உள்ளடக்கத்துக்குச் செல்

பாவ்லோ பிரையர்

விக்கிமேற்கோள் இலிருந்து
பாவ்லோ பிரையர் (1977)

பாவ்லோ பிரையர் (Paulo Freire, பிறப்பு: செப்டம்பர் 19, 1921, இறப்பு: மே 2 1997) ஒரு பிரேசிலியக் கல்வியாளர், மெய்யியலாளர். கற்பிக்கும் கலையில் நுண்ணாய்வுத் திறனுடன் பல புத்தகங்கள் எழுதியுள்ளர். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கானக் கல்வி முறை என்கிற புத்தகம் அவரது சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இப்புத்தகமே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை இயக்கத்தின் அடித்தளமாகவும் அமைந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  • மிருகங்கள் உலகில் உள்ளன. மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான்.[1]
  • விமர்சனப்பூர்வமானப் பார்வையின் விளைவாக மனிதன் எல்லாவற்றையும் நேற்று, இன்று, நாளை என்கிற முப்பரிமாணக் காலத்தில் வைத்துப் பார்க்கிறான்.[1]
  • செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காத சொற்களைப் பேசுவதும் மௌனம்தான்.[1]
  • உலகை மாற்றி அமைப்பது என்பது ஒரு சில மனிதர்களின் தனி உரிமையல்ல; ஒட்டுமொத்தச் சமூக உரிமை. ஒருவருக்கான சொல்லை இன்னொருவர் தேர்வு செய்வதென்பதோ பேசுவதென்பதோ சாத்தியமல்ல.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 'பாவ்லோ பிரெய்ரோ சொல்வதென்ன?' - அ.மார்க்ஸ்
"https://ta.wikiquote.org/w/index.php?title=பாவ்லோ_பிரையர்&oldid=38141" இலிருந்து மீள்விக்கப்பட்டது