உள்ளடக்கத்துக்குச் செல்

திறமை

விக்கிமேற்கோள் இலிருந்து

இயல்திறன் அல்லது திறமை (aptitude) என்பது ஆற்றலுக்கான ஒரு கருவி. ஒரு வேலையை குறிப்பிட்ட நிலையில் செய்து முடிக்கத் தேவைப்படும் ஆற்றல் எனக் கூறலாம். சிறந்த திறனை "திறமை" என்று கருதலாம். திறன் என்பது புலன் அல்லது மனம் சார்ந்த ஒன்று.

மேற்கோள்கள்[தொகு]

  • உங்களுடைய ஆற்றலால் விளையும் திறமைகளை பிறர் உணரவில்லையே என்று மனவருத்தப் படாதீர்கள். அதே பிறர், உங்களுடைய திறமைகளையும் ஆற்றலையும் உணரும் அளவிற்கு தொடர்ந்து செயலில் நடந்து காட்டுங்கள்! -கான்பூசியசு[1]
  • என்னுடைய முடிவான கருத்து என்னவென்றால் திறமை முதல் தேவையுமில்லை. இரண்டாம் தேவையுமில்லை மூன்றாம் தேவையுமில்லை. திறமை என்பதே அடியோடு தேவையில்லை என்பதுதான். திறமையுடையவர்களை எல்லாம் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு, திறமையற்றவர்களை மட்டுமே கல்லூரிகளிற் சேர்த்துப் படிக்கும்படிச் செய்ய வேண்டும். அப்போதுதான் கையும் காலும் சூம்பிப்போய், வயிறு மட்டும் பெருத்து வலுக்குறைந்து வாடியிருக்கும் தமிழ் நாடு வலுவடைய முடியும். திறமையற்றவர் களைத் திறமையுடையவர்களாகச் செய்வதுதான் கல்லூரிகளின் முதல் வேலையாக இருக்க வேண்டும். அதாவது செய்ய இப்போதுள்ள கல்லூரிகளுக்குத் திறமையில்லாவிடில் அக் கல்லூரிகளை இடித்துத் தூளாக்கிவிட அரசாங்கம் உத்திரவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், கட்டிடங்களிலிருந்த நிலத்தில் கலக்கம்பாவது விளையும். உணவு நெருக்கடியான இக்காலத்தில் அது அதிக விளைவுக்கும் துணை செய்வதாகவுமிருக்கும். -கி. ஆ. பெ. விசுவநாதம்[2]
  • சாதியே வாய்ப்புகளை மறுக்கிறது மறுக்கப்பட்ட வாய்ப்புக்கள், திறமையை குறுக்குகின்றன; குறுக்கப்பட்ட திறமை மேலும் வாய்ப்புகளை குறுக்குகிறது; சாதி வேற்றுமைகள் உள்ளவரை மக்களின் வாய்ப்புகளும் திறமைகளும் குறுக்கப்படும். -ராம் மனோகர் லோகியா
  • மரியாதை இல்லாத திறமை பயனற்றது. -சிசெரோ

குறிப்புகள்[தொகு]

  1. என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=திறமை&oldid=18791" இலிருந்து மீள்விக்கப்பட்டது