- உப்பு வைத்த மண்பாண்டம் போல.
- உப்பைக் கடித்துக் கொண்டு உரலை இடித்தானாம்.
- உப்பைச் சிந்தினையோ, துப்பைச் சிந்தினையோ?
- உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
- உப்பைத் தொட்டு உப்பைத் தின்னாதே.
- உப்பைத் தொட்டுக் கொண்டு உரலை விழுங்குவான்
- உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்.
- உப்போடே முப்பத்திரண்டும் வேண்டும்.
- உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிருஷ்டம்.
- உபகாரம் செய்தவருக்கு அபகாரம் செய்யலாமா?
- உபகாரம் செய்யாவிட்டாலும் அபகாரம் செய்யாதே.
- உபகாரம் வீண் போகாது.
- உபசரிப்பு இல்லாத உணவு கசப்பு ஆகும்.
- உபசரியாத மனையில் உண்ணாது இருப்பதே கோடி தனம்.
- உபசாரம் செய்தவருக்கு அபசாரம் பண்ணுகிறதா?
- உபசார வார்த்தை காசு ஆகுமா?
- உண்டால் ஒழியப் பசி தீருமா?
- உபசார வார்த்தை வாய்க்குக் கேடு; தூற்றுப் பருக்கை வயிற்றுக்குக் கேடு.
- உபநயனம் இல்லாமல் கல்யாணம் பண்ணினானாம்.
- உபாத்தியாயர் நின்று கொண்டு பெய்தால் சிஷ்யன் ஓடிக்கொண்டே பெய்வான்.
- உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?
- உம் என்றாளாம் காமாட்சி, ஒட்டிக் கொண்டாளாம் மீனாட்சி,
- உமக்கு என்ன, வயசுக்கு நரைத்ததோ, மயிருக்கு நரைத்ததோ?
- உமி குத்திக் கை நோகலாமோ?
- உமி குத்திக் கை வருந்துமாறு
- உமி சலித்து நொய் பொறுக்கினாற் போல.
- உமியும் கரியும் இருக்கின்றன; உடைமை செய்யப் பொன் இல்லை.
- உமியைக் குத்திக் கை சலித்தது போல.
- உயர்ந்த அடுப்பு அமர்ந்த அடுப்பு
- உயர்ந்த காற்றைக் காற்று மோதும்.
- உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்து ஆகுமா?0
- உயிர் அறியும் உறவு,
- உயிர் இருக்க ஊனை வாங்குகிறது போல.
- உயிர் இருக்கும் போது குரங்கு; இறந்த பிறகு அநுமார்.
- உயிர் இருந்தால் உப்பு மாறித் தின்னலாம்.
- உயிர் உதவிக்கு மிஞ்சின உதவி வேறு இல்லை.
- உயிர் உள்ள மட்டும் தைரியம் விடலாமா?
- உயிர் என்ன வெல்லமா?
- உயிர் காப்பான் தோழன்.
- உயிர் தப்பியது தம்பிரான் புண்ணியம்.
- உயிர் போகும் போதும் தைரியம் விடலாகாது.
- உயிருக்கு மிஞ்சின ஆக்கினையும் இல்லை; கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரமும் இல்லை.
- உயிருக்கு வந்தது மயிரோடே போயிற்று,
- உயிரும் உடலும் போல.
- உயிரைக் கொடுத்த சாமிக்கு மயிரைக் கொடுக்க வேணும்.
- உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.
- உயிரைப் பகைத்தேனோ! ஒரு நொடியில் கெட்டேனோ?
- உயிரோடு இருக்கும் போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை.
- ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல.
- உயிரோடு ஒரு முத்தம் கொடுக்கவில்லை; செத்த பிறகு கட்டிக் கட்டி முத்தமிட்டாளாம்.
- உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன் கட்டை ஏறுவாளா?
- உயிரோடு திரும்பிப் பாராதவள் செத்தால் முத்தம் கொடுப்பாளா?
- உரத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.
- உரத்தைத் தள்ளுமாம் உழவு.
- உம் உதவுவது ஊரார் உதவார்.
- உரம் ஏற்றி உழவு செய்.
- உரம் செய்கிறது உறவுடையான் செய்யமாட்டான்.
- உரல் பஞ்சம் அறியுமா?
- உரல் போய் மத்தளத்தோடு முறையிட்டது போல.
- உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
- உரலிலே தலையை விட்டுக்கொண்டு உலக்கைக்குப் பயப்படலாமா?
- உரலிலே தலை விட்டால் உலக்கைக்குத் தப்பலாமா?
- உரலிலே தலை விட்டால் உலக்கைக்குத் தப்பலாமா?
- உரலிலே துணி கட்டியிருந்தாலும் உரிந்து பார்க்கவேண்டும் என்கிறான்.
- உரலுக்கு ஒரு பக்கம், இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.
- உரலுக்குப் பஞ்சம் உண்டா?
- உரலுக்குள் தலையை விட்டு உலக்கைக்கு அஞ்சலாமா?
- உரலும் கொடுத்துக் குரலும் போக வேண்டும்.
- உரித்த பழம் என்ன விலை? உரிக்காத பழம் என்ன விலை என்றானாம் ஒரு சோம்பேறி.
- உரித்த வாழைப் பழத்தை ஒன்பது வெட்டு வெட்டும்.
- உரிய உரிய மழை பெய்து எரிய எரிய வெயில் காய்கிறது.
- உரியிலே ஒக்குமாம் உருளைக் கிழங்கு; கண்டு பிடிக்குமாம் கருணைக் கிழங்கு.
- உரியை இரட்டித்தால் உழக்கு.
- உரு ஏறத் திரு ஏறும்.
- உருக்கம் உருக்கமாய் ஊட்டி உள்ளே போச்சுது.
- உருக்கம் உள்ள சிற்றாத்தை, ஒதுக்கில் வாடி கட்டி அழலாம்.
- உருக்கின நெய் வார்த்தாலும் கண்ட நியாயத்தான் சொல்லுவேன்.
- உருக்கின நெய் வார்த்தாலும் கண்ணாரக் கண்டதைத் சொல்லுவான்.
- உருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவுமாம்; வரிசை கண்ட மாப்பிள்ளை வந்து வந்து நிற்பானாம்.
- உருட்சிக்கு நீட்சி, புளிப்புக்கு அவள் அப்பன்.
- உருட்டி விளையாடுகிற தஞ்சாவூர்ப் பொம்மை.
- உருட்டுப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
- உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
- உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும்.
- உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.
- உருண்டு உருண்டு புரண்டாலும் உடம்பில் ஒட்டுவதுதான் ஒட்டும்.
- உருண்டு புரண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும்.
- உருப்படத் திருப்படும்.
- உருப்படாக் கோயிலில் உண்டைக் கட்டி வாங்கி விளக்கு இல்லாக் கோயிலில் விண்டு விண்டு தின்றானாம்.
- உருவத்தினால் அல்ல; பேச்சினால் கிளி நன்கு மதிக்கப்படும்.
- உருவத்தை அல்ல; குணத்தைப் பார்.
- உருவிக் குளிப்பாட்டி உள்ளாடை கட்டாமல்.
- உருவிய வாளை உறையில் இடாத வீரன்.
- உருவின கத்தி உறையில் அடங்கும்.
- உருவு திருவூட்டும்.
- உருளுகிற கால் பாசி சேர்க்காது.
- உரைத்த கட்டை வாசனை பெறும்.
- உரையார் இழித்தக்க காணிற் கனா
- உல்லாச நடை மெலுக்குக் கேடு; மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.
- உலக்கைக்குப் பூண் கட்டினது போல.
- உலக்கைக் கொழுந்தும் குந்தாணி வேரும்
- உலக்கை சிறுத்துக் கழுக்காணி ஆயிற்று.
- உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனது போல.
- உலக்கைப் பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா?
- உலக்கை பெருத்து உத்தரம் ஆயிற்று.
- உலக்கையாலே காது குத்தி உரலாலே தக்கை போட்டது போல
- உலகத்துக்கு ஞானி பேய்; ஞானிக்கு உலகம் பேய்
- உலகம் அறிந்த தாசிக்கு வெட்கம் ஏது? சிக்கு ஏது?
- உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.
- உலகம் முழுவதும் உடையான் அருள்
- உலகமே ஒரு நாடக சாலை.
- உலகிலே பெண் என்றால் பேயும் இரங்கும்.
- உலகின்கண் இல்லததற்கு இல்லை பெயர்.
- உலர்ந்த தலைக் கோலமும் ஓர்ப்படி பெற்ற பிள்ளையும் ஒட்டா.
- உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை.
- உலுத்தனுக்கு இரட்டைச் செலவு.
- உலையில் ஈ மொய்த்ததுபோல
- உலை வாய் மெழுகு உருகுவது போல.
- உலை வாயை மூடினாலும் மூடலாம்; ஊர் வாயை மூட முடியாது.
- உலை வைத்த சந்தியிலே சாறு காய்ச்சுகிறது.
- உலை வைத்த சந்தியிலே சாறு காய்ச்சுகிறது.
- உவர் நிலத்தில் இட்ட விதையும் சமரிடத்தில் சென்ற சேனையும் இரண்டாம் பட்சம்.
- உழக்கில் கிழக்கு மேற்கு.
- உழக்கிலே கிழக்கு மேற்கு எது?
- உழக்கிலே வழக்கு.
- உழக்கு அரிசி ஆனாலும் ஓயாது மெல்லுவாள்.
- உழக்கு உள்ளூருக்கு; பதக்குப் பரதேசிக்கு.
- உழக்கு உற்றாருக்கு; பதக்குப் பரதேசிக்கு.
- உழக்கு உற்றாருக்கும் பதக்குப் பரதேசிக்கும் ஆனால் உழுதவனுக்கு என்ன?
- உழக்கு உறிஞ்சப் போய்ப் பதக்குப் பன்றி கொண்டு போச்சுதாம்.
- உழக்கு எண்ணெய் வாங்கி உழக்கு எண்ணெய் விற்றாலும் மினுக்கு எண்ணெய் மிச்சம்.
- உழக்கு நெல்லுக்கு உழைக்கப் போய்ப் பதக்கு நெல்லைப் பன்றி தின்றதாம்.
- உழக்கு மிளகு கொடுப்பானேன்? ஒளிந்திருந்து இளநீர் குடிப்பானேன்?
- உழக்கு மிளகு கொடுப்பானேன்? ஒளிந்திருந்து மிளகு சாறு குடிப்பானேன்?
- உழக்கு விற்றாலும் உரலுக்குப் பஞ்சமா?
- உழக் குளிர் அடித்தால் நாற்றுப் பிடுங்கப்படாதா?
- உழவன் மேட்டை உழுதால் அரசன் நாட்டை ஆளலாம்.
- உழவனுக்கு உழவுக் கம்புதான் மிச்சம்.
- உழவால் பயிர் ஆகிறது எருவாலும் ஆகாது.
- உழவில் பகை ஆனால் எருவிலும் தீராது.
- உழவிலே இல்லாவிட்டால் மழையிலே.
- உழவிலே பகை எருவிலும் தீராது.
- உழவினும் மிகுந்த ஊதியம் இல்லை.
- உழவுக்குப் பகை எருவில் தீருமோ?
- உழவின் பகை எருவிலும் தீராது.
- உழவின்றி ஊதியம் இல்லை, உடையவன் இருந்தக்கால்.
- உழவு அற உழுதவன் விளைவு அற விளையும்
- உழவு ஆள் மேற்கே பார்ப்பான்; கூத்தாடி கிழக்கே பார்ப்பான்.
- உழவு உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும்.
- உழவு ஏற உழுதால் நெல் ஏற விளையும்.
- உழவு ஒழிந்த மாடு பட்டிப் புறத்திலே.
- உழவுக்கு ஏற்ற கொழு.
- உழவுக்கு ஒரு சுற்றும் வராது; ஊணுக்குப் பம்பரம்.
- உழவுக்குப் பிணைத்து விடுகிற மாடும் கூட்டுக்குப் பிணைத்து விடுகிற ஆளும் உதவா.
- உழவுக்கும் அக்கினி ஹோத்திரத்துக்கும் வெகு தூரம்.
- உழவுக்கு மிஞ்சிய ஊதியம் இல்லை.
- உழவு காலத்தில் ஊரை விட்டே போய்விட்டால், அறுப்புக் காலத்தில் ஆள் தேட வேண்டியதே இல்லை.
- உழவு குளிர அடித்தால் நாற்றுப் பிடுங்கப் படாதா?
- உழவு நட்பு இல்லா நிலமும் மிளகு நட்பு இல்லாக் கறியும் வழ வழ.
- உழவும் தரிசும் ஓரிடத்திலே; ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே.
- உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலை போகாதா?
- உழவு மாடு ஊர் வெளியே போனாலும் அங்கேயும் ஏரில் பூட்டி அடிப்பார்கள்.
- உழுகிற எருமையும் உள்ளூர் மருமகனும் ஒன்று.
- உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுக்கிற காலத்தில் அரிவான் எடுத்துக் கொண்டு போனானாம்.
- உழுகிற குண்டை ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா?
- உழுகிறது ஓர் ஏர்; முன் ஏரை மறி என்றானாம்.
- உழுகிறதை விட்டு உழவன் சாமி ஆடினானாம்.
- உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தாற்போல்.
- உழுகிற நாளில் ஊரை விட்டுப் போனால் அறுக்கிற நாளில் ஆள் தேட வேண்டாம்.
- உழுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளு; ஊர் சுற்றுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளா?
- உழுகிற மாட்டை எருது நக்கினது போல.
- உழுகிற மாட்டைக் கொம்பிலே அடித்தாற் போல.
- உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற் போல.
உழுகிற மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா?
- உழுகிற மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா?
- உழுகிற மாடு ஊருக்குப் போனால் ஏரும் கலப்பையும் எதிர்த்தாற் போல் வரும்.
- உழுகிற மாடு பரதேசம் போனால் அங்கு ஒருவன் கட்டி உழுவான்; இங்கு ஒருவன் கட்டி உழுவான்.
- உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
- உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழவுக் கோலும் மிஞ்சாது
- உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
- உழுகிறவன்தான் வைக்கோல் போட வேண்டும்.
- உழுகிறவனுக்குத்தான் தெரியும், உடம்பு வருத்தம்.
- உழுத எருது ஆனாலும் ஒரு முடி நாற்றைத் தின்ன ஒட்டார்.
- உழுத காலாலே உழப்பி விடு.
- உழுத சேறு காய்ந்தால் உழக்கு நெல் காணாது.
- உழுத மாடு ஊருக்குப் போனால் அங்கும் ஒருசால் அடித்துக் கொண்டானாம்.
- உழுத மாடு பரதேசம் போச்சாம்; அங்கும் ஒரு சால் கட்டி உழுதானாம்.
- உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது.
- உழுதவன் காட்டைப் பார்; மேய்த்தவன் மாட்டைப் பார்.
- உழுதவன் கெட்டது இல்லை.
- உழுது இல்லாது உலகில் ஒன்றும் செல்லாது.
- உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை ஒரு காலும்.
- உழுது உப்பு விதைத்து விடுவேன்.
- உழுது உலர்ந்தது பழுது ஆகாது.
- உழுது உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும்.
- உழுது பிழைக்கிறவன் ஒரு கோடி; ஏய்த்துப் பிழைக்கிறவன் ஏழு கோடி.
- உழுந்து அரைத்த அம்மி போல.
- உழுபவன் ஊர்க்கணக்குப் பண்ணுவானோ? * உழுபவன் ஏழை ஆனால் எருதும் ஏழைமை முறை கொண்டாடும்.
- உழுபவன் கணக்கு எடுத்தால் உழவுக் கோலும் மிஞ்சாது.
- உழுவார் உலகத்துக்கு ஆணி.
- உழுவார் கூலிக்கு அழுவார்.
- உழுவாரைப் பார்த்தாலும் பார்க்கலாம்; உண்பாரைப் பார்க்க மனம் தாங்காது.
- உழுவானுக்கு ஏற்ற கொழு; ஊராருக்கு ஏற்ற தொழு.
- உழுவோர் உழைப்பால்தான் உலகோர் பிழைப்பார்.
- உழைக்காத உடம்பு உரம் கொள்ளாது.
- உழைக்கிற கழுதை எந்நாளைக்கும் உழைத்தே தீர வேண்டும்.
- உழைத்த அளவுக்கு ஊதியம்.
- உழைப்பவன் ஒரு கோடி; உண்பவன் ஒன்பது கோடி.
- உழைப்பாளி சுகம் அடைந்தால் வரப்பு ஏறிப் பேளமாட்டான்.
- உழைப்புக்கு ஊர்க்குருவி; இழைப்புக்கு வான் குருவி.
- உழைப்புக்குத் தகுந்த ஊதியம்.
- உள் ஆள் இல்லாமல் கோட்டை அழியாது
- உள் ஆளும் கள்ளாளும் கூட்டமா?
- உள் இருந்தாருக்குத் தெரியும் உள் வருத்தம்.
- உள் இருத்து கள்வன் உளவறிந்து செய்வான்.
- உள் எல்லாம் புண்ணும் உடம்பெல்லாம் புண்ணுமாய் இருக்கிறான்.
- உள் சுவர் இருக்கப் புறச்சுவர் பூசுவார் போல.
- உள் சுவர் இருக்கப் புறச்சுவர் மண் இட்டு, பிள்ளை பெற்றவள் இருக்கப் பீத்துணியை மோந்து பார்த்தாளாம்.
- உள் சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.
- உள் நாக்கும் தொண்டையும் அதிர அடித்தது போல.
- உள் வீட்டிலே கீரையை வைத்துக்கொண்டு அயல் வீட்டுக்குப் போவானேன்?
- உள் வீட்டுக் கடனும் உள்ளங்கைச் சிரங்கும் கெட்டவை.
- உள்ள அன்றுக்கு ஓணம்; இல்லாத அன்றைக்கு ஏகாதசி.
- உள்ளக் கருத்து வள்ளலுக்குத் தெரியும்.
- உள்ளங்கால் வெள்ளெலும்பு தேய உழைத்தான்.
- உள்ளங் காலில் முள்ளுத் தைக்காமல் இருக்க வேண்டும்.
- உள்ளங்கை நெல்லிக் கனி போல.
- உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கையை நக்கினது போல.
- உள்ளங் கைப் புண்ணுக்குக் கண்ணாடி ஏன்?
- உள்ளங்கையில் அஞ்சு கொண்டை முடிக்கிறேன்.
- உள்ளங்கையில் இட்டவர்களை உள்ளளவும் நினை.
- உள்ளங்கையில் இட்டுப் புறங்கையை நக்குவதா?
- உள்ளங்கையில் உப்பிட்டாரை உள்ளளவும் நினை.
- உள்ளங்கையில் தேனை வைத்துப் புறங்கையை நக்கினாற் போல.
- உள்ளங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா?
- உள்ளங்கையில் ரோமம் முளைத்ததாயின் அறிவிலான் அடங்குவான்.
- உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுகிறேன்.
- உள்ளத்தில் ஒன்றும் குறையாது, கள்ளம் இல்லா மனத்தார்க்கு.
- உள்ளத்தில் கள்ளமும், உதட்டில் வெல்லமும்.
- உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும்.
- உள்ளத்துக்கு ஒன்றும் இல்லை; குப்பத்துக்கு ஆள் தள்ளு என்றானாம்.
- உள்ளதுக்குக் காலம் இல்லை.
- உள்ளது குற்றம் ஒரு கோடி ஆனாலும் பிள்ளைக்கும் தாய்க்கும் பிணக்கு உண்டோ?
- உள்ளது குறைவதும் நிறைவதும் ஊழ்வினை
- உள்ளது சொல்ல ஊரும் அல்ல; நல்லது சொல்ல நாடும் அல்ல.
- உள்ளது போகாது; இல்லது வராது.
- உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணு!
- உள்ளதைச் சொல்லி ஊரை விட்டு ஓடு.
- உள்ள தெய்வங்களை எல்லாம் ஒருமிக்க வருந்தினாலும் பிள்ளை கொடுக்கிற தெய்வம் புருஷன்.
- உள்ளதை எல்லாம் விற்று உள்ளான் மீனைத் தின்று பார்.
- உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம்.
- உள்ளதைக் கொண்டுதான் ஊராள வேண்டும்.
- உள்ளதைச் சொல்லு; உலகத்தை வெல்லு.
- உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பகை.
- உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.
- உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல்.
- உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண் ஆகும்.
- உள்ளதைச் சொன்னால் உறவு அற்றுப் போகும்.
- உள்ளதைச் சொன்னால் எல்லோருக்கும் பகை.
- உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்கு நோப்பாளமாம்.
- உள்ளதையும் கெடுத்தாள், உதறு காலி வந்து.
- உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.
- உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு.
- உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறான்.
- உள்ளம் அறியாத கள்ளம் இல்லை.
- உள்ளம் எல்லாம் புண்ணும் உடம்பெல்லாம் கொப்புளமும்.
- உள்ளம் களிக்கக் கள் உண்டு கலங்காது.
- உள்ளம் தீ எரிய உதடு தேன் சொரிய.
- உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்.
- உள்ள மயிருக்கு எண்ணெய் இல்லை; சுற்றுக் குடுமிக்கு எண்ணெய் ஏது?
- உள்ள மாற்றைக் காட்டும், உரை கல்லும் மெழுகுண்டையும்.
- உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும்; இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.
- உள்ளவனிடம் கள்ளன் போனாற் போல.
- உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிற மட்டும் திருடலாம்.
- உள்ளி இட உள்ளி இட உள்ளே போச்சுது.
- உள்ளிக்கு நாற்றம் உடந்தை.
- உள்ளிப் பூண்டுக்கு எத்தனை வாசனை கட்டினாலும் துர்க்கந்தத்தையே வீசும்.
- உள்ளிய தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும்.
- உள்ளுக்குள்ளே கொட்டின தேளே, ஒரு மந்திரம் செய்கிறேன் கேளே.
- உள்ளூர் ஆண்டி காத்தாண்டி; நீ பீத்தாண்டி.
- உள்ளூர்க் குளம் தீர்த்தக் குளம் ஆகாது.
- உள்ளூர்க் குறுணியும் சரி; அசலூர்ப் பதக்கும் சரி.
- உள்ளூர்ச் சம்பந்தம் உள்ளங்கைச் சிரங்கு போல.
- உள்ளூர்ச் சம்பந்தியும் உள்ளங்கைப் புண்ணும் ஒரே மாதிரி.
- உள்ளூர்ப் பகையும் உலகத்துக்கு உறவும்.
- உள்ளூர்ப் பிறந்தகமோ? உள்ளங்கைப் புண்ணோ?
- உள்ளூர்ப் புலி, வெளியூர் எலி.
- உள்ளூர்ப் பூனை, அசலூர் ஆனை.
- உள்ளூர்ப் பெண்ணும் அசலூர் மண்ணும் ஆகா.
- உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் ஒன்று.
- உள்ளூர் மேளம்.
- உள்ளூரான் தண்ணீர்க்கு அஞ்சான்; அயலூரான் பேய்க்கு அஞ்சான்.
- உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் அயலூரில் ஆனை பிடிக்கப் போகிறானாம்.
- உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளையம் சென்று உடும்பு பிடிப்பானா?
- உள்ளூரில் பூனை பிடிக்காதவன் அசலூரில் ஆனை பிடிப்பானா?
- உள்ளூரில் விலைப்படாத மாடா வெளியூரில் விலைப்படும்?
- உள்ளூருக்கு ஆனை, அயலூருக்குப் பூனை.
- உள்ளூறக் கொட்டின தேளே, ஒரு மந்திரம் சொல்கிறேன் கேளே.
- உள்ளே இருக்கிற பூபம்மா, பிள்ளை வரம் கேளம்மா.
- உள்ளே இருக்கும் சாமி உண்டைக்கட்டி, உண்டைக்கட்டி என்கிறது; வெளியிலே இருக்கும் சாமி தத்தியோன்னம். தத்தியோன்னம் என்கிறதாம்.
- உன் தாலி அறுந்து தண்ணீர்ப் பானையில் விழ.
- உள்ளே பகையும் உதட்டிலே உறவும் கள்ளம் இல்லா மனசுக்கு ஏன்?
- உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா?
- உள்ளே பார்த்தால் ஓக்காளம்; வெளியே பார்த்தால் மேற்பூச்சு.
- உள்ளே போனால் பிணம்; மேலே வந்தால் பணம்.
- உள்ளே வயிறு எரிய, உதடு பழம் சொரிய.
- உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?
- உளவு இல்லாமல் களவு இல்லை.
- உளவு போல இருந்து குளவி போலக் கொட்டுகிறதா?
- உளறிக் கொட்டிக் கிளறி மூடாதே.
- உளி எத்தனை? மலை எத்தனை?
- உளுவைக் குஞ்சுக்கு நீஞ்சக்கற்றுக் கொடுக்க வேண்டுமா?
- உளுவைக் குட்டிக்கு ராய பாரமா?
- உளை வழியும் அடைமழையும் பொதி எருதும் ஒருவனுமாய் அலைகிறான்.
- உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.
- உற்ற கணவனும் ஒரு நெல்லும் உண்டானால் சித்திரம் போலே குடிவாழ்க்கை செய்யலாம்.
- உற்ற சிநேகிதன் உயிருக்கு அமிர்தம்.
- உற்றது சொல்ல ஊரும் அல்ல; நல்லது சொல்ல நாடும் அல்ல.
- உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
- உற்ற பேர்களைக் கெடுக்கிறதா?
- உற்றார் உதவுவரோ? அன்னியர் உதவுவரோ?
- உற்றார்க்கு ஒரு பிள்ளை கொடான்; நமனுக்கு நாலு பிள்ளை கொடுப்பான்.
- உற்றார் தின்றால் புற்றாய் விளையும்; ஊரார் தின்றால் போராய் விளையும்.
- உற்றாருக்கு ஒரு மாசம்; பகைத்தாருக்குப் பத்து நாள்.
- உற்றாருக்கு ஒன்று கொடான்; பகைவருக்கு நாலும் கொடுப்பான்.
- உற்றுப் பார்க்கில் சுற்றம் இல்லை.
- உற்றுப் பார்த்த பார்வையிலே ஒன்பது பேர் பட்டுப் போவார்.
- உறக்கத்தில் காலைப் பிடிப்பது போல.
- உறக்கம் சண்டாளம்
- உறங்காப் புளி, ஊறாக் கிணறு, காயா வருளம், தோரா வழக்குத் திருக்கண்ணங்குடி.
- உறங்கின நரிக்கு உணவு கிட்டாது.
உறவிலே நஞ்சு கலக்கிறதா?
- உறவிலே போகிறதைவிட ஒரு கட்டு விறகிலே போகலாம்.
- உறவு உண்ணாமல் கெட்டது; உடை உடுக்காமல் கெட்டது.
- உறவு உறவுதான்; மடியிலே கைவைக்காதே.
- உறவுக்கு ஒன்பது படி; ஊருக்குப் பத்துப் படி.
- உறவுக்கு ஒன்பது படி; பணத்துக்குப் பத்துப் படி.
- உறவுக்கும் பகைக்கும் பொருளே காரணம்.
- உறவுதான்; பயிரிலே கை வாயாதே.
- உறவுதானே உணர்ந்து கொள்ளும்.
- உறவு போகாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
- உறவுபோல் இருந்து குளவிபோல் கொட்டுகிறதா?
- உறவும் பகையும் ஒரு நிலை இல்லை.
- உறவும் பாசமும் உதட்டோடே.
- உறவு முறையான் மூத்திரத்தை உமிழவும் முடியாது; விழுங்கவும் முடியாது.
- உறவு முறையான் வீட்டில் உண்ட வரைக்கும் மிச்சம்.
- உன் தாலி அறுக்கச்சே ஒரு கட்டுத் தாலி ஒருமிக்க அறுக்க வைக்கிறேன்.
- உறவைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே.
- உறவைப்போல் இருந்து குளவியைப்போல் கொட்டுவர்.
- உறள் பால தீண்டா விடுவது அரிது.
- உறி அற மூளி நாய்க்கு வேட்டை.
- உறிப் பணம் போய்த் தெருச் சண்டை இழுக்கிறது.
- உறியிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே
- உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் அலைவானேன்?
- உறியிலே தயிர் இருந்தால் உறங்குமோ பூனைக்குட்டி?
- உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன்.
- உறுதி எதிலும் பெரிது.
- உறுதியான் காரியம் ஒரு போதும் கெடாது.
- உறு தீங்குக்கு உதவாதவன் உற்றவனா?
- உறை மோருக்கு இடம் இல்லாத வீட்டில் விலை மோருக்குப் போனது போல.
- உன் அப்பன்மேல் ஆணை; என்மேலே ஆசையாய் இருக்க வேண்டும்.
- உன் இழவு எடுக்க.
- உன் உத்தமித் தங்கை ஊர் மேயப் போனதால் என் பத்தினிப் பானை படபட என்கிறது.
- உன் உபசாரம் என் பிராணனுக்கு வந்தது.
- உன் உயிரினும் என் உயிர் கருப்பட்டியா?
- உன் எண்ணத்தில் இடி விழ.
- உன் எண்ணத்தில் எமன் புகுத.
- உன் காரியம் முப்பத்திரண்டிலே .
- உன் காலை நீயே கும்பிட்டுக் கொள்ளாதே.
- உன் குதிரை குருடு; ஆனாலும் கொள்ளுத் தின்பது கொள்ளை.
- உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்.
- உன் கொண்டை குலைய.
- உன் சமர்த்திலே குண்டு பாயாது.
- உன் சொல்லிலே உப்பும் இல்லை; புளியும் இல்லை.
- உன் தலையில் எழுதி மயிரால் மறைத்து விட்டான் ஆண்டவன்.
- தொடையைப் பாம்பு பிடுங்க.
- உன் நெஞ்சில் தட்டிப் பார்.
- உன் பாடு கொள்ளைதானே
- உன் பாடு கொள்ளைதானே?
- உன் பாடு யோகம்.
- உன் பிள்ளையைத் தின்று தண்ணீர் குடிக்க.
- உன் பெண்சாதி தாலி பிணத்தின்மேல் விழ.
- உன் பொங்கு மங்க.
- உன்மத்தம் பிடித்தது போல.
- உன் மதம் மண்ணாய்ப் போக.
- உன் மஹலூத்தைக் கேட்டுக் காது புளிச்சாறு மாதிரி புளித்துப் போயிற்று.
- உன் முகத்தது தஞ்சாவூர் மஞ்சளா?
- உன் முறுக்குத் திறுக்கு எல்லாம் என் உடுப்புக்குன்ளே.
- உன் வண்டவாளம் எல்லாம் எனக்குத் தெரியும்.
- உன் வாயில் நாகராஜா பிரசாதத்தைத்தான் போடவேணும்.
- உன் வாயிலே சீதேவி.
- உன் வாயிலே மண் விழ.
- உன் வீடு இருக்கிற அழகுக்கா விழித்துக் கொண்டிருக்கிறாய்?
- உன்ன ஓராயிரம்; பன்னப் பதினாயிரம்
- உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய்.
- உன்னுடைய கர்வத்தால் ஓதுகிறாய் சூதும் வாதும்.
- உன்னை அடித்துப் போட்டால் பத்துக் காணிக்கு எரு ஆகும்.
- உன்னை அள்ளத் துள்ளிக்கொண்டு போக.
- உன்னை ஒண்டிப் பாடை கட்ட.
- உன்னைக் கடலிலே கை கழுவினேன்.
- உன்னைக் கேடு அடிக்க.
- உன்னைக் கொடுத்து என்னை மறந்தேன்.
- உன்னைக் கொடுப்பேனோ ஒரு காசு; உன்னோடே போச்சுது புரட்டாசி.
- உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கிளி? நீ சுமை சுமந்தல்லவோ கூனிப்போனாய்?
- உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடும் இல்லை
- உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடும் இல்லை.
- உன்னைப் பாடையிலே வைத்துப் பயணம் இட ,உன்னைப் பிடி, என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி, உன்னைப் பிடி, என்னைப் பிடி என்று ஆய் விட்டது.
- உன்னைப் பிழிந்தெடுத்துப் போடுவேன்.
- உன்னையும் என்னையும் ஆட்டுகிறது மன்னி கழுத்துச் சிறு தாலி.
- உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே
- உன்னை வாரிக் கொண்டு போக.
- உன்னை வெட்டிப் பலி போட.
- உன்னோடே பிறந்ததில் மண்ணோடே பிறக்கலாம்.
- உனக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு; பார்க்கிறேன் ஒரு கை.
- உனக்கு இருக்கிற கஞ்சியை எனக்கு வார்; பசியாமல் இருக்க வரந் தருகிறேன் என்ற கதை.
- உனக்கு உட்பட்டும் பின்பாட்டுப் பாடுகிற மனிதர்கள் போல.
- உனக்கு என்ன, கொம்பு முளைத்திருக்கிறதோ?
- உனக்கு ஒட்டுத் திண்ணைபோல் இருக்கிறான்.
- உனக்குக் கொடுப்பேனோ ஒரு காசு; நேற்றோடு போச்சு புரட்டாசு.
- உனக்கு நான் அபயம்; எனக்கு நீ அபயம்.
- உனக்குப் போடும் தண்டத்தை நாய்க்குப் போட்டாலும் வாலையாவது ஆட்டும்.
- உனக்கும் பெப்பே; உங்கள் அப்பனுக்கும் பெப்பே.
- உனக்கு மழை பெய்யும், எனக்கு நீர் தா என்றானாம்.
- உனக்கு முதுகு வளைகிறதா?
ஊ
[தொகு]- ஊ என்றாளாம் காமாட்சி; ஒட்டிக் கொண்டளாம் மீனாட்சி.
- ஊக்கமது கைவிடேல்.
- ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
- ஊசல் ஆடித் தன் நிலையில் நிற்கும்.
- ஊசி ஒரு முழத் துணியையாவது கொடுக்கும்; உற்றார் என்ன கொடுப்பார்.
- ஊசி குத்திக் கொண்டவன் அழாமல் இருக்கப் பார்த்தவன் அழுவானேன்?
- ஊசி கொண்டு கடலாழம் பார்ப்பது போல,
- ஊசி கொள்ளப் போய்த் துலாக் கணக்குப் பார்க்கிறதா?
- ஊசி கோக்கிறதற்கு ஊரில் உழவாரம் ஏன்?
- ஊசி நூலால் இறுகத் தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் இல்லை என்றாளாம்.
- ஊசி பொன்னானால் என்ன விலை பெறும்.
- ஊசி போகிறது கணக்குப் பார்ப்பான்; பூசணிக்காய் போகிறது தெரியாது.
- ஊசி போல மிடறும் தாழி போல வயிறும்.
- ஊசி மலராமல் சரடு ஏறுமா?
- ஊசி மலிவு என்று சீமைக்குப் போகலாமா?
- ஊசி முனையிலே நிற்கிறான்.
- ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும்.
- ஊசி மூஞ்சியை ஊதை என்ன செய்யும்.
- ஊசிக் கணக்குப் பார்க்கிறான்.
- ஊசிக் கண்ணிலே ஆகாயம் பார்த்தது போல.
- ஊசிக் குத்தின்மேல் உரல் விழுந்த கதை.
- ஊசிக்குக் கள்ளன் உடனே வருவான்.
- ஊசித் தொண்டையும் தாழி வயிறும்.
- ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா?
- ஊசியும் அல்லவோ ஒரு சரட்டைக் கோத்துக் கொண்டிருக்கிறது.
- ஊசியும் கருமானும் உருண்டு ஓடிப் போனான்.
- ஊசியும் சரடும் போல.
- ஊசியை ஊசிக் காந்தம் இழுக்கும்; உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
- ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
- ஊடைக்குப் பாவு இருந்தால் அல்லவோ ஓடி ஓடி நெய்வான்?
- ஊணன் கருமம் இழந்தான்; உலுத்தன் பெயர் இழந்தான்.
- ஊணினால் உறவு; பூணினால் அழகு.
- ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
- ஊணுக்கு முந்து, படைக்குப் பிந்து.
- ஊணுக்கும் உடைக்கும் என்னைக் கூப்பிடு; ஊர்க் கணக்குக்குத் தம்பியைக் கூப்பிடு.
- ஊணும் இல்லை; உறக்கமும் இல்லை.
- ஊணும் உறக்கமும் ஒத்தார்க்கு ஒத்த படி.
- ஊண் அருந்தக் கருமம் இழப்பர்.
- ஊண் அற உயிர் அறும்.
- ஊண் அற்ற போதே உடல் அற்றுப் போம்.
- ஊண் அற்ற போதே உளம் அற்றது போல.
- ஊண் அற்றபோது உடலற்றது.
- ஊண் ஒடுங்க வீண் ஒடுங்கும்.
- ஊண் பாக்கு ஒழிய வீண் பாக்கு ஆகாது.
- ஊத அறிந்தவன் வாதி, உப்பு அறிந்தவன் யோகி.
- ஊதி ஊதி உள்ளதெல்லாம் பாழ்.
- ஊதின சங்கு ஊதினால் விடிகிற போது விடியட்டும்.
- ஊதினால் போம்; உறிஞ்சினால் வரும்.
- ஊத்தை திரண்டு கழுக்காணி ஆச்சுது.
- ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை; பசி போகத் தின்றவனும் இல்லை.
- ஊத்தை போனாலும் உள்வினை போகாது.
- ஊத்தை வாயன் தேட நாற்ற வாயன் தின்ன.
- ஊத்தை வாய்க்கும் உமிழ் நீருக்கும் கேடு.
- ஊத்தைப் பல்லுக்கு விளாங்காய் சேர்ந்தது போல.
- ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
- ஊமை ஊரைக் கெடுப்பான்; ஆமை ஆற்றைக் கெடுக்கும்.
- ஊமை ஊரைக்கெடுக்கும்; வாயாடி பேரைக் கெடுக்கும்.
- ஊமை கண்ட கனா. (+ ஆருக்குத் தெரியும்.)
- ஊமை கண்ட கனாப்போலச் சீமைப் பட்டணம் ஆகுமா?
- ஊமை பிரசங்கம் பண்ணச் செவிடன் கேட்டது போல.
- ஊமை போல இருந்து எருமை போலச் சாணி போட்டதாம்.
- ஊமைக்கு உளறு வாயன் உற்பாத பிண்டம்.
- ஊமைக்கு உளறு வாயன் சண்டப் பிரசண்டன்.
- ஊமைக்கு வாய்த்தது ஒன்பதும் பிடாரி.
- ஊமைக்குத் தெத்து வாயன் உயர்ந்த வாசாலகன்.
- ஊமையர் சபையில் உளறு வாயன் மகாவித்துவான்.
- ஊமையன் கனவு கண்டது போலச் சிரிக்கிறான்.
- ஊமையன் பாட, சப்பாணி ஆட, செவிடன் கேட்க, குருடன் பார்க்க.
- ஊமையன் பேச்சுப் பழகின பேருக்குத் தெரியும்.
- ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
- ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
- ஊமையின் பிரசங்கத்தைச் செவிடன் கேட்டானாம்.4640
- ஊமையும் அல்ல, செவிடனும் அல்ல.
- ஊமையும் ஊமையும் மூக்கைச் சொறிந்தாற் போல்.
- ஊமையை விட உளறு வாயன் மேல்.
- ஊராருக்கெல்லாம் ஒரு வழி; இவனுக்கு ஒரு வழி.
- ஊராருக்கெல்லாம் ஒரு வழி; இவனுக்கு ஒரு வழி.
- ஊராருக்கெல்லாம் ஒரு வழி; ஓச்சனுக்கு ஒரு வழி.
- ஊராருக்கெல்லாம் ஒரு வழி; ஓச்சனுக்கு ஒரு வழி.
- ஊராரே வாருங்கள்; முதுகிலே குந்துங்கள்.
- ஊராரே வாருங்கள்; முதுகிலே குந்துங்கள்.
- ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை.
- ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை.
- ஊரார் உடைமைக்கு உலை வைக்கிறான்.
- ஊரார் உடைமைக்கு உலை வைக்கிறான்.
- ஊரார் உடைமைக்கு ஓயாண்டி போல் திரிவான்.
- ஊரார் உடைமைக்கு ஓயாண்டி போல் திரிவான்.
- ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
- ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
- ஊரார் உடைமைக்குப் பேராப் பேராசை கொள்ளாதே.
- ஊரார் உடைமைக்குப் பேராப் பேராசை கொள்ளாதே.
- ஊரார் எருமை பால் கறக்கிறது; நீயும் ஊட்டுகிறாய்; நானும் உண்ணுகிறேன்.4720
- ஊரார் எருமை பால் கறக்கிறது; நீயும் ஊட்டுகிறாய்; நானும் உண்ணுகிறேன்.
- ஊரார் கணக்கு உடையன் பிடரியிலே.
- ஊரார் கணக்கு உடையன் பிடரியிலே.
- ஊரார் சிரித்தால் என்ன? நாட்டார் நகைத்தால் என்ன? நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.
- ஊரார் சிரித்தால் என்ன? நாட்டார் நகைத்தால் என்ன? நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.
- ஊரார் சொத்துக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
- ஊரார் சொத்துக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
- ஊரார் சொத்துத் தூமகேது.
- ஊரார் நாய்க்குச் சோறு போட்டால் அது உடையவன் வீட்டிலே போய்த்தான் குரைக்கும்.
- ஊரார் நாய்க்குச் சோறு போட்டால் அது உடையவன் வீட்டிலே போய்த்தான் குரைக்கும்.
- ஊரார் பண்டம் உமி போல்; தன் பண்டம் தங்கம் போல்.
- ஊரார் பண்டம் உமி போல்; தன் பண்டம் தங்கம் போல்.
- ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
- ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
- ஊரார் புடைவையில் தூரம் ஆவது.
- ஊரார் புடைவையில் தூரம் ஆவது.
- ஊரார் வீட்டு நெய்யே; என் பெண்டாட்டி கையே.
- ஊரார் வீட்டு நெய்யே; என் பெண்டாட்டி கையே.
- ஊரார் வீட்டுக் கல்யாணமே; ஏன் அவிழ்ந்தாய் கோவணமே!
- ஊரார் வீட்டுக் கல்யாணமே; ஏன் அவிழ்ந்தாய் கோவணமே!
- ஊரார் வீட்டுச் சோற்றைப் பார்; ஓசு பாடி வயிற்றைப் பார்.
- ஊரான் ஆகில் உழுது விட்டுப் போகப் பண்ணைக்காரன் தண்ட வரி செலுத்த வேண்டியிருக்கிறது.
- ஊரான் ஆகில் தாசனுக்குப் பேள இடம் இல்லையா?
- ஊரான் ஆகில் தாசன் பார்க்கிறதற்குச் சந்தேகமா?
- ஊரான் சொத்தை உப்பு இல்லாமல் தின்பான்.
- ஊரான் மகன் நீரோடே போன கதை.
- ஊரான் வீட்டுச் சோற்றைப் பார்; சோனிப் பையன் வயிற்றைப் பார்.
- ஊரிலே அழகியைப் பிடிக்கப் போகிறானென்று ஆந்தையும் குரங்குமாய் ஓடிப் போச்சாம்.
- ஊரிலே எளியாரை வண்ணான் அறிவான்; சாதிப் பொன் பூண்பாரைத் தட்டான் அறிவான்.
- ஊரிலே கல்யாணம்; மாரிலே சந்தனம்.
- ஊரிலேயும் போவான்; சொன்னால் அழுவான்.
- ஊரில் இருக்கும் சனியனை வீட்டிலே அழைத்தாற் போல.
- ஊரில் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.
- ஊரில் ஒருத்தனே தோழன்; ஆரும் அற்றதே தாரம்.4745
- ஊரில் நடக்கும் விஷயம் எல்லாம் ஊசல் குமரிக்குத் தெரியும்.
- ஊருகிற அட்டைக்குக் கால் எத்தனை என்று அறிவான்.
- ஊருக்கு அரசன் ஆனாலும் தாய்க்குப் பிள்ளைதான்.
- ஊருக்கு அரசன் காவல்; வீட்டுக்கு நாய் காவல்.
- ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கு ஆவானா?
- ஊருக்கு இட்டு ஊதாரி ஆனான்.
- ஊருக்கு இரண்டு பைத்தியக்காரன்.
- ஊருக்கு இரும்பு அடிக்கிறான்; வீட்டுக்குத் தவிடு இடிக்க முடியவில்லை.
- ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தியார்.
- ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் மச்சினன் பெண்டாட்டி.
- ஊருக்கு உழைக்கிற கிராமணி.
- ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உச்சிப் பிள்ளையாருக்கு ஒரு வழி.
- ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உனக்கு ஒரு வழியா?
- ஊருக்கு எல்லாம் சாஸ்திரம் சொல்லுகிற பல்லி, கூழ்ப் பானையில் விழுந்தது போல.
- ஊருக்கு ஏற்ற மாடு வாங்கினவனும் இல்லை; தாய்க்கு ஏற்ற பெண் கட்டினவனும் இல்லை.
- ஊருக்கு ஏற்றுக் கெட்டான்; உள்ளதைச் சொல்லிக் கெட்டான்.
- ஊருக்கு ஒடுங்கான், யாருக்கும் அடங்கான்.
- ஊருக்கு ஒரு தேவடியாள் ஆருக்கென்று ஆடுவாள்?
- ஊருக்கு ஒரு வழி; ஒன்றரைக் கண்ணனுக்கு ஒரு வழி.
- ஊருக்கு ஓமல்; வீட்டுக்கு வயிற்றெரிச்சல்.
- ஊருக்கு நாட்டான் பெண்டாட்டி என்றால் ஓ என்னுவாளாம்; ஓர் ஆளுக்குச் சோறு என்றால் ஹூம் என்னுவாளாம்.
- ஊருக்கு முன்னால் விளக்கு ஏற்றினால் ஒரு பிடி உயரும்.
- ஊருக்கு விளைந்தால் ஓட்டுக்குப் பிச்சை.
- ஊருக்கு வேலை செய்வதே மணியமாய் இருக்கிறான்.
- ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.
- ஊருக்குப் பால் வார்த்து உண்கிறாயா! உடம்புக்குப் பால் வார்த்து உண்கிறாயா?
- ஊருக்குப் பேரும் உறவின் முறைக்குப் பொல்லாப்பும்.
- ஊருக்கும் பேருக்கும் வடுகு இல்லை.
- ஊருக்குள் நடக்கிற விஷயம் யாருக்குத் தெரியும்? உள்ளே இருக்கிற குமரிக்குத் தெரியும்.
- ஊருக்கே மகாராணியாக இருந்தாலும் அவள் புருஷனுக்கு அடங்கத்தான் வேண்டும்.
- ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
- ஊரூராய்ப் போகிறவனுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை.
- ஊரே தாய்; வேலியே பயிர்.
- ஊரை அடித்து உலையில் போடுகிறான்.
- ஊரை ஆண்டாயோ? ஊரான் பெண்ணை ஆண்டாயோ?
- ஊரை ஆள்கிற ராசாவுக்கு உட்கார இடம் இல்லையாம்!
- ஊரை உழக்கால் அளக்கிறான்; நாட்டை நாழியால் அளக்கிறான்.
- ஊரை வளைத்தாலும் உற்ற துணை இல்லை; நாட்டை வளைத்தானும் நல்ல துணை இல்லை.
- ஊரை விட்டுப் போகும்போது தாரை விட்டு அழுதாளாம்.
- ஊரை விழுங்குகிற மாமியாருக்கு அவளையே விழுங்குகிற மருமகள் வந்தாளாம்.
- ஊரை விழுங்கும் மாமனாருக்கு அவரையே விழுங்கும் மாப்பிள்ளை.
- ஊரைக் கண்டவுடனே உடுக்கையைத் தோளில் போட்டுக் கொண்டானாம்.
- ஊரைக் காட்ட ஒரு நாய் போதும்.
- ஊரைக் கெடுத்தான் ஒற்றை மாட்டுக்காரன்.
- ஊரைக் கெடுத்தான் ஒற்றைக் கடைக்காரன்.
- ஊரைக் கொளுத்துகிற ராஜாவுக்கு ஊதிக் கொடுக்கிறவன் மந்திரி.
- ஊரைச் சுற்றி வந்த யானை ஒற்றடம் வேணும் என்றாற்போல்.
- ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே.4800
- ஊரைப் பகைத்தேனோ? ஒரு நொடியில் கெட்டேனோ?
- ஊரைப் பார்க்கச் சொன்னால் பறைச்சேரியைப் பார்க்கிறான்.
- ஊரைப் பார்த்து ஓம்பிப் பிழை.
- ஊரைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்தது.
- ஊரைப் பிடித்த சனியனுக்கு நாயைப் பிடித்துக் சூலம் போட்டது போல்.4805
- ஊரோடு ஒக்க ஓடு; ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு.4810
- ஊரோடு ஒக்க நட; நாட்டோடு நடுவே ஓடு.
- ஊரோடு ஒட்டி வாழ்.
- ஊரோடே ஒக்கோடே.
- ஊர் அருகே ஒரு வயலும் உத்தரத்தில் ஒரு புத்திரனும்.
- ஊர் அறிந்த பார்ப்பான்.
- ஊர் அறிந்த பிராமணனுக்குப் பூணூல் எதற்கு?
- ஊர் ஆளுகிற ராஜாவுக்குப் பேள இடம் கிடைக்கவில்லையாம்.
- ஊர் ஆளுகிறவனுக்குப் பேளப் புறக்கடை இல்லையா?
- ஊர் ஆளுகிறவன் பெண்டாட்டிக்குப் பேள இடம் இல்லையாம்.
- ஊர் ஆளுகிறவன் பெண்டு பிடித்தால் ஆருடன் சொல்லி முறையிடுகிறது?
- ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு எளிது.
- ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத் தொக்கு.
- ஊர் இருக்கிறது பிச்சை போட; ஓடு இருக்கிறது வாங்கிக் கொள்ள.
- ஊர் இருக்கிறது; ஓடு இருக்கிறது.
- ஊர் இருக்கிறது; வாய் இருக்கிறது.
- ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்; வீட்டு இளக்காரம் மாப்பிள்ளைக்குத் தெரியும்,
- ஊர் உண்டாகி அல்லவோ, கிழக்கு மேற்கு உண்டாக வேண்டும்?
- ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
- ஊர் உண்டு பிச்சைக்கு; குளம் உண்டு தண்ணீருக்கு.
- ஊர் ஊராய்ப் போவானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை.
- ஊர் எங்கும் சம்பை; என் பேரோ வம்பை.
- ஊர் எங்கும் சுற்றி உனக்கு ஏதடா புத்தி?
- ஊர் எங்கும் பேறு; வீடு பட்டினி.
- ஊர் எச்சம்; வீடு பட்டினி.
- ஊர் எல்லாம் உறவு; ஒரு வாய்ச் சோறு இல்லை.
- ஊர் எல்லாம் உற்றார்; அந்தி பட்டால் பொதுச் சந்தியிலே.
- ஊர் எல்லாம் கடன்; உடம்பெல்லாம் பொத்தல்.
- ஊர் எல்லாம் கல்யாணம்; மார் எல்லாம் சந்தனம்.
- ஊர் எல்லாம் சதமாகுமோ? ஒரு மரம் தோப்பாகுமோ?
- ஊர் எல்லாம் சுற்றி எனக்கென்ன புத்தி?
- ஊர் எனப்படுவது உறையூர்.
- ஊர் என்று இருந்தால் பறைச் சேரியும் இருக்கும்
- ஊர் ஒக்க ஓட வேண்டும்.
- ஊர் ஓசை அடங்க நெய் காய்ச்சினாளாம்.
- ஊர் ஓசை அடங்கும் வரை வெண்ணெய் காய்ச்சினாளாம்,
- ஊர் ஓச்சன் பட்டினி.
- ஊர் ஓட உடன் ஓட.
- ஊர் ஓட ஒக்க ஓடு; நாடு ஓட நடு ஓடு.
- ஊர் ஓடினால் ஒத்தோடு; ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு.
- ஊர் ஓமல் ஆனது அல்லால் ஒன்றும் அறியேன்.
- ஊர் ஓரத்தில் கொல்லை; உழுதவனுக்குப் பயிர் இல்லை.
- ஊர் ஓரத்து உழவுக்காரனும் உண்டவுடன் பேளாதவனும் உருப்படமாட்டான்.
- ஊர் கூடிச் செக்குத் தள்ள, வாணியன் எண்ணெய் கொண்டு போக.
- ஊர் கூடிச் செக்குத் தள்ளலாமா?
- ஊர் கூடித்தானே தேர் இழுக்க வேண்டும்?
- ஊர் கோப்பழிந்தால் ஓடிப் பிழை.
- ஊர் திரிந்த தேவடியாளுக்குப் பூணுால் அபூர்வமா?
- ஊர் நடு நின்ற ஊர் மரம் போல.
- ஊர் நத்தத்தில் நாய் ஊளையிட்டாற் போல.
- ஊர் நல்லதோ? வாய் நல்லதோ?
- ஊர் நஷ்டம் ஊரிலே; தேர் நஷ்டம் தெருவிலே.
- ஊர் பேர் அறியாதவன் ஊர்வலம் வருகிற மாதிரி.
- ஊர் மெச்சப் பால் குடிக்கலாமா?
- ஊர் மேலே போனவளுக்குத் தோள்மேலே கொண்டையாம்; அதைப் போய்க் கேட்கப் போனால் லடாபுடா சண்டையாம்.
- ஊர் வாயை அடக்கினாலும் உளறு வாயை அடக்க முடியாது.
- ஊர் வாயை மூட உலை மூடி இல்லை.
- ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
- ஊர் வாயை மூடலாமா? உலை வாயை மூடலாமா?
- ஊர் வாயைப் படல் இட்டு மூடலாமா?
- ஊர் வாரியில் ஒரு கொல்லையும் உத்தராட நட்சத்திரத்தில் ஒரு பிள்ளையும்.
- ஊர் வாழ்த்தால் ஓட்டுப் பிச்சைக்கு வழி இருக்கும்.
- ஊர் வாழ்த்தால் ஓட்டுப் பிச்சைக்கு வழி இருக்கும்.
- ஊர் வாழ்ந்தால் ஒக்க வாழலாம்.
- ஊர் வாழ்ந்தால் ஒக்க வாழலாம்.
- ஊர் விஷயங்களில் ஊமை செவிடாய் இரு.
- ஊர் விஷயங்களில் ஊமை செவிடாய் இரு.
- ஊர்கிறதென்றால் பறக்கிறது என்று சொல்லும் ஜனம்.
- ஊர்க் கழுதை இருக்கக் கூத்தாடிக் கழுதைக்குச் சனி பிடித்தது.
- ஊர்க் காக்காய் கரையிலே; வந்தட்டிக் காக்காய் வரப்பிலே.
- ஊர்க் கோழியும் நாட்டுக் கோழியும் கூடினால் உரலில் உள்ள புழுங்கல் அரிசிக்குச் சேதம்.
- ஊர்க்கடனும் உள்ளங்கைச் சிரங்கும் போல.
- ஊர்க்குருவிமேலே ராம பாணம் தொடுக்கிறதா?
- ஊர்க்கோடியில். ஒரு வீடு கட்டி ஓர்ப்படி தம்பிக்குப் பெண் கொடுத்தாற்போல்.
- ஊர்ச் சக்கிலி எல்லாம் சேர்ந்து தோலைக் கெடுத்தனராம்.
- ஊர்ச் சண்டை கண்ணுக்கு அழகு.
- ஊர்ப் பசங்களெல்லாம் கால் பாடம்; பிச்சைக்கு வந்த பெண் அகமுடையாள்.
- ஊர்ப் பிள்ளையை முத்தமிட்டால் உதட்டுக்குக் கேடு.
- ஊர்ப் பொருளை உப்பு இல்லாமல் கூடச் சாப்பிடுவான்.
- ஊர்வலத்தைக் காண வந்தவன் அடித்துக் கொள்வது போல.
- ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
- ஊழி பெயரினும் கலங்கார் உறவோர்.
- ஊழி பேரினும் ஊக்கமது கைவிடேல்.
- ஊழிக் காய்ச்சல் அதிகமானால் சூனியக்காரன் கொள்ளை.
- ஊழும் உற்சாகமும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
- ஊழ்வினை ஓநாய் மாதிரி இருக்கும்.
- ஊறச்சே துடைக்க வேண்டும்.
- ஊறல் எடுத்தவன் சொறிந்து கொள்வான்.
- ஊறாக் கிணறு, உறங்காப் புளி, தீரா வழக்கு, திருக்கண்ணங் குடி.
- ஊறுகாயைக் கடித்துக் கொண்டு ஒரு பானைச் சோற்றை என்னது என்பான்.
- ஊறுகாயைக் கடித்துக் கொண்டு ஒரு பானைச் சோற்றைத் திணிப்பது போல.
- ஊற்றுத் தண்ணீரில் நாய்க்குப் பால் வார்த்தது போல.
- ஊற்றுப் பாய்ச்சல் ஆற்றுப் பாய்ச்சல் பத்துக் குழியும், ஏரிப் பாய்ச்சல் நூறு குழியும் ஒன்று.
- ஊற்றை நம்பினாலும் ஆற்றை நம்பாதே.
- ஊற்றை மலத்தைக் கண்ட பன்றி உதட்டுக்குள்ளே சிரித்துக் கொண்டதாம்.
- ஊற்றைப் பல்லுக்கு விளாங்காய் சேர்ந்தாற் போல்.
- ஊற்றைப் பெண் பிள்ளை கழுவக் கழுவத் தேயும்.
- ஊனம் இல்லா உடம்புக்கு நாணம் ஏன்?
- ஊனம் இல்லான் மானம் இல்லான்.
- ஊனுக்கு ஊன் உற்ற துணை.
- ஊன்ற வைத்த கொம்பு உச்சி மோட்டை உச்சி மோட்டைப் பிளக்கிறது.
- ஊன்றக் கொடுத்த தடி உச்சியை உடைக்கிறது.
- ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது போல.
எ
[தொகு]- எக்கியத்தில் மூத்திரம் பெய்தது போல
- எக்குப் புடைவை சோர்ந்தால் கைக்கு உண்டோ உபகாரம்?
- எக்கேடு கெட்டுப் போ; எருக்கு முளைத்துப் போ
- எகனை முகனை பார்க்கிறான்
- எங்கள் அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்
- எங்கள் அகத்துக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உங்கள் அகத்துக்கு வந்தால் என்ன தருகிறாய்?
- எங்கள் அகத்துப் பெண் பொல்லாதது; உங்கள் அகத்துப் பிள்ளையை அடக்குங்கள்
- எங்கள் அப்பன் பிறந்தது வெள்ளி மலை; ஆய் பிறந்தது பொன் மலை
- எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை
- எங்கள் வீட்டில் விருந்து வைக்கிறேன் வாருங்கள்; இலை வாங்க மறந்துவிட்டேன் போங்கள்
- எங்கள் வீட்டு அகமுடையானுக்கும் அரண்மனையில் சேவகம்
- எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்?
- எங்களால் ஒன்றும் இல்லை; எல்லாம் உங்கள் தர்மம்
- எங்கு இருந்தாலும் ஆனை பெருமாளதுதானே?
- எங்கும் சுற்றி ரங்கநாதா என்றான்
- எங்கு ஏறிப் பாய்ந்தாலும் கொங்கு ஏறிப் பாயேன்
- எங்கும் சிதம்பரம் பொங்கி வழிகிறது
- எங்கும் சிரித்து எள்ளுக் கொல்லை காக்கிறவன்
- எங்கும் சுற்றி ரங்கனைச் சேவி
- எங்கும் செத்தும் நாக்குச் சாகவில்லை
- எங்கும் பருத்தி எழுபது பலம்
- எங்கும் பொன்னம்பலந்தான்
- எங்கும் மடமாய் இருக்கிறது; இருக்கத்தான் இடம் இல்லை
- எங்கே அடித்தாலும், நாய்க்குக் காலிலே முடம்
- எங்கே அடித்தாலும் நாய் காலைத் தூக்கும்
- எங்கே சுற்றியும் ரங்கனைத்தான் சேவிக்க வேணும்
- எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க இடம் ஒன்று வேண்டும்
- எங்கே புகை உண்டோ, அங்கே நெருப்பு உண்டு
- எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு
- எங்கேயோ இடித்தது வானம் என்று இருந்தேன்; தப்பாது என் தலையிலேயே இடித்தது
- எங்கேயோ எண்ணெய் மழை பெய்ததென்று இருந்தாளாம்
- எங்கே வந்தது இரை நாய்? பங்குக்கு வந்தது மர நாய்
- எங்கே வெட்டினாலும் எப்படிச் சாயும் என்று பார்க்க வேணும்
- எச்சரசம் ஆனாலும் கைச்சரசம் ஆகாது
- எச்சில் அறியாள், துப்பல் அறியாள்; என் பெண் பதின்கலக் காரியம் செய்வாள்
- எச்சில் இரந்து அடிக்கும்; பற்றுப் பறக்க அடிக்கும்
- எச்சில் இரக்கும்; தூமை துடைக்கும்
- எச்சில் இலை எடுக்க வந்ததா நாய்? எண்ணிப் பார்க்க வந்ததா நாய்?
- எச்சில் இலைக்கு அலையும் நாய் போல
- எச்சில் இலைக்கு இச்சகம் பேசுகிறது
- எச்சில் இலைக்கு இதம் பாடுகிறது
- எச்சில் இலைக்கு எதிர் இலை போடலாமா?
- எச்சில் இலைக்கு ஏஜெண்டு; குப்பைத் தொட்டிக்குக் குமாஸ்தா
- எச்சில் இலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறது போல
- எச்சில் இலைக்குப் போட்டி போடும் நாய் மாதிரி
- எச்சில் இலைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு; மண்ணாங்கட்டிக்கு எச்சில் இலை ஆதரவு
- எச்சில் இலை கண்ட நாய் போல
- எச்சில் இலை நாய்க்கும் பிறந்த நாள் கொண்டாட்டமா?
- எச்சில் இலை நாயானாலும் எசமான் விசுவாசம் உண்டு
- எச்சில் இலையை எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா?
- எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் என்ன சாமி? என்ன பூஜை?
- எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டான்
- எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை இடுவானா?
- எச்சில் தின்றாலும் வயிறு நிரம்பத் தின்னவேண்டும்; ஏச்சுக் கேட்டாலும் பொழுது விடியும்மட்டும் கேட்க வேண்டும்
- எச்சில் நாய்க்குக் கண்டது எல்லாம் ஆசை
- எச்சிலை எடுக்கச் சொன்னாளா? இலையை எண்ணச் சொன்னாளா?
- எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே வார்
- எச்சிலைக் குடித்துத் தாகம் தீருமா?
- எச்சிலைத் தின்றாலும் எஜமானன் விசுவாசம் காட்டும் நாய்; பாலைக் குடித்தாலும் பகையை நினைக்கும் பூனை
- எச்சிலைத் தின்று ஏப்பம் விட்டாற் போல
- எச்சிலைத் தின்று பசி தீருமா?
- எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
- எசமான் கோபத்தை எருமைக் கடாவின்மேல் காண்பித்தானாம்
- எசமான் வீடு நொடித்து விட்டதென்று நாய் பட்டினியாக இருந்ததாம்
- எசமான் வெளிலே போனால் பசங்கள் எல்லாம் கும்மாளம் போடுவார்கள்
- எட்கிடை நெற்கிடை விட்டு எழுது
- எட்டாக் கனியைப் பார்த்து இச்சித்து என்ன பயன்?
- எட்டாத தேனுக்கு ஏறாத நொண்டி கொட்டாவி விட்ட கதை போல
- எட்டாத பழம் புளிக்கும்
- எட்டாத மரத்து இளநீர் போல ஒட்டாத பேரோடே உறவாக நிற்காதே
- எட்டாப் பழத்திற்குக் கொட்டாவி விட்டாற் போல
- எட்டாப் பூத் தேவருக்கு எட்டும் பூத் தங்களுக்கு
- எட்டாம் நாள் வெட்டும் குதிரை; ஒன்பதாம் நாள் ஓடும் குதிரை
- எட்டாம் பேறு பெண் பிறந்தால் எட்டிப் பார்த்த வீடு குட்டிச்சுவர்
- எட்டாவது ஆண் பிறந்தால் வெட்டி அரசாளும்
- எட்டாளம் போனாலும் கிட்டாதது எட்டாது
- எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளலாம்
- எட்டி எட்டிப் பார்ப்பாரும், ஏணி வைத்துப் பார்ப்பாரும், குட்டிச்சுவர் போலக் குனிந்து நின்று பார்ப்பாரும்
- எட்டிக் கனியின்மேல் அழகாய் இருந்தும் உள்ளே இருக்கும் வித்தைப் போல்
- எட்டிக் குட்டி இறக்கிக் காலைப் பிடித்துக் கொள்கிறது
- எட்டிக் குடுமியைப் பிடித்து இறங்கிக் காலைப் பிடிக்கிறவன்
- எட்டிக்குப் பால் வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது
- எட்டிக் கோட்டை கட்டினால் கிட்டி மழை உண்டு
- எட்டிப் பழத்தை இச்சிக்கிறது போல்
- எட்டிப் பார்த்தால் எட்டு இழை நட்டம்
- எட்டிப் பார்த்தாற்போலக் கொட்டிக் கொண்டு போகிறான்
- எட்டிப் பிடித்தால் ஒரு கத்திப் பிடிக்கு ஆகாதா?
- எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
- எட்டி பழுத்தால் என்ன? ஈயாதார் வாழ்ந்தால் என்ன?
- எட்டி மரம் ஆனாலும் பச்சென்று இருக்க வேண்டும்
- எட்டி மரம் ஆனாலும் வைத்த மரத்தை வெட்டாதே
- எட்டி மரம் ஆனாலும் வைத்தவர்க்குப் பாசம்
- எட்டி முளையிலும் இரட்டி அதிகம் உண்டாகுமா?
- எட்டியிலே கட்டு மாம்பழம் உண்டாகுமா?
- எட்டியுடன் சேர்ந்த இலவும் தீப்படும்
- எட்டின மட்டும் வெட்டும் கத்தி; எட்டாத மட்டும் வெட்டும் பணம்
- எட்டினவன் ஆனாலும் முட்டப் பகை ஆகாது
- எட்டினால் குடுமியைப் பிடித்து எட்டாவிட்டால் காலைப் பிடிப்பது
- எட்டு அடி வாழை, கமுகு; ஈரடி கரும்பு, கத்தரி; இருபதடி பிள்ளை
- எட்டு அடி வாழையும் பத்தடி பிள்ளையும்
- எட்டு ஆள் வேலையை ஒரு முட்டாள் செய்வான்
- எட்டு இருக்கிறது, எழுந்திரடி அத்தையாரே
- எட்டு எருமைக்காரி போனாளாம், ஓர் எருமைக்காரியிடம்
- எட்டு எள்ளுக்குச் சொட்டு எண்ணெய் எடுப்பான்
- எட்டு என்றால் இரண்டு அறியேன்
- எட்டுக் கிழவருக்கு ஒரு மொட்டைக் கிழவி
- எட்டுக் குட்டுக் குட்டி இறங்கிக் காலைப் பிடிக்கிறது
- எட்டுக் கோவில் பூசை பண்ணியும் எச்சன் வீடு பட்டினி
- எட்டுச் சந்தைக்கு ஒரு சந்தை பொட்டைச் சந்தை
- எட்டுச் சிந்தாத்திரை ஒரு தட்டுதலுக்கு ஒக்கும்
- எட்டுச் செவ்வாய் எண்ணித் தலை முழுகில் தப்பாமல் தலைவலி போம்
- எட்டு நாயும் பெட்டைக் குட்டியும் போல்
- எட்டுப் படி அரிசியும் ஒரு கவளம்; ஏழூர்ச் சண்டை ஒரு சிம்மாளம்
- எட்டுப் பிள்ளைக்கு ஒரு செட்டுப் பிள்ளை போதும்
- எட்டும் இரண்டும் அறியாதவன்
- எட்டும் இரண்டும் அறியாத பேதை
- எட்டு மாட்டுக்கு ஒரு சாட்டை
- எட்டு முழமும் ஒரு சுற்று; எண்பது முழமும் ஒரு சுற்று
- எட்டு வருஷத்து எருமைக் கடா ஏரிக்குப் போக வழி தேடுகிறது
- எட்டு வட்டம் கட்டிக் கொண்டு எதிர்ப்புறம் போனாளாம்; அவள் பத்து வட்டம் கட்டிக் கொண்டு பரக்கப் பரக்க வந்தாளாம்
- எட்டு வீடு தட்டியும் ஓச்சன் குடி பட்டினி
- எட்டே கால் லக்ஷணமே, எமனேறும் வாகனமே
- எடக்கு நாட்டுக்குப் போனானாம் தேங்காய் வாங்க
- எடுக்கப் பிடிக்க ஆள் இருந்தால் வரப்பு ஏறிப் பேள்கிறதற்கும் கஷ்டம்
- எடுக்கப் போன சீமாட்டி இடுப்பு ஒடிந்து விழுந்தாளாம்
- எடுக்கிறது எருத்து மட்டுச் சுமை; படுக்கிறது பஞ்சணை மெத்தை
- எடுக்கிறது சந்தைக் கோபாலம்; ஏறுகிறது தந்தப் பல்லக்கா?
- எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு
- எடுக்கிறது வறட்டிச் சுமை; நடக்கிறது தங்கச் சிமிழ்ப் பாதரட்சை
- எடுக்கு முன்னே கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம்
- எடுத்த அடி மடங்குமா?
- எடுத்த கால் வைப்பதற்குள் வைத்த கால் செல் அரிக்கிறது
- எடுத்த கை சிவக்கும்
- எடுத்த சுமை சுமத்தல்லவோ இறக்க வேண்டும்?
- எடுத்தாலும் பங்காருப் பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்க வேண்டும்
- எடுத்தாலும் பெயர் சரியாய் எடுக்க வேணும்
- எடுத்தாற் போல் தப்பட்டைக்காரன் பட்டான்
- எடுத்து ஆளாத பொருள் உதவாது
- எடுத்து எடுத்து உழுதாலும் எருதாகுமா கடா
- எடுத்து எறிந்து பேசுகிறான்
- எடுத்துக் கவிழ்த்துப் பேசுகிறான்
- எடுத்துச் சொல்; முடித்துச் சொல்
- எடுத்துப் பிடித்தால் வெட்டுவேன் என்ற கதை
- எடுத்துப் போட்டு அடிக்கிறது; முறத்தைப் போட்டுக் கவிழ்க்கிறது
- எடுத்து மூடிவிட்டு எதிரே வந்து நிற்பான்
- எடுத்து விட்ட எருது போல
- எடுத்து விட்ட நாய் எத்தனை நாளைக்குக் குரைக்கும்?
- எடுத்து விட்ட மாடு எத்தனை தூரம் ஓடும்?
- எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேணும்
- எடுப்பது பிச்சை; ஏறுவது பல்லக்கு
- எடுப்பார் கைப் பாவை போல
- எடுப்பார் கைப் பிள்ளை
- எடுப்பார் மழுவை; தடுப்பார் புலியை; கொடுப்பார் அருமை
- எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால் பிள்ளை களைத்தாற் போல இருக்கும்
- எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டு
- எடுப்பாரைக் கண்டால் குடமும் கூத்தாடும்
- எடுப்புண்ட கலப்பை இருந்து உழுமா?
- எண் அற்றவர் கண் அற்றவர்; எழுத்தற்றவர் கழுத்தற்றவர்
- எண் அறக் கற்று எழுத்து அற வாசித்தாலும் பெண்புத்தி பின் புத்திதான்
- எண் இல்லாதவர் கண் இல்லாதவர்
- எண் காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே
- எண்சாண் இருக்க இடி விழுந்ததாம் வயிற்றிலே
- எண்சாண் உடம்பிலே எள்ளத்தனை இரத்தம் இல்லை
- எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்
- எண்சாண் உடம்பு இருக்கக் கோவணத்திலே விழுந்ததாம் இடி
- எண்சாண் உடம்பும் ஒரு சாண் ஆனேன்
- எண்ணத்தில் மண் விழுந்தது
- எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது
- எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக் கொள்ள, தட்டுவாணிக் குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம்
- எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணை மண்ணைத் தின்னு கையில் குருட்டுக் கழுதை கோதுமை ரொட்டிக்கு அழுகிற தாம்
- எண்ணம் அற்ற ராஜா பன்றிவேட்டை ஆடினாற்போல்
- எண்ணம் இட்டவன் தூங்கான்; ஏடு எடுத்தவனும் தூங்கான்
- எண்ணம் எல்லாம் பொய்; எமன் ஓலை மெய்
- எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய்
- எண்ணம் எல்லாம் பொய்; ஏளிதம் மெய்
- எண்ணம் எல்லாம் பொய்; மெளனமே மெய்
- எண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்
- எண்ணிச் சுட்டது தேசை
- எண்ணிச் செய்கிறவன் செட்டி; எண்ணாமல் செய்கிறவன் மட்டி
- எண்ணிச் சுட்ட பணியாரம், பேணித் தின்னு மருமகனே மருமகனே
- எண்ணிச் செட்டுப் பண்ணு; எண்ணாமல் சாகுபடி பண்ணு
- எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி
- எண்ணிச் செய்வது செட்டு; எண்ணாமல் செய்வது வேளாண்மை
- எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு
- எண்ணிப் பார் குடித்தனத்தை; எண்ணாதே பார் வேளாண்மையை
- எண்ண முடியாது; ஏட்டில் அடங்காது
- எண்ணிய எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய்
- எண்ணிய எண்ணம் என்னடி? அண்ணா என்று அழைத்த முறை என்னடி?
- எண்ணிய ஒரு குடிக்கு ஒரு மின்னிய குடி
- எண்ணினேன் ஒரு கோடி, இழப்பது அறியாமல்
- எண்ணும் எழுத்தும் கண்ணும் கருத்தும்
- எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
- எண்ணெய் இல்லாத பந்தம், எரியுதடி தங்கம்
- எண்ணெய்க்குச் சேதமே ஒழியப் பிள்ளை பிழைக்கிறதில்லை
- எண்ணெய்க் குடத்தில் குளிப்பாட்டின ஆனைக்குட்டி போல
- எண்ணெய்க் குடத்திலே பிடுங்கி எடுத்தாற் போல
- எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு போல
- எண்ணெய்க் குடம் உடைந்தவளும் அழுகிறாள்; தண்ணீர்க்குடம் உடைந்தவளும் அழுகிறாள்?
- எண்ணெய்க் குடம் உடைந்தாலும் ஐயோ! தண்ணீர்க்குடம் உடைந்தாலும் ஐயோ!
- எண்ணெய்க் குடம் போட்டவனும் அப்பாடா. அம்மாடி; தண்ணீர்க் குடம் போட்டவனும் அப்பாடி, அம்மாடி
- எண்ணெய்க் குடமும் வெறும் குடமும் முட்டினால் எதற்குச் சேதம்?
- எண்ணெய் கண்ட இடத்தில் தடவிக் கொண்டு சீப்புக் கண்ட இடத்தில் தலை வாரிக் கொள்கிறது
- எண்ணெய் காணாத மயிரும் தண்ணீர் காணாத பயிரும்
- எண்ணெய் குடித்த நாய் திண்ணையில் கிடக்க, எதிரே வந்த நாய் உதைபட்டது மாதிரி
- எண்ணெய்ச் சேதமே ஒழியப் பிள்ளை பிழைக்கவில்லை
- எண்ணெய் தடவிக் கொண்டு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவது தானே ஒட்டும்?
- எண்ணெய்ப் பிள்ளையோ? வண்ணப் பிள்ளையோ?
- எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்ப்பார் உண்டோ?
- எண்ணெய் முந்துமோ? திரி முந்துமா?
- எண்ணெயில் இட்ட அப்பம் போலக் குதிக்கிறான்
- எண்ணெயில் விழுந்த ஈயைப் போல
- எண்ணெயைத் தேய்க்கலாம்; எழுத்தைத் தேய்க்க முடியாது
- எண்பது அடிக் கம்பத்தில் ஏறி ஆடினாலும் இறங்கி வந்துதான் சம்மானம் வாங்க வேண்டும்!
- எண்பது வயசுக்கு மண் பவளம் கட்டிக் கொண்டாளாம்
- எண்பது வேண்டாம்; ஐம்பதும் முப்பதும் கொடு
- எண் மிகுத்தவனே திண் மிகுத்தவன்
- எத்தனை ஏழையானாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற் போகாது
- எத்தனை சிரமம் இருந்தாலும் திண்டிக்குச் சிரமம் இல்லை *எத்தனை தரம் சொன்னாலும் பறங்கி வெற்றிலை தின்னான்
- எத்தனை தரம் துலக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா?
- எத்தனை தேய்த்தாலும் பித்தளைக்குத் தன் நாற்றம் இயற்கை
- எத்தனை பாட்டுப் பாடினாலும் எனக்கு நீ அருகதையோ?
- எத்தனை பிரியமோ அத்தனை சவுக்கை
- எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
- எத்தனை பேர் துடுப்புப் போட்டாலும் தோணி போவது சுக்கான் பிடிப்பவன் கையில் இருக்கிறது
- எத்தனைமுறை சொன்னாலும் பறங்கி வெற்றிலை போடமாட்டான்
- எத்தனை வந்தாலும் மிச்சம் இல்லை
- எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான்
- எத்தால் உரைத்தாலும் தட்டான் பவுனாக வளர்ந்ததாம் உண்டை
- எத்தால் கெட்டான் என்றால் நோரால் கெட்டான்
- எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்
- எத்திக் கழுத்தை அறுக்கிறதா
- எத்திலே பிள்ளை பெற்று இலவசத்திலே தாலாட்டுவது
- எத்துவாரை எத்தி நான் எலி பிடிச்சுக்கிட்டு வாரேன்; கேட்பாரை கேட்டு நாழி கேப்பை வாங்கித் திரி
- எத்தூருக்குப் போனாலும் புத்தூருக்குப் போகாதே
- எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்
- எத்தைக் கண்டு ஏய்த்தான்? துப்பைக் கண்டு ஏய்த்தான்
- எத்தைச் சொன்னானோ பரிகாரி, அத்தைக் கேட்பான் நோயாளி
- எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?
- எதற்கும் உருகாதவன் இச்சைக்கு உருகுவான்
- எதற்கு ஜோடிக்க வேணும், இடித்துக் கிழிக்க வேணும்
- எதற்கு தலம் பேசினால் அகப்பைச் சூன்யம் வைப்பேன்
- எதார்த்த வாதி வெகுஜன விரோதி
- எதிர்த்தவர் மார்புக்கு ஆணியாய் இரு
- எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்
- எதிர்த்த வீடு ஏகாலி வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு
- எதிர்த்தும்மல் எடுத்துக் கொடுக்கும்
- எதிர் நீச்சம் போடுகிறான்
- எதிர்ப்பாரைச் செயிப்பார் உண்டு
- எதிர் வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுதாம் கோவணமே?
- எதிர் வீடு ஏகாலி வீடு; பக்கத்து வீடு பணி செய்வோன் வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு
- எதிரி இளப்பமானால் கோபம் சண்டப் பிரசண்டம்
- எதிரிக்கு அஞ்சிப் படைக்குப் போகாதவன் நல்ல சேவகன் என்று கூறிக் கொண்டானாம்
- எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா?
- எதிரிக்குச் சகுனத் தடை என்று மூக்கை அறுத்துக் கொள்கிறதா?
- எதிரி சுண்டெலி ஆனாலும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்
- எதிரி போட்டு மா இடித்தால் குளுமை நெல்லுக்குச் சேதாரம்
- எதிரும் புதிரும் உட்கார்ந்து கொள்ளுதல்
- எது எப்படிப் போனாலும் தன் காரியம் தனக்கு
- எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும்
- எதை வாரிக் கட்டிக் கொண்டு போகிறது?
- எந்த ஆண்டாருக்கு எந்த மடம் சதம்?
- எந்த ஆயுதமும் தீட்டத் தீட்டச் சுடர்
- எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது
- எந்தத் தலைமுறையிலோ ஒரு நாத்தனாராம்; அவள் கந்தல் முறத்தை எடுத்துச் சாத்தினாளாம்
- எந்தத் துரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லுச் சுமை போகாது
- எந்த நாய் எந்தச் செருப்பைக் கடித்தால் என்ன?
- எந்த நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்கு ஆகாது
- எந்தப் புராணத்தில் இல்லாவிட்டாலும் கந்த புராணத்தில் இருக்கும்
- எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ?
- எந்தப் பொருளும் கந்த புராணத்திலே
- எந்த மடத்துக்கு எந்த ஆண்டி சதம்?
- எந்த வேஷம் வந்தாலும் தீவட்டிக்காரனுக்குக் கேடு
- எந்நேரமும் அவள் பேரில் கண்ணாய் இருக்கிறான்
- எப்படியாவது என் கோயில் வாழ
- எப்பயிர் செய்யினும் நெற்பயிர் செய்
- எப்பிறை கோணினாலும் தைப்பிறை கோணலாகாது
- எப்போது பார்த்தாலும் என்ன சண்டை, நாயும் பூனையும் மாதிரி?
- எம்மதமும் சம்மதம்
- எமன் ஏறுகிற கிடாவாக இருந்தாலும் உழுது விடுவான்
- எமன் ஒருவனைக் கொல்லும்; ஏற்றம் மூவரைக் கொல்லும்
- எமன் கடாவை ஏரில் பூட்டினது போல
- எமன் கையில் அகப்பட்ட உயிர் போல
- எமன் நினைக்கவும் பிள்ளை பிழைக்குமா?
- எமன் பிடித்தால் எவன் பிழைப்பான்?
- எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா?
- எமன் வாயிலிருந்து மீண்டது போல
- எமனுக்கு வழி காட்டுவான்
- எமனைப் பலகாரம் பண்ணிச் சுப்பிரமணியனைத் துவையல் அரைத்தாற் போல
- எமனையும் நமனையும் பலகாரம் செய்வான்
- எய்த்து இளைத்த நாய் போல ஓடி வருகிறான்
- எய்தவன் இருக்க அம்பை நோகலாமா?
- எய்தவன் எய்தால் அம்பு என்ன செய்யும்?
- எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்க்காதே
- எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
- எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளியது போல
- எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்
- எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற் போல்
- எரிகிற நெருப்பில் தண்ணீரைக் கொட்டலாமா?
- எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டு அடக்கலாமா?
- எரிகிற நெருப்புக்குப் பயந்து எண்ணெய்க் கொப்பரையில் விழுந்த மாதிரி
- எரிகிற நெருப்பை ஊதிக் கெடுத்தது போல
- எரிகிற புண்ணில் எண்ணெய் விட்டது போல
- எரிகிற புண்ணில் புளி இட்டது போல
- எரிகிற மூக்கில் திரியைக் கொளுத்தினாற் போல
- எரிகிற விளக்கில் எண்ணெய் விட்ட மாதிரி
- எரிகிற விளக்கு ஆனாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்
- எரிகிற வீட்டில் எண்ணெயை ஊற்றினாற் போல்
- எரிகிற வீட்டில் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டான்
- எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்
- எரிகிற வீட்டை அணைக்கக் கிணறு வெட்ட நாள் பார்த்தது போல
- எரிச்சல் வந்தல்லவோ அடிக்கும்? எழுப்பி விட்டா அடிக்கும்?
- எரிந்த பசியில் இழந்த மணியைத் தேடிப் போனாற் போல
- எரிநெருப்பை எண்ணெய் விட்டு அணைக்கலாமா?
- எரிப்புக்கு ஆற்றாமல் ஏர் உழப் போகிறேன்; கஞ்சியுடனே சாறு கொண்டு வா என்ற கதை
- எரிப்புக்காரன் பின்னோடு போனாலும் போகலாம்; செருப்புக்காரன் பின்னோடு போகக் கூடாது
- எரியும் உடம்பில் எண்ணெய் வார்த்தாற்போல்
- எரியும் கொள்ளியை ஏறத் தள்ளாதே
- எரு இல்லாப் பயிர் மாடு இல்லாக் கன்று போல
- எரு இல்லா வயல் கன்று இல்லா மாட்டுக்குச் சமம்
- எரு இல்லையேல் மறு பயிரும் இல்லை
- எரு உள்ள காட்டில் மடையனும் பயிர் செய்வான்
- எருக்கம் புதரில் மறைந்து ஆனையை வெகுள்விப்பான் போல
- எருக்கிலைக்கு மருக்கொழுந்து வாசனையா?
- எருக்குழியின்றி ஏர் பிடியாதே
- எருக்கைச் சொடுக்க வேணும்; ஈச்சைக் கிழிக்க வேணும்
- எருக்கை வெட்டி அடித்து ஏரைக் கட்டி உழு
- எருச் செய்கிறது இனத்தான் செய்ய மாட்டான்
- எருதாலம்மாவுக்குக் கல்யாணம்; எரு முட்டைப் பணியாரம்
- எருதில் ஏழை உண்டா?
- எருதின் நோய் காக்கை அறியுமா?
- எருதின் புண்ணுக்குச் சாம்பல் மருந்து
- எருது இளைத்தால் எல்லாம் இளைக்கும்
- எருது இளைத்தால் காக்கை மச்சான் முறை வைத்துக் கூப்பிடும்
- எருது ஈன்றது என்றால் தோட்டத்திலே கட்டு என்பது போல
- எருது ஈன்றது என்னுமுன் என்ன கன்று என்றது போல
- எருது உழவுக்குக் காய்கிறது; உண்ணி எதற்குக் காய்கிறது?
- எருது உழுகிறதாம்; உண்ணி விடாய்க்கிறதாம்
- எருது ஏழை ஆனால் பசு பத்தினித்துவம் கொண்டாடும்
- எருது ஏறாதவரையும் பசு பத்தினி கொண்டாடும்
- எருதுக்குச் சூடு போட்டது போல
- எருதுக்கு நோய் வந்தால் கொட்டகையைச் சுடுகிறதா?
- எருதுக்கும் தன் புண் அழற்சி; காக்கைக்கும் தன் பசி அழற்சி
- எருது கூடா விட்டால் பசு பத்தினி விரதம் கொண்டாடும்
- எருது கெட்டார்க்கும் எட்டுக் கடுக்காய்; இளம் பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டுக் கடுக்காய்
- எருது கெடுத்தார்க்கும் ஏழே கடுக்காய்; ஈனாப் பெண்டிர்க்கும், ஏழே கடுக்காய், படை எடுத்த மன்னர்க்கும் ஏழே கடுக்காய்
- எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது; பறையன் கொழுத்தால் பாயில் இருக்க மாட்டான்
- எருது கோபம் கொண்டு பரதேசம் போனது போல
- எருது சுமந்தது; கோணி கொண்டது
- எருது தன் கொம்பால் பிடிபடுகிறது; மனிதன் தன் நாவால் பிடிபடுகிறான்
- எருது தன் நோயை நினைக்கும்; காக்கை தன் பசியை நினைக்கும்
- எருது நினைத்த இடத்தில் தோழம் கட்டுகிறதா?
- எருது நினைத்த இடத்தில் புன்செய்க்கு உழுகிறதா?
- எருது நினைத்தால் கொட்டகை கட்டுகிறதா?
- எருது நோய் உண்ணிக்கு என்ன தெரியும்?
- எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
- எருது நோயை நினைக்கும்; காக்கை பசியை நினைக்கும்
- எருது பொதி சுமந்தாற் போல
- எருதும் எருதும் போராட நடுப்புல்லுத் தேய்ந்தாற் போல
- எருதும் வண்டியும் ஒத்தால் மேடு எது? பள்ளம் ஏது?
- எருது மறைவில் புல்லுத் தின்கிறாயா?
- எருப் போட்டவன் காடு விளையுமா? ஏர் உறிஞ்சாக் காடு விளையுமா? என்றாற் போல
- எருப்போட்டு ஏர் இடு
- எருமணம் இல்லாத பயிரும் நறுமணம் இல்லாத மலரும் வீணே
- எருமுட்டைப் போரைப் பேய் அடிக்குமா?
- எருமை இருந்தால் அல்லவோ பால் கறக்க வேணும்?
- எருமைக்கடா சந்தைக்குப் போச்சாம்; அங்கேயும் கட்டி உழுதானாம்
- எருமைக் கடா என்றாலும் குழந்தைக்கு ஒரு பீர் பால் கொடு என்கிறாய்
- எருமைக் கன்று அருமைக் கன்று
- எருமைக் கிழமும் மாப்பிள்ளைக் கிழமும் இல்லை
- எருமைக்குச் சூடு போட்டது போல
- எருமைக்கு வெள்ளாடு ஏத்தக் கறக்குமா?
- எருமைக் கொம்பு காய்வதற்கு முன் எட்டுத்தரம் மழை பெய்யும்
- எருமைக் கொம்பு நனைகிறதற்குள்ளே எழுபது தரம் மழை வருகிறது
- எருமைக் கோமயம் எக்கியத்துக்கு ஆகுமா?
- எருமைச் சாணி ஓமத்திற்கு ஆகுமா?
- எருமைப் பிட்டத்திலே விளக்கு வைத்தாற் போல
- எருமை போய் ஏரியிலே விழுந்தால் தவளைத் தானே குதித்தோடும்
- எருமை மாட்டின்மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது; பசு மாட்டின்மேல் ஒரு சூடு இருந்தாலும் தெரியும்
- எருமை மாட்டின்மேல் மழை பெய்தது போல
- எருமை மாட்டுப் பிட்டத்தில் விளக்கு வைத்துப் படித்தான்
- எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டுக் கொண்டு விலை பேசுகிறது
- எருமை மாடு கன்றுக்குட்டி போட்டாற் போல
- எருமை மாடு மூத்திரம் பெய்தாற் போல
- எருமை முட்டைப் புராணம் வாசிக்கிறான்
- எருமை மூத்திரம் லேகியத்திற்கு ஆகுமா?
- எருமையிலும் வெள்ளாடு ஏறக் கறக்குமா?
- எருமை வாங்குமுன் ஏன் விலை கூறுகிறாய்?
- எருமை வாங்கும்முன் நெய் விலை பேசுகிறதா? பிள்ளை பெறுமுன் பெயர் வைக்கிறதா?
- எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறுகிறதா?
- எருவுக்குப் போனவன் இளையாளைக் கைப்பிடித்தாற் போல
- எருவுக்குப் போனவன் எலுமிச்சம் பழம் எடுத்தது போல
- எருவும் தண்ணீரும் உண்டானால் எந்த நிலமும் விளையும்
- எல்லப்ப செட்டி லக்க ஏக லக்க
- எல்லா ஓட்டும் குல்லாவிலே
- எல்லாத் தாட்டோட்டும் என் குல்லாய்க்குள்ளே
- எல்லாம் அதிசயந்தான்; ஆக்குகிறது பூஜ்யந்தான்
- எல்லாம் அறிந்தவனும் இல்லை; ஒன்றும் அறியாதவனும் இல்லை
- எல்லாம் அறிந்தும் கழுநீர்ப் பானையில் கை இடுகிறதா?
- எல்லாம் அறியாதவனும் இல்லை; யாதும் அறிந்தவனும் இல்லை
- எல்லாம் இருக்கிறது பெட்டியிலே, இலைக்கறி கடையச் சட்டி இல்லை
- எல்லாம் ஈசல் செயல்
- எல்லாம் ஏறி இளைத்த குதிரையின்மேல் தம்பி பொற்பட்டம் கட்டிப் புறப்பட்டான்
- எல்லாம் களத்தின்மேல் விளைவு
- எல்லாம் கிடக்க எருதுக்குச் சீமந்தமாம்
- எல்லாம் கிடக்க எருமை மாட்டுக்கு என்ன?
- எல்லாம் சரி என்று எண்ணலாமா?
- எல்லாம் செய்து விட்டுக் கழுநீர்ப் பானையில் கையை விட்டான்
- எல்லாம் சொல்லும் பல்லி கழுநீர்ப் பானையில் விழுந்ததாம் துள்ளி
- எல்லாம் தபோபலத்தால் கைகூடும்
- எல்லாம் தெரிந்த நாரி, நிமிண்டி ஏற்றடி விளக்கை
- எல்லாம் தெரிந்தவர்களுக்குக் கொஞ்சம் தெரியாது
- எல்லாம் தெரியும்; ஒன்றும் தெரியாது
- எல்லாம் மாயை என்கிறதைக் கண்டேன்
- எல்லா மீனுக்கும் பெரிய மீன் நான்தான்
- எல்லார் தலையிலும் எட்டு எழுத்து; பாவி தலையில் பத்து எழுத்து
- எல்லார் வீட்டுத் தோசையிலும் ஓட்டை
- எல்லாருக்கும் உண்டு இலையும் பழுப்பும்
- எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது
- எல்லாருக்கும் சளி துரும்பு போல; எனக்குச் சளி மலை போல
- எல்லாருக்கும் சொல்லும் பல்லி தான் போய்க் காடிப் பானையில் விழுமாம்
- எல்லாருக்கும் புத்தி இருந்தால் புத்தி இல்லாதவன் ஆர்?
- எல்லாருக்கும் ஆளின் கீழே நுழைந்தால், இவன் ஆளின் நிழலின் கீழே நுழைவான்
- எல்லாரும் ஆளை மேய்ந்தால், இவன் அவன் நிழலை மேய்ப்பான்
- எல்லாரும் உலர்த்தினார்கள் என்று எலியும் தன் வாலை உலர்த்தியதாம்
- எல்லாரும் உழுதார்களென்று ஈழவனும் உழுதானாம்
- எல்லாரும் எல்லாரும் என் தலையில் குட்டுகிறார்; என்னைப் பெற்ற தாயாரும் என் தலையில் குட்டுகிறாள்
- எல்லாரும் என் மண்டையில் பொங்கித் தின்கிறார்கள்
- எல்லாரும் சட்டியைப் போட்டு உடைத்தால் இவன் சிரட்டையைப் போட்டு உடைக்கிறான்
- எல்லாரும் ஏறி இளைத்த குதிரையின் மேல் சாஸ்திரியார் ஏறிச்சரிந்து விழுந்தார்
- எல்லாரும் கப்பல் ஏறி ஆயிற்று; இனி அம்மானார் பொற்பட்டம் கட்டப் போகிறார்
- எல்லாரும் கூடி எனக்குக் குல்லாப் போட்டார்கள்
- எல்லாரும் கூடிக் குல்லாவைத் தந்தார்கள்
- எல்லாரும் தடுக்கின் கீழே நுழைந்தால் அவன் கோலத்தின் கீழ் நுழைகிறான்
- எல்லாரும் தேங்காய் உடைத்தால் நான் சிரட்டையாவது உடைக்கலாம்
- எல்லாரும் நல்லவர்கள், சேர்ந்தால் பெரியவர்கள்
- எல்லாரும் நல்லாரா? கல் எல்லாம் மாணிக்கமா?
- எல்லாரும் நெல்லை உலர்த்தினால் எலி வாலை உலர்த்திற்றாம்
- எல்லாரும் ரெட்டியார் ஆனால் பின்னே ஓடுகிறது ஆர்?
- எல்லாரும் பல்லக்கு ஏறினால் சுமப்பவர் யார்?
- எல்லாரும் பாக்கு; இவன் ஒரு தோப்பு
- எல்லாரையும் காக்க ஓர் ஈசன் இருக்கிறான்
- எல்லாரையும் சொல்லி ராஜா குசு விட்டானாம்
- எல்லாவற்றுக்கும் உண்டு இலையும் பழுப்பும்
- எல்லாவற்றுக்கும் ஒரு சொட்டு உண்டு
- எல்லாவற்றுக்கும் ஓர் அழுகை அழுங்கள்
- எல்லாவற்றையும் செய்து கழுநீர்ப் பானையில் கைவிட்டது போல
- எல்லா வீட்டிற்கும் இரும்பு அடுப்பே ஒழியப் பொன் அடுப்பு இல்லை
- எல்லா வேலையும் செய்வான்; செத்தால் பிழைக்கமாட்டான்
- எல்லி செட்டி லக்க ஏக லக்க
- எல்லை கடந்தால் தொல்லை
- எல்லை சுற்றின பிடாரி மாதிரி
- எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமை விடார்
- எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
- எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
- எலக்ட்ரியை நம்பி இலை போடாதே
- எலி அம்மணத்தோடே போகிறது என்கிறான்
- எலி அழுதால் பூனை விடுமா?
- எலி அழுது புலம்பினாலும் பூனை விட்டுவிடுமா?
- எலி அறுக்கும்; தூக்க மாட்டாது
- எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்
- எலி எட்டப் பாம்பு குடிகொள்ள
- எலிக்கு அஞ்சிச் சந்நியாசம் போனது போல
- எலிக்கு அஞ்சுவான்; புலிக்கு அஞ்சானாம்
- எலிக்கு அநுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல்; எளியார்க்கு அநுகூலம் வலியார் அரசனுக்கு அஞ்சுதல்
- எலிக்கு இரணம்; பூனைக்குக் கொண்டாட்டம்
- எலிக்குத் திண்டாட்டம்; பூனைக்குக் கொண்டாட்டம்
- எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டது போல
- எலிக்குப் பிராணாவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம்
- எலிக்குப் பூனை பயப்படுமா?
- எலிக்கு மணியம், சுவரை அறுக்கிறது
- எலிக்கு வலி, பூனைக்குக் கொண்டாட்டம்
- எலி கடித்தால் சிறுபாலை அடி
- எலி தலையிலே கோடரி விழுந்தது போல
- எலி தலையிலே கோபுரம் இடிந்து விழுந்தது போல
- எலிப் பகை தொலைக்க, இருந்த வீட்டில் தீயிடல் போல
- எலிப் பாழாக இருந்தாலும் தனிப் பாழாக இருக்க வேண்டும்
- எலிப் புழுக்கை இறப்பில் இருந்தென்ன? வரப்பில் இருந்தென்ன?
- எலி பூனைக்குச் சலாம் போடுவது போல
- எலி பூனைய வெல்லுமா?
- எலி பெருத்தால் பெருச்சாளி ஆகுமா?
- எலியாரைப் பூனையார் வாட்டினால் பூனையாரை நாயார் வாட்டுவார்
- எலியின் சிறங்கை சில தானியத்தால் நிரம்பும்
- எலியும் பூனையும் இணைந்து விளையாடினது போல
- எலியும் பூனையும் போல
- எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா?
- எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ?
- எலியைத் தவற விட்ட பூனை போல
- எலியோ, பூனையோ சர சர என்கிறது; என்னடி சிறுக்கி பயமுறுத்துகிறாய்?
- எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும்
- எலி வளையில் பாம்பு குடிபுகுந்தாற் போல
- எலி வீட்டைச் சுற்றுகிறது; விருந்தாளி பெண்டுகளைச் சுற்றுகிறான்
- எலி வீடு கட்டப் பாம்பு குடி கொள்ளும்
- எலி வெட்டிச் சோதிக்கிறாற் போல்
- எலி வேட்டை ஆடத் தவில் வேணுமா?
- எலும்பு இல்லா நாக்கு எல்லாம் பேசும்
- எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
- எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்பும் சோறும் ஏன்?
- எலும்பு ருசியை நாய்தான் அறியும்?
- எலும்பைக் கடிப்பானேன்? சொந்தப் பல்லும் போவானேன்?
- எலும்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தான்
- எலும்பே இல்லாத நாக்கு எலும்பு உள்ள மனிதனை எழவிடாமல் பண்ணிவிடுகிறது
- எலுமிச்சங் காய்க்குப் புளிப்பு ஏற்றுகிறது போல
- எலுமிச்சஞ் செடிக்கு எருப் போட்டாற் போல
- எலுமிச்சம் பழம் என்றால் தெரியாதா? இஞ்சி போலக் கசக்கும் என்றானாம்
- எவ்வளவு தின்றாலும் நாய் வயிறு ஒட்டித்தான் இருக்கும்
- எவ்வளவு புரண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்
- எவர் வைத்த தீயோ, வீடு வெந்து போயிற்று
- எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?
- எவன் பெண்டாட்டி எவனோடு போனாலும் லெப்பைக்கு மூன்று பணம்
- எவனோ செத்தான்; அவள் ஏன் அழுதாள்?
- எவனோ சொல்வானாம் கதை; அதைப் போல இருக்கிறதே!
- எவனோ வைத்தான் தோப்பு; அதை இழுத்தடித்ததாம் காற்று
- எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி
- எழுத்து அறச் சொன்னாலும் பெண் புத்தி பின்புத்தி
- எழுத்து அறிந்த மன்னன் கிழித்தெறிந்தான் ஓலை
- எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை
- எழுத்து அறியாதவன் ஏட்டைச் சுமந்தது போல
- எழுத்து இல்லாதவன் கழுத்து இல்லாதவன்
- எழுத்து எண்ணிப் படித்தவன்
- எழுத்துக்குப் பால் மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால் மாறிய தாசியும் கெடுவர்
- எழுதத் தெரியாதவன் ஏட்டைக் கெடுத்தான்
- எழுத வழங்காத வாழ்க்கை கழுதை புரண்ட களம்
- எழுத வாசிக்கத் தெரியாமற் போனாலும் எடுத்துக் கவிழ்க்கத் தெரியும்
- எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
- எழுதாத ஓலையும் பீற்றல் முறமும் வந்தது போல்
- எழுதி அறான் கணக்குக் கழுதை புரண்ட களம்
- எழுதிய விதி அழுதால் திருமா?
- எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்
- எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
- எழுதுகிற எழுத்தாணி இரட்டைக் கூர்பட்டாற் போல
- எழுதுகிற எழுத்தாணி குத்துகிறது போல
- எழுதுகிறது பெரிது அல்ல; இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது
- எழுதுவது அருமை; எழுதினதைப் பழுதற வாசிப்பது அதிலும் அருமை
- எழுந்ததும் தொழு; தொழுததும் படு
- எழுந்தருளும் கோவிலுக்கு விளக்குப் பிடிக்க
- எழுந்திருக்கச் சொன்னவர்கள் என் பாவம் கொண்டவர்கள்
- எழுந்திருக்கப் பால் மாறி இல்லை என்றாளாம் பிச்சை
- எழுந்திருப்பான்; கால் இல்லை
- எழுப்பவோ, துஞ்சு புலியைத் துயில்
- எழுபது சொன்னாலும் பறை ஏவினால்தான் செய்யும்
- எழுபது பேரைக் கொன்ற படுநீலி
- எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது
- எள் உருண்டை போல
- எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருவான்
- எள் என்பதற்கு முன்னே எண்ணெய் எங்கே என்கிறான்
- எள் ஏன் காயுது? எள் எண்ணெய்க்கு; எலிப் புழுக்கை ஏன் காயுது? கூடக் கிடந்த குற்றத்துக்கு
- எள் போட்டால் எள் விழாது
- எள் விதைத்த காட்டில் கொள் முளையாது
- எள் விதைத்தால் துவரை விளையுமா?
- எள் விழுந்தால் எடுக்க மகா சேனை; இடறி விழுந்தால் எடுக்க மனிதர் இல்லையே!
- எள் விழுந்தால் கீழே விழாது
- எள்ளிலும் சின்ன இலை என்ன இலை? விடத்தாரி இலை
- எள்ளுக்காய் பிளந்த விவகாரம்
- எள்ளுக்காய் பிளந்தாற் போலப் பேச வேண்டும்
- எள்ளுக்காய் முள்ளுத் தெறிப்பது போல
- எள்ளுக்கு ஏழு உழவு உழுகிற வேளை, வேளாளா, கொள்ளுக்கு ஓர் உழவு உழுது பயிர் செய்
- எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஓர் உழவு
- எள்ளுக்குத் தக்க எண்ணெய், எண்ணெய்க்குத் தகுந்த பிண்ணாக்கு
- எள்ளுக்குப் புள்ளு வரும்; எச்சிற்கு எறும்பு வரும்
- எள்ளுக்குள் எண்ணெய் போல
- எள்ளுக்குள் எண்ணெய் எங்கும் நிறைந்திருக்கும்
- எள்ளுக் குறுணி; எலி முக்குறுணி
- எள்ளுடன் ஏதோ காய்கிறது என்பார்கள்
- எள்ளுத்தான் எண்ணெய்க்குக் காய்கிறது; எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது? கூடக் கிடந்த பாவம்
- எள்ளுத் தின்றால் எள்ளளவு பசி தீரும்
- எள்ளுப் பயிரானாலும் நெல்லுப் பயிர் செய்
- எள்ளுப் பயிருக்கு எழுபது நாள்
- எள்ளுப் போட்டால் எள் எடுக்கப் போகாது
- எள்ளும் அரிசியும் கலந்தாற் போல
- எள்ளும் கரும்பும் இறுக்கினாற் பலன் தரும்
- எள்ளும் கரும்பும் எடுக்கும் பயிராம்
- எள்ளும் கொள்ளும் எழுபது நாள்
- எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டியதுதான்
- எள்ளும் தண்ணீரும் கரத்தில் ஏந்திச் செல்கிறான்
- எள்ளும் தண்ணீரும் விட்டுத் தத்தம் பண்ணினேன்
- எள்ளும் தினையும் எழுபது நாளில் பலன் தரும்
- எள்ளும் பச்சரிசியும் கலந்தாற் போல்
- எள்ளும் பச்சரியும்போல் இருக்க வேண்டும்
- எள்ளு விதைக்க எறங்காடு; கொள்ளு விதைக்கக் கல்லங்காடு
- எள்ளுள் எண்ணெய் போல்
- எள்ளைத் தின்றான், எனக்கு உழைக்கிறான்
- எள்ளை நீக்கிக் கொண்டு வரப்போன பேய் எண்ணெய் கொண்டு வர இசைந்தது போல
- எள்ளைப் பிய்த்து எழுபது பேருக்குக் கொடுப்பது போல
- எளியவன் பிள்ளை ஆனாலும் செய்ய வேண்டிய சடங்கு செய்ய வேண்டும்
- எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துணி
- எளியவனாய்ப் பிறந்தாலும் இளையவனாய்ப் பிறக்கக் கூடாது
- எளியவனுக்குப் பெண்டாட்டியாய் இருக்கிறதைவிட வலியவனுக்கு அடிமையாகிறது நலம்
- எளியவனைக் கண்டு புளியங்காய் பறிக்கிறான்
- எளியவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான்
- எளியாரை எதிரிட்டுக் கொண்டால் பிரான ஹாளி
- எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
- எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும்
- எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்
- எற்று சால் எண்ணாயிரம் பொன்
- எறிகிறது முயலுக்கு; படுகிறது பற்றைக்கு
- எறிச்ச கறி பழையமுது எந்நாளும் கிடைக்குமா?
- எறிந்த கல் விழுகிற மட்டும்
- எறிந்த கல்லைக் கவுளிற் கொண்ட களிறு போல
- எறிவார் கையிலே கல்லைக் கொடுக்கிறதா?
- எறிவானேன்? சொறிவானேன்?
- எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது; ஆனையின் கண் அதன் அளவுக்குச் சிறிது
- எறும்பு ஆனை ஆகுமா? துரும்பு தூண் ஆகுமா?
- எறும்பு இட்டலியைத் தூக்கியது போல
- எறும்பு ஊர்வது போல
- எறும்பு ஊர இடம் கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்
- எறும்பு ஊர கல்லும் தேயும்
- எறும்பு ஊரில் பெரும்புயல் வரும்
- எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறதா?
- எறும்பு எண்ணாயிரம், அப்பாற் கழுதையும் கை கடந்தது என்றபடி
- எறும்பு எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும்
- எறும்புக் கடிக்கு மருந்தா?
- எறும்புக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் சமுத்திரம்
- எறும்புக்குத் தெரியாத கரும்பா?
- எறும்புக்குத் தன் மூத்திரமே வெள்ளம்
- எறும்பு கட்டிய புற்றில் பாம்பு குடிபுகுந்தாற் போல்
- எறும்பு கடிக்கப் பொறுக்காதா?
- எறும்பு சேர்ப்பது போல எல்லோரும் சேர்க்க வேண்டும்
- எறும்பு தின்றால் எண்ணாயிரம் காலம்
- எறும்பு தின்றால் நூறு வயசு
- எறும்பு நுழைந்த ஆனைக் காது போல
- எறும்பு நுழைய இடம் கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்
- எறும்புப் புற்றில் பாம்பு குடி கொள்வது போல
- எறும்பும் தன் கையால் எண் சாண்
- எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும்
- எறும்பு முதல் ஆனை வரையில்
- என் காரியம் எல்லாம் நந்தன் படை வீடாய்ப் போயிற்று
- என் கிண்டி லட்சம் பொன்
- என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும்
- என் குடுமி அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது
- என் கை பூப்பறிக்கப் போகுமா?
- என் கையிலே எலும்பு இல்லையா?
- என் கை வெல்லம் தின்கிறதா?
- என் சீட்டுக் கிழிந்து போனால் அல்லவோ சாவு வரும்?
- என் தலைக்கு எண்ணெய் ஊற்று; எருமை மாட்டுக்கும் புல் போடு
- என் தோலைச் செருப்பாய்த் தைத்துப் போடுவேன்
- என் பிழைப்புச் சிரிப்பாய்ச்சிரிக்கிறது தெருவிலே
- என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேணும்
- என் புருஷனுக்கும் அரண்மனையில் வேலை
- என் பெண் பொல்லாது; உன் பிள்ளையை அடக்கிக் கொள்
- என் பேரில் தப்பு இருந்தால் என்னை மொட்டை அடித்துக் கழுதையின்மேல் ஏற்றிக் கொள்
- என்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்ந்தார்
- என் மகள் வாரத்தோட வாரம் முழுகுவாள்? என் மருமகள் தீவிளிக்குத் தீவிளி முழுகுவாள்
- என் மருமகனுக்கு வேப்பெண்ணெயாம் தூக்கெண்ணெய்; விளக்கெண்ணெயாம் தலைக்கு எண்ணெய்
- என் முகத்தில் கரி தடவாதே
- என் முகத்தில் கரி பூசினாயே!
- என் முகத்திலே பவிஷு இல்லை; கையிலே பணம் இல்லை
- என் முகுதுத் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கிறது
- என் முதுகை நீ சொறிந்தால் உன் முதுகை நான் சொறிவேன்
- என் வயிற்றிலே பாலை வார்த்தாய்
- என் வீட்டுக்குப் பூவாயி வரப் பொன்னும் துரும்பாச்சு
- என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்?
- என் வீடும் பாழ்; எதிர்த்த வீடும் பாழ்
- என்று நின்றும் பொன்றுவர் ஒரு நாள்
- என்றும் இடி குலைச்சல் எப்பொழுதும் நீங்குவது இல்லை
- என்றும் காய்க்கும் எலுமிச்சை
- என்றும் பயப்படுவதிலும் எதிரே போதல் உத்தமம்
- என்றைக்கு இருந்தாலும் கிணற்றங்கரைப் பிள்ளையார் கிணற்றிலேதான்
- என்றைக்கு இருந்தாலும் கொங்கல் காற்றோடே, குமுமம் ஆற்றோடே
- என்றைக்கு இருந்தாலும் திருடன் பெண்டாட்டி தாலி அறுக்கத்தான் வேண்டும்
- என்றைக்கு இருந்தாலும் திருமழபாடி ஆற்றோடே
- என்றைக்கும் போடாத லட்சுமி இன்றும் போடவில்லை; தினம் போடுகிற தேவடியாளுக்கு இன்றைக்கு என்ன கேடு வந்தது?
- என்ன, சின்னமலைக் கவுண்டன் அதிகாரம் போல் இருக்கிறதே!
- என்ன சொன்னாலும் என் புத்தி போகாது
- என்னடா அப்பா என்றானாம்; எலி அம்மணமாய் ஓடுகிறது என்றானாம்
- என்னடா ஒன்று ஒன்றாகக் குருவி போலப் கொரிக்கிறாய்?
- என்னடா. குச்சுக் கட்டிப் பேசுகிறாய்
- என்னடா கெட்டுப் போனாய் என்றால், இன்னமும் கெட்டுப் போகிறேன், பந்தயம் போடு என்கிறான்
- என்னடா சவுக்கம் கட்டிப் பேசுகிறாய்?
- என்னடா தாதா, புரட்டாசி மாசம் முப்பதும் ஒரு கந்தாயம்
- என்னடா பிரம்ம வித்தையோ?
- என்னடி அம்மா தெற்கத்தியாள், எந்நேரம் பார்த்தாலும் தொள்ளைக் காது
- என்னடி பெண்ணே கும்மாளம் என்றால் சின்ன மச்சானுக்குக் கல்யாணம்
- என்ன தின்றாலும் அதற்கு மேல் நாலு பேரீச்சம் பழம் தின்றால் எல்லாம் அடிபடும்
- என்னது இல்லை இரவல், மாமியாரது மரவை
- என்ன பிள்ளை? அணிற் பிள்ளை, தென்னம் பிள்ளை
- என்ன பெருமையடி ஏகாலி என்றால் அமுக்குப் பெருமையடி குருநாதா!
- என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது
- என்ன மாயம் இடைச்சி மாயம்? மோரோடுதண்ணீர் கலந்த மாயம்
- என்ன விலை ஆனாலும் நாய் நாய்தானே?
- என்னவோ சொன்னாளாம் பொம்மனாட்டி; அதைக் கேட்டானாம் கம்மனாட்டி
- என்ன ஜன்மம் வேண்டியிருக்கிறது? நாய் ஜன்மம்
- என்னால் ஆகாதது என் குசுவாலா ஆகும்?
- என்னால் ஆன உப்புத் திருமஞ்சனம்
- என்னிலும் கதி கெட்டவன் என்னை வந்து மாலையிட்டான்
- என்னிலும் மேல் இல்லை; என் நெல்லிலும் சாவி இல்லை
- என்னுடைய வீட்டுக்குப் பூவாயி வரப் பொன்னும் துரும்பாச்சு
- என்னை ஆட்டுகிறது, உன்னை ஆட்டுகிறது, மன்னி கழுத்துத் தாலி
- என்னை இடுக்கடி, பாயைச் சுருட்டடி
- என்னை ஏண்டா அடிக்கிறாய்? பிள்ளையாண்டிருக்கிறேன்
- என்னைக் கண்டால் சணலுக்குள்ளே ஒளிக்கிறாய்? என் பெண் சாதியைக் கண்டால் சட்டிக்குள்ளே ஒளிக்கிறாய்
- என்னைக் கலந்தவர்கள் என்றாலும் கைநிறையப் பொன் கொடுத்தால் புணர்ந்து விடுவேன்
- என்னைக் கெடுத்தது நரை, என் மகளைக் கொடுத்து முலை
- என்னை நம்பாதே, தாலி வாங்காதே
- என்னைப் பவிஷு ஆற்றுகிறான்
- என்னைப் பார் என் மேனி அழகைப் பார்
- என்னைப் போலக் குரலும் என் அக்காளைப் போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை
- என்னையும் பார்த்து இரவல் கேட்கிறதா?
- என்னை விடைந்தால் உன்னை விடைவேன்; அம்மலாமா
- எனக்கா கல்யாணம் என்றானாம்
- எனக்கு அஷ்டமத்துச் சனி
- எனக்கு ஊணும் இல்லை; உறக்கமும் இல்லை
- எனக்கு என்று ஒரு பெண்டாட்டி இருந்தால் சடக்கென்று ஓர் அடி அடிக்கலாம்
- எனக்குக் கட்டின லிங்கத்தைக் குழிப்பாக்கு விளையாடுவேன்
- எனக்குக் கொடுக்கிறதைக் கொடுத்தால் போகிறேன்
- எனக்குப் பழையது போடு; உனக்குப் பசியா வரம் தருகிறேன்
- எனக்குப் பாக்குப் பிடிக்கப் பார்க்கிறான்
- எனக்கு வேண்டாம் பூசணிக்காய்
- எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனாப்போல் ஆயின
ஏ
[தொகு]- ஏஊரையா என்றால் கேழ்வரகு எட்டுப் படி என்றானாம்.
- ஏகமும் செத்தவனே ஏறடா பாடையிலே.
- ஏகாத்தே என்றால் பூகாத்தே என்றாள்.
- ஏகாதசி என்றைக்கு என்றால் அகமுடையாள் புடைவையைப் பார்த்துச் சொல்கிறேன் என்றாளாம்.
- ஏகாதசித் திருடியை ஏற்றடா ரதத்தின்மேல்.
- ஏகாதசிக்கு மா இடித்தாற் போல.
- ஏகாதசி தோசை; இளையாள்மேல் ஆசை.
- ஏகாதசி பாஞ்சோத்; துவாதசி அச்சா ஹை.
- ஏகாதசி மரணம் என்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டானாம்.
- ஏகாதசி மரணம், துவாதசி தகனம்.
- ஏகாதசி மரணம் முக்தி என்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகிறதா?
- ஏகாதசியார் வீட்டுக்குச் சிவராத்திரியார் வந்து போன கதை.
- ஏகாதசி விரதம் என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா?
- ஏகாசி வீட்டில் சிவராத்திரி நுழைந்தாற் போல.
- ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற் போல.
- ஏகாக்ஷி லோக நாசினி.
- ஏகோதிஷ்டக் காரனுக்குச் சபிண்டிக்காரன் சாட்சி.
- ஏச்சிலும் பேச்சிலும் வல்லவனே.
- ஏச்சுக்கு ஒன்றும் இல்லை என்றால் எருமைக்காரனுக்கு முட்டியில் சிரங்கு.
- ஏட்டில் அடங்காது, எண்ணத் தொலையாது.
- ஏட்டில் சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்குமா?
- ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?
- ஏட்டுச் சுரைக்காயோ, வீட்டுச் சுரைக்காயோ?
- ஏட்டிக்குப் போட்டி, எகனைக்கு மொகனை.
- ஏடா கூடக்காரனுக்கு இடம் எங்கே என்றால் இருக்கிறவன் தலைமேலே என்பான்.
- ஏடாகூடம் எப்படி என்றால் போகின்றவன் தலையில் பொத்தென்று அடித்தான்.
- ஏடாகூடம் பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன்.
- ஏடு அறியாதவன் பீடு பெறாதவன்.
- ஏடு கிடக்கத் தோடு முடைந்தாளாம்.
- ஏடைக்கும் கோடைக்கும் இருந்தால் இழி கண்ணி.
- ஏண்டா கருடா சுகமா என்றால், இருக்கிற இடத்தில் இருந்தால் சுகந்தான் என்றான்.
- ஏண்டா தம்பி குருநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்?
- ஏண்டா தென்ன மரத்தில் ஏறுகிறாய் என்றால் கன்றுக்குட்டிக்குப் புல்பிடுங்க என்றான்; தென்ன மரத்தில் ஏதடா புல் என்றால் அதுதானே கீழே இறங்கி வருகிறேன் என்றான்.
- ஏண்டா பட்டப்பகலில் திருடினாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான்.
- ஏண்டா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் புளிய மரத்தில் புல் பறிக்க என்கிறான்.
- ஏண்டி கிழவி மஞ்சள் குளிக்கிறாய்? பழைய நினைப்படா பேரா.
- ஏணிக் கழிக்குக் கோணற் கழி வெட்டலாமா?
- ஏணிக்குக் கோணி.
- ஏணிக்குக் கோணியும் ஏட்டிக்குப் போட்டியும்.
- ஏணிக் கொம்புக்குக் கோணற் கொம்பு போடலாமா?
- ஏணியைத் தள்ளிவிட்டுப் பரண்மேல் ஏறலாமா?
- ஏணி வைத்தாலும் எட்டாது
- ஏணைக் கழிக்குக் கோணற் கழி வெட்டுகிறதா?
- ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டாற்போல்.
- எது என்று கேட்பாரும் இல்லை; எடுத்துப் பிடிப்பாரும் இல்லை.
- ஏதுக்கு வீணும் சாணும்.
- ஏதும் அற்றவனுக்கு எரிமுட்டைப் பாளையம் திருவிழா; போக்கற்றவனுக்குப் பொன்னேரித் திருவிழா.
- ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?
- ஏதும் இல்லை, எக்காந்தமும் இல்லை; பூநாகம்.
- ஏதும் இல்லை, எக்காந்தமும் இல்லை; பூநாகம்.
- ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை.
- ஏப்பம் பரிபூரணம்; சாப்பாடு பூஜ்யம்.
- ஏமாந்த சோணகிரி.
- ஏமாந்தால் நாமம் போடுவான்; இணைப்பு ஒட்டவில்லை.
- ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன்; இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.
- ஏர் அற்றவன் இரப்பாளி.
- ஏர் அற்றுப் போனால் சீர் அற்றுப் போகும்.
- ஏர் உழுகிறது; கன்னி கரைகிறது.
- ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
- ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போனால் போகிறது; பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்.
- ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மைத்துனன் முறை கொண்டாடும்.
- ஏர் உழுகிறவனுக்கு ஏகாதசி விரதமா?
- ஏர் ஓட்டுவதிலும் எரு விடுதல் நன்று.
- ஏர் நடந்தால் பேர் நடக்கும்.
- ஏர் பிடிக்கிறவனுக்கு இடது கையில் மச்சம்; வாழப் புகுந்தவளுக்கு வலது கையில் மச்சம்.
- ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
- ஏர் பிடித்தவன் முன்னேறினால் செங்கோல் பிடித்தவன் செழிப்பான்.
- ஏர் பூட்டுவதற்குள் பிராணன் போய்விடும்.
- ஏரி நிறைந்தால் கரை கசியும்.
- ஏரி உடைகிறதற்கு முன்னே அணை போட வேண்டும்.
- ஏரி உடைத்தவள் கம்பளியைப் பிடித்துக் கொண்டால் சரியா?
- ஏரி எத்தனை ஆள் கண்டிருக்கும்? ஆள் எத்தனை ஏரி கண்டிருப்பான்.
- ஏரிக்கு ஏற்ற எச்சக்கலை; குலத்துக்கு ஏற்ற குசவன் குட்டை.
- ஏரிக்குப் பயந்து கால் கழுவாமல் ஓடினானாம்.
- ஏரிக்கும் மடுவுக்கும் ஏற்ற வித்தியாசம்.
- ஏரி நிமிர்ந்தால் இடையனையும் பாராது.
- ஏரி நிரம்பினால் இடைக்கரை பொசியும்.
- ஏரி நிறைந்தால் கரை கசியும்.
- ஏரி நீரைக் கட்டுவது அரிது; உடைப்பது எளிது.
- ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.
- ஏரி மடை என்றால் நோரி மழை.
- ஏரி மிதந்தால் குடை அணை மிறியாது.
- ஏரி மேலே கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போனாள்.
- ஏரியோடு பகை செய்து ஸ்நானம் செய்யாதிருப்பதா?
- ஏரியோ தண்ணீர், சூரிய தேவா.
- ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
- ஏரை அடித்தேனோ, கூழை அடித்தேனோ?
- ஏரை இழந்தார் பேரை இழந்தார்.
- ஏலவே தொலைந்தது எங்களை தொட்ட கர்மம்.
- ஏலாத நாய்க்கு வால் டேங்குவது போல.
- ஏலேல சிங்கன் பொருள் ஏழு கடல் போனாலும் திரும்பும்.
- ஏலேலம்! ஏலேலம்! எருமைச் சாணி காய்கிறது.
- ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும்.
- ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
- ஏழரை நாட்டுச் சனியனை இரவல் வாங்கின கதை.
- ஏழு அறை கட்டி அதிலே வைத்தாலும் ஓர் அறையில் சோரம் போவாள்.
- ஏழாம் பொருத்தம்.
- ஏழு உழவு உழுதால் எருப் போட வேண்டாம்.
- ஏழு உழவுக்கு ஓர் எடுப்புழவு சரி என்பது போல்.
- ஏழு ஊர் சுற்றிப் பாழூர் மணத்தட்டை.
- ஏழு ஊர் லங்கடா, எருமைக்கடா காவு, வீட்டுக்கு ஒரு துடைப்பக் கட்டை, உஷார், உஷார்.
- ஏழு ஊருக்கு ஒரு கொல்லன்.
- ஏழு ஊருக்கு ஒரு தட்டான்.
- ஏழு மடிப்பு உழுத புலமும் ஏழு உலர்த்து உலர்த்தின விதையும் எழுபதுநாள் காய்ச்சல் தாளும்.
- ஏழு வருஷம் மஞ்சள் பயிர் இட்டால் என் நிறம் ஆக்கிடுவேன் என்று அது சொல்லும்.
- ஏழேழு ஜன்மத்துக்கும் போதும்.
- ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் ஒக்கும்.
- ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.
- ஏழை அடித்தானோ? கூழை அடித்தானோ?
- ஏழை என்கிற பிராமணனையும் சாது என்கிற பசுவையும் நம்பாதே.
- ஏழை என்றால் எவர்க்கும் எளிது.
- ஏழை என்றால் மோழையும் பாயும்.
- ஏழைக்கு இரங்கி வேளைக்கு உதவு.
- ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை; பணக்காரனுக்கு ஏற்ற பருப்புருண்டை.
- ஏழைக் குடித்தனம், ராஜவைத்தியம்.
- ஏழைக்கும் மோழைக்கும் காடுகாள் அம்மை.
- ஏழை பாக்குத் தின்ன எட்டு வீடு அறிய வேண்டுமா?
- ஏழைக்கு வாழை.
- ஏழைக் குறும்பு.
- ஏழை கர்வம் சும்மா இருக்கவிடாது.
- ஏழைகளின் செல்வம் பிள்ளைகளே.
- ஏழை கூழுக்கு உப்பில்லை என்று ஏங்குகிறான்; பணக்காரன் பாலுக்குக் சக்கரை இல்லை என்று ஏங்குகிறான்.
- ஏழை சொல் அம்பலம் ஏறாது.
- ஏழை தலையில் கங்கை குதித்தாற் போல்.
- ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை.
- ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை.
- ஏழை பேச்சு அம்பலம் பாயுமா?
- ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
- ஏழை வீட்டில் ஆனையைக் கட்டுவது போல.
- ஏழை வைத்தான் வாழை; மகளை வைத்தான் காவல்.
- ஏளிதம் பேசி இவ்வேடம் ஆனேன்.
- ஏற்கனவே கோணல் வாய்; அதிலும் கொட்டாவி விட்டால் எப்படி?
- ஏற்கனவே துர்ப்பலம்; அதிலும் கர்ப்பிணி.
- ஏற்கனவே மாமியார் அலங்கோலம்; அதிலே கொஞ்சம் பேய்க் கோலம்.
- ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் இப்போது கிழக்கோலம்.
- ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் அக்கிலி, பிக்கிலி.
- ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.
- ஏற்கை வாசனை, சேர்க்கை வாசனை.
- ஏற்பது இகழ்ச்சி.
- ஏற்றக் கோலுக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு வரும்.
- ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
- ஏற்றக் கோலுக்கும் அரிவாள் பிடிக்கும் உள்ள தாரதம்யம்.
- ஏற்றத்துக்கு மேல் காத்து நிற்பதை விட இரண்டு சால் தண்ணீருக்குக் கஞ்சி குடிக்கலாம்.
- ஏற்றப் பறி நிரம்பினால் சோற்றுப் பானை தானே நிரம்பும்.
- ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை; பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை.
- ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.
- ஏற ஆசைப்பட்டால் சாணாரப் பிறவி வேண்டும்.
- ஏற ஒன்று இறங்க ஒன்று, எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று, இன்னொன்று இருக்குது தந்தால் தா, தராவிட்டால் போ.
- ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
- ஏறச் சொன்னால் குதிரைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் ராவுத்தருக்குக் கோபம்.
- ஏறப் படாத மரத்திலே எண்ணப் படாத மாங்காயாம்.
- ஏறப் பார்க்கும் நாய்; இறங்கப் பார்க்கும் பூனை.
- ஏற முடியாத மரத்திலே எண்ணாயிரம் மாங்காய்.
- ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா!
- ஏறாத வார்த்தை வசமாகுமா?
- ஏறா மடைக்கு நீர் பாய்ச்சுவது போல.
- ஏறா மேடும் பாயாத் தண்ணீரும்.
- ஏறி அடுத்து வில் போட்டால் மாறி அடித்து மழை பெய்யும்.
- ஏறி இருந்த கொம்பை வெட்டுபவனைப்போல.
- ஏறி இறங்கும் திருமேனி, எங்கும் கண்ட திருமேனி, தட்டிக் கொட்டும் திருமேனி, வெள்ளை வெளுக்கும் திருமேனி.
- ஏறிய கொக்கு என்று இருந்தாயோ கொங்கணவா?
- ஏறின வரையும் திருப்பணி; கீழே கிடப்பதுகல்.
- ஏறினால் எருதுக்குக் கோபம்; இறங்கினால் நொண்டிக்குக் கோபம்.
- ஏறினால் குற்றம்; இறங்கினால் அபராதம்.
- ஏறுகிற குதிரைக்கு எருதே மேல்.
- ஏறுகிற குதிரையிலும் உழவு மாடு அதிக உத்தமம்.
- ஏறுகிறவன் இடுப்பை எத்தனை தூரம் தாங்கலாம்?
- ஏறு நெற்றி ஆறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது.
- ஏறும் தேமல், இறங்கும் தேமல்.
- ஏறும் தேமல், இறங்கும் படர் தாமரை, கூடும் புருவம் குடியைக் கெடுக்கும்.
- ஏறும் மடைக்கு நீரைப் பாய்ச்சுவது போல.
- ஏறு மாறாய்ப் பேசுகிறதா?
- ஏன் அடா இடறி விழுந்தாய் என்றால் இதுவும் ஒரு கெருடி வித்தை என்றானாம்.
- ஏன் அடா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம் என்கிறது.
- ஏன் அடா கிழவா, இளைத்தாய் குதிர் போல?
- ஏன் அடா தம்பி இளைத்தாய் என்றால், இதிலும் துரும்பானாலும் உனக்கு என்ன என்ற கதை.
- ஏன் அடா தம்பி, ரகுநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்?
- ஏன் அடா தென்ன மரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க, என்கிறான்; தென்ன மரத்தில புல் ஏதடா என்றால், அதுதானே கீழே இறங்குகிறேன் என்கிறான்.
- ஏன் அடா பட்டப் பகலில் திருடுகிறாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான்.
- ஏன் அடா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் பூனைக் குட்டிக்குப் புல்பறிக்க என்கிறான்.
- ஏன் அடா பையா, இடறி விழுந்தாய் என்றால் இதுதான் ஒரு கெருடி வித்தை என்றானாம்.
- ஏன் அடா முடிச்சை அவிழ்க்கிறாய்? என் பசி உனக்குத் தெரியுமா?
- ஏன் அடா விழுந்தாய் என்றால், கரணம் போட்டேன் என்றானாம்.
- ஏன் அடி அக்கா இலையாய்ப் பறக்கிறாய்? எங்கள் வீட்டுக்கு வா, காற்றாய்ப் பறக்கலாம்.
- ஏன் அடி சிறுக்கி, புல்லு ஆச்சா? ஒரு நொடிக்குமுன் கட்டு ஆச்சே.
- ஏன் அடி பாட்டி, மஞ்சள் குளித்தாய் பழைய நினைப்படா பேராண்டி.
- ஏன் அடி பெண்ணே, இளைத்தாய் குதிர் போலே?
- ஏன் அடி பெண்ணே, குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்.
- ஏன் அயலானைக் கண்டாளாம்; ஏணிப் பந்தம் பிடித்தாளாம்.
- ஏன் உதட்டாண்டே என்றால் ஏன் பல்லாண்டே என்ற கதை.
- ஏன் என்பாரும் இல்லை; எடுத்து விழிப்பாரும் இல்லை.
- ஏன் காணும் தாதரே, ஆண்டி புகுந்தீர்? இரவும் ஒரு மண்டலம் பார்த்து விடுவோம்.
- ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒருகாசு வெல்லம் இல்லாமல் சவுக்கிட்டேன்
- ஏன் கொழுக்கட்டை நட்டுக் கொண்டாய்? வெல்லம் இல்லாமல் பிட்டுக் கொண்டேன்.
- ஏன் பறையா என்கிறதைவிட வள்ளுவப் பறையா என்கிறது மேல்.
- ஏன வாயனைக் கண்டானாம்; ஏணிப் பந்தம் பிடித்தானாம்.
- ஏனானாம் கோத்திரத்துக்குத் தானானாம் தர்ப்பயாமி.
- ஏனோ தானோ எவனோ செத்தான்.
- ஏனோ தானோ என்றிருத்தல்.
ஐ
[தொகு]- ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
- ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
- ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
- ஐங்கலக் கப்பியில் நழுவின கப்பி.
- ஐங்காதம் போவதற்கு அறிமுகம் தேவை.
- ஐங்காதம் போனாலும் அகப்பை அரைக் காசு.
- ஐங்காதம் போனாலும் தன் நிழல் தன்னுடன்தானே வரும்?
- ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.
- ஐங்காதம் போனாலும் தன் பாவம் தொலையாது.
- ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச் சுரைக்காய்க்கு.
- ஐங்காயம் இட்டு அவரைப் பருப்பு இட்டாலும் தன் நாற்றம் போகாது பேய்ச் சுரைக்காய்.
- ஐதது நெல்லு; அடர்ந்தது சுற்றம்.
- ஐதர் அலி என்றால் அழுத பிள்ளையும் வாய் மூடும்;
- ஐதர் காலம்.
- ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை.
- ஐந்தும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு.
- ஐந்து வயதில் ஆதியை ஓது
- ஐந்தும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு.
- ஐந்து வயதில் ஆதியை ஓது.
- ஐந்து வருஷம் கொஞ்சி வளர்; பத்து வருஷம் அடித்து வளர்; பதினாறு வருஷம் தலைக்கு மேல் பழகி வளர்.
- ஐந்து விரலும் ஐந்து கன்னக்கோல்.
- ஐந்து விரலும் ஒன்று போல இருக்குமா?
- ஐந்துக்கு மேலே அரசனும் ஆண்டி.
[ஐந்து பெண்களுக்கு மேல் பிறந்து விட்டால், பெற்றோரின் செல்வம் காலியாகும்.] - ஐந்தூரான் புஞ்சை போல.
- ஐப்பசி அடை மழை; கார்த்திகை கடு மழை.
- ஐப்பசி அழுகல் தூற்றல்.
- ஐப்பசி அறக் காய்ந்தால் அண்ணன் இட்ட பயிரும் சரி; தம்பி இட்ட பயிரும் சரி.
- ஐப்பசி அறக் காய்ந்தால் ஆடு ஒரு மாடு; மாடு ஒரு மலை.
- ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லா விட்டால் அண்ணனுக்கும் சரி, தம்பிக்கும் சரி.
- ஐப்பசி தலை வெள்ளமும் கார்த்திகை கடை வெள்ளமும் கெடுதி.
- ஐப்பசி நட்ட கரும்பு ஆனை வால் ஒத்ததாம்.
- ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் நெல் ஆகாது.
- ஐப்பசிப் பிறை கண்ட வேளாளா, கைப்பிடி நாற்றைக் கண்டு கரையேறு.
- ஐம்பசிப் பணி அத்தனையும் மழை
- ஐப்பசி மருதாணி அரக்காகப் பற்றும்.
- ஐப்பசி மாதத்தில் சம்பா நட்டால் ஆனைக் கொம்பு முளைக்கும்.
- ஐப்பசி மாதத்து எருமைக் கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி.
- ஐப்பசி மாதத்து நடவும் அறுபது பிராயத்திற் பிள்ளையும்.
- ஐப்பசி மாதத்து நாற்றை அருகில் சாத்து.
- ஐப்பசி மாதத்து வெயிலில் அன்று உரித்த தோல் அன்றே காயும்.
- ஐப்பசி மாதம் அடை மழை.
- ஐப்பசி மாதம் பசு கறக்குமுன் பன்னிரண்டு பாட்டம் மழை.
- ஐப்பசி மேல்காற்று அப்போதே மழை.
- ஐப்பசி விதைப்பாட்டிற்கு ஐயப்பாடு இல்லை.
- ஐப்பசி வெள்ளாமை அரை வெள்ளாமை
- ஐ பை சுரைக்காய பக்கா நெய், வெள்ளைக்காரன் கப்பலிலே தீயைக் கொளுத்தி வை.
- ஐம்பதாம் பிராயத்திலே கருக்கோலை கட்டிச் சாகிற காலத்தில் பிச்சோலை கட்டினாளாம்.
- ஐம்பதிலே அறிவு; அறுபதிலே அடக்கம்; அதற்கு மேல் ஒன்றும் இல்லை.
- ஐம்பதுக்கு மேலே மண் பவழம் கட்டுகிறதா?
- ஐம்பது வந்தாலும் அவசரம் கூடாது.
- ஐம்பது வயசிலே ஆண்பிள்ளைக்கு மறு மகிழ்ச்சி.
- ஐம்பது வயசு ஆனவனுக்கு அஞ்சு வயசுப் பெண்ணா?
- ஐம்பது வயசு ஆனவனுக்கு அரிவை ஏன்?
- ஐயங்கார் அம்மானையில் சறுக்கினார்.
- ஐயங்காரும் தத்துக் கொடுப்பார்.
- ஐயங்காரைக் கெடுத்தவள் ஐயங்காரிச்சி, தாதச்சியைக் கெடுத்தவன் தாதன்.
- ஐயப்பட்டால் பைய நட.
- ஐயப்பன் குதிரையை வையாளி விட்டாற் போல.
- ஐயப்பா கையை விடு.
- ஐயம் ஆன காரியத்தைச் செய்தல் ஆகாது.
- ஐயம் உண்டானால் பயம் உண்டு.
- ஐயம் ஏற்றும் அறிவே ஓது.
- ஐயம் தீர்ந்தும் நெஞ்சு ஆறவில்லை.
- ஐயம்பேட்டைத் துலுக்கன் போல்.
- ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார்கள் இடம் கொடார்கள்.
- ஐயர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான்.
- ஐயர் உருள; அம்மை திரள.
- ஐயர் என்பவர் துய்யர் ஆவர்.
- ஐயர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை.
- ஐயர் தின்னும் பருப்பு ஐந்து குடி கெடுக்கும்.
- ஐயர் பாதி, அரண்மனை பாதி.
- ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமோ?
- ஐயருக்கு அரை வார்த்தை சொல்; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே.
- ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக் கூடாது.
- ஐயன் அளந்த படி.
- ஐயன் பாழியில் ஆனை போர்க்கு உதவுமோ?
- ஐயனார் கோயில் ஆனையைப் போல.
- ஐயனார் கோயில் செங்கல் அத்தனையும் பிடாரி.
- ஐயனார் கோயில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திர காளி.
- ஐயனார் கோயிலிலே ஆனை பிடிக்க வேண்டும்.
- ஐயனார் படையில் குயவனார் பட்டது போல.
- ஐயனாரே வாரும்; கடாவைக் கொள்ளும்.
- ஐயா, ஐயா, அம்மா குறைக் கேழ்வரகும் அரைக்க வரச் சொன்னாள்.
- ஐயா கதிர் போல; அம்மா குதிர் போல.
- ஐயாசாமிக்கு கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு.
- ஐயா சொல்படி காலைக் கிளப்படி.
- ஐயாட்டுக் கிடைக்குச் சமம் தை உழவு.
- ஐயாத்துரைக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே; வெற்றிலை பாக்குக் கடையிலே; சுண்ணாம்பு சூளையிலே.
- ஐயா தாசி கவனம் பண்ண, அஞ்சாளின் சுமையாச்சு.
- ஐயா நாளிலே அம்மா மூடு பல்லக்கு ஏறினாள்.
- ஐயா நூற்பது அம்பியின் அரைஞாண் கயிற்றுக்கும் ஆகாது.
- ஐயா பாட்டுக்கு அஞ்சடியும் ஆறடியும் தாண்டும்.
- ஐயாவுக்கு வித்தை இல்லை; அம்மாளுக்குக் கர்வம் இல்லை.
- ஐயா வீட்டுக் கூழுக்கு அப்பணையங்கார்த் தாதாவா?
- ஐயாவைத் தவிர ஆனைதாண்டவ புரத்தார் அத்தனை பேரும் அயோக்கியர்கள்.
- ஐயா வையர் கூழுக்கு அப்பையங்கார் தாதாவா?
- ஐயைந்தில் பிறத்த பிள்ளையும் தை ஐந்தில் நட்ட நடவும்.
- ஐயோ என்றால் ஆறு மாசத்துப் பாவம் சுற்றும்.
- ஐயோ பாவ மென்றால் கையோடே.
- ஐவருக்கும் தேவி, அழியாத பத்தினி
ஒ
[தொகு]- ஒக்கலிலே பிள்ளையை வைத்து ஊரெல்லாம் தேடினாளாம்(தேடினாற் போல)
- ஒச்சியம் இல்லாத ஊரிலே பெண் வாங்கின கதை.
- ஒட்ட உலர்ந்த ஊமத்தங்காய் போல.
- ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்(கொட்டைத் தாழ்ப்பாள்)
- ஒட்டகத்தின் முதுகுக்குக் கோணல் ஒன்றா இரண்டா?
- ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
- ஒட்டகத்துக்கு உடம்பெல்லாம் கோணல்.
- ஒட்டகத்துக்குக் கல்யாணம், கழுதை கச்சேரி
- ஒட்டகத்துக்குத் தொட்ட இடம் எல்லாம் கோணல்,
- ஒட்டகமே, ஒட்டகமே, உனக்கு எவ்விடத்தில் செவ்வை.
- ஒட்டத்து அப்பம் தின்பாரைப் போலே.
- ஒட்டப் பார்த்து மட்ட நறுக்கு.
- ஒட்டன் கண்டானா லட்டுருண்டை? போயன் கண்டானா பொரியுருண்டை?
- ஒட்டன் குச்சி வைத்துப் பெருக்குகிற விளக்குமாறும் அல்ல; வீட்டைப் பெருக்குகிற விளக்குமாறும் அல்ல.
- ஒட்டன் சுவருக்குச் சுண்ணாம்பு அடித்தாற் போல
- ஒட்டன் வீட்டு நாய் கட்டில் ஏறித் தூங்கிற்றாம்
- ஒட்டன் வீட்டு நாய் கூழுக்குக் காத்த மாதிரி.
- ஒட்டன் வீட்டு நாய் திட்டையில் இருந்தாற் போல
- ஒட்டனுக்குத் தெரியுமா லட்டுருண்டை?
- ஒட்டாது பாவம்; கிட்டாது சேவை.
- ஒட்டி உலர்ந்து ஊமத்தங்காயாய்ப் போய்விட்டான்(உலர்ந்த)
- ஒட்டிய உடம்பும் ஒடுக்கிட்ட வாழ்நாளும்.
- ஒட்டிய சீதேவி நெட்டியோடே போம்(சீதாதேவி.
- ஒட்டின பேரைத் தொட்டிலும் கொள்ளும்; ஒட்டாத பேரைக் கட்டிலும் கொள்ளாது(ஒட்டினால் கொள்ளும். ஒட்டினாரை.)
- ஒட்டினாலும் உழக்குப் பீச்சுகிறதா?(உழக்குப் பீர் செல்கிறதா?)
- ஒட்டுக் கதை கேட்பவர் செவிட்டுப் பாம்பாய்ப் பிறப்பார்(யாழ்ப்பாண வழக்கு.)
- ஒட்டுத் திண்ணை நித்திரைக்குக் கேடு.
- ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாய் போட்டவன்.
- ஒட்டு மூத்திரத்துக்கு ரக்ஷாபந்தனம் செய்தாளாம்; பட்டறைப் பீயைப் பாயோடு பிடித்தாளாம்.
- ஒட்டைக்குக் கரும்பு மெத்தக் கசப்பு.
- ஒட்டைக்குச் சுளுவு பட்டாற் போல(அளவு மீட்டர் போல்.)
- ஒட்டைக்குப் பளுவு ஏற்றுகிறது போல.
- ஒடக்கான் முட்டு வைக்காத காடு
- ஒடம்பில எண்ணெ தடவி பொரண்டாலும் ஒட்ற மண்ணுதான் ஒட்டும்
- ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்று கோல் ஆகும்.(வேண்டும்.)
- ஒடுக்கம் சிதம்பரம்.
- ஒடுக்கி ஒடுக்கிச் சொன்னாலும் அடங்குமா?
- ஒண்ட வந்த எலி உரம் பெற்றது; அண்டியிருந்த பூனை ஆலாய்ப் பறக்கிறது.
- ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தியதாம்
- ஒண்டாதே, ஒண்டாதே, ஓரிக்கால் மண்டபமே; அண்டாதே, அண்டாதே ஆயிரங்கால் மண்டபமே என்றாற் போல.
- ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.
- ஒண்ணாங் குறையாம் வண்ணான் கழுதைக்கு.
- ஒண்ணாந் தேதி சீக்கிருப்பவனும் ஒற்றைக் கடையில் சாமான் வாங்குபவனும் உருப்பட மாட்டான்(இலங்கை வழக்கு.)
- ஒண்ணுக்குள்ளே ஒண்ணு, எள்ளுக்குள்ளே எண்ணெய்:
- ஒண்ணுக்குள்ளே ஒண்ணு, கண்ணுக்குள்ளே மண்ணாகியது.
- ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு.
- ஒண்ணைப் பெற்றாலும் கண்ணைப் பெறு
- ஒண்ணோ, கண்ணோ?
- ஒத்த இடத்தில் நித்திரை கொள்.
- ஒத்த கணவனும் ஒரு நெல்லும் உண்டானால் சித்திரம் போலக் குடிவாழ்க்கை செய்யலாம்.
- ஒத்தான் ஓரகத்தாள் ஒரு முற்றம்; நாத்தனார் நடு முற்றம்.
- ஒத்தி வெள்ளம் வருமுன்னே அணை வோலிக்கொமின வேண்டும்.
- ஒத்துக்கு ஏற்ற மத்தளம். ஒத்தைக்கு ஒரு பிள்ளை என்றால் புத்தி கூடக் கட்டையாகப் போகுமா?(ஒத்திக்கு.)
- ஒதி பெருத்தால் உரல் ஆகுமா?
- ஒதி பெருத்தாலும் உத்தரத்துக்கு ஆகாது.
- ஒதி பெருத்து என்ன? உபகாரம் இல்லாதவன் வாழ்ந்து. என்ன?(உதவாதவன்.)
- ஒதி பெருத்துத் தூண் ஆமா? ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
- ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
- ஒதிய மரமும் ஒரு சமயத்துக்கு உதவும்.
- ஒப்புக்குச் சப்பாணி. ஊருக்கு மாங்கொட்டை.
- ஒப்புக்கு மாங்கொட்டை, ஊருக்குச் சப்பாணி.
- ஒய்யாரக் கொண்டையாம், தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்.
- ஒயிலாய்ப் பேசுகிறாள்; ஆனால் கனம் அறிந்த கப்பறையும் அல்ல; கண்டறிந்த நாயும் அல்ல.
- ஒரு அச்சிலே உருக்கி வார்த்தாற் போல.
- ஒரு அடி அடித்தாலும் பட்டுக் கொள்ளலாம்; ஒரு சொல் மட்டும் கேட்க முடியாது.
- ஒரு அப்பம் தின்னாலும் நெய்யப்பம் தின்ன வேணும்.
- ஒரு இழவு என்றாள் உள்ளபடி ஆகும்.(ஆகும்.)
- ஒரு உறையிலே இரண்டு கத்தியா?
- ஒரு ஊர் நட்பு, ஒரு ஊருக்குப் பழிப்பு.
- ஒரு ஊரில் இரண்டு பைத்தியக்காரர்களா?
- ஒரு ஊருக்கு ஒரு வழியா?
- ஒரு ஊருக்கு வழி கேட்க ஒன்பது ஊருக்கு வழி காட்டுகிறான்.
- ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரில் போட்டு ஒன்பது ஆள் கட்டி இழுத்தாற் போல.(எட்டு ஆள்.)
- ஒரு கண்ணிலே புகுந்து மறு கண்ணிலே புறப்படுகிறான்.(வருகிறவன்.)
- ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு.
- ஒரு கண் முடி ஒரு கண் விழிக்கிறவன்.
- ஒரு கம்பத்தில் இரண்டு ஆனையைக் கட்டினாற் போல்
- ஒரு கரண்டி எண்ணெய் கொண்டு பலகாரம் சுட்டுப் பந்தி விசாரித்து வந்த பெண்டுகள் வாரி முடித்துப் பெண்டுகளால் பிடிமானம் இல்லாமல் புறக்கடை வழியாய்ப் போய் விட்டது.
- ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.
- ஒரு கல விதையடி உவட்டை மாற்றிட, ஆறு பல வேப்பம்
- ஒரு கவளம் சோற்றுக்கு நாய் பல்லை இளிப்பது போல,
- ஒரு கழிச்சலில் உட்கார்ந்து மறு கழிச்சலில் மல்லாந்து போக,
- ஒரு காசு அகப்படுகிறது குதிரைக் கொம்பு.
- ஒரு காசு என்ற இடத்தில் அழுகிறான்.
- ஒரு காசுக்கு மூக்கு அரிந்தால் ஒன்பது காசு கொடுத்தால் ஒட்டுமா?
- ஒரு காசுக்கு மோர் வாங்கி ஊரெல்லாம் தானம் பண்ணினாளாம்.
- ஒரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா?
- ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
- ஒரு காதில் வாங்கி ஒரு காதில் விடுவது.
- ஒரு கால் செய்தவன் இரு கால் செய்வான்.
- ஒரு கால் பார்த்தால் புஞ்சை; இரு கால் பார்த்தால் நஞ்சை
- ஒரு காலிலே நிற்கிறான்.
- ஒரு காலை செய்த தச்சன் மறு காலும் செய்வான்.
- ஒரு குட்டியும் பெட்டையும் போல.
- ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
- ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும்.
- ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா? (முடியுமா?)
- ஒரு குருவி இரை எடுக்க ஒன்பது குருவி வாய் திறக்க, :(திறக்குமாம்.)
- ஒரு குலைத் தேங்காய்.
- ஒரு குளப்படி நீரைக் கண்டு திரைகடல் ஏங்குமா?
- ஒரு கூடை முடைந்தவன் ஒன்பது கூடை முடைவான்.
- ஒரு கூடைக் கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை?
- ஒரு கூடைச் செங்கல்லும் பிடாரி.
- ஒரு கூடைச் செங்கலில் அத்தனையும் வேகாத செங்கல்,
- ஒரு கூன் சர்க்கரையா ஒத்து வாழ்.
- ஒரு கை சத்தம் எழுப்புமா?
- ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
- ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
- ஒரு கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் எழும்பலாமா?
- ஒரு கோமுட்டியைக் கழுவில் போட்டதற்கு ஒன்பது கல எள் ஆச்சுதே; ஊர்க் கோமுட்டிகளை எல்லாம் கழுவில் போடு, என்றானாம்.
- ஒரு சந்திப் பானையை நாய் அறியுமா?
- ஒரு சாதிக்கு ஏச்சு: ஒரு சாதிக்குப் பேச்சு.
- ஒரு சாண் காட்டிலே ஒருமுழத்தடி வெட்டலாமா?
- ஒரு சுருட்டைப் பத்து நாள் பிடிப்பான்.
- ஒரு சுற்றுச் சுற்றி வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டது போல,
- ஒரு செடியிலே விளைந்தாற் போல்.
- ஒரு செவியில் வார்த்தாற் போல.
- ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
- ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
- ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
- ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
- ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
- ஒருத்தர் போன வழி ஒருத்தர் போகிறது இல்லை.
- ஒருத்தன் ஜோலிக்குப் போகவும் மாட்டேன்: என் காலை மிதித்தால், விடவும் மாட்டேன்.
- ஒருத்திக்கு ஒருமகன்.
- ஒரு தட்டில் ஒர் ஆனை மறுதட்டில் ஆயிரம் பூனை.
- ஒரு தம்படி மிச்சப்படுத்தியது ஒரு தம்படி சம்பாதித்தது ஆகுமா?
- ஒரு தரம் விழுந்தால் தெரியாதா?
- ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?
- ஒரு தலை வழக்கு நூலிலும் செவ்வை.
- ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊர் எல்லாம் தாய்.
- ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை
- ஒரு துட்டு ஒரு ரூபாயாய் இருக்கிறது.
- ஒரு துரும்பு பழுதை ஆகுமா?.
- ஒரு துஷ்டனுக்கும், ஒரு துஷ்டனுக்கும் ஒரே வழி;
- ஒரு துஷ்டனுக்கும். ஒரு நல்லவனுக்கும் இரண்டு வழி;இரண்டு நல்லவர்களுக்கு மூன்று வழி.
- ஒரு தையல் ஒன்பது தையலைத் தவிர்க்கும்.
- ஒரு தொழிலும் இல்லாதவர் நாடகக்காரர் ஆனார்.
- ஒரு தொழுமாடு முட்டிக் கொள்ளவும் செய்யும், நக்கிக் கொள்ளவும் செய்யும்.
- ஒரு நன்றி செய்தாரை உள்ளளவும் நினை.
- ஒரு நாக்கா, இரண்டு நாக்கா?
- ஒரு நாய் ஊளையிட ஊர் எல்லாம் நாய் ஊளை.
- ஒரு நாய்க்குத் தலை வலித்தால் ஒன்பது நாய்க்குத் தலை வலிக்கும்.
- ஒரு நாய் குரைத்தால் எல்லா நாயும் குரைக்கும்
- ஒரு நாய்க்கு வலித்தால் எல்லா #நாய்க்கும் வலிக்கும்.
- ஒரு நாய் குரைத்தால் பத்து நாய் பதில் கொடுக்கும்.
- ஒரு நாய் வீட்டில் இருந்தால் பத்துப் பேர் காவல் காத்தது போல் ஆகும்.
- ஒரு நாள் ஆகிலும் திருநாள்.
- ஒரு நாள் ஒரு யுகமாக இருக்கிறது.
- ஒரு நாள் கூத்துக்கு மீசையைக் சிரைத்தானாம்(தலையைச் சிரைத்தானாம்.)
- ஒரு நள் பஞ்சத்தை உற்றாரிடம் காட்டினாளாம்.
- ஒரு நாளும் இல்லாத திருநாள்
- ஒரு நாளும் இல்லாமல் திருநாளுக்குப் போனால் திருநாள் எல்லாம் வெறு நாள் ஆச்சு.
- ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளிலே சிரித்தான்; திருநாளும் வெறு நாள் ஆச்சு.
- ஒரு நாளும் நான் அறியேன். உள்ளே விளக்கெரிந்து.
- ஒரு நாளைக்கு இறக்கிறது கோடி, பிறக்கிறது கோடி.
- ஒரு பக்கம் பெய்தால் ஒரு பக்கம் காயும்.
- ஒரு பசியும் இல்லை என்பாள் ஒட்டகத்தையும் விழுங்கி விடுவாள்
- ஒரு பணம் இரண்டு பாளை; ஒன்று கள்; ஒன்று நுங்கு.
- ஒரு பணம் கொடுத்து அழச் சொல்லி ஒன்பது பணம் கொடுத்து ஓயச்சொன்னது போல.
- ஒரு பணம் கொடுப்பானாம்; ஓயாமல் அழைப்பானாம்.
- ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம்.
- ஒரு பிள்ளை என்று ஊட்டி வளர்த்தாளாம்; அது சொரிமாந்த குணம் பிடித்துச் செத்ததாம்.
- ஒரு பிள்ளை பிள்ளை ஆகுமா? ஒரு மரம் தோப்பு ஆகுமா?
- ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உள்ளங்கையில் சோறு; நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுச் சந்தியிலே சோறு.
- ஒரு பிள்ளை பெற்றவருக்கு உறியிலே சோறு; நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு.
- ஒரு பிள்ளை பேளவும் ஒரு பிள்ளை நக்கவும்.
- ஒரு புடலங்காயை நறுக்கிப் பாதி கறிக்கும் பாதி விதைக்கும் வைத்துக் கொள்ள முடியுமா?
- ஒரு புத்திரன் ஆனாலும் குருபுத்திரன் ஆவானா?
- ஒரு பூனை மயிர் ஒடிந்தால் ஒன்பது பிராமணனைக் கொன்ற பாவம்.
- ஒரு பெட்டை நாய்க்கு ஒன்பது ஆண் நாயா?
- ஒரு பெண் என்று ஊட்டி வளர்த்தாள்; அது ஊர்மேலே போச்சுது.
- ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் அவளின் கழுத்தில் ஒரேயொரு முறை தான் தாலி ஏற வேண்டும். அதுவும் ஒருவரின் கைகளால் தான்.
- ஒரு பொய்க்கு ஒன்பது பொய்.
- ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டும்.
- ஒரு பொருள் ஆகிலும் எழுதி அறி.
- ஒரு பொழுது சட்டி; அதன்மேல் கவிச்சுச் சட்டி.
- ஒரு மயிர் போனாலும் கவரிமான் வாழாது.
- ஒரு மரத்துக் கொம்பு ஒரு மரத்தில் ஒட்டாது.
- ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா?
- ஒரு மரத்துப் பழம் ஒரு மரத்தில் ஒட்டுமா?
- ஒரு மரத்துப் பழமா ஒருமிக்க?
- ஒரு மரத்தை அதன் கனியால் அறியலாம்.
- ஒரு மரம் இரண்டு பாளை, ஒன்று நுங்கு; ஒன்று கள்; அறிவுடன் பார்க்கும் போது அதுவும் கள்ளே; இதுவும் கள்ளே.
- ஒரு மரம் தோப்பு ஆகுமா?
- ஒரு மனப்படு: ஓதுவார்க்கு உதவு.
- ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.
- ஒரு மிளகும் நாலு உப்பும் போதும்.
- ஒரு மிளகைப் போட்டு விட்டுப் பொதி மிளகு என்னது என்றாற்போல.
- ஒரு முத்தும் கண்டறியாதவனைச் சொரிமுத்துப் பிள்ளை என்றானாம்.
- ஒரு முருங்கையும் ஓர் எருமையும் உண்டானால் வருகிற விருந்துக்கு மனம் களிக்கச் செய்வேன்.
- ஒரு முழுக்காய் முழுகிவிட வேண்டும்.
- ஒரு முழுக்கிலே மண் எடுக்க முடியுமா?
- ஒரு முறை செய்தவன் ஒன்பது முறை செய்வான்.
- ஒருமைப்பாடு இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்
- ஒரு மொழி அறிந்தவன் ஊமை; பல மொழி அறிந்தவன் பண்டிதன்.
- ஒரு ரோமம் போனாலும் கவரிமான் வாழாது.
- ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
- ஒருவர் கூறை எழுவர் உடுக்க.
- ஒருவர் துணியை இருவர் உடுத்தினால் இருவரும் அம்மணமாம்
- ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம்.
- ஒருவர் பொறை, இருவர் நட்பு.
- ஒருவருக்கு இடுக்கண் வந்தால் அடுக்கடுக்காய் வரும்.
- ஒருவருக்கு நிறைவும் குறைவும் ஊழ்வினைப் பயன்.
- ஒருவரும் அறியாத உச்சித ராமன்,
- ஒருவன் அறிந்த ரகசியம் உலகத்தில் பரவும்.
- ஒருவன் குழியிலே விழுந்தால் எல்லாரும் கூடி அவன் தலையில் கல்லைப் போடுகிறதா?
- ஒருவன் செய்த தீமை அவன் காலைச் சுற்றி வேரை அறுக்கும்
- ஒருவன் தலையில் மாணிக்கம் இருக்கிறதென்று வெட்டலாமா?
- ஒருவன் துணையாக மாட்டான்; ஒரு மரம் தோப்பாக மாட்டாது.
- ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
- ஒருவனாய்ப் பிறப்பது ஒரு பிறப்பாமா? ஒன்றி மரம் தோப்பாமா?
- ஒருவனுக்கு இருவர் துணை
- ஒருவனுக்குத் தாரம்; மற்றவனுக்குத் தாய்.
- ஒருவனேனும் உயிருடன் உளனோ?
- ஒருவனை அறிய இருவர் வேண்டும்.
- ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்; பல பேரைக் கொன்றவன் பட்டம் ஆள்வான்.
- ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்
- ஒரு விரல் நொடி இடாது.
- ஒரு விரல் முடி இடாது.
- ஒருவிலே இருந்தாலும் இருக்கலாம்; ஒழுக்கிலே இருக்க முடியாது.
- ஒரு விளக்கைக் கொண்டு ஓராயிரம் விளக்கை ஏற்றலாம்,
- ஒரு வீடு அடங்கலும் பிடாரி.
- ஒரு வேலைக்கு இரு வேலை.
- ஒரு வேலைக்கு இரு வேலை, ஓதி வைத்தார் வாத்தியார்.
- ஒரு வேளை உண்போன் யோகி; இருவேளை உண்போன் போகி; மூவேளை உண்போன் ரோகி.
- ஒரே காலில் நிற்கிறான்.
- ஒரே துறையில் குளித்த உறவு
- ஒல்லி நாய்க்கு ஒட்டியாணம் வேண்டுமாம்.
- ஒலி இருந்த சட்டி, இன்ன சட்டி என்று தெரியாது.
- ஒவ்வாக் கட்டிலும் தனிமை அழகு.
- ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.
- ஒவ்வொரு நாய்க்கும் அதன் நாள் உண்டு.
- ஒவ்வொருவனும் தன் தன் பாட்டைத் தானே அனுபவிக்கவேண்டும்.
- ஒவ்வொன்றாய் நூறா?.ஒரேயடியாய் நூறா?
- ஒழிந்த இடம் பார்க்கிறதா?
- ஒழிந்த இடமும் தாவாரமும் தேடுகிறதா?
- ஒழுக்கத்தைக் காட்டிலும் உயர்வில்லை.
- ஒழுக்கம் உயர் குலத்தில் நன்று,
- ஒழுக்கிலே முக்காடா?
- ஒழுக்குக்கு வைத்த சட்டி போல.
- ஒழுக்குக்கு வீட்டிலே வெள்ளம் வந்தது போல.
- ஒழுகாத வீடு உள்ளங்கையத்தனை போதும்.
- ஒழுகுகிற வீட்டில் ஒன்றுக்கு இருந்தால் வெள்ளத்தோடு வெள்ளம்.
- ஒழுங்கா புடுச்சி ஒண்ணுக்கு அடிக்கத் தெரியாத பய
- ஒழுங்கு ஒரு பணம்; சளுக்கு முக்காற் பணம்.
- ஒழுங்கு கணக்கப்பிள்ளை; இடுப்பு இறக்கவில்லை.
- ஒள்ளியர் தெள்ளியராயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும்.
- ஒளி இல்லா விட்டால் இருளையும் இருள் இல்லா விட்டால் ஒளியையும் காணலாம்.
- ஒளிக்கத் தெரியாமல் விதானையார் வீட்டில் ஒளித்துக்கொண்டானாம்
- ஒளிக்கப் போயும் இடம் இடைஞ்சலா?
- ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டில் ஒளிந்தது போல்.
- ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏன் மீசை?
- ஒளிகிற சேவகனுக்கு மீசை எதற்கு?
- ஒற்றியும் சீதனமும் பற்றி ஆள வேண்டும்.
- ஒற்றுமை இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
- ஒற்றுமையே வலிமை.
- ஒற்றை ஆளுக்கு விளையாட்டு இல்லை.
- ஒற்றைக் காலில் நிற்கிறான்.
- ஒற்றுமையே வலிமை.
- ஒற்றை ஆளுக்கு விளையாட்டு இல்லை.
- ஒற்றைக் காலில் நிற்கிறான்.
- ஒன்றரைக் கண்ணன் ஓரைக் கண்ணனைப் பழித்தானாம்.
- ஒன்றாம் குறைவு வண்ணான் கழுதைக்கு.
- ஒன்றால் ஒன்று குறைவு இல்லை; முன்னாலே கட்டத் துணி இல்லை.
- ஒன்றான தெய்வம் உறங்கிக் கிடக்கும் போது பிச்சைக்கு வந்த தெய்வம் ததியோதனத்துக்கு அழுகிறதாம்.
- ஒன்றான தெய்வம் ஒதுங்கிக் கிடக்கச்சே, மூலை வீட்டுத் தெய்வம் குங்கிலியம் கேட்குமாம்.
- ஒன்றான தெய்வம் ஒதுங்கிக் கிடக்க ஹனுமந்தராயனுக்குத் தெப்பத் திருநாளாம்.
- ஒன்றான தெய்வம் ஒதுங்கி நிற்கிறதாம்; சுற்றுப்பட்ட தெய்வம் ததியோதனத்துக்கு அழுகிறதாம்.
- ஒன்றான பிரபு உறங்கிக் கிடக்கையில் பிச்சைக்கு வந்தவன் ததியோதனத்துக்கு அழுகிறானாம்.
- ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லை.
- ஒன்று ஒன்றாய் நூறோ? ஒருமிக்க நூறோ?
- ஒன்றுக்கு இரண்டாம் வாணிபம் இல்லை.
- ஒன்றுக்கு இரண்டு: உபத்திரவத்துக்கு மூன்று
- ஒன்றுக்குப் பத்து; உரைக்குப் பதினாறு.
- ஒன்றுக்கும் அற்ற தங்காளுக்குக் களாக்காய்ப் புல்லாக்கு.
- ஒன்றுக்கும் ஆகாத ஊர்ப்பறை.
- ஒன்றுக்கும் ஆகாதவன் உபாத்தியாயன் ஆகட்டும்.
- ஒன்றுக்கு வாங்கி எட்டுக்கு விற்றால் லாபம்.
- ஒன்று கட்டி விதை; ஒன்று வெட்டி விதை.
- ஒன்று குறைந்தது கார்த்திகை: ஒக்கப் பிறந்தது மார்கழி
- ஒன்று செய்தாலும் உருப்படியாகச் செய்ய வேண்டும்.
- ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.
- ஒன்று நினைக்க ஒன்று ஆயிற்று.
- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
- ஒன்றும் அற்ற தங்காளுக்கு ஒன்பது நாள் சடங்கா?
- ஒன்றும் அற்ற நாரிக்கு ஒன்பது நாள் சடங்கு; அதுவும் அற்ற நாரிக்கு ஐந்து நாள் சடங்கு
- ஒன்றும் அறியாத கன்னி, அவளைப் பிடித்தது சனி.
- ஒன்றும் அறியாளாம் கன்னி, ஓடிப் பிடித்ததாம் ஆறு மாத ஜன்னி(அவளைப் பிடித்ததாம்.)
- ஒன்றும் இல்லாத தங்கைக்கு ஒன்பது நாள் சடங்காம்.
- ஒன்றும் இல்லாததற்கு ஒரு பெண்ணையாவது பெற்றாளாம்.
- ஒன்றும் இல்லாத தாசனுக்கு ஒன்றரைத் தோசை.
- ஒன்றும் இல்லாவிட்டால் அத்தை மகள் இருக்கிறாள்.
- ஒன்றும் இல்லை என்று ஊதினான்; அதுதானும் இல்லை என்று கொட்டினான்.
- ஒன்றும் தெரியாத சின்னக் கண்ணு, பானை தின்னுவாள் பன்றிக் கறி.
- ஒன்றும் தெரியாத பாப்பா, போட்டுக் கொண்டாளாம் தாழ்ப்பாள்.
- ஒன்றும் தெரியாதவனுக்கு எதிலும் சந்தேகம் இல்லை.
- ஒன்றே ஆயினும் நன்றாய் அறி.
- ஒன்றே குதிரை; ஒருவனே ராவுத்தன்.
- ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்.
- ஒன்றே செய்க, இன்றே செய்க, இன்னே செய்க.
- ஒன்றே செயினும் நன்றே செய்.
- ஒன்றே பிறப்பு, ஒன்றே சிறப்பு.
- ஒன்றே ராசா, ஒன்றே குதிரை.
- ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு.
- ஒன்றைப் பத்தாக்கு
- ஒன்றைப் பத்தாகவும், பத்தை ஒன்றாகவும் சாதிக்கிறான்.
- ஒன்றைப் பிடித்தால் உடனே சாதிக்க வேண்டும்.
- ஒன்றைப் பெற்றால் நன்றே பெற வேண்டும்.
- ஒன்றைப் பெற்றாலும் கடுகப் பெறு.
- ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு.
- ஒக்கச் சிரித்தார்க்கு வெட்கம் இல்லை. (சிரித்தால்.)
- ஒக்கப் பிறந்த தங்கை ஓலமிட்டு அழுதாளாம்; ஒப்பாரி தங்கைக்குச் சிற்றாடையாம்.
ஓ
[தொகு]- ஓ கெடுவானுக்கு வாழ்க்கைப்பட்டு ஒட்டமே ஒழிய நடை இல்லை.
- ஓங்கி அறைந்தால் ஏங்கி அழச் சீவன் இல்லை.
- ஓங்கில் அறியும் உயர்கடலின் ஆழம்; பாங்கி அறிவாள் தன் பர்த்தாவின் வலிமை.
- ஓங்கின கை நிற்காது.
- ஓங்கின கோடரி நிற்காது.
- ஓங்கு ஒன்று: அடி இரண்டு.
- ஓசிக்கு அகப்பட்டால் எனக்கு ஒன்று; எங்கள் அண்ணனுக்கு ஒன்று
- ஓசை காட்டிப் பூசை செய்.
- ஓசை பெறும் வெண்கலம்; ஓசை பெறாது மண்கலம்.
- ஓட்டத்துக்குப் பாக்குப் பிடிக்கிறான்.
- ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்.
- ஒட்டமும் ஆட்டமும் உடம்புக்கு நல்லது.
- ஓட்டி ஓட்டி மிளகு அரைக்கப் பாட்டி வந்தாளாம்; பையனுக்குச் சோறு போடக் குட்டி வந்தாளாம்.
- ஓட்டின சீமாள் ஓட்டினான்; பழமுள்ள காட்டில் ஓட்டினான்.
- ஓட்டுகிறவன் சரியாய் இருந்தால் எருது மச்சான் முறை கொண்டாடாது
- ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
- ஓட்டைக் குடத்திலும் சர்க்கரை நிற்கும்; கருப்பட்டியிலும் கல் இருக்கும்.
- ஓட்டைக் குடத்திலேதான் சர்க்கரை இருக்கும்.
- ஓட்டைக் கோயிலுக்குச் சர்க்கரை கசக்குமா?
- ஓட்டைச் சங்கு ஊது பரியாது(சங்கால் ஊத முடியாது.)
- ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி(வேக உதவும்.)
- ஓட்டைத் தோண்டியும் அறுந்து போன தாம்புக் கயிறும் சரி(தோண்டிக்கு.)
- ஓட்டை நாழிக்குப் பூண் கட்டுவது போல(கட்டி ஆவதென்ன?)
- ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?
- ஓட்டைப் பானையில் உலையிட்டாற் போல்.
- ஓட்டைப் பானையில் கொழுக்கட்டை வேகுமா?
- ஓட்டைப் பானையில் சர்க்கரை இருக்கும்.
- ஓட்டைப் பானையில் நண்டை விட்டாற் போல.
- ஓட்டைப் பானையில் விட்ட தண்ணீர் போல,
- ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?
- ஓட்டை மதகிலே தண்ணீர் போனால் தோட்டிக்கு என்ன வாட்டம்?
- ஓட்டை வீட்டிலே மூத்திரம் பெய்தால் ஒழுக்கோடு ஒழுக்கு.
- ஓடக்காரனிடம் கோபித்துக் கொண்டு ஆற்றோடு போன மாதிரி.
- ஓடம் கட்டின தூலம்.
- ஓடம் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
- ஓடம் கவிழ்த்த பிரமசாரியைப் போல.
- ஓடம் வண்டியிலே; வண்டி ஓடத்திலே(வண்டி மேலே, ஓடத்து மேலே.)
- ஓடம் விட்ட ஆற்றிலும் அடி சுடும்(ஆறும்.)
- ஓடம் விட்ட ஆறே அடி சுடும் என்பது அறியாயா?
- ஓடம் விட்ட இடம் அடி சுடும்; அடி சுட்ட இடத்தில் ஓடப்படும்.
- ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு,
- ஓட மாட்டாதவன் திரும்பிப் பார்த்தானாம்.
- ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறியே ஆக.
- ஓடவும் மாட்டேன்; பிடிக்கவும் மாட்டேன்.
- ஓடவும் முடியவில்லை; ஒதுங்கவும் முடியவில்லை.
- ஓடி ஆடி உள்ளங்காலும் வெளுத்தது.
- ஓடி உழக்கு அரிசி சாப்பிடுவதைவிட உட்கார்ந்து ஆழாக்கு அரிசி சாப்பிடலாம்.
- ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து ஒரு காசு தேடுவது நலம்.
- ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும் உட்கார்ந்து ஒரு பணம் சம்பாதிப்பது மேல்.
- ஓடி ஓடி உடையவன் வீட்டில் ஒளிந்தாற் போல்.
- ஓடி ஓடி உள்ளங்கால் வெளுத்தது.
- ஓடி ஓடி நூறு குழி உழுவதைவிட அமர்ந்து அமர்ந்து ஆறு குழி உழுவதே நன்று
- ஓடி ஓடிப் பறந்தாலும் ஓடக்காரன் தாமசம்.
- ஓடி ஓடி வேலை செய்தாலும் நாய் உட்காரப் போவதில்லை.
- ஓடிப் போகிறவன் பாடிப் போகிறான்.
- ஓடிப் போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன்.
- ஓடிப் போன புருஷன் வந்து கூடிக் கொண்டானாம்; உடைமைமேல் உடைமை போட்டு மினுக்கிக் கொண்டாளாம்.
- ஓடிப் போன முயல் எல்லாம் ஒரே முயல்.
- ஓடிப் போன முயல் பெரிய முயல்.
- ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் ராஜா; அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.
- ஓடிப் போனால் உமிக்காந்தல்; உள்ளே வந்தால் செந்தணல்.
- ஓடி மேய்ந்த சிறுக்கிக்கு ஒன்றியிருக்க மனம் வருமா?
- ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.
- ஓடிய முயல் பெரிய முயல் அல்லவோ?
- ஓடியும் கிழவிக்குப் பிறகேயா?
- ஓடி வந்து உமிக்காந்தலை மிதித்தாளாம்; திரும்பி வந்து தீக்காந்தலை மிதித்தாளாம்.
- ஓடி வரும் பூனை; ஆடி வரும் ஆனை.
- ஓடி வரும் போது தேடி வருமாம் பொருள்.
- ஓடின மாட்டைத் தேடுவாரும் இல்லை; மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.
- ஓடினால் மூச்சு, நின்றால் போச்சு.
- ஓடு இருக்கிறது, நான் இருக்கிறேன்.
- ஓடுக ஊர் ஓடுமாறு.
- ஓடுகள் விதையைக் கேடறக் காக்கும்.
- ஓடுகாலிக்கு வீடு மரம்.
- ஓடுகாலி வீடு மறந்தாள்.
- ஓடுகிற ஆறு ஓடிக் கொண்டே இருக்குமா?
- ஓடுகிற கழுதையை வாலைப் பிடித்தால் உடனே கொடுக்கும் உதை.
- ஓடுகிற தண்ணீரை ஓங்கி அடித்தாலும் அது கூடுகிற பக்கம்தான் கூடும்.
- ஓடுகிறது பஞ்சையாய் இருந்தாலும் சிமிட்டுவது இரண்டு முழம்.
- ஓடுகிற நாய்க்கு ஒரு முழம் விட்டுக் கல் எறி.
- ஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகிற நாய்க்கு எளிது.
- ஓடுகிற நீரில் எழுதிய எழுத்தைப் போல.
- ஓடுகிற பாம்புக்குக் கால் எண்ணுகிறவன் சாமர்த்தியசாலி
- ஓடுகிற பாம்பைக் கையால் பிடிக்கிற பருவம்.
- ஓடுகிற பாம்பைக் கையினால் பிடித்து உண்ணுகிற வாயில் மண்ணைப் போட்டுக் கொள்கிற காலம்.
- ஓடுகிற பாம்பை மிதிக்கிற பருவம்.
- ஓடுகிற மாட்டைக் கண்டால் துரத்துகிற மாட்டுக்கு எளிது.
- ஓடுகிற மாடு விழுந்து விடும்.
- ஓடுகிற முயலுக்கு ஒரு முழம் தள்ளி எறிய வேண்டும்.
- ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு எளிது.
- ஓடுகிறவனை விரட்டுகிறது எளிது.
- ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா?
- ஓடுபவனும் அம்மணம்; துரத்துகிறவனும் அம்மணம்.
- ஓடும் இருக்கிறது: நாடும் இருக்கிறது.
- ஓடும் நாயைக் கண்டால் குரைக்கும் நாய்க்கு இளக்காரம்
- ஓணான் கடித்தால் ஒரு நாழிகையில் சாவு: அரணை கடித்தால் அரை நாழிகையில் சாவு.
- ஓணான் தலை அசைத்தால் ஒன்பது கலம் நெல் மசியும்
- ஓணான் விழுங்கிய கதை போல.
- ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது.
- ஓணானுக்கு வேலி சாட்சி; வேலிக்கு ஓணான் சாட்சி.
- ஓணானை அடித்தால் உழக்குப் புண்ணியம்.
- ஓதப் பணம் இல்லை; உட்காரப் பாய் இல்லை; உனக்கு என்ன வாய்?
- ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
- ஓதின மஞ்சள் உறியிலே இருக்கும் போது வேதனை என்ன செய்யும்?
- ஓதும் வேதம் பேதம் அகற்றும்.
- ஓதுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில்.
- ஓதுவார்க்கு உதவு.
- ஓதுவானுக்கு ஊரும் உழுவானுக்கு நிலமும் இல்லையா?
- ஓந்தி வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது.
- ஓநாய்க்கு அதிகாரம் வந்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.
- ஓம் என்ற தோஷம் வயிற்றில் அடைத்தது.
- ஓம பிண்டத்தை நாய் இச்சித்தாற் போல்.
- ஓமல் இட்ட பண்டம் உள்ளே வந்து சேரவில்லை.
- ஓமலுக்குப் பிள்ளை அன்றி உறுதிக்குப் பிள்ளை இல்லை.
- ஓய்ச்சலும் இல்லை; ஒழிவும் இல்லை.
- ஓய்ந்ததடி பனங்காடு; உட்கார்ந்தாளடி சாணாத்தி.
- ஓய்ந்ததாம் பானை; உட்கார்ந்தாளாம் சாணாத்தி.
- ஓய்ந்த முழுக்கு ஒரே முழுக்கு.
- ஓய்ந்த வேளையில் அவிசாரி ஆடினால் உப்புப் புளிக்கு ஆகும்.
- ஓய்வு இலா நேசமே, ஓலமே சரணம்.
- ஓயாக் கவலை தீரா வியாதி.
- ஓயாது சிரிப்பவள் உன்னையே கெடுப்பாள்
- ஓயாமல் அழு, நோவாமல் அடிக்கிறேன் என்ற கதை.
- ஓயா மழையும் ஒழியாக் காற்றும்.
- ஓர் ஆடு நீர் விட்டால் எல்லா ஆடும் நீர் விடும்.
- ஓர் ஆடு மேய்த்தவனே என்றாலும் அதுவும் கெட்டவனே என்றானாம்.
- ஓர் ஆண்டி பசித்திருக்க உலகமெல்லாம் கிறுகிறு என்று சுழலுகிறது.
- ஓர் ஆறு தாண்டமாட்டாதவன் ஒன்பது ஆறு தாண்டுவானா?
- ஓர் உறையில் இரண்டு கத்தியா?
- ஓர் ஊர் நடப்பு: ஓரூர் பழிப்பு.
- ஓர் ஊர்ப் பேச்சு ஓரூருக்கு ஏச்சு.
- ஓர் ஊருக்கு ஒரு பேர் இட்டுக் கொள்ளலாமா?
- ஓர் ஊருக்கு ஒரு வழியா?
- ஓர் எருமை, ஒரு முருங்கமரம், கால் காணி இருந்தால் பஞ்சம் போகும்.
- ஓர் ஏர்க்காரன் உழுது கெட்டான்; நாலு ஏர்க்காரன் நிறுத்திக் கெட்டான், பத்து ஏர்க்காரன் பார்த்துக் கெட்டான்.
- ஓர் ஏரை விரைவில் மறி.
- ஓர்ப்படியாள் பிள்ளை பெற்றாள் என்று ஒக்கப் பிள்ளை பெறலாமா?
- ஓரக் கண்ணனைப் பழிக்கிறான் ஒன்றரைக் கண்ணன்.
- ஓரக் கண்ணும் காகக் கண்ணும் ஆகா.
- ஓரண்டைக் காடும் காடு அல்ல; ஓரேர் உழவு உழவும் அல்ல.
- ஓரம் சொன்னவன் ஆருக்கும் ஆகான்.
- ஓரம் வெளுத்து ஒரு பக்கம் செல் அரிக்க.
- ஓராம் கண்ணியா, ஒருத்தன் ஆள?
- ஓலை டப்பாசு உதறிக் கடாசு.
- ஓலைப் பாயில் நாய் மோண்டாற்போல.
- ஓலைப் பாயில் பேண்ட நாயைப்போல ஏன் சள சள என்கிறாய்?
ஒள
[தொகு]- ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
க
[தொகு]- கக்கரிக்குப் பந்தல், கத்தரிக்குக் கொத்து
- கக்கித் தின்னும் குக்கல்
- கக்கின பிள்ளை தக்கும்
- கங்கணம் கட்டிக் கொள்ளுதல்
- கங்கா ஸ்நானம், துங்கா பானம்
- கங்கை ஆடப் போன கடாவைக் கட்டி உழுதானாம்.
- கங்கை ஆடப் போனவன் கடாவைக் கட்டி அழுதானாம்
- கங்கை ஆடி மங்கை பார்
- கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தில் போவேனாக
- கங்கைக்கு நிகரான நதியும் இல்லை; காசிக்கு நிகரான பதியும் இல்லை
- கங்கைக்குப் போன கடாவைப் போல
- கங்கைக்குப் போனாலும் கர்மம் தொலையாது
- கங்கையில் ஆடினாலும் கணமும் விடாமல் செய்த பாவம் தீராது
- கங்கையில் ஆடினாலும் கர்மம் தொலையாது
- கங்கையில் ஆடினாலும் பாவம் தீராது
- கங்கையில் நீராடுபவன் குட்டையில் முழுக வேணுமோ?
- கங்கையில் படர்ந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது
- கங்கையில் பிறந்த நத்தை சாளக்கிராமம் ஆகாது
- கங்கையில் முழுகினாலும் கடன்காரன் விடான்
- கங்கையில் முழுகினாலும் பாவம் போகாது
- கங்கையில் முளைத்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது
- கங்கையில் மூழ்கினாலும் கறுப்புக் காக்கை வெள்ளை ஆகுமா?
- கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
- கச்ச நிலமானாலும் கை சேர்க்கை
- கச்சல் கருவாடு மோட்சத்துக்குப் போனாலும் பிச்சைக்காரன் மோட்சத்துக்குப் போக மாட்டான்
- கச்சான் பெண்களுக்கு மச்சான்
- கச்சினம் குளப்பாடு கண்டவர்க்கெல்லாம் சாப்பாடு
- கச்சேரிக்கு முன்னே போகாதே; கழுதைக்குப் பின்னே போகாதே
- கசக்கி மோந்து பார்க்கலாமா?
- கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை
- கசடருக்கு இல்லை கற்றோர் உறவு
- கசடருக்கு யோகம் வந்தால் கண்ணும் மண்ணும் தெரியாது; காதும் கேளாது
- கசடான கல்வியிலும் கல்வியீனம் நலம்
- கசடு அறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை
- கசந்தாலும் பாகற்காய்; காறினாலும் கருணைக் கிழங்கு
- கசந்து வந்தவன் கண்ணைத் துடை
- கசாப்புக் கடைக்காரன் தர்ம சாஸ்திரம் பேசுவது போல
- கசாப்புக் கடைக்காரனைக் கண்ட நாய் போல
- கசாப்புக் கடையில் ஈ மொய்த்தது போல
- கசாப்புக் கடையை நாய் காத்த மாதிரி
- கஞ்சனுக்குக் காசு பெரிது கம்மாளனுக்கு மானம் பெரிது
- கஞ்சனுக்குக் கொள்ளை பஞ்சம் இல்லை
- கஞ்சி ஊற்ற ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் உண்டு
- கஞ்சிக் கவலை, கடன்காரர் தொல்லை சொல்லத் தொலையுமோ?
- கஞ்சிக்குக் காணம் கொண்டாட்டம்
- கஞ்சிக்குப் பயறு போட்டாற் போல
- கஞ்சிக்கு லாட்டரி, கைக்குப் பாட்டரியா?
- கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்
- கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி
- கஞ்சி குடித்தாலும் கடன் இல்லாமல் குடிக்க வேணும்
- கஞ்சித் தண்ணீருக்குக் காற்றாய்ப் பறக்கிறான்
- கஞ்சியைக் காலில் கொட்டிக் கொள்ளும் அவசரம்
- கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்றானாம்
- கஞ்சி வார்க்க ஆள் இல்லாமல் போனாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது
- கட்கத்தில் நிமிண்டுகிற கை நமன் கை
- கட்கத்தில் வைப்பார்; கருத்தில் வையார்
- கட்டக் கருகுமணி இல்லாமற் போனாலும் பேர் என்னவோ பொன்னம்மாள்
- கட்டச் சங்கிலி வாங்கியாகிவிட்டது; ஆனைதான் பாக்கி
- கட்டத் துணி இல்லை; கூத்தியார் இரண்டு பேர்
- கட்டத் துணியும் இல்லை; நக்கத் தவிடும் இல்லை
- கட்டப்பாரை பறக்கச்சே எச்சிற்கலை எனக்கு என்னகதி என்கிறதாம்
- கட்டப்பாறையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் குடிப்பதா?
- கட்டப்பாலை முற்றப் பழுக்குமோ?
- கட்டாணித் தனமாய்க் கல்யாணம் செய்தான்
- கட்டாந்தரை அட்டை போல
- கட்டாந்தரை அட்டை போலக் கட்டிக்கொண்டு புரளுகிறதா?
- கட்டாந்தரையில் தேள் கொட்டக் குட்டிச்சுவரில் நெறி கட்டினதாம்
- கட்டாந்தரையில் முக்குளிக்கிறது
- கட்டி அடித்தால் என்ன? விட்டு அடித்தால் என்ன?
- கட்டி அழுகிற போது கையும் துழாவுகிறதே!
- கட்டி அழுகையிலே. என்மகளே, உனக்குப் பெட்டியிலே கை என்ன?
- கட்டி இடமானால் வெட்டி அரசாளலாம்
- கட்டிக் கறக்கிற மாட்டைக் கட்டிக் கறக்க வேண்டும்; கொட்டிக்கறக்கிற மாட்டைக் கொட்டிக் கறக்க வேண்டும்
- கட்டிக் கிடந்தால்தான் உள் காய்ச்சல் தெரியும்
- கட்டிக் கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த வார்த்தையும் எவ்வளவு நாளைக்கு?
- கட்டிடம் கட்டச் சங்கீதம் பாடு
- கட்டிடம் கட்டியவன் முட்டாள்; வாழுகிறவன் சமர்த்தன்
- கட்டித் தங்கம் ஆனால் கலீர் என்று ஒலிக்குமா?
- கட்டிப்படுத்தால் அல்லவோ உட்காய்ச்சல் தெரியும்?
- கட்டிப் பீ எல்லாம் கூழ்ப் பீயாய்க் கரைந்தது
- கட்டிப் பீ எல்லாம் தண்ணீர்ப்பீ ஆச்சுது
- கட்டிமகள் பேச்சு, கல்லுக்குக்கல் அண்டை கொடுத்தது போல்
- கட்டிய கட்டிலிருந்து கின்னரி வாசிக்கிறது போல
- கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்று சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்
- கட்டிலின்மேல் ஏறியும் முறைபார்க்கிறது உண்டா?
- கட்டிலைத் திருப்பிப் போட்டால் தலைவலி போகுமா?
- கட்டி வழி விட்டால் வெட்டி அரசாளலாம்
- கட்டி விதை, வெட்டி விதை. கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தாற் போல
- கட்டி வைத்த பூனையை அவிழ்த்துவிட்டு, வாபூஸ் வாபூஸ் என்றால் வருமா?
- கட்டிவைத்த முதல் அழியக் கச்சவடம் பண்ணாதே
- கட்டின கோவணத்தைக் காற்றில் விட்டவன்
- கட்டின பசுப் போல்
- கட்டின பொண்டாட்டி இருக்கக் காத்தாயியைக் கண் அடித்தானாம்
- கட்டின பொண்டாட்டி பட்டி மாடு மாதிரி
- கட்டின பொண்டாட்டியையும் உடுத்தின துணியையும் நம்பாதவன்
- கட்டின மாட்டை அவிழ்ப்பாரும் இல்லை; மேய்த்த கூலியைக் கொடுப்பாரும் இல்லை
- கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு ஆயிரம் வீடு
- கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு ஊரெல்லாம் வீடு
- கட்டின விதை வெட்டின விதை.
- கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை.
- கட்டின வீட்டுக்குக் கருத்துக் கருத்துச் சொல்லுவார்.
- கட்டின வீட்டுக்குப் பணிக்கை சொல்லாதவர் இல்லை.
- கட்டின வீட்டுக்குப் பழுது சொல்வது எளிது.
- கட்டினது கட்டாயத்தாலி ஆனாலும் கல்யாணம் கல்யாணம்தான்.
- கட்டினான் தாலி; காட்டினான் கோலம்.
- கட்டு அறிந்த நாயும் அல்ல; கனம் அறிந்த கப்பரையும் அல்ல.
- கட்டுக் கட்டு விளக்குமாறு கப்பலிலே வருகிறது என்றால் ஒரு காசு விளக்குமாறு இரண்டு காசு.
- கட்டுக் கலம் காணும்; கதிர் உழக்கு நெல் காணும்.
- கட்டுக் காடை இடமானால் குட்டிச் சுவரும் பொன் ஆகும்.
- கட்டுக்கு அடங்காக் காளை போல.
- கட்டுக்கு அடங்காப் பிடாரியைப் போல,
- கட்டுக்குக் கட்டு மாற்றிக் கட்ட வேண்டும்.
- கட்டுக் குலைந்தால் கனம் குலையும்.
- கட்டுச் சோற்று மூட்டையில் எலியை வைத்துக் கட்டினது போல.
- கட்டுச் சோற்று மூட்டையில் பெருச்சாளியை வைத்துக் கட்டின மாதிரி.
- கட்டுச் சோற்று மூட்டையையும் கைக்குழந்தையையும் எடுக்கல் ஆகாது.
- கட்டுச் சோறு எத்தனை நாளைக்கு?
- கட்டுத் தறியை விட்டு மேய்ச்சற் காட்டில் பிடிப்பது.
- கட்டுத் துறை சரியாக இருந்தால் கன்றுக்குட்டி துள்ளி விளையாடும்.
- கட்டுப் பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப்பட வேண்டும்; குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.
- கட்டுப் படாத பெண் சொட்டுக் கொண்டு போயிற்று.
- கட்டுப் பானை ஊற்று எட்டு நாளைக்கே.
- கட்டு மரத்தைச் சென்னாக்குனி அரிக்கிறது போல.
- கட்டுருட்டிக் காளை போல.
- கட்டெறும்பு இட்டலியைத் தூக்கினது போல.
- கட்டை இருக்கிற மட்டும் கஷ்டம் உண்டு.
- கட்டைக் கலப்பையும் மொட்டைக் காளையும் காணிக்கு உதவாது.
- கட்டைக்குப் போகும் போது காலாழி பீலாழியா?
- கட்டைக் கோணல் அடுப்பில் நிமிர்ந்தது.
- கட்டை கிடக்கிற கிடையைப் பார்;கழுதை குதிக்கிற குதியைப் பார்.
- கட்டை போனால் அடுப்போடு.
- கட்டை போனால் வெட்டை.
- கட்டையிலே வைக்க.
- கட்டையைச் சுட்டால் கரி ஆகுமா? மயிரைச் சுட்டால் கரி ஆகுமா?
- கட்டை விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினாற் போல.
- கட்டோடே போனால் கனத்தோடே வரலாம்
- கடகச் சந்திர மழை கல்லையும் துளைக்கும்.
- கடந்த நாள் கருதினால் வருமா?
- கடந்தவர்க்குச் சாதி இல்லை.
- கடந்து போன காலம் கதறினாலும் வராது.
- கடந்து போனது கரணம் போட்டாலும் வராது.
- கடப்பாரையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் குடிக்கலாமா?
- கடல் உப்பும் மலை நாரத்தங்காயும் போலே.
- கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற் போல.
- கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே?
- கடல் தண்ணீர் வற்றினாலும் பள்ளிச்சி தாலி வற்றாது.
- கடல் தாண்ட மனம் உண்டு; கால்வாய் தாண்டக் கால் இல்லை.
- கடல் திடல் ஆகும்; திடல் கடல் ஆகும்.
- கடல் நீர் நிறைந்து ஆவதென்ன? காஞ்சிரை பழுத்து ஆவதென்ன?
- கடல் பாதி, கடம்பாக்குளம் பாதி.
- கடல் பெருகினால் கரை ஏது?
- கடல் பெருகினால் கரையும் பெருகுமா?
- கடல் போயும் ஒன்று இரண்டாம் வாணிகம் இல்.
- கடல் மடை திறந்தது போல.
- கடல் மணலை எண்ணக் கூடுமா?
- கடல் மீனுக்கு நீச்சம் பழக்க வேணுமா?
- கடல் மீனுக்கு நுளையன் இட்டதே பேர்.
- கடல் முழுவதும் கவிழ்ந்து குடிக்கலாமா?
- கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
- கடலில் அகப்பட்ட மரத்துண்டு போல.
- கடலில் அலையும் துரும்பு போல.
- கடலில் இருக்கும் கள்ளியைக் கொள்.
- கடலில் ஏற்றம் போட்ட கதை.
- கடலில் கரைத்த புளி போல.
- கடலில் கரைத்த பெருங்காயம் போல.
- கடலில் கிடக்கும் துரும்புகளை அலைகளோடு தூக்கித் தரையில் தள்ளுகிறது போல.
- கடலில் கையைக் கழுவி விடுகிறதா?
- கடலில் துரும்பு கிடந்தாலும் கிடக்கும்; மனசிலே ஒரு சொல் கிடவாது.
- கடலில் பிறக்கும் உப்புக்கும் மலையில் விளையும் நாரத்தங்காய்க்கும் தொந்தம்.
- கடலில் பெருங்காயம் கரைத்தது போல.
- கடலில் போட்டு விட்டுச் சாக்கடையில் தேடுகிறதா?
- கடலில் மூழ்கிப் போனாலும் கடனில் மூழ்கிப் போகாதே
- கடலிலும் பாதி கடம்பாக்குளம்.
- கடலின் ஆழத்தை அளந்தாலும் மனசின் ஆழத்தை அளக்க முடியாது.
- கடலினுள் நா வற்றினது போல.
- கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
- கடலை அடைக்கக் கரை போடலாமா?
- கடலைக்காய்ப் பானையிலே கையை விட்டாற்போல.
- கடலைத் தாண்ட ஆசை உண்டு; கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
- கடலைத் தாண்டினவனுக்கு வாய்க்கால் தாண்டுகிறது அரிதா?
- கடலைத் தூர்த்தாலும் காரியம் முடியாது.
- கடலைத் தூர்த்தும் காரியத்தை முடிக்க வேண்டும்.
- கடலை விதைத்தால் கடுத்த உரம்.
- கடலை விதைப்பது கரிசல் நிலத்தில்
- கடவுள் இருக்கிறார்.
- கடவுள் சித்தத்துக்கு அளவேது?
- கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
- கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
- கடற்கரைத் தாழங்காய் கீழே தொங்கி என்ன? மேலே தொங்கி என்ன?
- கடற்கரையில் தாழங்காய் அக்கரையில் கிடந்தால் என்ன? இக்கரையில் கிடந்தால் என்ன?
- கடன் ஆச்சு; உடன் ஆச்சு; வீட்டு மேலே சீட்டு ஆச்சு; அடித்து விடடா தேவடியாள் தெருவிலே பல்லக்கை.
- கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு போதும்.
- கடன் இல்லாத சோறு கால் வயிறு போதும்.
- கடன் இல்லாவிட்டால் காற்றுப் போல.
- கடன் இழவுக்கு அழுகிறாய்.
- கடன்காரனுக்குக் கடனும் உடன்பிறந்தானுக்குப் பங்கும் கொடுக்க வேண்டும்.
- கடன்காரனுக்குக் கடனும் பழிகாரனுக்குப் பழியும் கொடுத்துத் தீர வேணும்
- கடன்காரனுக்கு மயிரும் எமனுக்கு உயிரும்.
- கடன்காரனை வைத்த கழு உண்டா?
- கடன், காலச் சனியன்.
- கடன் கேட்காமல் கெட்டது; வழி நடக்காமல் கெட்டது,
- கடன் கொடுத்துப் பொல்லாப்பு அடைவதைவிடக் கடன் கொடுக்காமல் பொல்லாப்பு அடையலாம்.
- கடன் கொண்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்.(தனிப்பாடல்.)
- கடன் கொண்டும் செய்வன செய்.
- கடன் கொண்டும் செய்வார் கடன்.
- கடன் சிறிது ஆனாலும் கடமை பெரிது.
- கடன் நெஞ்சைக் கலக்கும்.
- கடன் பட்ட சோறு கால் வயிறு நிரம்பாது.
- கடன் பட்டவன் சோறு காற் சோறு.
- கடன் பட்டார் நெஞ்சம் போல.
- கடன் பட்டாயோ, கடை கெட்டாயோ?
- கடன் பட்டு உடன் பட்டு அம்மை கும்பிட, நீயார் கூத்தி கும்பிட
- கடன் பட்டு உடன் பட்டு உடம்பைத் தேற்று மகனே கடன்காரன் வந்தால் தடியைத் தூக்கு மகனே!
- கடன் பட்டும் பட்டினியா?
- கடன் படுகிறவன் எப்போதும் சஞ்சலப் படுகிறவனே.
- கடன் வாங்கி உடன் வாங்கிச் சாமி கும்பிட, நீயாரடா கூத்திமகன் விழுந்து கும்பிட?
- கடன் வாங்கிக் கடன் கொடாதவனும் கெட்டான்; வட்டியிலே சாப்பிடாதவனும் கெட்டான்.*
- கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
- கடன் வாங்கிச் செலவு செய்தவனும் மரம் ஏறிக் கைவிட்டவனும் சரி.
- கடன் வாங்கித் தின்றவன் கடைத்தேற மாட்டான்.
- கடன் வாங்கிப் பயிர் இட்டவனும் மரம் ஏறிக் கைவிட்டவனும் ஒன்று.
- கடன் வாங்கியும் கல்யாணம் செய்
- கடன் வாங்கியும் பட்டினி; கல்யாணம் ஆகியும் பிரமசாரி.
- கடன் வாங்கினவன் மடியில் கல நெருப்பு.
- கடன் வாங்குகிறபோது இனிப்பு; கடன் கொடுக்கிறதென்றால் கசப்பு.
- கடன் வாங்குகிறவன் கடைத்தேற மாட்டான்.
- கடனாகக் கிடைக்கிறதானாலும் ஆனையை வாங்கிக் கட்டிக் கொள்வதா?
- கடனா உடனா வாங்கிக் காரியத்தை முடி.
- கடனோடு கடன் ஆகிறது; அண்டை வீட்டில் மேல் சீட்டு ஆகிறது; பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணு.
- கடனோடு கடன் கந்தப் பொடி காற்பணம்.
- கடனோடே கடன்; உடனோடே உடன்.
- கடன் ஆனாலும் உழக்குப் பால் கறக்காதா என்கிறான்
- கடா இடுக்கில் புல் தின்கிறது போல.
- கடா கடா என்றால் கால் ஆழாக்குப் பீச்சு என்கிறாயே!
- கடா கடா என்றால் உழக்குப் பால் என்று கேட்கிறாயே!
- கடா கடா என்றால் கன்றுக்கு உழக்குப் பாலா என்கிறான்.
- கடா கடா என்றால் மருந்துக்கு ஒரு பீர் என்கிறான்.
- கடா மேய்க்கிறவன் அறிவானோ, கொழுப் போன இடம்?
- கடாரங் கொண்டான் கிணற்றில் கல்லைப் போட்டது போல.
- கடாவின் சந்தில் புல்லைத் தின்னுகிறது போல
- கடாவும் கடாவும் சண்டை போடுகிறபோது உண்ணி நசுங்கினாற்போல
- கடிக்க ஓர் எலும்பும் இல்லை
- கடிக்க மாட்டாத பாக்கு உத்தம தானம்
- கடிக்க வந்த நாய்க்குத் தேங்காய்க் கீற்றுப் போட்டாற் போல
- கடிக்கிற நாகம் கலந்து உறவாகுமா?
- கடிக்கிற நாய்க்குக் கழுத்திற் குறுங்கயிறு
- கடிக்கிற பாம்பை நல்ல பாம்பு என்ற கதை
- கடிகோலிலே கட்டின நாய்
- கடித்த நாய்க்குக் காடியைக் கொடு
- கடித்த நாயைக் கொன்றாலும் பயன் உண்டாகாது
- கடித்த நாயை வெறி நாய் என்பது போல
- கடித்த நாயைப் பைத்தியம் கொண்டது என்பார்கள்
- கடித்த பாக்குக் கொடாத சிற்றன்னை கடற்கரை மட்டும் வழியனுப்பினாளாம்
- கடித்த பாக்கும் கொடாத சிற்றப்பன் கடைத்தெரு வரையில் வழி விட்டானாம்
- கடித்த பாம்புக்குப் பால் வார்த்தால் அது விஷத்தைத்தான் தரும்
- கடித்த பாம்புக்குப் பால் வார்த்தால் கடித்தே தீரும்
- கடித்த மூட்டை, கடியாத மூட்டை, எல்லா மூட்டையும் சரிதான்
- கடித்த மூட்டையும் சரி, கடியாத மூட்டையும் சரி
- கடித்த வாய் துடைத்தாற் போல
- கடித்தால் நாய்; மிதிபட்டால் வாய் இல்லா ஜந்து
- கடித்தாலும் கடிக்கட்டும்; நீ சொல்லாதிரு
- கடித்த பாக்குக் கொடுக்காத சிற்றப்பன் கடைத்தெரு வரையில் வழித்துக் கொண்டு வழிவிடுவான்
- கடிதான சொல் அடியிலும் வலிது
- கடிதான பிள்ளை பெற்றோருக்கு உதவுமா?
- கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை
- கடி நாய் எலும்புக்குப் பறந்தாற் போல
- கடிப்பதற்கு ஓர் எலும்பும் இல்லை; காதில் மினுக்க ஓலையும் இல்லை
- கடிய மாட்டுக்குக் கம்பு உடையும், கொடிய மாட்டுக்குக் கொம்பு உடையும்
- கடியாத மூட்டை என்று விட்டு விடுவார்களா?
- கடியும் சுருக்குத்தான்; அடியும் சுருக்குத்தான்
- கடிவாளம் இல்லாத குதிரை போல
- கடுக்கன் இட்ட நேற்றுக்குள் காது அறுந்த சுருக்கு
- கடுக்கன் ஜோடியும் காளைமாட்டு ஜோடியும் அமைவது கடினம்
- கடுக்காய்க்கு அகணி நஞ்சு: சுக்கிற்குப் புறணி நஞ்சு
- கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்
- கடுகிலும் கால் திட்டம் கரண்டி; அதிலும் கால் முட்டை எண்ணெய் கடன் வாங்கி என் தலை சீவிக் கட்டி, மகள் தலை வாரிக் கட்டி, மருமகன் தலை கோதிக் கட்டி, குறை எண்ணெய் வைத்த இடத்தில் அயல் வீட்டுக்காரி வந்து இடறி விட்டாள் ; அது ஏரி பெருகினாற் போலப் போயிற்று
- கடுகிற்று, முடுகிற்று, வடுகச்சி கல்யாணம்
- கடுகு அத்தனை நெருப்பு ஆனாலும் போரைக் கொளுத்தி விடும்
- கடுகு அளவும் களவுதான்; கர்ப்பூரக் களவும் களவுதான்
- கடுகு சிந்தினால் கலகம் வரும்
- கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
- கடுகு செத்தாலும் கறுப்புப் போகாது
- கடுகு செத்தும் காரம் போகாது
- கடுகு போகிற இடத்தில் தடி எடுத்துக் கொண்டு திரிவான்; பூசணிக்காய் போவது தெரியாது
- கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது
- கடுகு மலை ஆச்சு; மலை கடுகு ஆச்சு
- கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டினது போல
- கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்
- கடுஞ் சிநேகிதம் கண்ணுக்குப் பொல்லாதது
- கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்
- கடு நட்பும் பகை விளைப்பு
- கடும் காற்று மழை காட்டும்; கடு நட்புப் பகை காட்டும்
- கடும் கோபம் கண்ணைக் கெடுக்கும். கடும் சிநேகம் கண்ணைக் கெடுக்கும்
- கடும் செட்டுக் கண்ணைக் கெடுக்கும்
- கடும் செட்டுக் காரியக் கேடாம்
- கடும் செட்டுத் தயவைக் கெடுக்கும்
- கடும் சொல் கேட்டால் காதுக்குக் கொப்புளம்
- கடும் பசி கல்மதில் உடைத்தும் களவு செய்யச் சொல்லும்
- கடும் போரில் கைவிடலாமா?
- கடு முடுக்கடா சேவகா, கம்பரிசியடா சம்பளம்
- கடுவெளியைக் கானல் ஜலமாய்க் கண்டது போல
- கடை அரிசி கஞ்சிக்கு உதவுமா?
- கடை ஓடித் தாவும் நிலத்துக்குக் கரையடி மேட்டு நிலம் எளிது
- கடைக்குக் கடை ஆதாயம்
- கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள்
- கடைக்குக் கடை ஆள் தாவியென
- கடைக்குட்டி கட்டி மாம்பழம்
- கடைக்குப் போகக் கண்ணிக்குப் போக
- கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவார்
- கடை கெட்ட நாய் கல்யாணத்துக்குப் போனதாம்; எச்சில் இலை கிடைக்காமல் எட்டி எட்டிப் பார்த்ததாம்
- கடை கெட்ட மூளிக்குக் கோபம் கொண்டாட்டம்
- கடை கெட்ட மூளி சூல் ஆனாலும் காற்பணத்துக் காசு செல்லும்
- கடை கெட்ட வாழ்வு, தலை கட்ட நேரம் இல்லை
- கடைச் சோற்றுக்கு மோரும் கால் மாட்டுக்கு அணையும்
- கடைசிச் சோற்றுக்கு மோரும் கால் மாட்டிற்குப் பாயும் வேண்டும்
- கடைசிப் பிடி கட்டி மாம்பழம்
- கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தானாம்
- கடைத் தேங்காயை எடுத்து விநாயக பூஜை செய்த கதை
- கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுப்பாள்
- கடைப் பிறப்பு கழுதைப் பிறப்பு
- கடையச்சே வாராத வெண்ணெய் குடையச்சே வரப் போகிறதா?
- கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா? அண்டை வீட்டுக்காரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா?
- கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா? அவிசாரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா?
- கடையில் இருக்கும் கன்னியைக் கொள்
- கடையில் வந்ததும் அரிசியோ? நடையில் வெந்ததும் சாதமோ?
- கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே
- கடையிலே கொண்டு மனையிலே வைக்கிறான்
- கடையிலே தேளைக் கண்டு கை அசக்கினால் நிற்குமா?
- கடையும் போது வராத வெண்ணெய் குடையும் போது திரண்டு விடுமா?
- கடைவாயில் ஆனை ஒதுக்கினாற் போல
- கடைவாயில் ஓட்டின பீயைப் போல
- கண் அளக்காததைக் கை அளந்து விடுமா?
- கண் அறிந்தும் அயல் மனையில் இருக்கிறதா?
- கண் இமை, கை நொடி அளவே மாத்திரை
- கண் இமை போலக் காக்கிறான் கடவுள்
- கண் இமை போலே கரிசனமாய்க் காக்கிறது
- கண் இமையா முன்னே பறந்து போனான்
- கண் இரண்டும் இல்லாதவன் வீட்டுக்கு வைத்த விளக்கு
- கண் இருக்கிற போதே காக்கை பிடுங்குகிறது போல
- கண் இருந்தும் கண்டமங்கலத்தில் பெண் கொடுப்பார்களா?
- கண் இருந்தும் கிணற்றில் விழுந்ததுபோல
- கண் இருந்தும் குழியில் விழலாமா?
- கண் இல்லாக் குருடனுக்கு மூக்குக் கண்ணாடி ஏன்?
- கண் உள்ள போதே காட்சி; கரும்புள்ள போதே ஆலை
- கண் ஊனன் கைப் பொருள் இழப்பான்
- கண் ஒளி பெரிதா? கதிர் ஒளி பெரிதா?
- கண் கட்டி மந்திரமா காட்ட வந்தாய்?
- கண் கட்டி வித்தை காட்ட வந்தாயோ?
- கண் கட்டின புழுவைப் போல
- கண் கண்ட தெய்வம்
- கண் கண்டது கை செய்யும்
- கண் கண்டு வழி நட
- கண் காணாமல் கடும் பழி சொல்கிறதா?
- கண்குத்திப் பாம்பு போல் இருந்தாலும் கண்ணில் மண்ணைப்போடுகிறான்
- கண் குருட்டுக்கு மருந்து இட்டால் தெரியுமா?
- கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
- கண் குருடு ஆனாலும் நித்திரையிலே குறைவில்லை
- கண் குற்றம் கண்ணுக்குத் தெரியுமா?
- கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?
- கண் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது
- கண் கொண்டு அல்லவோ வழி நடக்க வேண்டும்?
- கண் பழுதுற்ற ஒரு பயணிக்கு குத்துக்கோல் ஒன்று கிடைத்த மாதிரி
- கண்ட இடத்தில் கத்தரி போடுவான்
- கண்ட இடத்தில் திருடன் கண் போகிறது
- கண்ட இடம் கைலாசம்
- கண்ட கண்ட கோயிலெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டேன் காணாத கோயிலுக்குச் காணிக்கை நேர்ந்து வைத்தேன்
- கண்ட தண்ணீருக்கு நிறை வேளாண்மை, கண்டது எல்லாம் ஓடித் தின்னும் ஆடு; நின்று நின்று மேய்ந்து போகும் மாடு
- கண்டதில் பாதி சவுசிகம்; சீமையில் பாதி ஶ்ரீவத்ஸம்; பாதியில் பாதி பாரத்துவாஜம்
- கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்
- கண்டது கை அளவு காணாதது உலகளவு
- கண்டது சொன்னால் கொண்டிடும் பகை
- கண்டது பாம்பு கடித்தது கருக்குமட்டை
- கண்டது பாம்பு. கடித்தது சோளத்தட்டை
- கண்டது பாம்பு கடித்தது மாங்கொட்டை
- கண்டதும் மருதாணியைக் காலில் இட்டுக் கொண்டால் கொண்டவனுக்கு முன்னால் குதித்தோடிப் போகலாம்
- கண்டதே காட்சி, கொண்டதே கோலம்
- கண்டதைக் காலை வாரி அடிக்கிறதா?
- கண்டதைக் கேட்டதைச் சொல்லாதே: காட்டு மரத்திலே நில்லாதே
- கண்டதைக் கேளா விட்டால் கொண்டவன் அடிப்பான்
- கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்
- கண்ட பாவனையா கொண்டை முடிக்கிறது?
- கண்டம் இல்லாத எருமை தண்டம்
- கண்டம் ஒருத்தன் கழுத்து ஒருத்தன், துண்டம் ஒருத்தன்; துடை ஒருத்தன்
- கண்ட மங்கலத்து அஞ்சு பெண்களும் ஒருத்தர் போன வழி ஒருத்தர் போகார்
- கண்ட மாப்பிள்ளையை நம்பிக் கொண்ட மாப்பிள்ளையைக் கைவிட்டாற் போல
- கண்டர மாணிக்கத்துக் கட்டுத் தறியும் வேதம் சொல்லும்
- கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்
- கண்டவன் எடுக்கானா?
- கண்டவன் எடுத்தால் கொடுப்பானா?
- கண்டவன் கொள்ளையும் கணியாகுளப் போரும்
- கண்டவன் விலை சொன்னால் கொண்டவன் கோடி உடான்
- கண்டார் கண்டபடி பேசுகிறது
- கண்டாரைக் கேட்டாரைச் சொல்லாதே. கண்டால் அல்லவோ பேசுவார் தொண்டைமான்?
- கண்டால் ஆயம்; காணா விட்டால் மாயம்
- கண்டால் ஒரு பேச்சு; காணா விட்டால் ஒரு பேச்சு
- கண்டால் ஒன்று; கானா விட்டால் ஒன்று
- கண்டால் கரிச்சிருக்கும்; காணா விட்டால் இனித்திருக்கும்
- கண்டால் காமாட்சி நாயக்கர்; காணா விட்டால் காமாட்டி நாயக்கன்
- கண்டால் காயம்; காணாவிடில் மாயம்
- கண்டால் சரக்கறியேன்; காணாமல் குருக்கறியேன்
- கண்டால் கீச்சுக் கீச்சு; காணா விட்டால் பேச்சுப் பேச்சு
- கண்டால் தண்டம்; வந்தால் பிண்டம்
- கண்டால் துணை; காணா விட்டால் மலை
- கண்டால் தெரியாதா, கம்பளி ஆட்டு மயிரை?
- கண்டால் முறை சொல்கிறது; காணா விட்டால் பெயர் சொல்கிறது
- கண்டால் ரங்கசாமி, காணா விட்டால் வடுகப்பயல்
- கண்டால் வத்தி; காணா விட்டால் கொள்ளி
- கண்டி ஆயிரம், கப்பல் ஆயிரம், சிறு கம்பை ஆயிரம்
- கண்டிப்பு இருந்தால் காரியம்
- கண்டியிலே ஆனைகுட்டி போட்டால் உனக்காச்சா? எனக்காச்சா?
- கண்டிருந்தும் மலத்தைக் கவிழ்ந்திருந்து தின்பார்களா?
- கண்டு அறிந்த நாயும் அல்ல; கனம் அறிந்த பேயும் அல்ல
- கண்டு அறிய வேண்டும் கரும்பின் சுகம்; உண்டு அறிய வேண்டும்
- கண்டு அறியாதவன் பெண்டு படைத்தால் காடு மேடு எல்லாம் இழுத்துத் திரிவானாம்
- கண்டு எடுத்தவன் கொடுப்பானா?
- கண்டு எடுத்தானாம், ஒரு சுண்டு முத்தை
- கண்டு கழித்ததைக் கொண்டு குலாவினான்
- கண்டு செத்த பிணமானால் சுடுகாட்டுக்கு வழி தெரியும்
- கண்டு நூல் சிடுக்கெடுத்தாச்சு: வண்டி நூல் இருக்கிறது
- கண்டு பேசக் காரியம் இருக்கிறது; முகத்தில் விழிக்க வெட்கமாய் இருக்கிறது
- கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை என்று இருக்க வேண்டும்
- கண்டும் காணாதது போல் விட்டுவிட வேண்டும்
- கண்டும் காணாமலும் கேட்டும் கேட்காமலும் இருக்க வேண்டும்
- கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை என்று இருக்க வேண்டும்
- கண்டும் காணாததுபோல் விட்டுவிட வேண்டும்
- கண்டு முட்டு; கேட்டு முட்டு
- கண்டேன் சீதையை என்றாற் போல
- கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, காட்டானை, மண்ணாளும் வேந்தனோடு ஐந்தும் பித்து
- கண்ணாடியில் கண்ட பணம் கடன் தீர்க்க உதவுமா?
- கண்ணாரக் கண்டதற்கு ஏன் அகப்பைக் குறி?
- கண்ணாரக் காணாதது மூன்றில் ஒரு பங்கு
- கண்ணால் கண்டது பொய்; அகப்பைக்குறி மெய்
- கண்ணாலே கண்டது பொய்; கருதி விசாரித்தது மெய்
- கண்ணாலே கண்டது பொய்; காதாலே கேட்டது மெய்
- கண்ணாலே கண்டதும் பொய்; காதாலே கேட்டதும் பொய்; ஆராய்ந்து பார்ப்பது மெய்
- கண்ணாலே கண்டதை எள்ளுக்காய் பிளந்ததுபோல் சொல்ல வேண்டும்
- கண்ணாலே கண்டதைக் கையாலே செய்வான்
- கண்ணாலே கண்டாலும் மண்ணாலே மறைக்க வேண்டும்
- கண்ணாலே சீவன் கடகடவென்று போனாலும் வண்ணானுக்கு மழை நஞ்சு
- கண்ணாலேயும் கண்டதில்லை. காதாலேயும் கேட்டதில்லை
- கண்ணான பேர்களை மண் ஆக்குகிறான்
- கண்ணான பேரை எல்லாம் புண் ஆக்கிக் கொண்டு, கரும்பான பேரை எல்லாம் வேம்பாக்கிக் கொண்டான்
- கண்ணான மனசைப் புண் ஆக்குகிறான்
- கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
- கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
- கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது
- கண்ணுக்கு ஆனால் புண்ணுக்கு ஆகாது
- கண்ணுக்கு இமை காதமா?
- கண்ணுக்கு இமை; பெண்ணுக்கு நாணம்
- கண்ணுக்கு என்ன கரிப்பு?
- கண்ணுக்குக் கண் அருகே காணலாம்
- கண்ணுக்குக் கண்ணாய் இருந்தும் கடைப் பெண்ணுக்கு வழி பார்க்கிறதா?
- கண்ணுக்குக் கலம் தண்ணீர் விடுகிறது
- கண்ணுக்குப் புண்ணும் அல்ல; காண்பார்க்கு நோவும் அல்ல
- கண்ணுக்கு மூக்குக் காத தூரம் இல்லை
- கண்ணுக்கும் மூக்குக்கும் காலம் இப்படி வந்ததே!
- கண்ணுக்கும் மூக்குக்கும் நேராகப் பார்
- கண்ணுக்குள் சம்மணம் கொட்டுவான்; கம்பத்தில் ஐந்தானை கட்டுவான்
- கண்ணும் கருத்தும் உள்ள போது இல்லாமல், கண் பஞ்சு அடைந்த பின் என்ன கிடைக்கும்?
- கண்ணும் கலத் தண்ணீர் விடும்
- கண்ணும் கருத்தும் உள்ள போதே காணோம்; அவை போனபின் என்ன கிடைக்கும்?
- கண்ணும் நமது; விரலும் நமது: கண்ணைக் குத்துவதா?
- கண்ணும் புண்ணும் உண்ணத் தீரும்
- கண்ணும் மூக்கும் வைத்தான்; காரமும் கொஞ்சம் சேர்த்தான்
- கண்ணே. கண்ணே என்றால் உச்சி குளிருமா?
- கண்ணே, காதே, நமஸ்காரம்; கண்டதைக் கேட்டதைச் சொல்லாதே
- கண்ணை அலம்பி விட்டுப் பார்க்க வேண்டும்
- கண்ணை இமை காப்பது போல
- கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல
- கண்ணைக் கண்ணைக் காட்டுது, அண்ணி கழுத்துக் கருகுமணி
- கண்ணைக் காட்டினால் வராதவள் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா?
- கண்ணைக் குத்திய விரலைக் களைந்து எறிவார் உண்டோ?
- கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது
- கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுத்தது
- கண்ணைக் கொசு மொய்க்கக் கடை வாயை ஈ மொய்க்கப் புண்ணைப் புழு அரிக்கப் பெண்ணைப் போக விட்டாள் புங்காத்தை
- கண்ணைக் கொண்டு நடந்தது போல உன்னைக் கண்டு நடந்தேன்
- கண்ணைத் தின்ற குருடனும் நியாயத்தை ஒத்துக் கொள்ள வேணும்
- கண்ணைப் பிடுங்கி முன்னே எறிந்தாலும் கண்கட்டு வித்தை என்பார்கள்
- கண்ணைப் பிதுக்கிக் காட்டியும் வித்தையா?
- கண்ணை மூடிக் குட்டுகிறதா?
- கண்ணை மூடிக் கொண்டு காட்டில் நடப்பது போல
- கண்ணை விறைச்சுக் கொண்டு எங்கே போனாய்? கவுண்டன் செத்தான்; இழவுக்குப் போனேன்
- கண்ணோடே பிறந்த காவேரி ஆனாலும் உதட்டைச் சுட்டு உறவாடுவேன்
- கண்ணோடே பிறந்த காவேரி ஆனாலும் நம் எண்ணம் சரி ஆகுமா?
- கண்ணோ, புண்ணோ?
- கண்ணோ புண்ணோ என்று கலங்கி மனம் திடுக்கிடுகிறது
- கண் தெரிந்து நடப்பவர்கள் பள்ளத்தில் விழ மாட்டார்கள்
- கண் தெரிந்து வழி நடக்கும்படி நினை
- கண் தெரியாமல் வழி நடக்கிறது போல
- கண் படைத்தும் குழியில் விழலாமா?
- கண் பறிகொடுத்துக் கலங்கினாற் போல
- கண் பார்த்தால் கை செய்யும்
- கண் பார்த்துக் கையால் எழுதாதவன் கசடனாவான்
- கண் புண்ணிலே கோல் இட்டது போல
- கண் பெருவிரலைப் பார்க்கும் போதே கடைக்கண் உலகமெல்லாம் சுற்றும்
- கண் மூடர் கைப் பொருளை அழிப்பர்
- கண் மூடித் துரைத்தனம் ஆச்சே?
- கண் மூடிப் பழக்கம் மண் மூடிப் போகும்
- கணக்கதிகாரத்தைப் பிளக்கும் கோடாலி
- கணக்கப் பிள்ளை எல்லாம் எழுத்துப் பிள்ளையா?
- கணக்கப் பிள்ளை கொடுக்கைத் தூக்கி, கண்டவளெல்லாம் செருப்பைத் தூக்கி
- கணக்கப் பிள்ளை பொண்டாட்டி கடுக்கன் போட்டுக் கொண்டாள் என்று காரியக்காரன் பொண்டாட்டி காதை அறுத்துக் கொண்டாளாம்
- கணக்கப் பிள்ளை பொண்டாட்டி குணுக்கைப் போட்டு ஆடினாளாம்
- கணக்கன் கண் வைத்தால் கால் காணி பொட்டை
- கணக்கன் கணக்கு அறிவான்; தன் கணக்கைத் தான் அறியான்
- கணக்கன் கணக்கைத் தின்னா விட்டாலும் கணக்கனைக் கணக்குத் தின்று விடும்
- கணக்கன் கெட்டால் பள்ளிக்கூடம்
- கணக்கன் கணக்கைத் தூக்கி; கண்டவனெல்லாம் செருப்பைத்தூக்கி
- கணக்கன் மனைவி கடுக்கன் அணிந்தாளென்று காரியக்காரன் மனைவி காதை அறுத்துக் கொண்டாளாம்
- கணக்கன் வீட்டுக் கல்யாணம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
- கணக்கனுக்குக் கைக் கூலி கட்டிக் குடியிருக்கக் கடன் என்றாராம்
- கணக்கனுக்குப் பட்டினி உடன் பிறப்பு
- கணக்கனுக்கு மோட்சம் இல்லை; ஒட்டனுக்கு நரகம் இல்லை
- கணக்கனைக் கண்ட இடத்தில் கண்ணைக் குத்து
- கணக்கனைப் பகைத்தாயோ? காணியை இழந்தாயோ?
- கணக்கனோ, குணக்கனோ?
- கணக்கிலே கயிறு கோத்திருக்கிறது
- கணக்கு அதிகாரத்தைப் பிளக்கும் கோடாலி
- கணக்கு அரைக்கால், முக்காலே அரைக்கால், கணக்கன் பொண்டாட்டி தாலி அறுத்தாள்
- கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கு அறாது
- கணக்கு அறிவான், காலம் அறிவான்
- கணக்குக் குஞ்சையும் காக்கைக் குஞ்சையும் கண்ட இடத்திலே கண்ணைக் குத்து
- கணக்கிலே கயிறா கோத்திருக்கிறது?
- கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்
- கணபதி பூஜை கைமேலே பலன்
- கணவன் இல்லாத கற்புடைய பெண்ணின் கட்டழகு பயன்படாதது போல
- கணவன் கட்டிய தாலியை கட்டையில் போகும் வரை கழற்றாதே
- கணவனுக்கு கீழ்ப்படிவதே மனைவிக்கு அழகு
- கணவனுக்கு மிஞ்சித் தெய்வம் இல்லை
- கணவனுக்கு மிஞ்சின கடவுள் இல்லை; கடலுக்கு மிஞ்சின ஆழம் இல்லை
- கணவனே கண்கண்ட தெய்வம்
- கணவனைப் பிரிந்து அயல் வீட்டில் இருக்கிறதா?
- கணவனை வைத்துக் கொண்டு அல்லவோ கள்ள மாப்பிள்ளையைக் கொள்ள வேண்டும்?
- கணிகாலங்காரம் போல
- கணிசத்துக்கு இவள்; காரியத்துக்கு அவள்
- கணுக் கணுவாகக் கரும்பானாலும் ஆனைக்கு என்னவோ கடைவாய்க்குத்தான்
- கணுக்கால் பெருத்தால் கணவனைத் தின்பாள்
- கணை முற்றினால் கட்டையிலே
- கணையாழி கண்டான் ஆறு கொண்டது பாதி; தூறு கொண்டது பாதி
- கத்தரிக்காய் என்று சொன்னால் பத்தியம் முறிந்து போகுமா?
- கத்தரிக்காய்க்குக் காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி
- கத்தரிக்காய்க்குக் கால் முளைத்தால் கடைத்தெருவுக்கு வந்தால் தெரிகிறது
- கத்தரிக்காய்க்குக் கையும் காலும் முளைத்தாற் போல்
- கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள் மணை குற்றம் என்கிறாள்
- கத்தரிக்காய் நறுக்குகிற கையும் காலும் பார்த்தால் பூசணிக்காய் வழி போகாதே, போகாதே என்கிறதாம்
- கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுரா?
- கத்தரிக்காய் விதை சுரைக்காயாய் முளைக்காது
- கத்தரிக்காய்க்குக் காலும் தலையும் முளைத்தது போல்
- கத்தரிக்காய் விற்ற பெட்டி காசுப் பெட்டி; வெள்ளரிக்காய் விற்ற பெட்டி வெறும் பெட்டி
- கத்தரிக்காயை நறுக்கிக் காலும் கையும் வெட்டிக் கொண்ட பெண்ணே, நீ பூசணிக்காய்ப் பக்கம் போகாதே
- கத்தரிக் கொல்லையிலே கூத்து வேடிக்கை பார்த்தது போல
- கத்தரித் தோட்டக்காரனுக்குக் கண் தெரியாது; வெள்ளரித் தோட்டக்காரனுக்குக் காது கேளாது
- கத்தரித் தோட்டத்துக் களை பிடுங்கினாற் போலும் இருக்க வேண்டும்; கன்றுக் குட்டிக்குப் புல் பிடுங்கினாற் போலும் இருக்க வேண்டும்
- கத்தி இருக்கும் இடத்துக்கு மரை காவுகிறதா?
- கத்தி எட்டின மட்டும் வெட்டும்; பணம் எட்டாத மட்டும் வெட்டும்
- கத்தி கட்டி பெண்சாதி எப்போதும் கைம்பெண்டாட்டி
- கத்திப் பிடிக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு ஆகட்டும்
- கத்தியும் கடாவும் போல
- கத்தியும் வெண்ணெயும் காய்ச்சித் துவைத்துக் கடை
- கத்தியைப் பார்க்கிலும் கனகோபம் கொலை செய்யும்
- கத்து, கத்து என்றால் கழுதையும் கத்தாது; சொல் சொல் என்றால் புலவனும் சொல்லான்
- கத்துகிற மட்டும் கத்திவிட்டுப் போகச்சே கதவைச் சாத்திக்கொண்டு போ
- கதலீனாம் முதலீனாம் பலகாலே வக்ர கதி
- கதவின் கீழே நின்று கொண்டு காலைக் காலைக் காட்டினாளாம்
- கதவைச் சாத்தினால் நிலை புறம்பு
- கதி இருவர் கன்னித் தமிழுக்கு
- கதி கெட்ட மாப்பிள்ளைக்கு எரு முட்டை பணியாரம்
- கதிர் களைந்தும் களை எடு
- கதிர் நூல் குறைந்தாலும் கள்ளச்சி கழுத்து நூல் குறையாது
- கதிர் போல இளைத்துக் குதிர் போல் பெருப்பது
- கதிர் முகத்தில் என்ன ராசி முழக்கம் வேணும்?
- கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
- கதிரிலே ஒடிக்காதே என்றால் கணுவிலே ஒடித்துப் போடுகிறாயே!
- கதிருக்கு முந்நூறு நெல் இருந்தால் முழு வெள்ளாண்மை
- கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு
- கதிரைப் பார்க்கிறதா? குதிரைப் பார்க்கிறதா?
- கதை அளக்கிறான்
- கதைக்குக் கண் இல்லை; காமத்திற்கு முறை இல்லை
- கதைக்குக் கால் இல்லை; கண்ட புருஷனுக்கு முறை இல்லை
- கதைக்குக் கால் இல்லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை; கூத்தாடிக்கு முறை இல்லை
- கதைக்குக் கால் இல்லை, பேய்க்குப் பாதம் இல்லை
- கதைக்குக் காலும் இல்லை; கத்தரிக்காய்க்கு வாலும் இல்லை
- கதைக்குக் காலும் இல்லை; தலையும் இல்லை
- கதை கதையாம் காரணமாம்; காரணத்தில் ஒரு தோரணமாம்
- கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி
- கதை பண்ணுகிறான்
- கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்தது
- கதையை நிறுத்திக் காரியத்தைப் பேசு
- கதையோ பிராமணா, கந்தையோ பொத்துகிறாய்? அல்லடி பேய் முண்டை, சீலைப்பேன் குத்துகிறேன்
- கந்தப்பூர் சிற்றப்பா நமஸ்காரம்; பாதி பொச்சை மூடிக்கொண்டு பாக்கியசாலியாய் இரு
- கந்தப் பொடிக் கடைக்காரனுக்குக் கடுகு வாசனை தெரியுமா?
- கந்த புராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை
- கந்த புராணம், நம் சொந்தப் புராணம்
- கந்தர் அந்தாதியைப் பாராதே; கழுக்குன்ற மாலையை நினையாதே
- கந்தலில் கால் இட்டது போல
- கந்தன் களவுக் கல்யாணத்துக்குக் கணபதி சாட்சி
- கந்தனுக்குப் புத்தி கவட்டிலே
- கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு; கூழ் ஆனாலும் குளித்துக் குடி
- கந்தை உடுத்துக் கடைவீதி போனாலும் கண்ணாடி கண்ணாடியே
- கந்தைக்கு ஏற்ற பொந்தை; கழுவுக்கு ஏற்ற கோமுட்டி
- கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்
- கந்தைத் துணி கண்டால் களிப்பாள்; எண்ணெய்த் தலை கண்டால் எரிவாள்
- கந்தைத் துணியும் கரி வேஷமும் ஆனான்
- கந்தையை அவிழ்த்தால் குட்டி வெளிச்சம் தெரியும்
- கந்தையை அவிழ்த்தால் சிந்தை கலங்கும்
- கந்தையைக் கட்டி வெளியே வந்தால் கண்ணாட்டி; வெள்ளையைக் கட்டி வெளியே வந்தால் வெள்ளாட்டி
- கப்பரையிலே கல் விழுகிறது
- கப்பல் அடிப்பாரத்துக்குக் கடற்கரை மண்ணுக்குத் தாவு கெட்டாற் போல
- கப்பல் உடைந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
- கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல
- கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்
- கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுப் போகுமா?
- கப்பல் ஏறிய காகம் போலக் கலங்குகிறது
- கப்பல் ஏறிவிட்ட காகம் கலங்குமா?
- கப்பல் ஒட்டிய வாழ்வு காற்று அடித்தால் போச்சு
- கப்பல் போம்; துறை கிடக்கும்
- கப்பலில் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல
- கப்பலில் ஏறிய காகம் போல
- கப்பலில் பாதிப் பாக்கு
- கப்பலில் பாதிப் பாக்கைப் போட்டுவிட்டுத் தேடுவது போல
- கப்பலில் பெண் வருகிறது என்றானாம்; அப்படியானால் எனக்கு ஒன்று என்றானாம்
- கப்பலை விற்றுக் கப்பல் விற்றான். கொட்டை வாங்கித் தின்றானாம்
- கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே
- கப்பற்காரன் பொண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
- கப்பற்காரன் வாழ்வு காற்றடித்தால் போச்சு
- கப்பி என்றால் வாயைத் திறக்கிறது குதிரை; கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்கிறது
- கபடச் சொல்லிலும் கடிய சொல்லே மேல்
- கபடாவும் இல்லை; வெட்டுக் கத்தியும் இல்லை
- கபடு இருந்த நெஞ்சும் களை இருந்த பயிரும் உருப்படா
- கபடு சூது கடுகாகிலும் தெரியாது
- கபாலக் குத்துக் கண்ணைச் சுழிக்கும்
- கம்பங் கொல்லையில் மாடு புகுந்தது போல
- கம்ப சூத்திரமோ? கம்ப சித்திரமோ?
- கம்பத்தில் ஏறி ஆடினாலும் கீழ் வந்துதான் தியாகம் வாங்க வேணும்
- கம்பத்தில் கொடுத்த பெண்ணும் வாணியனுக்குக் கொடுத்த பாரும், விளங்கா
- கம்பப் பிச்சையோ? கடைப் பிச்சையோ?
- கம்பமே காவேரி, ரங்கனே தெய்வம்
- கம்பர் போன வழி
- கம்பர் போன வழி கண்டு கழித்தது
- கம்பராமாயணம் போல்
- கம்பளி மூட்டை என்று கரடி மூட்டையை அவிழ்த்தானா
- கம்பளி மேல் பிசின்
- கம்பளியிலே ஒட்டின கூழைப் போல
- கம்பளியிலே ஒட்டின பீ மாதிரி
- கம்பளியிலே சோற்றைப் போட்டு மயிர் மயிர் என்கிறதா?
- கம்பளி வேஷம்
- கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்
- கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவி பாடுவாள்
- கம்பனோ, பம்பனோ?
- கம்பி நீட்டினான்
- கம்புக்குக் களை பிடுங்கினாற் போலவும் தம்பிக்குப் பெண் பார்த்தாற் போலவும் ஆகும்
- கம்புக்குக் கால் உழவு
- கம்பு கொண்டு வந்து நாயை அடிப்பதா? கம்பு கிடக்கும் இடத்துக்கு நாயைத் தூக்கிக்கொண்டு போவதா?
- கம்பு மாவு கும்பினால் களிக்கு ஆகுமா?
- கம்மரீகமோ, ராஜரீகமோ?
- கம்மாளப் பிணம் விறைத்தாற் போல
- கம்மாளன் இருந்த இடமும் கழுதை இருந்த இடமும் சரி
- கம்மாளன் எடுக்காத சிக்கலை வாணியன் எடுப்பான்
- கம்மாளன் குடித்தனம் பண்ணாதே
- கம்மாளன் துணி வாங்கினால் கால்மயிர் தெரிய வாங்குவான் அதைச் சலவைக்கும் போடும் போது அடுப்பிலே போட்டாலும் வேகாது
- கம்மாளன் நாய் பட்டி ஒலிக்கு அஞ்சுமா?
- கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொண்டாலும் உள்ளே செவ்வரக்குப் பாய்ச்சியிருப்பான்
- கம்மாளன் பசுவை காதறுத்துக் கொள்
- கம்மாளன் பசுவைக் காது அறுத்து வாங்கு
- கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொள்ள வேண்டும்
- கம்மாளன் பணம் கரியும் பொறியுமாய்ப் போய் விட்டது
- கம்மாளன் பல்லக்கு ஏறினால் கண்டவர்க்கு எல்லாம் இறங்க வேண்டும்
- கம்மாளன் பிணத்தைக் காது அறுத்தாலும் ரத்தம் வராது
- கம்மாளன் வீட்டிற் பிள்ளை பிறந்தால் தேவடியாள் வீட்டில் சர்க்கரை வழங்குவாள்
- கம்மாளன் வீட்டு நாய் சம்மட்டிக்கு அஞ்சுமா?
- கம்மாளன் வீட்டுப் பசுவை காதறுத்துப் பார்த்தாலும் அங்கும் செவ்வரக்குப் பாய்ந்திருக்கும்
- கமரில் ஊற்றிய பால்
- கமரில் கவிழ்த்த பால், அமரர்க்கு அளித்த அன்னம்
- கயா கயா
- கயிற்றுப் பிள்ளை, கைப்பிள்ளை
- கயிற்றைப் பாம்பு என்று எண்ணிக் கலங்குகிறது போல
- கயிறு அறுந்த பட்டம் போல
- கயிறு இல்லாப் பம்பரம் போல
- கயிறு திரிக்கிறான்
- கர்ணன் கொடை பாதி, காவேரி பாதி
- கர்ணனுக்குப் பட்டினி உடன் பிறப்பு
- கர்த்தனைக் குருடன் கண்தான் வேண்டுவான்
- கர்த்தா, போக்தா, ஜனார்த்தனா
- கர்த்தாவின் செயல் உள்ளபடி
- கர்த்தாவைக் குருடன் வேண்டுவது கண் பெறத்தானே?
- கர்ப்பத்துக்குச் சுகம் உண்டானால் சிசுவுக்குச் சுகம்
- கர்ப்பிணியின் பேரில் துர்ப்பலம்
- கர்ப்பூர மலையில் ஆக்நேயாஸ்திரம் பிரயோகித்தது போல
- கர்மத்தினாலே வந்தது தர்மத்தினாலே போக வேண்டும்
- கர்மம் முந்தியா? ஜன்மம் முந்தியா?
- கர்விக்கு மானம் இல்லை; கோபிக்குப் பாபம் இல்லை
- கரகத்துத் தண்ணீர் காத வழி
- கரகத்து நீர் காதம் காக்கும்
- கரட்டுக் காட்டுக்கு முரட்டு மண் வெட்டி
- கரடிக்கு உடம்பெல்லாம் மயிர்
- கரடிக்குப் பயந்து ஆனையிடம் தஞ்சம் புகுந்தாற் போல
- கரடிக்குப் பிடித்த இடம் எல்லாம் மயிர்
- கரடி கையில் அகப்பட்டவனுக்கு கம்பளிக்காரனைக் கண்டாலும் பயம்
- கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக இடம் இராது
- கரடி பிறையைக் கண்டது போல
- கரடியைக் கைவிட்டாலும் கரடி கையை விடவில்லை
- கரண்டி ஆபீஸ்காரனுக்குக் காதிலே கடுக்கன் என்ன?
- கரண்டி பிடித்த கையும் கன்னக்கோல் பிடித்த கையும் சும்மா இருக்குமா?
- கரணம் தப்பினால் மரணம்
- கரதலாமலகம் போல் காண்கிறது
- கரம் கொண்டவன் அறம் வழுவலாகாது
- கரம் பற்றிய கன்னியைக் கதற அடிக்கக் கூடாது
- கரம் மாறிக் கட்டினால் கனம் குறையாது
- கரிக்காலி முகத்தில் விழித்தால் கஞ்சியும் கிடையாது
- கரிக்குருவியார் கண்ணுக்குக் காக்கையார் பொன்னொத்துத் தோன்றும்
- கரிச்சுக் கொட்டினால் எரிச்சல் வராதா?
- கரிசனப்பட்ட மாமியார் மருமகளைப் பார்த்து ஏக்கம் உற்றாளாம்
- கரிசனம் உள்ள கட்டியம்மா, கதவைத் திற பீப்பெய்ய
- கரிசனம் உற்ற சிற்றாத்தே, நீ கம்பங்கொல்லையில் வாடி கட்டி அழ
- கரிசனம் எல்லாம் கண்ணுக்குள்ளே; வஞ்சனை எல்லாம் நெஞ்சுக்குள்ளே
- கரியாய் உமியாய்க் கட்டை விளக்குமாறாய்
- கரியை வழித்து முகத்தில் தடவினாள்
- கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
- கரு இல்லாத முட்டையும் குரு இல்லாத வித்தையும்
- கருக்கலில் எழுந்தாலும் நறுக்கென்று சமைக்க மாட்டாள்
- கருக்கலில் கயிற்றைப் பாம்பு என்ற கதை
- கருக்கி உருக்கி நெய் வார்த்தாலும் கண்ட நியாயந்தான் சொல்லுவான்
- கருங்கண்ணி பட்டாலும் கரையான் கண்ணாலும் திரும்பிப்பாரான்
- கருங்கல்லில் ஈரம் ஏறாத் தன்மை போல
- கருங்கல்லில் எழுதிய எழுத்தைப் போல
- கருங்கல்லிலே நார் உரிப்பான்
- கருங்காலி உலக்கைக்கு வெள்ளிப் பூண் கட்டினது போல
- கங்காலிக் கட்டைக்கு வாய் நாணாத கோடாலி இளவாழைத்தண்டுக்கு வாய் நாணும்
- கருங்குரங்கு போல மலங்க விழிக்காதே
- கருங்கொல்லன் உலைக்களத்தில் நாய்க்கு என்ன வேலை?
- கருடன் இடம் போனால் எவன் கையில் பொருளும் தன் கையில் சேரும்
- கருடன் காலில் கெச்சை கட்டினது போல
- கருடன் பறக்க ஒரு கொசு பறந்தாற் போல
- கருடனுக்கு முன் ஈ ஆகுமா?
- கருடன் முன்னே கொசு பறந்த கதை
- கருடனுடன் ஊர்க்குருவி பறந்தது போல
- கருடனைக் கண்ட பாம்பு போல
- கருடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை
- கருப்பங்கட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துக் கொண்டு போச்சுதாம்
- கருப்பங்கட்டியிலும் கல் இருக்கும்
- கருப்பங் கொல்லையிலே நெருப்புப் பொறி விழுந்தாற்போல்
- கருப்பட்டி என்றவுடனே சளப்பட்டி என்று நக்கக் கூடாது
- கருப்பட்டியிலும் கல் இருக்கும்
- கருப்பட்டியைக் கொடுத்துக் கட்டிக்கொண்டு அழுதாலும் கசக்குது என்று சொல்கிறான்
- கருப்பட்டி லாபம் என்று புழுத்துப் போன கதை
- கருப்பிலே பிள்ளை விற்றாற்ப் போல
- கருப்புக் கட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துக் கொண்டு போயிற்றாம்
- கருப்புக் கட்டிக்கு எறும்பு தானே வரும்
- கருப்புக் கட்டியிலும் கல் கிடக்கும்
- கருப்புக்கு இருந்து பிழை; கலகத்துக்கு ஒடிப் பிழை
- கருப்பூர் மத்யஸ்தம் போல
- கருப்பூர் வழக்குப் போல
- கரும்பில் எறும்பு இருந்தால் ஆனைக்கு என்ன?
- கரும்பிலும் தேன் இருக்கும்
- கரும்பிலும் தேன் இருக்கும், கள்ளியிலும் பால் இருக்கும்
- கரும்பு ஆலையில் பட்ட எறும்பு போல
- கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்ந்தாற்போல்
- கரும்பு உள்ள போதே ஆலை ஆட்டிக்கொள்
- கரும்புக் கட்டாலே கழுதையை அடித்தால் கழுதைக்குத் தெரியுமா கரும்பு ருசி?
- கரும்புக்கு உழுத புழுதி காயச்சின பாலுக்குச் சர்க்கரை ஆகுமா?
- கரும்புக்குக் கணு இருந்தாலும் கசக்குமா?
- கரும்புக்குப் பழமும் கற்றவருக்குப் பணமும் பொன்னுக்கு மணமும் இல்லை
- கரும்புக் கொல்லையைக் காக்க ஆனையை விட்டது போல
- கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தன்னோடு வரும்
- கரும்பு கசத்தல் வாய்க் குற்றம்
- கரும்பு கசந்தால் வாய்க்குப் பொல்லாப்பு
- கரும்பு கசந்தது காலத்தோடே. வேம்பு தித்தித்தது வேளையோடே
- கரும்பும் எள்ளும் கசக்கினால்தான் பலன்
- கரும்பு முறித்துக் கழுதையை அடித்த கதை
- கரும்பும் வேம்பு ஆகும் காதல் போதையிலே
- கரும்பும் வேம்பு ஆச்சே
- கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?
- கரும்பு லாபம் எறும்பு கொண்டு போகும்
- கரும்பு வைப்பது காணி நிலத்தில்
- கரும்பைக் கழுதை முன் போட்டால் அதற்குத் தெரியுமோ கரும்பு ருசி?
- கரும்பைக் கையில் பிடித்தவன் எல்லாம் மன்மதன் ஆகிவிடுவானா?
- கரும்பை நறுக்கிப் பிழிந்தாற் போல
- கரும்பை முறித்தாற் போல
- கரும்பை முறித்துக் கழுதையை அடித்த கதை
- கரும்பை விரும்ப அது வேம்பு ஆயிற்று
- கரும்பை விரும்ப விரும்ப வேம்பு
- கரும்பை வேம்பு ஆக்கினாற் போல
- கரும ஒழுங்கு பெருமைக்கு அளவு
- கருமத்தை முடிக்கிறவன் அருமை பாரான்
- கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்
- கருமத்தை முடிக்கிறவன் கடலை ஆராய்வான்
- கருமம் தொலையாது
- கருமான் இருந்த இடமும் கழுதை புரண்ட களமும் சரி
- கருமான் உலைக்களத்தில் நாய்க்கு என்ன வேலை?
- கருமான் வீட்டு நாய் சம்மட்டித் தொனிக்கு அஞ்சுமா? கருவளையும் கையுமாய்
- கருவேல மரத்திற்கு நிழல் இல்லை; கன்னானுக்கு முறை இல்லை
- கருவை உரு அறியான், கண்டாரைப் பேரறியான்
- கரைக்கும் கரைக்கும் சங்கிலி, நடுவிலே இருக்கிறவன் நாய் விட்டை
- கரை காணாத தோனிபோலத் தவிக்கிறது
- கரைப் பக்கம் பாதை இருக்கக் கப்பல் ஏறினவனும், சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவனும் பட்ட பாடுபோல
- கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
- கல் அடிச் சித்தன் போனவழி காடு வீடெல்லாம் தவிடு பொடி
- கல் அடி பட்டாலும் கண் அடி படக் கூடாது
- கல் ஆனாலும் கணவன்; புல் ஆனாலும் புருஷன்
- கல் ஆனாலும் தடி ஆனாலும் பல் போகிறது ஒன்று
- கல் உள்ளதே கிணறு: கரை உள்ளதே தோட்டம்
- கல் எடுத்தால் நாய் ஓடும்; கம்பு எடுத்தால் பேய் ஓடும்
- கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆமோ?
- கல் எறிக்குத் தப்பினாலும் கண் எறிக்குத் தப்பிக்க முடியாது
- கல் என்றாலும் கணவன்; புல் என்றாலும் புருஷன்
- கல் ஒன்று, கணக்கு ஒன்று. குதிரை ஒன்று, கூத்தியாள் ஒன்று
- கல் கிணற்றுக்கு ஏற்ற இரும்புத் தோண்டி
- கல் கிள்ளிக் கை உய்ந்தார் இல்
- கல் பிறவாத காடே உழு
- கல்மேல் எழுத்துக் கலைமான்
- கல்மேல் எழுத்துப் போல
- கல்மேல் நெல் விளையும் கல்யாணம் முடி
- கல்யாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்த கதை போல
- கல்யாணத்தில் பஞ்சம் இல்லை
- கல்யாணத்திலும் பஞ்சம் இல்லை; களத்திலும் பஞ்சம் இல்லை
- கல்யாணத்துக்கு உதவாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆடுகிறது
- கல்யாணத்துக்கு வந்த பெண்டுகளிடத்தில் போனால் போவேன்; இல்லாவிட்டால் கல்லிலே வைத்து நறுக்குவேன்
- கல்யாணத்தை நிறுத்தச் சீப்பை ஒளித்து வைத்தது போல
- கல்யாணப் பஞ்சமும் களப்பஞ்சமும் இல்லை
- கல்யாணப் பந்தலிலே கட்டின ஆடு போல
- கல்யாணப் பந்தலிலே தாலி கட்ட மறந்தது போல்
- கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரு கவலை: கல்யாணம் ஆனவனுக்கு ஆயிரம் கவலை
- கல்யாணம் எங்கே? காசுப் பையிலே
- கல்யாணம் என்றால் கிள்ளுக் கீரையா?
- கல்யாணம் கழிந்தால் கைச்சிமிழ் கிட்டாது
- கல்யாணம், கார்த்திகை, சீர், செனத்தி
- கல்யாணம் செய்கிறதும் கதவைச் சாத்துகிறதும்
- கல்யாணம் செய்தும் சந்நியாசியா?
- கல்யாணம் பண்ணவில்லையென்று களிப்பு: ஊர்வலம் வரவில்லையென்று உளப்பு
- கல்யாணம் பண்ணாமல் பைத்தியம் தீராது: பைத்தியம் தீராமல் கல்யாணம் ஆகாது
- கல்யாணம் பண்ணிக்கொள் என்றால், நீயே பெண்டாட்டியாய் இரு என்றது போல
- கல்யாணம் பண்ணியும் சந்நியாசி, கடன் வாங்கியும் பட்டினி
- கல்யாணம் பண்ணின வீட்டில் ஆறு மாசம் கருப்பு
- கல்யாணம் பண்ணும் வரையில் பிள்ளை; கண்ணை மூடும் வரையில் பெண்
- கல்யாணம் போவதும் கட்டி அழுவதும் வட்டியில்லாக் கடன்
- கல்யாணம் முடிந்த பிறகு பந்தலில் வேலை என்ன?
- கல்யாணம் என்றால் ஆணுக்கு கால்கட்டு; பெண்ணுக்கு நூல்கட்டு.
- கல்யாணமும் வேண்டாம்; கல்லெடுப்பும் வேண்டாம்
- கல்யாண மேடையில் மணப்பெண் அமர கழுத்தில் தாலி ஏறியது போல
- கல்யான வீட்டில் ஆறு மாதம் கருப்பு
- கல்யாண வீட்டில் கட்டி அழுகிறவள் இழவு வீட்டில் விட்டுக் கொடுப்பாளா?
- கல்யாண வீட்டிலே கட்டி அழலாமா?
- கல்யாண வீட்டிலே பந்தற்காலைக் கட்டி அழுகிறவன் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?
- கல்யாண வீட்டிலே பிள்ளை வளர்த்தாற்போல்
- கல்யாண வீட்டிற்குப் போய் அறியான்; மேளச்சத்தம் கேட்டு அறியான்
- கல்யாண வீட்டுக் கறி அகப்பை, சாவு வீட்டுச் சோற்று அகப்பை
- கல்யாணி என்கிற பெண்ணுக்குக் கல்யாணமும் வேண்டுமோ?
- கல்லடி சித்தன் போன வழி காடு மேடு எல்லாம் தவிடுபொடி
- கல்லன் கரியும் கொல்லன் குசுவுமாய்ப் போச்சு
- கல்லா ஒருவன் குல நலம் பேசுதல் நெல்லுடன் பிறந்த பதராகும்மே
- கல்லாடம் படித்தவனோடு சொல்லாடாதே
- கல்லாதவரே கண் இல்லாதார்
- கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்
- கல்லாமல் குல வித்தை பாதி வரும்
- கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்
- கல்லார் உறவிலும் கற்றார் பகை நலம்
- கல்லார் உறவு அகல்; காமக் கடல் கட
- கல்லாலே கட்டிச் சாந்தாலே பூசியிருக்கிறதா?
- கல்லில் நார் உறிப்பவன்
- கல்லில் நெல் முளைத்தாற்போல
- கல்லிலும் வன்மை கண்மூடர் நெஞ்சு
- கல்லிலே நார் உரிக்கிறது போல
- கல்லிலே வெட்டி நாட்டினது போல
- கல்லின்மேல் இட்ட அம்புகளைப் போல
- கல்லின்மேல் இட்ட கலம்
- கல்லினுள் தேரையையும் முட்டைக்குள் குஞ்சையும் ஊட்டி வளர்ப்பது யார்?
- கல்லுக் கிணற்றுக்கு ஏற்ற இருப்புத் தோண்டி
- கல்லுக்கும் முள்ளுக்கும் அசையாது வெள்ளிக்கிழமைப் பிள்ளையார்
- கல்லுக்குள் இருக்கிற தேரையையும் முட்டைக்குள் இருக்கிற குஞ்சையும் ஊட்டி வளர்க்கிறவர் யார்?
- கல்லுக்குள் தேரையைக் காப்பாற்றவில்லையா?
- கல்லுப் பிள்ளையாரைக் கடித்தால் பல்லுப் போம்
- கல்லும் கரியும் கொல்லன் குசுவுமாய்ப் போச்சு
- கல்லும் கரைய மண்ணும் உருக அழுதாள்
- கல்லும் கரையுமே, கற்றூணும் இற்றுப் போமே!
- கல்லும் காவேரியும் உள்ள மட்டும் வாழ்க!
- கல்லும் தேங்காயும் சந்தித்தது போலப் பேசுகிறான்
- கல்லுளிச் சித்தன் போன வழி காடு மேடெல்லாம் தவிடுபொடி
- கல்லுளி மங்கா, கதவைத் திற
- கல்லே தலையணை, கானலே பஞ்சு மெத்தை
- கல்லை ஆகிலும் கரைக்கலாம்; கல்மனத்தைக் கரைக்கலாகாது
- கல்லை இடறினாலும் கணக்கனை இடறாதே
- கல்லை எதிர்த்தாலும் கணக்கனை எதிர்க்காதே
- கல்லைக் கட்டிக் கொண்டு கசத்தில் இறங்குவது போல
- கல்லைக் கட்டி முத்தம் கொடுத்தாற்போல
- கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
- கல்லைக் கிள்ளிக் கை இழந்தது போலாம்
- கல்லைக் கிள்ளினால் கை நோகும்
- கல்லைக் குத்துவானேன்? கைநோகுதென்று அழுவானேன்?
- கல்லைப் பிளக்கக் காணத்தை விதை
- கல்லைப்போல் அகமுடையான் இருக்கக் கஞ்சிக்கு அழுவானேன்?
- கல்லைப் போலக் கணவன் இருக்க நெற்சோற்றுக்கு அழுவானேன்?
- கல்லைப் போலப் பெண்டாட்டி இருக்கக் கடப்பை அரிசிச் சோற்றுக்கு நிற்பானேன்?
- கல்லோடு இடறினாலும் கணக்கனோடு இடறாதே
- கல் வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூட வேண்டும்
- கல்வி அழகே அழகு
- கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு
- கல்வி உள்ள வாலிபன் கன கிழவனே
- கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழை வேண்டும்
- கல்வி ஒன்றே அழியாச் செல்வம்
- கல்விக்காரப் பெண்ணாள் களைவெட்டப் போனாள்;களைக்கொட்டு இல்லையென்று மெனக்கெட்டுப் போச்சு
- கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
- கல்வி கரை இல; கற்பவர் நாட் சில
- கல்வி கற்கிறதைவிடக் கருத்தை ஆராய்கிறது நன்மை
- கல்வி கற்றும் கழுநீர்ப் பானையில் கை இடுகிறது
- கல் விதைத்து நெல் அறுத்தவர் யார்?
- கல்வியிற் பெரியவன் கம்பன்
- கல்வியும் குலமும் வெல்வது வினவின்
- கல் விழுந்தாலும் விழும்; காய் விழுந்தாலும் விழும். கல் வீட்டில் இருக்கும் கடனும் தெரியாதாம்; கறுப்புப் புடைவையில் இருக்கும் அழுக்கும் தெரியாதாம்
- கல்வீட்டுக்காரி போனால் கமுக்கம்; கூரை வீட்டுக்காரி போனால் கூச்சம்
- கல உமி நின்றால் ஓர் அரிசி தட்டாதா?
- கல உமி தின்றால் ஓர் அவல் கிடைக்காதா?
- கலக்கத்தில் கலக்கம் கடன் கொண்டார் நெஞ்சக் கலக்கம்
- கலக்கந்தை கட்டிக் காணப் போனால் இருகலக் கந்தை கட்டி எதிரே வந்தாள்
- கலக்கம் இல்லா நெஞ்சுக்கு இனக்காப்பு என்ன?
- கலக்கம்பு தின்றாலும் காடை காட்டிலே
- கலக்கம்பு போட்டு வளர்த்தாலும் காடை காட்டிலே
- கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும்; அடர விதைத்தால் போர் உயரும்
- கலக்கிய தண்ணீரில் கெளிற்று மீன் வாய் திறந்து தவிப்பது போல
- கலக்கினும் தண் கடல் சேறு ஆகாது
- கலத்தில் இட்டாயோ, வயிற்றில் இட்டாயோ?
- கலத்தில் சாதம் போட்டதும் காசிக்குப் போனவனும் வருவான்
- கலகத்திலே புளுகாதவன் நரகத்திலே போவானாம்
- கலகத்திலே புளுகாதவர் இல்லை
- கலகத்திலே போயும் கால்மாடு தலைமாடா?
- கலகம் கலந்தால் உலகம் கலங்கும்
- கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
- கலகமே மெய்யானால் புளுகாதவன் பாவம்
- கலத்தில் இட்டுக் கையைப் பிடிக்காதே
- கலத்தில் சோற்றை இட்டுக் கையைப் பிடித்தாற்போல
- கலத்துக்குத் தெரியுமா, கர்ப்பூர வாசனை?
- கலந்த விதைப்புச் சிறந்த பலனைத் தரும்
- கலப் பணத்தைக் காட்டிலும் ஒரு கிழப் பிணம் நல்லது
- கலப் பயறு விதைத்து உழக்குப் பயிர் விளைந்தாலும் புதுப் பயறு புதுப் பயறுதான்
- கலப் பால் கறக்கலாம்; துளிப் பால் முலைக்கு ஏற்றலாமா?
- கலப் பால் கறந்தாலும் கன்று முதலாகுமா?
- கலப் பால் குடித்த பூனை ஆழாக்குப் பால் குடியாதா?
- கலப் பால் குடித்த பூனை ஓர் உழக்காகிலும் கறக்கத் தருமா?
- கலப் பால் கூடி ஒரு கன்று ஆகுமா?
- கலப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற் போல
- கலப் பாலுக்குத் துளி பிரை
- கலப் பாலை ஒருமிக்கக் குடித்த பூனையை உழக்காகிலும் கறக்கச் சொன்னால் கறக்குமா?
- கலப் பாலைக் காலால் உதைத்துவிட்டு விலை மோருக்கு வெளியே அலைகிறதா?
- கலப்பு ஆனாலும் பூசப் பூசப் பொன் நிறம்
- கலப்புல் தின்றாலும் காடை காட்டுக்குள்ளே
- கலப்புழுவை நீக்கின கர்ணன்
- கலம் கந்தை கொண்டு காண வந்தாள்; இருகலக் கந்தை கொண்டு எதிரே வந்தாள்
- கலம் கலந்தால் குலம் கலக்கும்
- கலம் கிடக்கிறது கழுவாமல்
- கல நெல் கிடக்கிறது குத்தாமல்
- கலம் குத்தினாலும் பதர் அரிசி ஆகாது
- கலம் குத்துகிறவள் காமாட்டி, கப்பி குத்துகிறவள் சீமாட்டி
- கலம் பதரைக் கத்தினாலும் அரிசி ஆகாது
- கலம் பாலுக்குத் துளிப் பிரை
- கலம் போனதும் அல்லாமல் கண்ணுக்கும் மூக்குக்கும் வந்ததுபோல
- கலம் மா இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?
- கலவன் கீரை பறிப்பது போலப் பேசுகிறாள்
- கலிக்குப் புதுமையான காரியம் இருக்கிறது
- கலிக்கும் கிலிக்கும் கந்தனை எண்ணு
- கலி காம தேனு
- கலி காலத்திலே கண்ணுக்கு முன் காட்டும்
- கலியன் பாற்சோறு கண்டது போல
- கலெக்டரோடு வழக்குக்குப் போனாலும் கணக்கனோடு வம்புக்குப் போகக் கூடாது
- கலை பல கற்றாலும் மலைப்பது போல இருக்கும்
- கலையும் மப்பைக் கண்டு கட்டி இருந்த விதையை வட்டிக்கு விட்டானாம்
- கலையும் மப்பைக் கண்டு கரைத்த மாவை வட்டிக்கு விட்டதுபோல
- கவ்வை சொல்லின் எவ்வர்க்கும் பகை
- கவடு இருந்த நெஞ்சும் களை இருந்த பயிரும் கடைத்தேறா
- கவண் எறி நிலை நில்லாது; கண்டவன் தலையை உடைக்கும்
- கவண் எறி நெறியில் நில்லாதே; கண்டவன் தலையை உடைக்கும்?
- கவரைச் செட்டி மேலே கழுதை புரண்டு ஏறினாற் போல
- கவலை இல்லாக் கஞ்சி கால் வயிற்றுக்குப் போதும்
- கவலை உடையாருக்குக் கண் உறக்கம் வராது
- கவி அறியாவிடில் ரவியும் அறியான். கவி கண் காட்டும்
- கவி கொண்டாருக்குக் கீர்த்தி; அதைச் செவி கொள்ளாருக்கு அபகீர்த்தி
- கவி கொண்டாருக்கும் கீர்த்தி: கலைப்பாருக்கும் கீர்த்தியா?
- கவிதை எழுதின கை கணக்கு எழுதுகிறது
- கவிழ்ந்த பால் கலம் ஏறாது
- கவிந்திரானாம் கஜேந்திராணாம் ராஜாவே நிர்பயோகி
- கவுண்டன் கல்யாணம் ஒன்று இரண்டாய் முடிந்து போச்சு
- கவுண்டன் வீட்டு எச்சில் இலைக்கு கம்பன் வீட்டு நாய்கள் எல்லாம் அடித்துக் கொள்கின்றன
- கவைக்கு உதவாத காரியம்
- கவைக்குக் கழுதையையும் காலைப் பிடி
- கவைக்குத் தகாத காரியம் சீமைக்குத் தகுமா?
- கவையை ஓங்கினால் அடி இரண்டு
- கவையைப் பற்றிக் கழுதையின் காலைப் பிடி
- கழனிக்கு அண்டை வெட்டிப் பார்: கண்ணுக்கு மை இட்டுப் பார்
- கழனியில் விழுந்த கழுதைக்கு அதுவே கைலாசம்
- கழி இருந்தால் கழுதையை மேய்த்துக் கொள்ளலாம்
- கழிச்சலும் விக்கலும் சேர்ந்தால் நம்பப் படாது
- கழித்த பாக்குக் கொடுக்காத பெரியாத்தாள் கடற்கரை வரை வந்து வழி விட்டாளாம்
- கழு ஒன்று, களவு ஆயிரம்
- கழுக்கு மொழுக்கு என்று இருக்கிறான்
- கழுக்கு மொழுக்கு என்று கட்டுருக் காளை போல
- கழுகாய்ப் பிடுங்குகிறான்
- கழுகுக்கு மூக்கிலே வேர்த்தாற் போல
- கழுத்தில் இருக்கிறது ருத்திராட்சம், கையிலே இருக்கிறது கொடிய நகம்
- கழுத்தில் இருக்கிறது ருத்திராட்சம்; மடியில் இருப்பது கன்னக் கோல்
- கழுத்தில் தாலி ஏறிவிட்ட பின் குடித்தனம் நடத்துவதே பெண் மரபு
- கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டவனுக்கு முந்தி விரிப்பதே கற்பு
- கழுத்திலே கரிமணி இல்லை; பெயர் முத்துமாலை
- கழுத்திலே குத்துகிறது கண் கெட்டவனுக்குத் தெரியாதா?
- கழுத்திலே தாலி ஏறினால் நாய்மாதிரி வீட்டில் கிடக்க வேண்டியது தானே?
- கழுத்திலே தாலி கட்டிவிட்டால் மட்டும் போதுமா? சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா?
- கழுத்திலே தாலி. வயிற்றிலே பிள்ளை.
- கழுத்துக்குக் கருகு மணி இல்லை; பெயர் முத்தாபரணம்
- கழுத்திலே தாலி வடம்; மனத்திலே கரவடம்
- கழுத்து அறுக்கக் கத்தி கையில் கொடுத்தது போல
- கழுத்துக்குக் கீழே போனால் கஷ்டம்
- கழுத்துக்குமேல் கத்தி வந்திருக்கச்சே செய்ய வேண்டியது என்ன?
- கழுத்துக்குமேல் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?
- கழுத்து மாப்பிள்ளைக்குப் பயப்படாவிட்டாலும் வயிற்றுப் பிள்ளைக்குப் பயப்பட வேண்டும்
- கழுத்து வெளுத்தாலும் காக்கை கருடன் ஆகுமா?
- கழுத்தைக் கொடுத்தாச்சு: கைவிலங்கு போட்டாச்சு; பத்து நாள் சிறையில் பதுங்கிக் கிடக்க வேணும்
- கழுத்தைக் கொடுத்தாலும் எழுத்தைக் கொடாதே
- கழுத்தை நீட்டாமல் தாலி ஏறுமா?
- கழுத்தை நீட்டியவளுக்கு இன்னமும் தலை நிமிரவில்லை.
- கழுதை அறியுமா, கந்தப்பொடி வாசனை?
- கழுதை உழவுக்கு வராது
- கழுதை உழுகிறவன் குடியானவனா?
- கழுதை உழுது கம்பு விளையுமா? கண்டியான் உழுது நெல் விளையுமா?
- கழுதை உழுது குறவன் குடி ஆனானா?
- கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா?
- கழுதைக் காமம் கத்தினால் தீரும்; நாய்க் காமம் அலைந்தால் தீரும்
- கழுதைக்கு உபதேசம் காதில் ஏறுமா?
- கழுதைக்கு உபதேசம் காதிலே ஓதினாலும் காள் காள் என்ற புத்தியை விடாது
- கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவயக் குரலன்றி அங்கொன்றும் இல்லை
- கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவயக் குரலே ஒழியச் சவைக்குரல் இல்லையாம்
- கழுதைக்கு உபதேசம் பண்ணினால் அபத்தக் குரலைத் தவிர நல்ல குரல் இல்லை
- கழுதைக்கு என் கடிவாளம்?
- கழுதைக்குக் காது அறுந்து, நாய்க்கு வால் அறுத்தது போல
- கழுதைக்குச் சேணம் கட்டினால் குதிரை ஆகுமா?
- கழுதைக்குத் தெரியுமா கரும்பு ருசி?
- கழுதைக்குப் பரதேசம் குட் டிச் சுவர்
- கழுதைக்குப் பின்னால் போகாதே; எஜமானுக்கு முன்னால் போகாதே
- கழுதைக்கு வரி கட்டினால் குதிரை ஆகுமா?
- கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?
- கழுதை கத்து என்றால் கத்தாதாம்; தானாகக் கத்துமாம்
- கழுதை கெட்டால் குட்டிச் சுவர்; நாய் கெட்டால் குப்பைத் தொட்டி
- கழுதை தப்பினால் குட்டிச் சுவர்
- கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல
- கழுதை நினைத்ததாம் கந்தலும் கதக்கலும்
- கழுதை தினைத்ததாம் கெண்டை போட்ட முண்டாசு
- கழுதைப் பாரம் வண்ணானுக்கு என்ன தெரியும்
- கழுதைப் பால் குடித்தவன் போல் இருக்கிறான்
- கழுதைப் புட்டை ஆனாலும் கைநிறைய வேண்டும்
- கழுதைப் புண்ணுக்குத் தெருப்புழுதி மருந்து
- கழுதைப் பொதியில் உறை மோசமா?
- கழுதைப் பொதியில் ஐங்கலம் மாறாட்டமா?
- கழுதை புரண்ட களம் போல
- கழுதை புரண்டால் காடு கொள்ளாது
- கழுதை புவியில் இருந்தால் என்ன? பாதாளத்தில் இருந்தால் என்ன?
- கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்கிறதா?
- கழுதை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோற்றை அவிழ்க்கிறதா?
- கழுதைமேல் ஏறி என்ன? இறங்கி என்ன?
- கழுதைமேல் ஏறியும் பெருமை இல்லை: இறங்கியும் சிறுமை இல்லை
- கழுதையாகப் போய்க் கட்டெறும்பாய்த் திரும்பி வந்தது
- கழுதையாய்ப் பிறந்தாலும் காஞ்சீபுரத்திலே பிறக்க வேணும்
- கழுதையின் எறியைக் கழுதைதான் தாங்க வேணும்
- கழுதையின் காதிலே கட்டெறும்பை விட்டாற் போல
- கழுதையும் குதிரையும் சரி ஆகுமா?
- கழுதையும் நாயும் சேர்ந்து கத்தினாற்போல
- கழுதையும் பணமும் சேர்ந்து வந்தால் பணத்தை வாங்கிக் கொண்டு கழுதையைத் துரத்தி விடு
- கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல
- கழுதையைக் கொண்டு உழுது குறவன் உழவன் ஆனான்
- கழுதையையும் குதிரையையும் பிணைத்தாற் போல
- கழுதை லத்தி கை நிறைய
- கழுதை வளையற்காரன் கிட்டப் போயும் கெட்டது; வண்ணான் கிட்டப் போயும் கெட்டது
- கழுதை வாலைப் பிடித்துக் கரை ஏறுகிறதா?
- கழுதை விட்டை ஆனாலும் கைநிறைய வேண்டும்
- கழுதை விட்டை கை நிரம்பினால் போதும் என்ற கதை
- கழுதை விட்டையிலே மேல் விட்டை வேறே; அடி விட்டை வேறேயா?
- கழுதை விட்டையைக் கைநிறையப் பொறுக்கினது போல
- கழுநீர்த் தொட்டி நாய் போல
- கழுநீர்ப் பானையில் விழுந்த பல்லியைப் போல
- கழுநீருக்கு அண்டை வீட்டைப் பார்; கண்ணுக்கு மையிட்டுப் பார்
- கழுவிக் கழுவி ஊற்றினாலும் கவிச்சு நாற்றம் போகாது
- கழுவிக் கழுவிப் பின்னும் சேற்றை மிதிக்கிறதா?
- கழுவிக் குளித்தாலும் காக்கை நிறம் மாறாது; உருவிக் குளித்தாலும் ஊத்தை நாற்றம் போகாது
- கழுவிய காலைச் சேற்றில் வைக்கிறதா?
- கழுவில் இருந்து கை காட்டுவான்
- கழுவிலே நெய் உருக்குகிற கள்ளி முண்டை
- கழுவுக்கு ஏற்ற கோமுட்டி
- கழுவுகிற மீனிலும் நழுவுகிற மீன்
- கழைக் கூத்து ஆடினாலும் காசுக்குக் கீழேதான் வரவேணும்
- கழைமேல் ஏறி ஆடினாலும் கீழே வந்துதான் பிச்சை கேட்க வேணும்
- கள் உண்ட குரங்கு போல
- கள் உண்ட நாய் போல
- கள் கலப்பணத்திலும் கர்ப்பூரம் கால் பணத்திலும்
- கள் குடித்தவன் பேச்சு, பொழுது விடிந்தால் போச்சு
- கள் குடித்தவனுக்குக் கள் ஏப்பம்
- கள் விற்ற காற்காசிலும் அமிர்தம் விற்ற அரைக் காசு நேர்த்தி
- கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்
- கள்ளத்தனம் எல்லாம் சொல்லத்தானே போகிறேன்?
- கள்ள நெஞ்சம் துள்ளிக் குதிக்கும்
- கள்ள நெஞ்சு காடு கொள்ளாது
- கள்ளப் பிள்ளையிலும் செல்லப் பிள்ளை உண்டா?
- கள்ளப் பிள்ளையும் செல்லப் பிள்ளையும் ஒன்றா?
- கள்ளப் புருஷனை நம்பிக் கணவனைக் கைவிடலாமா?
- கள்ளம் பெரிதா? காப்புப் பெரிதா?
- கள்ளம் போனால் உள்ளது காணும்
- கள்ள மனம் துள்ளும்
- கள்ள மாடு சந்தை ஏறாது
- கள்ள மாடு துள்ளும்
- கள்ள மாப்பிள்ளைக்குக் கண்ணீர் முந்தும்
- கள்ள வாசலைக் காப்பானைப் போல
- கள்ள விசுவாசம், கழுத்தெல்லாம் செபமாலை
- கள்ளன் அக்கம் காடு கொள்ளாது
- கள்ளன் ஆனால் கட்டு; வெள்ளன் ஆனால் வெட்டு
- கள்ளன் உறவு உறவு அல்ல; காசா விறகு விறகு அல்ல
- கள்ளன் கொண்ட மாடு எத்துறை போய் என்ன?
- கள்ளன் செய்த சகாயம் காதை அறுக்காமல் கடுக்கனைக் கொண்டான்
- கள்ளன் பிள்ளைக்குக் கள்ளப் புத்தி
- கள்ளன் பின் போனாலும் குள்ளன் பின் போகக் கூடாது
- கள்ளன் புத்தி கன்னக் கோலிலே
- கள்ளன் பெண்சாதி கைம்பெண்டாட்டி
- கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா?
- கள்ளன் போன மூன்றாம் நாள் கதவை இழுத்துச் சாத்தினானாம்
- கள்ளன் மறவன் கலந்த அகம்படியான், மெல்ல மெல்ல வந்த வெள்ளாளன்
- கள்ளன் மனையாளைக் களவுப் பொருளைக் குறி கேட்கலாமா?
- கள்ளன் மனைவி கைம்பெண் என்றும்
- கள்ளனுக்கு ஊர் எல்லாம் பகை
- கள்ளனுக்குக் களவிலே சாவு
- கள்ளனுக்குக் காண்பித்தவன் பகை
- கள்ளனுக்குக் கூ என்றவன் பேரிலே பழி
- கள்ளனுக்குத் தெரியும் களவு முறை
- கள்ளனுக்குத் தோன்றும் திருட்டுப் புத்தி
- கள்ளனுக்குப் பாதி, கறிக்குப் பாதி
- கள்ளனுக்கும் பாதி, வெள்ளனுக்கும் பாதி
- கள்ளனுக்குள் குள்ளன் பாய்ந்தது போல
- கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான்
- கள்ளனும் உண்டு, பயமும் இல்லை என்கிறது போல
- கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்
- கள்ளனும் வெள்ளனும் ஒன்று
- கள்ளனை ஆரும் நள்ளார் என்றும்
- கள்ளனை உள்ளே விட்டுக் கதவைச் சார்த்தினாற் போல
- கள்ளனைக் காட்டிக் கொடுத்தவன் பகை
- கள்ளனைக் காவல் வைத்தது போல
- கள்ளனைக் குள்ளன் கிள்ளியது போல
- கள்ளனைக் குள்ளன் பிடித்தான்
- கள்ளனைக் கொண்டுதான் கள்ளனைப் பிடிக்க வேணும்
- கள்ளனைத் தேடிய கள்ளப் பசுப் போல
- கள்ளனை நம்பினாலும் நம்பலாம்; குள்ளனை நம்பக்கூடாது
- கள்ளனையும் தண்ணீரையும் கட்டி விட வேணும்
- கள்ளனையும் புகையிலையையும் கட்டித் தீர்
- கள்ளனையும் வெள்ளனையும் கட்டி விடு
- கள்ளா வா, புலியைக் குத்து
- கள்ளி என்னடி கல் இழைப்பது? காதில் இருப்பது பித்தளை
- கள்ளிக்கு ஏன் முள் வேலி? கழுதைக்கு ஏன் கடிவாளம்?
- கள்ளிக்குக் கண்ணீர் முந்தும்; கொள்ளிக்கு வாய் முந்தும்
- கள்ளிக்குக் கண்ணீர் முந்தும்; அவள் கணவனுக்குக் கை முந்தும்
- கள்ளிக்குக் கல நீர் கண்ணிலே
- கள்ளிக்குத் தண்ணீர் கண்ணீர்; நீலிக்குத் தண்ணிர் நிமையிலே
- கள்ளிக்கு நாடு எல்லாம் காடு
- கள்ளிக்கும் கற்றாழைக்கும் களை வெட்டுவதா?
- கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்?
- கள்ளிக்கு வேலி ஏன்? சுள்ளிக்குக் கோடாலி ஏன்?
- கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினது போல
- கள்ளிகள் எல்லாம் வெள்ளிகள் ஆவார்; காசு பணத்தாலே; வெள்ளிகள் எல்லாம் கள்ளிகள் ஆவார், விதியின் வசத்தாலே
- கள்ளிச் செடிக்கு மகாவிருட்சம் என்று பெயர் வைத்தது போல
- கள்ளி நீண்டு வளர்ந்தால் காய் உண்டோ? கனி உண்டோ?
- கள்ளிப் பூவைக் கட்டிச் சூட்டினது போல
- கள்ளி பெருத்து என்ன? காய் ஏது? பழம் ஏது?
- கள்ளியிலும் சோறு: கற்றாழையிலும் சோறு
- கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்
- கள்ளி வேலியே வேலி; கரிசல் நிலமே நிலம்
- கள்ளுக் குடித்தவன் கொள்ளுப் பொறுக்கான்
- கள்ளுக் குடியனுக்கு வாய் என்றும் பிட்டம் என்றும் தெரியாது
- கள்ளுக் கொள்ளா வயிறும் இல்லை; முள்ளுக் கொள்ளா வேலியும் இல்லை
- கள்ளும் சூதும் இருக்கும் இடத்தில் விலை மகளும் கள்ளனும் கண்டிப்பாய் இருப்பார்கள்
- கள்ளை ஊற்றி உள்ளதைக் கேள்
- கள்ளைக் காலால் உதைத்தது தவறா?
- கள்ளைக் குடித்தவன் உள்ளதைக் கக்குவான்
- கள்ளைக் குடித்தவனுக்குக் கள் ஏப்பம்: பாலைக் குடித்தவனுக்குப் பால் ஏப்பம்
- கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்
- கள்ளைக் கொடுத்துக் காரியத்தை அறி
- கள்ளை விட்டுக் காட்டுத் தேனைக் குடித்தது போல
- களக்காடு
- களக்காடு மடக்ராமம், அன்ன வஸ்த்ரம் ஜலம் நாஸ்தி; நித்யம் கலக மேவச
- களஞ்சியத்தில் பெருச்சாளி சாப்பிடுவது போல
- களம் காக்கிறவனை மிரட்டுவானாம், போர் பிடுங்குகிறவன்
- களர் உழுது கடலை விதை
- களர் கெடப் பிரண்டை இடு
- களர் நிலத்தில் கரும்பு வை
- களர் நிலத்திலே சம்பா விளையுமோ?
- களர் முறிக்க வேப்பந் தழை
- களரை ஒழிக்கக் காண