பாரசீகப் பழமொழிகள்
Appearance
- அகபடும் வரை திருடன் அரசனைப் போல் சுற்றித் திரிவான்.
- அறுந்த கயிற்றை முடிக்கலாம், ஆனால் முடிச்சு இருக்கும்.
- இரண்டு பெண்களும் ஒரு வாத்தும் இருந்தால் போதும் - அது ஒரு சந்தையாகிவிடும்.
- ஒரு செந்நாய்க்கு மற்றொரு செந்நாயைத் தெரியும். அது போல் ஒரு திருடனுக்கு மற்றொரு திருடனின் குணம் தெரியும்.
- ஒரே வீட்டில் இரண்டு சக்களத்திகள் இருப்பதைவிட இரண்டு பெண் புலிகள் இருப்பது நலம்.
- குடியானவனுக்கு வேண்டியது நிலம், பிரபுவுக்குக் கௌரவங்கள், சிப்பாய்க்கு யுத்தம், வியாபாரிக்குப் பணம், விவசாயிக்கு அமைதி, தொழிலாளிக்கு வேலை, சித்திரக்காரனுக்கு அழகு, பெண்ணுக்கு உலகம் முழுவதும் தேவை.
- பெண்ணால் துயரமே வரும், ஆயினும் பெண் இல்லாத வீடே இருக்க முடியாது.
- பெண்பிள்ளைக்கு இருமுறை பயித்தியம் பிடிக்கும்: அவள் காதல் கொண்ட சமயம், தலை நரைக்கத் தொடங்கும் சமயம்.
- மனிதன், தன்மனைவியைத் தவிர, மற்ற எதைப்பற்றிப் பேசினாலும், பொறுத்துக் கொண்டிருப்பான்.
- மன்னன், மாது, குதிரை-மூன்றையும் நம்பவேண்டாம்.
- மூச்சு வருவதும் போவதும் தொட்டிலின் ஆட்டம்; முடிவான தூக்கம் வருமுன் எச்சரிக்கையாயிரு.
- வாழ்க்கை என்பது இடைவிடாத குடிவெறி-மகிழ்ச்சி மறைந்த பின்பும், தலைவலி இருந்துகொண்டேயிருக்கும்.
- ரோசாப் பூவை எடுப்பவன், முள்ளினால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
- கெட்ட நேரமாய் இருந்தால் பாயசம் குடித்தாலும் பல் ஒடிந்து போகும்.
- நெருங்கிய நண்பர்களுக்கும் ஒரு நாள் பிரிவு உண்டு.