உள்ளடக்கத்துக்குச் செல்

பின் நவீனத்துவம்

விக்கிமேற்கோள் இலிருந்து

பின் நவீனத்துவம் என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உருவான புதியசிந்தனைப்போக்கு நவீனத்துவம் (மாடர்னிசம்) என்று சொல்லப்படுகிறது. அந்தப்போக்கு காலாவதியாகிவிட்டது என்று மறுக்கும் போக்குக்கு பின்நவீனத்துவம் என்று பெயர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • நவீனத்துவம் உலகை பார்த்தது. பின்நவீனத்துவம் உலகை நாம் எப்படி பார்க்கிறோம்,எப்படி நம் பார்வை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பார்க்கிறது-ஜெயமோகன்[1]
  • பின்நவீனத்துவம் என்பது ஒரு சித்தாந்தமோ அல்லது வரையறுக்கப்பட்ட கோட்பாடோ அல்ல. வரையறைகளையும் சேர்த்து மறுப்பதால் இன்னும் வரையறுக்கப்படாத நிலையே உள்ளது. ~ ஜமாலன் [2]
  • பின் நவீனத்துவக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ஒரு நாவல் எழுதுவதற்கு உங்களின் வாழ்க்கையையே நீங்கள் விலையாகக் கொடுக்க வேண்டும். ~ சாரு நிவேதிதா
  • பின் நவீனத்துவப் பார்வை கொண்ட இலக்கியம் என்பது ஒருவிதத்தில் பல இடங்களிலிருந்தும் கிடைப்பதில் தேவையானவற்றைப் பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்து நிறுத்தும் ஒன்றாகும். இந்த விதத்தில் நவீனத்துவத்திலிருந்து அது மாறுபடுகிறது.

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பின்_நவீனத்துவம்&oldid=12471" இலிருந்து மீள்விக்கப்பட்டது