உள்ளடக்கத்துக்குச் செல்

மரண தண்டனை

விக்கிமேற்கோள் இலிருந்து
கில்லட்டின் கருவியால் தலை துண்டிக்கப்படும் முறை

மரண தண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் அல்லது அரசு தனது நடவடிக்கைகளின் ஊடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • முதலில் மரண தண்டனைக்குரிய குற்றங்கள் என்பவை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால் எந்த வித முறையிலாவது விதிக்கப்படும் மரணதண்டனையில் பறிக்கப்படும் உயிர் நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை. உயிருக்கு வெவ்வேறு அளவு கோல்கள் வெவ்வேறு நாடுகளில் இருக்க முடியாது.

மரண தண்டனைக்கு எதிரானவை

[தொகு]
  • வாழ்க்கை புனிதமானது. அதை பறிப்பது அரக்கத்தனமானது.
~ வி. ஆர். கிருஷ்ண ஐயர் ஓய்வு பெற்ற இந்திய நீதிபதி
  • மரண தண்டனை விதிப்பதில் நிலையான வரைமுறையை உச்ச நீதிமன்றம் கடைப்பிடித்ததே இல்லை.
~"அஜீத்ஷா" ஓய்வு பெற்ற இந்திய நீதிபதி
  • மரண தண்டனையால் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளனவா அதிகரிக்கின்றனவா, அல்லது எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லையா என்று கணிக்கவே முடிவதில்லை.
~ தேசிய அறிவியல் கழகம், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  • பரவலாக மக்களிடையே பெருக்கெடுக்கும் உணர்வுகளுக்கும், அபிப்ராயத்துக்கும் உரிய மதிப்பு அளித்துத் தண்டனைக் குறைப்பைத் தருவதில் தவறு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது அனுதாபத்தையும், சட்டத்தின் மீது எதிர்ப்பு உணர்வையும் எழச் செய்யும் தண்டனையால் சமுதாயத்துக்கு நன்மையைவிட தீமையே வந்து சேரும்.
~ சட்டக் கமிஷன், இந்தியா
  • குற்றதை விட தண்டனை இன்னும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது.[1]
  • தனிநபரின் உடலுக்கு புற்றுநோய் எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டதுதான் அரசியல் சமூகத்திற்கு மரண தண்டனையும்.[1]
  • மரண தண்டனை பயனற்றது மட்டுமல்ல, அது நிச்சயம் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.[1]
  • மரண தண்டனையைப் பொறுத்தவரையில் அது கற்பனைத் திறத்தால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு தண்டனை, எனது பகுத்தறிவால் கண்டனம் செய்யப்படும் அலட்சியம் சார்ந்த ஒரு பிழை என்பதைத் தவிர வேறு எதையும் காண முடியாதவனாகவே பல ஆண்டு காலம் நான் இருந்திருக்கிறேன்.[1]
  • மரண தண்டனை முன்னுதாரணமாக விளங்குகிறது என்பதை நான் மறுக்கிறேன். அந்தத் தண்டனை மேன்மையானது எதையும் விட்டு வைக்காத நிலைமைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற கொடூரமான ஓர் அறுவை சிகிச்சையாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.[1]

கு. அழகர்சாமி

[தொகு]
  • மரண தண்டனை என்பது நீதியினுடைய கருநிழல்.
  • மரண தண்டனையின் (தூக்கு போன்றதின்) குரூரம் அது நிறைவேற்றப்படும் முறையில் மட்டுமல்ல. குற்றவயப்பட்ட தனி மனிதனின் மீட்சிக்கான வாய்ப்பினை அது முற்றிலும் நிராகரிப்பதில் தான்.
  • மரண தண்டனையில் ஒரு வேளை நீதிப் பிறழ்வு ஏற்பட்டால் அது பொறுப்பேற்காதது தான். பொறுப்பேற்க தயாராயிருந்தாலும் அதில் எந்தப் பின்விளைவும் இல்லை(inconsequential) என்பது தான்.
  • தூக்குக் கயிற்றை இறுக்காதே. அவிழ்த்து விடு, மனிதம் மூச்சு விடட்டும்.
  • மரண தண்டனை தடை செய்யப்படாது சட்டச் செயல்பாட்டில் இருக்கும் வரை, நீதியின் கரு நிழல் நீங்காது தொடரும்.[2]


மரண தண்டனைக்கு ஆதரவானவை

[தொகு]
  • ஒரு மனிதன் சமூகத்துக்கு ஆபத்தானவனாக இருக்கிறான், பாவத்தைச் செய்கிறான் என்றால் சமூகத்தின் நன்மையைக் கருதி அவனைக் கொன்றுவிட வேண்டும்.
~ தாமஸ் அக்வினாஸ்

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "மரண தண்டனை என்றொரு குற்றம்" எனும் நூலில் இருந்து.
  2. மரண தண்டனை நீதியின் கருநிழல்

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=மரண_தண்டனை&oldid=10902" இலிருந்து மீள்விக்கப்பட்டது