உள்ளடக்கத்துக்குச் செல்

துறவி

விக்கிமேற்கோள் இலிருந்து
திருவண்ணாமலைத் துறவி

துறவி என்பது உலக இன்பங்களில் மனத்தைச் செலுத்தாது, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர், ஆசையை விட்டவரை சந்நியாசி என்பர். துறவிகள் பெரும்பாலும் காவி அணிவது வழக்கம்.

மேற்கோள்கள்

[தொகு]
  • நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத் தாம் போவது வழக்கமாக இருந்திருக்கின்றது. கடவுளைப் பற்றிப் பாடுவதும், புராணங்கள், ஸ்தல புராணங்கள் பாடுவதும் புலமைக்கு அழகு என்று எண்ணி வந்தார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்கர் இவர்கள் எல்லாம் தமிழ் படித்த புலமையினல் சாமியார் ஆனவர்களே. அதிகம் போவானேன்! நம் கண்ணெதிரே வாழ்ந்த பிரபலமான தமிழ்ப்புலவர் வேதாசலம் ‘சாமி வேதாசலம்’ ஆகி, மறைமலையடிகள் ஆகவில்லையா? நாடகங்களுக்குப் பாட்டு, கதை முதலியன எழுதி வந்த சங்கரன் என்பவர் சங்கரதாஸ் சாமிகள் ஆகவில்லையா? முத்துசாமிக் கவிராயர் அவர்கள் முத்துச்சாமி சாமிகள் ஆகவில்லையா? இவர்களை எல்லாம் எனக்கும் நன்றாகத் தெரியும். நன்கு பழக்கமானவர்கள். நமது திரு. வி. கல்யாண சுந்தர முதலியார் சாமியாராகத்தாம் போக முற்பட்டார். நான் போட்ட போட்டிலே அவர் தப்பித்தார். —பெரியார்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=துறவி&oldid=18648" இலிருந்து மீள்விக்கப்பட்டது