உள்ளடக்கத்துக்குச் செல்

வால்ட்டர் ரேலி

விக்கிமேற்கோள் இலிருந்து
(ஸர் வால்டர் ராலே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சர் வால்ட்டர் ரேலி (Sir Walter Raleigh, 1554 – 29 அக்டோபர் 1618) முதலாம் எலிசபெத் காலத்தில் வாழ்ந்த இராணுவ வீரர், கடலோடி கவிஞர், உரைநடை எழுத்தாளர், அமெரிக்கக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டியவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • நன்றாக ஆளப்பெறும் மக்கள். வேறு சுதந்தரம் எதையும் தேடக்கூடாது. ஏனெனில், நல்ல அரசாங்கத்தைப்பார்க்கினும் அதிகமான சுதந்தரம் வேறு இருக்க முடியாது.[1]
  • பணக்காரனுக்கும் ஏழைக்கும் இதுதான் வேற்றுமை, முன்னவன் தான் விரும்பிய பொழுது உண்பான். பின்னவன் உணவு கிடைத்த பொழுதுதான் உண்பான்.[2]
  • யாராவது ஒரு நண்பர் தமக்கு ஜாமீனாய் இருக்கும்படி வேண்டினால், உன்னால் இயன்ற தொகையைக் கொடுத்து உதவிசெய், அதற்கு மேலும் அவர் உன்னை வற்புறுத்தினால், அவர் உன் நண்பர் அல்ல, உங்கள் நட்பும் கெடும்.[3]
  • அதிகமாய்ப் பேசுதல் செருக்கின் அடையாளம் சொற்களை அள்ளிக் கொட்டுபவன் செயலில் கருமியாயிருப்பான்.[4]
  • பொய்யின் பயன் யாரும் நம்மை நம்பாமை. நாம் உண்மையைச் சொல்லும் பொழுதும், அதையும் பிறர் நம்பமாட்டார்.[5]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 122. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 267-268. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 284. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 287-289. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வால்ட்டர்_ரேலி&oldid=35265" இலிருந்து மீள்விக்கப்பட்டது