பேராசை

விக்கிமேற்கோள் இலிருந்து

பேராசை அல்லது பேரவா (Greed) குறித்த மேற்கோள்கள்

  • மனிதர் தங்கள் தேவைக்காகப் போராடுகிற நிலைமை போன பிறகு தங்கள் பேராசைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள். அந்தப் பேராசை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. அவர்கள் எவ்வளவு உயரத்திற்குப் போன பிறகும் கூட அது அவர்கள் இதயத்தை விட்டுப் போவதில்லை. -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
  • வறுமையுற்றவர்களுக்குச் சில பொருள்கள் தேவை. ஆடம்பர வாழ்க்கைக்குப் பல பொருள்கள் தேவை. பேரவா கொண்டவர்களுக்கு எல்லாமே தேவை. - கௌவி[2]
  • தங்கம் குவியக் குவியப் பேராசை வளர்ந்துகொண்டேயிருக்கும். - ஜூவினால்[2]
  • புலனுணர்ச்சி ஒழுக்கங்களுக்கு எப்படியோ, அப்படி அறிவுக்கும் இதயத்திற்கும் பேரவா. - திருமதி ஜேம்ஸன்[2]
  • பேரவா என்பது அதிகார ஆசை. எந்த இன்பத்திற்காக ஆசை ஏற்பட்டதோ, அந்த இன்பத்தையும் பலி கொடுத்து. அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யப் பெறுகின்றது. - கோல்டன்[2]
  • பேராசையை விட்டுத் தள்ளு. அந்தப் பாவத்தினால் அமரர்கள் வீழ்ச்சியுற்றனர். தன்னைப் படைத்தவரின் சாயலில் அமைந்த மனிதன் மட்டும் அதன் மூலம் வெற்றியடையலாம் என்று எப்படி நம்ப முடியும்? - ஷேக்ஸ்பியர்[2]
  • பேரவா சாதாரண மக்களிடமுள்ள தீமையன்று. - மாண்டெயின்[2]
  • ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான். உலகில் பெருந்துயருக்குக் காரணமாயிருக்கின்றது. - காபெட்[2]
  • பேரவா காதலைப் போன்றது. அது தாமதங்களைத் தாங்காது. போட்டிகளையும் சகிக்காது. டென்ஹாம்[2]

பழமொழிகள்[தொகு]

  • பேராசை பெருநஷ்டம்

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 285-286. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பேராசை&oldid=35163" இலிருந்து மீள்விக்கப்பட்டது