பயணம்
Appearance
பயணம் (Travel) என்பது ஒப்பீட்டளவில் தொலைதூர புவியியல் இடங்களுக்கிடையேயான மக்களின் இயக்கமாகும். இது கால்நடையாக, மிதிவண்டி, மோட்டார் ஊர்திகள், தொடருந்து, படகு, வானூர்தி அல்லது பிறவற்றினாலோ, சாமான்களுடனோ அல்லது இல்லாமல் செய்யும் பயணத்தை உள்ளடக்கியது.
மேற்கோள்கள்
[தொகு]- ஒவ்வொரு மனிதனும் பிரயாணம் செய்வது உசிதமில்லை; அது அறிவாளியை மேலும் அறிவாளியாக்கும்; மூடனை அதிக மூடனாக்கும். - ஃபெல்ட்ஹாம்[1]
- வீட்டிலே சோம்பேறியாயிருந்து, வாலிபத்தை உருவில்லாத சோம்பலில் கழிப்பதைவிட வெளியே சென்று உலகத்தின் ஆச்சரியங்களைப் பார். - ஷேக்ஸ்பியர்[1]
- நீ உன் நாட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன்னால் உன் நாட்டில் பெரும் பாகத்தை நன்றாகத் தெரிந்துகொள். - ஃபுல்லர்[1]
- இரயில் பிரயாணம் பிரயாணமே அன்று. அது ஓர் இடத்திற்குப் 'பார்ஸல்' போவது போலத்தான். - ரஸ்கின்[1]
- நாம் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு வெளியே யாத்திரை செய்வதுஅதாவது, மற்ற நகரங்கள். நாடுகள் முதலியவைகளைப் பார்த்து வருவது - மனத்தை விரிவடையச் செய்யும். - வாட்ஸ்[1]