உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு

விக்கிமேற்கோள் இலிருந்து

பேச்சு என்பது மனித தொடர்புகளின் குரல் வடிவமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • எவரையும கையைப் பிடித்து இழுத்து உன் பேச்சைக் கேட்கும்படி நிறுத்தி வைக்காதே ஜனங்கள் உன் பேச்சைக் கேட்க விரும்பவில்லையானால், நீ உன் நாவை அடக்கிக் கொண்டு இருப்பதே நலம். - செஸ்டர்ஃபீல்டு[1]
  • அதிகமாய்ப் பேசுபவர்கள் மிகவும் குறைவாய்ச் சிந்திப்பார்கள். - டிரைடன்[1]
  • அதிகமாய்ப் பேசுதல் செருக்கின் அடையாளம் சொற்களை அள்ளிக் கொட்டுபவன் செயலில் கருமியாயிருப்பான். - ஸர் வால்டர் ராலே[1]
  • உலகில் கனைக்கிற கழுதையைப் போலவே, கனைக்கிற மனிதர்களும் இருக்கின்றனர். பொருளில்லாமல் உரக்கக் கத்துவதைக் கனைத்தல் என்றுதானே சொல்ல வேண்டும்! - எல். எஸ்டியேஞ்ச்[1]
  • பெரும் பேச்சாளர்கள் ஓட்டைப் பாத்திரங்களைப் போன்றவர்கள்: அவைகளில் ஊற்றியனவெல்லாம் வெளியே போய்விடும். - ஸி ஸிம்மன்ஸ்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 284. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பேச்சு&oldid=35001" இலிருந்து மீள்விக்கப்பட்டது