உள்ளடக்கத்துக்குச் செல்

மனித இயல்பு

விக்கிமேற்கோள் இலிருந்து

மனித இயல்பு (Human nature) குறித்த மேற்கோள்கள்

  • மனிதர்களை எல்லாவற்றிற்கும் ஆசைப்படக் கூடியவர்களாகவும், ஆனால் அவற்றையெல்லாம் அடைய முடியாதவர்களாகவும் இயற்கை படைத்திருக்கிறது. -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
  • மனிதர்களுக்கு இயற்கை வெவ்வேறு விதமான முகங்களைக் கொடுத்தது போலவே, அவர்களுக்கு வெவ்வேறு விதமான மனங்களையும் சுபாவங்களையும் கொடுத்திருக்கிறதென்று நான் நம்புகிறேன். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
  • காலப் போக்கும் சூழ்நிலைகளும் பொதுவாகவும் குறிப்பாகவும், மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் அதே சமயம் மனிதனின் சுபாவங்களும் நடைமுறை போக்கும் மாறாமல் ஒரே மாதிரியாக அப்படியே இருக்கின்றன. அதனால் தான் மனிதனுக்கு ஒரு சமயம் நல்லதிர்ஷ்டமும் மற்றொரு சமயம் துரதிர்ஷ்டமும் ஏற்படுகின்றன. -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
  • அடி முட்டாள்களாகவோ, அதி புத்திசாவிகளாகவோ, மிகவும் நல்லவர்களாகவோ யாரும் இல்லை. மனிதர்கள் தங்களுக்கு முந்தியவர்களின் செயல்களையே பாவித்துப் பின்பற்றி அவர்கள் அடிவைத்துச் சென்ற பாதையிலேயே எப்பொழுதும் செல்கிறார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
  • தங்களை அன்பு காட்டச் செய்கிறவருக்குக் குற்றமிழைப்பதை விடத் தங்களை அச்சமுறச் செய்கிறவர்களுக்குக் குறைவாகவே குற்றமிழைப்பது மனிதர் இயல்பு. -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
  • மெதுவாக நகர்வதுதான் பொதுமக்களின் வழக்கம். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
  • எல்லோராலும் கண்களால் தான் பார்க்க முடியும். ஒரு சிலரால்தான் உணர்ந்து பார்க்க முடியும்.-நிக்கோலோ மாக்கியவெல்லி[1]



  • பெரும்பாலானவர்கள் எதையும் கண்களால் பார்த்தே மதிப்பிடுகிறார்கள். சிலர் தம் கையினால் தொட்டுப்பார்த்து உண்மையான மதிப்பை உணர்கிறார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மனித_இயல்பு&oldid=20292" இலிருந்து மீள்விக்கப்பட்டது