உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபுக்கள்

விக்கிமேற்கோள் இலிருந்து

பிரபுக்கள் (Lord) என்பவர்கள் எஜமானர், நிலக்கிழார், தலைவர் போன்றோர் ஆவர். இவர்கள் ஆட்சியாளரைப் போல செயல்பட்டு மற்றவர்கள் மீது அதிகாரத்தையும், கட்டுப்பாடுகளையும் செலுத்துபவர்களாவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • இப்பொழுதுள்ள பிரபுக்களின் முன்னோர்கள் எவர்கள் என்பதைக் கடவுள்தான் அறிவார்! - டிஃபோ[1]
  • சிலர் எப்பொழுதும் மற்றவர்களுக்கு மேலாகவே இருப்பர். இன்றுள்ள ஏற்றத்தாழ்வை அழித்துவிட்டால், அது நாளை மறுபடி தோன்றிவிடும். - எமர்ஸன்[1]
  • சில மனிதர்கள் பூட்ஸுகளும் முள் ஆணிகளும் (குதிரைகளைக் குத்தி ஓட்டுவதற்காகக் கால்களில் அணிந்து கொள்ளப்படுபவை முள் ஆணிகள்) அணிந்து கொண்டு குதிரை சவாரி செய்யவும், இலட்சக்கணக்கான மக்கள் சேணமும் இலகான்களும் அணிந்துகொண்டு தங்கள் மீது சவாரி செய்யக் காத்திருக்கவும் ஆண்டவன் அவர்களைப் படைத் திருக்கிறான் என்று நான் நம்பவே முடியாது. - குவிஸோட்[1]
  • வேலை செய்யும் தேவை எதுவுமில்லாமல், தங்களுடைய அளவற்ற நிலபுலன்களிலிருந்து வரும் வாடகையைக் கொண்டு சோம்பேறித் தனமாக வாழுபவர்களைத் தான் பிரபுக்கள் என நாம் அழைக்கிறோம். -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]
  • பிரபுவர்க்கம் எது? உண்டாக்காமல் உண்பவர், உழையாமல் வாழ்பவர், உத்யோகங்களை வகிக்கத் திறமையின்றி வகிப்பவர், கெளரவங்களைத் தகுதியின்றி அபகரித்துக் கொள்பவர்- இவரே பிரபுக்கள். - ஜெனலல் பாய்[3]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 268-269. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிரபுக்கள்&oldid=34400" இலிருந்து மீள்விக்கப்பட்டது