புறநானூறு
புறநானூறு என்னும் தொகைநூல் சங்ககாலத்தைச் சேர்ந்த தமிழின் ஒரு செவ்வியல் நூல் ஆகும். இது நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
மேற்கோள்கள்
[தொகு]- - - - - - - - - - - -
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!
பாடல் 187
பாடியவர்: ஔவையார்
பொருள்; அருள் நிறைந்த மக்கள் உள்ள இடமே நல்ல நாடு
- - - - - - - - - - - -
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது - - - - -
பாடல் 358
பாடியவர்: வான்மீகியார்
பொருள்; நிறுத்துப் பார்த்தால் உலகமும்,
தவமும் என்ற இரண்டில் தவத்திற்கு
உலகம் எள் அளவு கூட ஈடாகாது
- - - செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.
பாடல் 189
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
பொருள்; செல்வத்தின் பயன் ஈகையே.
அல்லாமல் அனுபவிப்பேன் என்று
நினைத்தால் பல நன்மைகள்
தப்பிப் போகும்.
- உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; - - - -- -
- - - - - - - - - - - - - - - - - - -
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்,- - - - - -
- - - - - - - - - - - - - - - - - - -
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
பாடல் 182
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
பொருள்; தன்னலமற்றுப் பிறர்நலம் பேணுபவராலேயே
உலகம் நினைத்து உள்ளது.
- நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
பாடல் 186
பாடியவர்: மோசிகீரனார்
பொருள்; அரசே நாட்டின் உயிர்
- - - - - - - - - -- - - - -- - -
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
- - - - - - - - - - - - - - - - -
பாடல் 18
பாடியவர்: குடபுலவியனார்
பொருள்; நீரையும், நிலத்தையும்
உயிரையும், உடலையும் காப்பது போன்றது.
- உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், - - - -
- - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - -
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.
பாடல் 188
பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி
பொருள்; மக்கள்பேறு இல்லாச் செல்வ வாழ்க்கை
பயனுடையது ஆகாது
- யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை;
- - - - - - - - -- --- - - -- -- ---
பாடல் 92
பாடியவர்: ஔவையார்.
பொருள்;
மழலை யாழ் போல இனியது அன்று;
பொழுதோடும் சேராது. பொருளும் தராது.
ஆனால் தம் குழந்தை மழலை
போருள் செல்வம்
- ‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
பாடல் 191
பாடியவர்: பிசிராந்தையர்
பொருள்;
நல்ல மனைவி, இளையர், அரசன்,
சான்றோர் சூழ இருந்தால்
கவலையுமில்லை, நரையுமில்லை
நூல் குறித்த கருத்துகள்
[தொகு]- புறநானூறு செல்லும் செய்திகளைப் பயின்றே வாழ்நாள் முழுவதும் கழித்துவிடலாம். அப்போதும் புதிய புதிய செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். -ஜார்ஜ் எல். ஹார்ட்[1]
- புறநானூரில் அரசரைப் பற்றி இருக்கும். அப்படி அரசனைப் பாடுகையில் சமூகத்தில் அடிமட்டதில் இருக்கும் பாணர், கினையர், விறலியர் போன்றோரின் வாழ்க்கையைக் கூறும். உண்மையான இந்தியா புறநானூறு காட்டுவது தான். கிராமங்களில் மக்கள் வாழும் முறையை அது காட்டுகிறது. பண்டிதர்களோ வடமொழி இலக்கியங்களைப் படித்துவிட்டு மேல்தட்டு வாழ்க்கை முறையை பழங்கால இந்திய வாழ்க்கை முறையாக காட்டிவிடுகிறார்கள். அதற்கு சரியான மாற்று தமிழில்தான் உள்ளது.-ஜார்ஜ் எல். ஹார்ட்[1]