கலை

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை என்ற பொது வரையறையாற் தரப்படுகிறது. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் w:விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொல்லாடலிலும் இப்பொருளே வழங்குவதைக் காணலாம். எனினும் உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும் என்னும் தமிழ் அறிஞர் மு. வரதராசனாரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய கற்றலுக்கு உரியவை எல்லாம் கலை என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

 • ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு ஈடானது -- நெப்போலியன் போனபார்ட்
 • நம் உள்ளொளியின் மீது படியும் அன்றாட வாழ்வின் புழுதியைக் கழுவிடும் கலையே ஓவியம் -- பிக்காசோ
 • மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா ? -- எம்.ஆர். இராதா
 • புறப்பொருள் மூலம், ஆன்மிக அழகை புலப்படுத்துவதே கலை. - சால்வடோர் அயேந்தே
 • கலை ஒரு ஆன்மா, மற்றொரு ஆன்மாவுடன் உரையாடும் சங்கேத மொழியாகும். - ரஸ்கின் பாண்ட்
 • கலை, அதன் சக்திக்குத் தகுந்தபடி இயற்கையைப் பின்பற்றிச் செல்கிறது. - தாந்தே
 • கலை, மழையைப் போன்றது. வானத்தில் இருந்து நிலத்தில் விழும்வரை அதில் பேதம் இல்லை. ஆனால் அது எந்த நிலத்தில் விழுகிறதோ அதைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது. அது போலத்தான் கலையும். — எம். ஜி. இராமச்சந்திரன்(10-3-1962)[1]
 • கலை, தர்ம சாஸ்திரம் கற்பிக்க வரவில்லை; ஒழுக்க நூலை இயற்ற வரவில்லை. உடற்கூறு நூலை எடுத்துக் காட்ட வரவில்லை. பத்துத் தலை ராவணனும், ஆறுதலை சுப்ரமணியனும், உடற்கூறு நூலுக்குப் புறம்பான அபத்தமாக இருக்கலாம். ஆனால் ஒரு கொள்கையை இலட்சியத்தை உணர்த்தக்கூடியது, அது தான் கலையின் இலட்சியம். -புதுமைப்பித்தன்[2]
 • உயர்ந்த கலைகள் அனைத்தும் கடவுளின் வேலையில் மனிதனுக்குரிய மகிழ்ச்சியை வெளிக் காட்டுகின்றன. - ரஸ்கின்[3]
 • கலையில் நன்மையானவையெல்லாம் ஓர் ஆன்மா மற்றொன்றுக்கு வெளியிடுவதாகும். அதன் அருமை அதை வெளியிடுபவரின் பெருமையைப் பொறுத்தது. - ரஸ்கின்[3]
 • கலை, அதன் சக்திக்குத் தகுந்தபடி, இயற்கையைப் பின்பற்றிச் செல்கின்றது. இது சீடன் ஆசிரியரைத் தொடர்வது போன்றது. ஆகவே, இறைவனிடமிருந்து வருவதாகும். - தாந்தே[3]
 • கலையின் நிறைவு கலையை (புலப்படாதபடி) மறைத்து வைத்தல், - குவின்டிலியன்[3]
 • கல்விமான்கள் கலையின் காரணத்தைப் புரிந்துகொள்கின்றனர். படிப்பில்லாதவர்கள் மகிழ்ச்சியை மட்டும் உணர்கின்றனர். -குவின்டிலியன்[3]
 • நாம் கண்களினாலேயே சித்திரம் தீட்ட முடிந்தால் நல்லதுதான் கண் பார்த்தது கையின்மூலம் பென்சிலுக்குப் போய்ச் சேர்வதற்குள் எவ்வளவோ நஷ்டம் ஏற்படுகின்றது - லெஸ்ஸிங்[3]
 • கலைஞர்களே கடவுளுக்கு மிகவும் சமீபத்திலிருக்கின்றனர் -ஹாளண்ட்[3]

ஈ. வெ. இராமசாமி[தொகு]

இனிமேல் தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும். அறிவை, ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியம் தேவை. அதில், இந்து மதம், ஆரியம், ஆத்திகம் மூன்றும் இருக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இவைதான் இருக்க வேண்டும்.
 • இனிமேல் தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும். அறிவை, ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியம் தேவை. அதில், இந்து மதம், ஆரியம், ஆத்திகம் மூன்றும் இருக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இவைதான் இருக்க வேண்டும்.[4]
 • எப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக்குறைவுக்கும் மூட நம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாததாய் இருக்க வேண்டும்.[5]
 • ஆரிய ஆதிக்கமும், கலப்பும் அற்ற இலக்கியம் தமிழனுக்கென்று ஒன்றும் இல்லை.[5]

சான்றுகள்[தொகு]

 1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 111-120. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 2. முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 50. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 154-155. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 4. ஈ.வெ.ரா சிந்தனைகள் புத்தகம் இரண்டு, முதல் பதிப்பு, பக்கம் 1258
 5. 5.0 5.1 5.2 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
"https://ta.wikiquote.org/w/index.php?title=கலை&oldid=20865" இருந்து மீள்விக்கப்பட்டது