மக்கள்
Jump to navigation
Jump to search
மக்கள் என்ற தமிழ்ச்சொல்லிற்கு மானுடவினம், ஐம்பொறியுணர்வோடு மனவறிவு உடைய உயிரினம் என்று பொருள் கொள்ளலாம். இவர்கள் குறிப்பிட்ட பண்புகளுடன் குழுப்படுத்தப்படலாம் (காட்டாக, தமிழ் மக்கள்) அல்லது எந்தவொரு பொதுப்பண்புகளும் இல்லாதவர்களாகவும் இருக்கலாம்.
மேற்கோள்கள்[தொகு]
- உலகில் மூன்று வகையான மக்கள் இருக்கின்றனர். 'செய்ய முடியும்' என்பவர் 'செய்யமாட்டோம்' என்பவர் 'செய்ய இயலாது' என்பவர். முதலாமவர், எல்லாவற்றையும் செய்து முடிக்கின்றனர். இரண்டாமவர், எல்லாவற்றையும் எதிர்க்கின்றனர். மூன்றாமவர் எல்லாவற்றிலும் தோல்வியடைகின்றனர் - "எக்லெக்டிக்' பத்திரிகை[1]
- நீங்கள் எல்லா மக்களையும் சிறிது காலத்திற்கு ஏமாற்றலாம். ஆனால், எல்லா மக்களையும், எல்லாக் காலத்திலும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. - லிங்கன்[1]
- மக்கள் என்ன நிலையிலிருக்கின்றனர் என்பது மிகுதியாக அவர்களுடைய மூதாதையர்களைப் பொறுத்திருக்கிறது. கல்வி, முன் மாதிரிகள், பழக்கங்கள் முதலிய எத்தனையோ விஷயங்களை நீங்கள் காரணங்களாகக் கூறலாம். ஆனால் பெரும் அளவுக்கு அவர்களுடைய் இனமே முக்கியமான காரணமாகும். - மில்ஸ்[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 294-295. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.