பல தொழில்
Appearance
பல தொழில் என்பது குறித்த தேற்கோள்கள்
- ஒவ்வொன்றும் தொடக்கத்தில் முறுக்காயிருக்கும். எதுவும் நீடித்திருப்பதில்லை. -டிரைடன்[1]
- அடிக்கடி மாறுபவர்கள் மிகவும் பலவீனமான மனம் படைத்தவர்களாயும், மிகவும் கடின இதயம் பெற்றவர்களாயும் இருப்பார்கள் என்பதைக் கண்டுகொள்ளலாம். -ரஸ்கின்[1]
- மனிதர்கள் பல சந்தர்ப்பங்களில் பயனற்றிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் பல நோக்கங்கள், தொழில்களில் சிந்தையைச் சிதறவிடுதலாகும். -எம்மன்ஸ்[1]
- பல விஷயங்களைத் தொடங்குபவன் எதையும் முடிக்க மாட்டான். ஸி. ஸிம்மன்ஸ்[1]
- உருண்டுகொண்டிருக்கும் கல்லில் ஒன்றும் ஒட்டாது. -பப்ளியஸ்ஸைரஸ்[1]
- சிலர் முதலில் சொற்கலைஞர்கள் பிறகு, கவிஞர்கள் பிறகு, விமர்சகர்களாகி இறுதியில் மூடர்களாவர். -போப்[1]