உள்ளடக்கத்துக்குச் செல்

பள்ளிக்கூடம்

விக்கிமேற்கோள் இலிருந்து
பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை (School) என்பது அடிப்படைக் கல்வி கற்பிக்கும் இடம் எனப் பொருள்படும்.பொதுவாக தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்கான நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன. மாணவர்கள், பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக்கு அமைவாக 13 தொடக்கம் 14 ஆண்டுகள்வரை பாடசாலையில் கல்வி பயிலுகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  • பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலை, பயங்கரமான இடம் என்ற நினைப்பு பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடாது. நமது தமிழகத்தில் மறுபடி ஒரு அவ்வையார், ஒரு ஆண்டாள் பிறக்காததற்குக் காரணம் கடந்த 300 ஆண்டுகளாக உள்ள கல்விமுறைதான். - ம. பொ. சிவஞானம்[1]
  • பள்ளிக்கூடங்கள் தேசத்தில் எத்தனை இருந்தாலும், பண்பாட்டுக்குப் பள்ளிக்கூடம் வீடேயாகும்.இராஜாஜி[2]
  • பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பாதீர்கள். பள்ளிக்கூடத்தில் படிப்பதால் எந்த நன்மையும் இல்லை. என்மகனைக் கூட நான், ‘ஏண்டா பள்ளிக்கூடம் போகிறாய்?‘ என்று தான் கேட்கிறேன். நான் கூடப் பள்ளிக்கூடம் போகவில்லை. நான் என்ன கெட்டா போய்விட்டேன்?” - ஜெயகாந்தன்[3]

சான்றுகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. கிருட்டிணகிரி மாவட்டம், தொரப்பள்ளி கிராமத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் பார்வையாளர்களுக்கு வழங்கும் இராசாசி வாழ்கை குறிப்பு ஏட்டில் உள்ள அவரது பொன் மொழிகள். வெளியீடு இயக்குநர், செய்தி- மக்கள் தொடர்பு துறை, சுற்றுலாதுறை தமிழ்நாடு அரசு.(நவம்பர் 1986 இல் அச்சிடப்பட்டது)
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பள்ளிக்கூடம்&oldid=35629" இலிருந்து மீள்விக்கப்பட்டது