உள்ளடக்கத்துக்குச் செல்

மாயா ஏஞ்சலோ

விக்கிமேற்கோள் இலிருந்து
Maya Angelou (2013)
உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம். ஆனால், காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன்.

மாயா ஏஞ்சலோ (Maya Angelou; ஏப்ரல் 4, 1928 – மே 28, 2014) ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், கல்வியாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நாடக நடிகர், குடிமை உரிமைப் போராளி.

மேற்கோள்கள்

[தொகு]
  • உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம். ஆனால், காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன்.[1]
  • ஒரு பறவை பாடுவது, அதனிடம் பதில் இருக்கிறது என்பதற்காக அல்ல, அதனிடம் பாடல் இருக்கிறது என்பதற்காகவே.
  • எனது பணி முழுக்க, எனது வாழ்வு முழுக்க அனைத்தும் இருத்தல் தொடர்பானவை. எனது எழுத்து முழுக்க.
  • வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது; நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதனை விரும்புவது; நீங்கள் எப்படி அதனை செய்கிறீர்களோ அதனை விரும்புவது.
  • புன்னகைக்காத எவர் மீதும் நான் நம்பிக்கைக் கொண்டதில்லை.
  • மக்கள் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை மறந்துவிடுவர்; நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்துவிடுவர்; ஆனால், அவர்களுக்கு நீங்கள் எத்தகைய உணர்வை அளித்தீர்கள் என்பதை என்றும் மறக்கமாட்டார்கள்.[2]
  • மற்ற அனைத்து குணங்களைவிடவும் மிக முக்கியமானது, துணிவு. ஏனெனில், துணிவு இல்லாமல் மற்ற எந்த குணங்களையும் தொடர்ந்து பின்பற்ற இயலாது.
  • உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லையெனில், அதனை மாற்றுங்கள். அப்படி மாற்ற இயலவில்லையெனில், உங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் கற்றுக்கொள்ளும்போது, கற்பியுங்கள்; நீங்கள் அடையும்போது, கொடுத்தளியுங்கள்.
  • நாம் பலமுறை தோல்வி அடையலாம். ஆனால், நாம் தோற்கடிக்கப்படக் கூடாது.
  • உங்களிடம் ஒரே ஒரு புன்னகை இருப்பின், அதனை நீங்கள் விரும்பும் மனிதர்களுக்கு அளிக்கவும்.
  • உங்களுக்கு நீங்கள் மட்டும் போதும். நீங்கள் மற்றவர்களிடம் நிரூபிப்பதற்கு எதுவுமில்லை.
  • எனக்கு நானே நன்மை செய்யாத பட்சத்தில், மற்றவர்கள் எனக்கு நன்மை செய்யவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க இயலும்?

சான்றுகள்

[தொகு]
  1. Still I Rise கவிதையிலிருந்து
  2. Worth Repeating: More Than 5,000 Classic and Contemporary Quotes (2003) by Bob Kelly, p. 263
"https://ta.wikiquote.org/w/index.php?title=மாயா_ஏஞ்சலோ&oldid=37234" இலிருந்து மீள்விக்கப்பட்டது