பிரெடரிக் டக்ளஸ்
Jump to navigation
Jump to search
பிரெடரிக் டக்ளஸ் (. பெப்ரவரி 1818 - 20 பெப்ரவரி 1895) என்பவர் ஒரு அமெரிக்க அடிமை ஒழிப்புப் போராளி, பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சீர்திருத்தவாதி, பெண்கள் உரிமைகள் வழக்கறிஞர், மற்றும் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் போது இராசதந்திரியாக செயல்பட்டவர். இவர் ஃப்ரெடரிக் அகஸ்டஸ் வாஷிங்டன் பெய்லி எ்ன்னும் கருப்பின அடிமைக்கு பிறந்தவராவார்.
இவரின் புகழ்வாய்ந்த வரிகள் [1][தொகு]
- ஒரு மனிதன் எப்படி அடிமையாக்கப்பட்டான் என்பதைப் பார்த்திருக்கிறீர்கள். இனி ஒரு அடிமை எப்படி மனிதனாக்கப்பட்டான் என்பதைப் பார்ப்பீர்கள்
- வலிமை இல்லா மனிதன் மனித குலத்தின் அடிப்படைக் கண்ணியம் அற்றவன்.
- நான் அடிமையாக இருந்தபோது, வேறு எந்தக் காரணங்களையும்விட என் தோற்றத்துக்காகவே நான் அதிகமாகத் தாக்கப்பட்டிருக்கிறேன். அதாவது, அதிருப்தியடைந்திருக்கும் முகபாவனைக்காக, அதிருப்தி அடைந்திருந்ததால்தானே நான் அதிருப்தியான முகபாவத்தை வெளிப்படுத்தினேன்.
- கவிஞர்கள், தீர்க்கதரிசிகள், சீர்திருத்தவாதிகள் அனைவரும் சித்திரங்களை உருவாக்கக்கூடியவர்கள். இந்தத் திறன்தான் அவர்களுடைய ஆற்றலுக்கும் சாதனைகளுக்கும் பின்னுள்ள ரகசியம்.
வெளி இணைப்புக்கள்[தொகு]