திரிபுரி பழமொழிகள்
Appearance
இப் பக்கத்தில் திரிபுரி பழமொழிகள் அதன் ஒலிபெயர்ப்புடனும், பொருளுடனும் தொகுக்கபட்டுள்ளன.
- வட்டாய் கராய் ப்ரேங் காகா[1]
- மழை இல்லை இடி உண்டு
- மழை இல்லாதபோது இடி இடிக்கும் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- மழை இல்லை இடி உண்டு
- காக் கடார் கனாய் லங் கானி ராஜா[1]
- பெரிய வார்த்தைகள் பேசுபவர் இலங்கை ராஜா
- குரைக்கிற நாய் கடிக்காது (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- பெரிய வார்த்தைகள் பேசுபவர் இலங்கை ராஜா
- அதி தக்க பான்மிலிகியா[1]
- அதிக எண்ணை பளபளப்பு தராது
- அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- அதிக எண்ணை பளபளப்பு தராது
- அதி குலுங்கனி ததல் பராக்[1]
- அதிக சலாம் போடுபவர் பொய்யன்
- சொடாக் குபாங் பகாலி சாகியா[1]
- அதிக ஆட்கள் குறைந்த மரச் சட்டங்கள் செய்தார்கள்
- கண்ணுகளாச் சேர்ந்து களம் பறிச்சர் போல ஊர் கூடி செக்கு தள்ளினாற் போல (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- அதிக ஆட்கள் குறைந்த மரச் சட்டங்கள் செய்தார்கள்
- பலாராக் குலாங்னலியா முனியா[1]
- பல பெண்கள் சணல் கொதிக்கவைத்தது சில மரச்சட்டங்கள் செய்தது போல
- கடா துயாடா புபாகோ[1]
- குறைவாக நீர் இருந்தால் அது அதிகமாக துள்ளும்
- குறைகுடம் கூத்தாடும் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- குறைவாக நீர் இருந்தால் அது அதிகமாக துள்ளும்
- காசா ரூபாய் காசா தடால்[1]
- பாதி உண்மை, பாதி பொய்
- தகாபா தாம் புன்னுதியா தாங்[1]
- காக்கை பசுவாகாது
- உயர உயர பறந்தாலும் ஊர்குகுருவி பருந்தாகுமா? (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- காக்கை பசுவாகாது
- நாக் தோங் கைசே ஹுக்[1]
- வீடு பெற்றால் நிலம் கேட்பான்
- வீட்டைக் கொடுத்தால் மோட்டைப் புடுங்குவான். இருக்க இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேக்குமாம் (ஒத்த தமிழ்ப் பழமொழிகள்)
- வீடு பெற்றால் நிலம் கேட்பான்
- முசுக் பல்நேச்சா மயாங் பல்கினாய் சா ஆவோ?[1]
- பசு விற்கிரவனுக்கு யானையால் என்ன பயன்?
- தங்கம் விற்ற கையால் தவிடு விற்கலாச்சே (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- பசு விற்கிரவனுக்கு யானையால் என்ன பயன்?
- சாக் ஹம் கைச்சே பாய்பா காகங்[1]
- நல்லவனுக்கு உலகம் நல்லது
- ஆங் பசே கைச்சே புமா[1]
- அப்பன் பெயரை பிள்ளை பெறுவான்
- அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கான் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- அப்பன் பெயரை பிள்ளை பெறுவான்
- அதி சதக் புனி நைதக்[1]
- தனக்காக உண்ணவேண்டும், பிறர் மதிக்க உடை உடுத்த வேண்டும்
- உனக்காகச் சாப்பிடு ஊருக்காக உடுத்து
- தனக்காக உண்ணவேண்டும், பிறர் மதிக்க உடை உடுத்த வேண்டும்
- தங் புரு சகனி இச்சா பைபுரு புருமு இச்சா[1]
- உன் விருப்பப்படி போ; பிறர் விருப்பப்படி வா
- ருனா வச்புச் தன்சாடி [1]
- துணிக்கு தக்கபடி நெசவு செய்
- செருப்புக்குத் தகுந்தாற்போல காலை வெட்டணுமா?
- துணிக்கு தக்கபடி நெசவு செய்
- துய்மா நய் துயு ரிங்கனான் சுதாய்[1]
- ஆற்றையும் பார்க்கலாம் சேலையையும் துவைக்கலாம்
- ஒரே கல்லிலே இரண்டு மாங்காய், ஆட்டை மேய்ச்சாலுமாச்சு, அண்ணனுக்கு பொண்ணு பார்த்தாலுமாச்சு (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- ஆற்றையும் பார்க்கலாம் சேலையையும் துவைக்கலாம்
- யாடொப்லா தூங்கலை புசுக் துனு[1]
- அடிமரத்தை வெட்டினால் மரம் பட்டுப்போகும்
- வேர் சாய்ந்தால் தூர் சாயும் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- அடிமரத்தை வெட்டினால் மரம் பட்டுப்போகும்
- சாங் சபுரு ககான் கமியா சிசாகா[1]
- ஆரம்பத்திலேயே ஒன்று நல்லதாக வளருமா கெட்டதாக வளருமா என்று தெரிந்துவிடும்
- விளையும் பயிர் முளையிலே தெரியும் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- ஆரம்பத்திலேயே ஒன்று நல்லதாக வளருமா கெட்டதாக வளருமா என்று தெரிந்துவிடும்
- சுகி தும்டே வசும்டாய் பெங்[1]
- மூங்கில் குழாயில் நுழைத்தாலும் நாய்வால் நேராகாது
- நாய் வாலை நிமிர்த்த முடியாது (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- மூங்கில் குழாயில் நுழைத்தாலும் நாய்வால் நேராகாது
- இயக்கா இயச்சா பாய் சராபாய் மணியா[1]
- ஒரு கையால் ஓசை உண்டாகாது
- இருகை தட்டினால்தான் ஓசை (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- ஒரு கையால் ஓசை உண்டாகாது
- லாய் தங்மணி சுகான் சஜா ஞைய்யா?[1]
- பழம்பெருமை பேசாதே
- தாத்தா தாசில்பண்ணினார், பேரன் தெருத்தூக்குறான் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- பழம்பெருமை பேசாதே
- நாகானி பாயங் தாமானி பைதா[1]
- தெரிந்த பிராமணனுக்கு பூணூல் வேண்டியதில்லை
- நாடறிந்த பாப்பாணுக்கு பூணூல் எதுக்கு? (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- தெரிந்த பிராமணனுக்கு பூணூல் வேண்டியதில்லை
- குடும் ஆசானி பலக்டி [1]
- இரும்பு சிவப்பாக இருக்கும்போதே சம்மட்டியால் அடித்து வளைக்கவேண்டும்
- காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- இரும்பு சிவப்பாக இருக்கும்போதே சம்மட்டியால் அடித்து வளைக்கவேண்டும்
- ரங்சோங் கயினா பரா கிங் ஜாகா [1]
- பணமிருந்தால் மதிப்பு வரும்
- பணம் பந்தியிலே (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- பணமிருந்தால் மதிப்பு வரும்
- சிகாகினி புகா கமியா [1]
- திருடனின் மனம் அமைதியாக இராது
- கள்ள மனம் துள்ளும், குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- திருடனின் மனம் அமைதியாக இராது
- மைபுங்லே துகிவா சங்பிரா [1]
- யானை இறந்தால் மனிதன் இடுப்புவரை இருக்கும்
- யானை செத்தால் குதிரை மட்டம் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- யானை இறந்தால் மனிதன் இடுப்புவரை இருக்கும்
- ஜினிகா சடங்கா பேஸ் சாய்மனா[1]
- வலியால் துன்பப்படுகிறவனுக்கு அதன் கொடுமை தெரியும்
- தனக்கு வந்தால்தான் தெரியும் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- வலியால் துன்பப்படுகிறவனுக்கு அதன் கொடுமை தெரியும்
- மனா ரக்கரக் நரி நாய் ரக்கசன்[1]
- ஆசைபடுவது கிடைக்க கிடைக்க மேலும் மேலும் ஆசைப்படுவான்
- யாசிக்க சம்சாரம் பெருத்தாற்போல (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- ஆசைபடுவது கிடைக்க கிடைக்க மேலும் மேலும் ஆசைப்படுவான்
- ஜதனா ஹங்காய் ஒலவா ஹம்[1]
- நல்லதாக முடிவெதெல்லாம் நல்லதுதான்
- எங்கே சுற்றியும் ரங்கனை சேவி (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- நல்லதாக முடிவெதெல்லாம் நல்லதுதான்
- புசு திக்ளாயா நானிக்காயா புசூம் நாம்[1]
- ஆணியை எடுக்க ஆணியை அடி
- முள்ளை முள்ளால் எடு (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- ஆணியை எடுக்க ஆணியை அடி
- தாம் கலையாணி மருயா தயோதி பாய் தங்கா[1]
- மலிவான காய்கறியில் புழு நிறைந்திருக்கும்
- கை நிறைய கழுதை விட்டை (ஒத்த தமிழ்ப் பழமொழி)
- மலிவான காய்கறியில் புழு நிறைந்திருக்கும்