சிசெரோ

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Cicero - Musei Capitolini.JPG

மார்க்கசு துல்லியசு சிசெரோ (Marcus Tullius Cicero) 3 சனவரி கி.மு106 – 7 திசம்பர் கி.மு43) ஒரு பண்டைய உரோமானியரும், மெய்யியலாளரும், அரசியலாளரும், வழக்கறிஞரும், சொற்பொழிவாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், உரோம மன்ற உறுப்பினரும், உரோமக் குடியரசின் அரசியலமைப்பாளரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

 • எந்த மனிதனும் தவறுகள் செய்யலாம், ஆனால் முட்டாள் மட்டுமே அவனது தவறை தொடர்கிறான்.
 • மக்களின் பாதுகாப்பே மிக உயர்ந்த சட்டமாக இருக்க வேண்டும்.
 • உங்களை விட வேறு யாரும் உங்களுக்கு விவேகமான ஆலோசனையைக் கொடுக்க முடியாது.
 • உரையாடலின் சிறந்த கலைகளில் ஒன்று அமைதி.
 • நினைவுத்திறனே அனைத்து விடயங்களுக்குமான கருவூலமாகவும், பாதுகாவலனாகவும் இருக்கின்றது.
 • நியாயமான போரை விட நியாயமற்ற அமைதி மேலானது.
 • நன்றியுணர்வு என்பது உயர்ந்த நற்குணம் மட்டுமல்ல, அது மற்ற அனைத்து நற்குணங்களுக்கும் பெற்றோரைப் போன்றது.
 • தொடங்குவதற்கு முன்னர் கவனமாக திட்டமிட வேண்டும்.
 • நட்பே மகிழ்ச்சியை அதிகரிப்பதாகவும், துயரத்தை தணிப்பதாகவும் இருக்கின்றது.
 • புத்தகங்கள் இல்லாத வீடு, ஆன்மா இல்லாத உடலைப் போன்றது.
 • துடுக்குத்தனம் இளமைக்குச் சொந்தமானது; மதிநுட்பம் முதுமைக்குச் சொந்தமானது.
 • கவுரவம் என்பது நற்பண்பிற்கான வெகுமதி ஆகும்.
 • ஒன்றை நினைப்பதற்கு நாம் வெட்கப்படவில்லை என்றால், அதைச் சாெல்வதற்கும் நாம் வெட்கப்படக்கூடாது.
 • போர் நேரத்தில் சட்டங்கள் மௌனம் சாதிக்கின்றன.
 • மரியாதை இல்லாத திறமை பயனற்றது.

அறிவீனம்[தொகு]

 • ஒவ்வொருவனும் பிழை செய்யக் கூடியவனே. ஆனால் மூடனைத் தவிர வேறு யாரும் பிழையை விடாமல் பிடித்துக்கொள்ளார்.[1]

ஈகை[தொகு]

 • 'ஈதல்' -இதிலேயே மனிதன் கடவுளை ஒப்பான்.[2]

குற்றம் காணல்[தொகு]

 • பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறப்பதுமே மடைமையின் விசேஷ லட்சணம்.[3]

செய்ந்நன்றி[தொகு]

 • பெற்ற நன்றியை மறப்பவனும், பிறரிடம் மறைப்பவனும், கைம்மாறு செய்யாதவனும் செய்நன்றி கொல்லும் பாதகர்கள் இவர்களில் பெரிய பாதகன் நன்றியை மறப்பவன். [4]

சொற்கள்[தொகு]

 • நாவன்மை என்பது ஆன்மாவின் இடையீடில்லாத இயக்கமேயாகும். அலங்காரமாய்ப் பேசுவோர் நாவலர் அல்லர். பல சொல் அடுக்கிப் பாமரரை மயக்கப் பழக்கப் படுத்தப்பட்ட நாவினரேயாவர்.[5]

நல்லதும் கெட்டதும்[தொகு]

 • தீமை செய்வதினும் தீமை பெறுதலே நலம்.[6]

மெய்யியல்[தொகு]

 • தத்துவ ஞானம் கற்பது என்பது, 'தான்' சாகத் தயராக்குவதேயன்றி வேறன்று.[7]

வரலாறு[தொகு]

 • முன்னாளில் நடந்தவற்றை அறியாவிடில் நாம் என்னாளும் குழந்தைகளே.[8]

சான்றுகள்[தொகு]

 1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 2. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஈகை. நூல் 141-143. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
 3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல். நூல் 82- 84. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 7. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தத்துவ ஞானம். நூல் 42- 44. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 8. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/சரித்திரம். நூல் 179. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.

வெளியிணைப்புகள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிசெரோ&oldid=17307" இருந்து மீள்விக்கப்பட்டது