பண்டிதர்
Appearance
பண்டதர், பாண்டித்தியம் குறித்த மேற்கோள்கள்.
- பண்டிதர் என்பவர் படித்துப் படித்துக் காலத்தைக் கொல்லும் சோம்பேறிகளாவர். -பெர்னார்ட் ஷா[1]
- அயல் பாஷை எதுவும் அறியாதவன் தாய் பாஷையையும் அறியாதவனே. -ஸெயின்ட் பூவ்[1]
- பாண்டித்தியம் தலைக்குள் பல பொருள்களை நிரப்பும். ஆனால் அப்படிச் செய்வதற்காக அது மூளையை எடுத்து வெளியே எறிந்துவிடவும் செய்யும். -கோல்ட்டன்[1]
- பாண்டியத்தியமின்றி பாவனாசக்தி மட்டும் உடையவருக்குச் சிறகுகள் உண்டு. கால்கள் கிடையா. -ஜூபெர்ட்[1]
- தற்காலத்தில் பண்டிதர்கள் இலக்கியம் எது என்று கவனிக்க முடியாமல் எல்லாவற்றையும் புகழ்ந்து கொண்டு இடர்ப்படுவதற்குக் காரணம் அவர்கள் இலக்கியம் என்றால் என்னவென்று அறியாததுதான்.-புதுமைப்பித்தன்[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/பாண்டித்தியம். நூல் 176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 51. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.