மகாவீரர்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Merge-arrow.svg
இப்பக்கத்தை (அல்லது இதன் ஒரு பகுதியை) மகாவீர் பக்கத்துடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)
Mahavir.jpg

மகாவீரர் (இந்தி:महावीर), (599 – 527 BCE) என்று குறிப்பிடப்படுபவர் சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் என்ற இந்திய துறவியாகும். சமண மத வழக்கில் அவர் 24வது மற்றும் கடைசி அருகன் ஆவார். சமண சமயப் புத்தகங்களில் இவர் வீரா,வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

 • நீயும் வாழு; பிறரையும் வாழவிடு. இதுவும் அகிம்சையின் தத்துவம் தான்.
 • எந்தப் பேச்சானாலும் தீர ஆலோசனை செய்த பிறகே பேச வேண்டும்.
 • நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான்.
 • கோபம் அன்பை அளிக்கிறது; செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
 • அடக்கமாக வாழ்பவன், இம்மையிலும், மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
 • 'ஏமாற்றுதல்' என்பது மிகச்சிறிய முள். அதனைப் பிடுங்கி எறிவது கடினம்.
 • பாவச் செயல்கள் முடிவில் துன்பம் தரும்.
 • உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.
 • உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும்.
 • உண்மையாக நடந்து கொள்ளும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை.
 • சொல்லக் கூடாத பேச்சானால் அதை சொல்லாமல் இருப்பதே மேல்.
 • அளவில்லாத ஆசை, நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும்.
 • தன்னடக்கமே வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய நெறியாகும்.
 • மௌனமாகத் தீர்மானித்தால் மனம் கலங்காத நிலைபெறும்.

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=மகாவீரர்&oldid=36826" இருந்து மீள்விக்கப்பட்டது